Author: Abdul Hakkim

Daraqutni-86

ஹதீஸின் தரம்: மவ்ளூவு - பொய்யான செய்தி

86. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஒரு முறை) நான், சூரிய வெளிச்சத்தில் தண்ணீரை சூடாக்கிக் கொண்டிருக்கும்போது என்னிடம் நபி (ஸல்) அவர்கள் வந்தார்கள். அப்போது அவர்கள், ஹுமைராவே! (சிகப்பழகியே!) இவ்வாறு செய்யாதே! ஏனெனில் இந்த (சூரிய வெளிச்சத்தில் சூடாக்கப்பட்ட) தண்ணீர் குஷ்ட நோயை ஏற்படுத்தும் என்று கூறினார்கள்.

தாரகுத்னீ இமாம் கூறுகிறார்:

இது மிகவும் அரிதான செய்தி. இதில் வரும் காலித் பின் இஸ்மாயீல் என்பவர் (பொய்யர் என்பதால் ஹதீஸ்கலை அறிஞர்களால்) கைவிடப்பட்டவர் ஆவார்.


دَخَلَ عَلَيَّ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَقَدْ سَخَّنْتُ مَاءً فِي الشَّمْسِ , فَقَالَ: «لَا تَفْعَلِي يَا حُمَيْرَا فَإِنَّهُ يُورِثُ الْبَرَصَ»


Kubra-Bayhaqi-14

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

14.


أَسْخَنْتُ مَاءً فِي الشَّمْسِ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” لَا تَفْعَلِي يَا حُمَيْرَاءُ، فَإِنَّهُ يُورِثُ الْبَرَصَ


Daraqutni-87

ஹதீஸின் தரம்: மவ்ளூவு - பொய்யான செய்தி

87.


نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يُتَوَضَّأَ بِالْمَاءِ الْمُشَمَّسِ أَوْ يُغْتَسَلَ بِهِ , وَقَالَ: «إِنَّهُ يُورِثُ الْبَرَصَ»


Almujam-Alawsat-5747

ஹதீஸின் தரம்: மவ்ளூவு - பொய்யான செய்தி

5747. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஒரு முறை) நான், சூரிய வெளிச்சத்தில் தண்ணீரை சூடாக்கி உளூ செய்வதற்காக அதை நபி (ஸல்) அவர்களிடம் கொண்டு சென்றேன். அப்போது அவர்கள், ஆயிஷாவே! இவ்வாறு செய்யாதே! ஏனெனில் இந்த (சூரிய வெளிச்சத்தில் சூடாக்கப்பட்ட) தண்ணீர் குஷ்ட நோயை ஏற்படுத்தும் என்று கூறினார்கள்.


أَسْخَنْتُ مَاءً فِي الشَّمْسِ، فَأَتَيْتُ بِهِ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِيَتَوَضَّأَ، فَقَالَ: «يَا عَائِشَةُ، لَا تَفْعَلِي، فَإِنَّ هَذَا يُورِثُ الْبَيَاضَ»


Abi-Yala-3715

ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

3715. “மறுமைநாளுக்கு முன், மக்களை ஏமாற்றும் சில வருடங்கள் வரும். அப்போது பொய்யர், உண்மையாளராக கருதப்படுவார்; உண்மையாளர், பொய்யராக கருதப்படுவார். மோசடிக்காரர், நம்பிக்கையாளராக கருதப்படுவார்.

அப்போது (மக்கள் விசயம் பற்றி) ருவைபிளாவும் பேசுவான்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது (மக்கள்) அவர்களிடம், “ருவைபிளா” என்றால் யார்? எனக் கேட்டனர். அதற்கவர்கள், “பாவியானவன் மக்கள் விசயம் பற்றி பேசுவான்” என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)

 


«إِنَّ بَيْنَ يَدَيِ السَّاعَةِ سِنِينَ خَوَادِعَةً، يُصَدَّقُ فِيهَا الْكَاذِبُ، وَيُكَذَّبُ فِيهَا الصَّادِقُ، وَيُؤْتَمَنُ فِيهَا الْخَائِنُ، وَيَتَكَلَّمُ فِيهَا الرُّوَيْبِضَةُ»، قَالُوا: يَا رَسُولَ اللَّهِ، وَمَا الرُّوَيْبِضَةُ؟ قَالَ: «الْفُوَيْسِقُ يَتَكَلَّمُ فِي أَمْرِ الْعَامَّةِ»


