Author: Abdul Hakkim

Ibn-Majah-3663

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3663. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

தந்தை, (தம் பிள்ளைகளுக்குச்) சொர்க்கத்தின் முதன்மையான வாயில் ஆவார். எனவே, விரும்பினால் அந்த வாயிலை நீ பாழாக்கலாம்; அல்லது அதைப் பாதுகாத்துக்கொள்ளலாம்.

அறிவிப்பவர்: அபுத்தர்தா (ரலி)


«الْوَالِدُ أَوْسَطُ أَبْوَابِ الْجَنَّةِ، فَأَضِعْ ذَلِكَ الْبَابَ أَوِ احْفَظْهُ»


Tirmidhi-1900

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1900. ஒரு மனிதர் அபுத்தர்தா (ரலி) அவர்களிடம் வந்து, “எனக்குத் துணைவி ஒருத்தி இருக்கிறாள்; அவளை மண விலக்குச் செய்யுமாறு என் தாய் என்னைப் பணிக்கிறார் (நான் என்ன செய்யட்டும்?)” என்று வினவினார். அதற்கு அபுத்தர்தா (ரலி) அவர்கள் பின்வருமாறு பதிலளித்தார்கள்:

“தந்தை, (தம் பிள்ளைகளுக்குச்) சொர்க்கத்தின் முதன்மையான வாயில் ஆவார். எனவே, விரும்பினால் அந்த வாயிலை நீ பாழாக்கலாம்; அல்லது அதைப் பாதுகாத்துக்கொள்ளலாம்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை நான் செவியுற்றுள்ளேன்.

அறிவிப்பவர்: அபூஅப்துர் ரஹ்மான் அஸ்ஸுலமீ (ரஹ்)

திர்மிதீ இமாம் கூறுகிறார்:

(இந்த ஹதீஸின் அறிவிப்பாளர்தொடரில் ஐந்தாமவராக இடம்பெறும்) இப்னு அபூஉமர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: (இந்த ஹதீஸை எனக்கு அறிவித்த) ஸுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்கள், இந்த ஹதீஸை அறிவிக்கும்போது சில நேரங்களில், ‘என் தாய் (இன்ன உம்மீ) என்னைப் பணிக்கிறார்’ என்றும், சில நேரங்களில், ‘என் தந்தை (இன்ன அபீ) என்னைப் பணிக்கிறார்’ என்றும் அறிவித்தார்கள்.

அபுத்தர்தா (ரலி) அவர்(களிடமிருந்து அபூஅப்துர் ரஹ்மான் அஸ்ஸுலமீ (ரஹ்)

أَنَّ رَجُلًا أَتَاهُ فَقَالَ: إِنَّ لِيَ امْرَأَةً وَإِنَّ أُمِّي تَأْمُرُنِي بِطَلَاقِهَا، قَالَ أَبُو الدَّرْدَاءِ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «الوَالِدُ أَوْسَطُ أَبْوَابِ الجَنَّةِ، فَإِنْ شِئْتَ فَأَضِعْ ذَلِكَ البَابَ أَوْ احْفَظْهُ»

قَالَ: وَقَالَ ابْنُ أَبِي عُمَرَ: رُبَّمَا قَالَ سُفْيَانُ: إِنَّ أُمِّي وَرُبَّمَا قَالَ: أَبِي،


Akhbar-Asbahan-675

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

675. எந்த பிரார்த்தனை சிறந்தது? என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்ட போது, “ஒருவர் தனக்காக (அல்லாஹ்விடம்) செய்யும் பிரார்த்தனையாகும்” என அவர்கள் பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)


سُئِلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَيُّ الدُّعَاءِ أَفْضَلُ؟ قَالَ: «دُعَاءُ الْمَرْءِ لِنَفْسِهِ»


Hakim-1992

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

1992. எந்த பிரார்த்தனை சிறந்தது? என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்ட போது, “ஒருவர் தனக்காக (அல்லாஹ்விடம்) செய்யும் பிரார்த்தனையாகும்” என அவர்கள் பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)


سُئِلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَيُّ الدُّعَاءِ أَفْضَلُ؟ قَالَ: «دُعَاءُ الْمَرْءِ لِنَفْسِهِ»


Al-Adabul-Mufrad-715

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

715. வணக்கங்களில் சிறந்தது எதுவென நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்ட போது, “ஒருவர் தனக்காக (அல்லாஹ்விடம்) செய்யும் பிரார்த்தனையாகும்” என அவர்கள் பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)


سُئِلَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: أَيُّ الْعِبَادَةِ أَفْضَلُ؟ قَالَ: «دُعَاءُ الْمَرْءِ لِنَفْسِهِ»


Almujam-Alkabir-1319

ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

1319. ஸாபித் பின் கைஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் பள்ளிவாசலுக்கு வந்தேன். அப்போது நபி (ஸல்) அவர்கள் தொழுகையில் இருந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் ஸலாம் கொடுத்ததும், தொழுதுகொண்டிருந்த என்னை நோக்கித் திரும்பினார்கள். நான் தொழுதுகொண்டிருந்தபோது, நபி (ஸல்) அவர்கள் என்னைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். நான் தொழுது முடித்ததும், “எங்களுடன் தொழவில்லையா?” என்று கேட்டார்கள். நான் “ஆம் (உங்களுடன் தொழுதேன்)” என்றேன். “இது என்ன தொழுகை?” என்று கேட்டார்கள். நான், “அல்லாஹ்வின் தூதரே! இது ஃபஜ்ருடைய (சுன்னத்) இரண்டு ரக்அத்துகள். நான் என் வீட்டிலிருந்து புறப்படும்போது அதைத் தொழவில்லை” என்றேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அதைப் பற்றி என்னைக் கண்டிக்கவில்லை.


أَتَيْتُ الْمَسْجِدَ، وَالنَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الصَّلَاةِ، فَلَمَّا سَلَّمَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، الْتَفَتَ إِلَيَّ، وَأَنَا أُصَلِّي، فَجَعَلَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَنْظُرُ إِلَيَّ، وَأَنَا أُصَلِّي، فَلَمَّا فَرَغْتُ، قَالَ: «أَلَمْ تُصَلِّ مَعَنَا؟» قُلْتُ: نَعَمْ، قَالَ: «فَمَا هَذِهِ الصَّلَاةُ؟» قُلْتُ: يَا رَسُولَ اللهِ رَكْعَتَيِ الْفَجْرِ، خَرَجْتُ مِنْ مَنْزِلِي، وَلَمْ أَكُنْ صَلَّيْتُهُمَا، قَالَ: فَلَمْ يَعِبْ ذَلِكَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَيَّ


Kubra-Bayhaqi-4392

ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

4392.


أَبْصَرَنِي النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَنَا أُصَلِّي الرَّكْعَتَيْنِ بَعْدَ الصُّبْحِ،

فَذَكَرَ مَعْنَاهُ وَذَكَرَ قَوْلَ سُفْيَانَ كَذَا قَالَ قَيْسُ بْنُ قَهْدٍ، وَكَذَلِكَ قَالَهُ عَبْدُ اللهِ بْنُ نُمَيْرٍ، عَنْ سَعْدٍ فِي إِحْدَى الرِّوَايَتَيْنِ عَنْهُ وَقَالَ فِي رِوَايَةٍ أُخْرَى عَنْهُ: قَيْسُ بْنُ عَمْرٍو


Almujam-Alkabir-938

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

938.


مَرَّ بِيَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَنَا أُصَلِّي رَكْعَتَيْنِ بَعْدَ الصُّبْحِ فَقَالَ: «مَا هَذِهِ الصَّلَاةُ؟» فَقُلْتُ: إِنِّي لَمْ أَكُنْ صَلَّيْتُ رَكْعَتَي الْفَجْرِ فَهُمَا هَاتَانِ، فَسَكَتَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ


Almujam-Alkabir-15349

ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

939/2.


أَنَّهُ دَخَلَ الْمَسْجِدَ وَالنَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي، وَلَمْ يَكُنْ صَلَّى الرَّكْعَتَيْنِ فَصَلَّى مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَلَمَّا قَضَى صَلَاتَهُ، قَامَ فَرَكَعَ رَكْعَتَي الْفَجْرِ فَبَصُرَ بِهِ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «يَا قَيْسُ مَا هَاتَانِ؟» فَأَخْبَرَهُ بِالَّذِي صَنَعَ، فَلَمْ يُنْكِرْ ذَلِكَ عَلَيْهِ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ


Sharh-Mushkil-Al-Athar-4141

ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

4141.


أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَآهُ يُصَلِّي رَكْعَتَيْنِ بَعْدَ صَلَاةِ الْغَدَاةِ، فَقَالَ: ” مَا هَاتَانِ الرَّكْعَتَانِ يَا قَيْسُ؟ ” قَالَ: لَمْ أَكُنْ رَكَعْتُهُمَا قَبْلَ الصَّلَاةِ، فَسَكَتَ عَنْهُ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ


Next Page » « Previous Page