4102. ஸஹ்ல் பின் ஸஃத் அஸ்ஸாஇதீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களிடம் ஒருவர் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! நான் எந்தச் செயலைச் செய்தால் அல்லாஹ் என்னை நேசிப்பானோ, மக்களும் என்னை நேசிப்பார்களோ, அதை எனக்குக் கற்றுத் தாருங்கள்” என்று கேட்டார்.
அதற்கு நபி (ஸல்) அவர்கள், “உலக ஆசையைக் குறைத்துக் கொள்; அல்லாஹ் உன்னை நேசிப்பான். பிறருடைய கையில் இருப்பவற்றின் மீது ஆசை வைக்காதே; மக்கள் உன்னை நேசிப்பார்கள்” என்று கூறினார்கள்.
أَتَى النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَجُلٌ، فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ دُلَّنِي عَلَى عَمَلٍ إِذَا أَنَا عَمِلْتُهُ أَحَبَّنِي اللَّهُ وَأَحَبَّنِي النَّاسُ؟ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «ازْهَدْ فِي الدُّنْيَا يُحِبَّكَ اللَّهُ، وَازْهَدْ فِيمَا فِي أَيْدِي النَّاسِ يُحِبُّكَ النَّاسُ»
சமீப விமர்சனங்கள்