Ibn-Majah-4036

ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

4036. “(ஒரு காலத்தில்) மக்களை ஏமாற்றும் சில வருடங்கள் வரும். அப்போது பொய்யர், உண்மையாளராக கருதப்படுவார்; உண்மையாளர், பொய்யராக கருதப்படுவார். மோசடிக்காரர், நம்பிக்கையாளராக கருதப்படுவார்; நம்பிக்கையாளர், மோசடிக்காரராக கருதப்படுவார். அப்போது (மக்கள் விசயம் பற்றி) ருவைபிளாவும் பேசுவான்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது அவர்களிடம், “ருவைபிளா” என்றால் யார்? என வினவப்பட்டது. அதற்கவர்கள், “மக்கள் நிலைப் பற்றி சரியாக அறியாத மனிதன் (குறைமதியாளன் அவர்களின் விசயம் பற்றி பேசுவான்”) என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


«سَيَأْتِي عَلَى النَّاسِ سَنَوَاتٌ خَدَّاعَاتُ، يُصَدَّقُ فِيهَا الْكَاذِبُ، وَيُكَذَّبُ فِيهَا الصَّادِقُ، وَيُؤْتَمَنُ فِيهَا الْخَائِنُ، وَيُخَوَّنُ فِيهَا الْأَمِينُ، وَيَنْطِقُ فِيهَا الرُّوَيْبِضَةُ» ، قِيلَ: وَمَا الرُّوَيْبِضَةُ؟ قَالَ: «الرَّجُلُ التَّافِهُ فِي أَمْرِ الْعَامَّةِ»


முர்ஸல், முர்ஸலுல் கஃபீ, தத்லீஸ் இவற்றின் வித்தியாசம்

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ முர்ஸல், முர்ஸலுல் கஃபீ, தத்லீஸ் இவற்றின் வித்தியாசம். 1 . முர்ஸல். அறிவிப்பாளர் வரிசையில் எல்லா அறிவிப்பாளர்களும் இடம் பெற்று நபித்தோழர்கள் மட்டும் விடுபட்டிருக்கும் ஹதீஸ்களுக்கு முர்ஸல் எனப்படும். நபித்தோழரை விட்டு விட்டு ஒரு தாபிஈ, நபிகள் நாயகம் (ஸல்) சொன்னதாக இதில் அறிவிப்பார். உதாரணம்: “நபி (ஸல்) அவர்கள் தனது வலது கண்ணில் மூன்று தடவையும், இடது கண்ணில் மூன்று தடவையும் சுர்மா...

Hakim-311

ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

311. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒருவர் காலையில் கற்றுக்கொள்ள வேண்டும் அல்லது கற்பிக்க வேண்டும் என்று கருதி பள்ளிவாசலுக்குச் சென்றால் அவருக்கு முழுமையான உம்ரா செய்தவருக்கு கிடைக்கும் கூலி (போன்றது)  கிடைக்கும்.

(இவ்வாறே) ஒருவர் மாலையில் கற்றுக்கொள்ள வேண்டும் அல்லது கற்பிக்க வேண்டும் என்று கருதி பள்ளிவாசலுக்குச் சென்றால் அவருக்கு முழுமையான ஹஜ் செய்தவருக்கு கிடைக்கும் கூலி (போன்றது) கிடைக்கும்.

அறிவிப்பவர்: அபூஉமாமா (ரலி)


«مَنْ غَدَا إِلَى الْمَسْجِدِ لَا يُرِيدُ إِلَّا لِيَتَعَلَّمَ خَيْرًا أَوْ يَعْلَمَهُ كَانَ لَهُ أَجْرُ مُعْتَمِرٍ تَامِّ الْعُمْرَةِ، فَمَنْ رَاحَ إِلَى الْمَسْجِدِ لَا يُرِيدُ إِلَّا لِيَتَعَلَّمَ خَيْرًا أَوْ يُعَلِّمَهُ فَلَهُ أَجْرُ حَاجٍّ تَامِّ الْحِجَّةِ»


Almujam-Alkabir-7473

ஹதீஸின் தரம்: ஹஸன் - நடுத்தரமான செய்தி

7473. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒருவர், நல்லதைக் கற்றுக்கொள்ள வேண்டும் அல்லது (அதை பிறருக்கு) கற்பிக்க வேண்டும் என்று கருதி காலையில் பள்ளிவாசலுக்குச் சென்றால் அவருக்கு முழுமையான ஹஜ் செய்தவருக்கு கிடைக்கும் கூலி போன்றது கிடைக்கும்.

அறிவிப்பவர்: அபூஉமாமா (ரலி)


«مَنْ غَدَا إِلَى الْمَسْجِدِ لَا يُرِيدُ إِلَّا أَنْ يَتَعَلَّمَ خَيْرًا أَوْ يَعْلَمَهُ، كَانَ لَهُ كَأَجْرِ حَاجٍّ تَامًّا حِجَّتُهُ»


Next Page » « Previous Page