Author: Abdul Hakkim

Alilal-Ibn-Abi-Hatim-1073

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

1073.


إِذَا كَانَتْ مَنِيَّةُ أَحَدِكُمْ بِأَرضٍ؛ قُيِّضَتْ لَهُ الحَاجَةُ، فَيَعْمِدُ إلَيْهَا، فَيَكونُ أقْصَى أَثَرٍ مِنْهُ، فَيُقْبَضُ فِيهَا، فَتَقُولُ الأرْضُ يَوْمَ القِيَامَةِ : رَبِّ! هَذا مَا اسْتَوْدَعْتَني

قَالَ أَبِي: الكوفيُّون لا يرفَعونه.
قَالَ أَبُو مُحَمَّدٍ : هَذَا الحديثُ معروفٌ بِعُمَرَ بْنِ عليِّ بْنِ مُقَدَّم ، تفرَّد بِهِ عَنْ إِسْمَاعِيلَ بْنِ أَبِي خَالِدٍ، وَتَابَعَهُ عَلَى رِوَايَتِهِ مُحَمَّدُ ابن خالد الوَهْبي


Ibn-Majah-4263

ஹதீஸின் தரம்: நபித்தோழரின் செயல் - பலமான செய்தி

4263. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒரு (குறிப்பிட்ட) இடத்தில் உங்களில் ஒருவரின் மரணம் நிகழுமென்றிருந்தால் ஒரு தேவை அவரை அந்தஇடத்திற்கு கொண்டு வந்து சேர்க்கும். அவர் தனது இறுதி காலடியை வைக்கும்போது தூயோனான அல்லாஹ் அவரைக் கைப்பற்றிவிடுவான்.

அந்த இடம் மறுமை நாளில், “எனது இறைவனே! இவர் தான், நீ என்னிடம் ஒப்படைத்தவர்” என்று கூறும்.

அறிவிப்பவர்: இப்னு மஸ்ஊத் (ரலி)


إِذَا كَانَ أَجَلُ أَحَدِكُمْ بِأَرْضٍ أَوْثَبَتْهُ إِلَيْهَا الْحَاجَةُ، فَإِذَا بَلَغَ أَقْصَى أَثَرِهِ، قَبَضَهُ اللَّهُ سُبْحَانَهُ، فَتَقُولُ الْأَرْضُ يَوْمَ الْقِيَامَةِ: رَبِّ هَذَا مَا اسْتَوْدَعْتَنِي


Hakim-127

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

127. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒரு (குறிப்பிட்ட) இடத்தில் ஓர் அடியார் இறப்பார் என அல்லாஹ் தீர்மானித்துவிட்டால், ‘அந்த இடத்தில்’ அல்லது ‘அங்கு’ அவருக்கு ஒரு தேவையை அவன் ஏற்படுத்திவிடுவான்.

அறிவிப்பவர்: அபூஅஸ்ஸா (ரலி)


«إِذَا أَرَادَ اللَّهُ قَبْضَ عَبْدٍ بِأَرْضٍ جَعَلَ لَهُ إِلَيْهَا حَاجَةً»


Ibn-Hibban-6151

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

6151. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒரு (குறிப்பிட்ட) இடத்தில் ஓர் அடியார் இறப்பார் என அல்லாஹ் தீர்மானித்துவிட்டால், அந்த இடத்தில் அவருக்கு ஒரு தேவையை அவன் ஏற்படுத்திவிடுவான்.

அறிவிப்பவர்: அபூஅஸ்ஸா (ரலி)


«إِذَا أَرَادَ اللَّهُ قَبْضَ عَبْدٍ بِأَرْضٍ جَعَلَ لَهُ فِيهَا حَاجَةً»


Al-Adabul-Mufrad-780

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

780. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒரு (குறிப்பிட்ட) இடத்தில் ஓர் அடியாரை கைப்பற்ற அல்லாஹ் தீர்மானித்துவிட்டால், ‘அந்த இடத்தில்’ அல்லது ‘அங்கு’ அவருக்கு ஒரு தேவையை அவன் ஏற்படுத்திவிடுவான்.

அறிவிப்பவர்: அபூஅஸ்ஸா (ரலி)


إِنَّ اللَّهَ إِذَا أَرَادَ قَبْضَ عَبْدٍ بِأَرْضٍ، جَعَلَ لَهُ بِهَا – أَوْ: فِيهَا – حَاجَةً


Musnad-Ahmad-15539

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

அபூஅஸ்ஸா (ரலி) அவர்களின் ஹதீஸ்கள்:

15539. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒரு (குறிப்பிட்ட) இடத்தில் ஓர் அடியாரின் உயிரை கைப்பற்ற அல்லாஹ் தீர்மானித்துவிட்டால், ‘அந்த இடத்தில்’ அல்லது ‘அங்கு’ அவருக்கு ஒரு தேவையை அவன் ஏற்படுத்திவிடுவான்.

அறிவிப்பவர்: அபூஅஸ்ஸா (ரலி)


إِنَّ اللَّهَ تَبَارَكَ وَتَعَالَى إِذَا أَرَادَ قَبْضَ رُوحِ عَبْدٍ بِأَرْضٍ، جَعَلَ لَهُ فِيهَا – أَوْ قَالَ: بِهَا حَاجَةً


Al-Adabul-Mufrad-779

ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

பாடம்:

ஒருவரின் உதவி தேவையென்றால் அவரிடம் சாதாரணமாகக் கேட்க வேண்டும்; அவரைப் புகழக்கூடாது.

779. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

உங்களில் ஒருவர் (மற்றவரிடம்) உதவிக் கேட்டால் அதை சாதாரணமாகக் கேட்கட்டும். ஏனெனில் அவருக்கு விதியில் எழுதப்பட்டதே கிடைக்கும். உதவி செய்பவரிடம் வந்து அவரைப் புகழ்ந்து; அவரின் முதுகை முறித்து விடவேண்டாம்.

அறிவிப்பவர்: அபுல்அஹ்வஸ் (ரஹ்)


إِذَا طَلَبَ أَحَدُكُمُ الْحَاجَةَ فَلْيَطْلُبْهَا طَلَبًا يَسِيرًا، فَإِنَّمَا لَهُ مَا قُدِّرَ لَهُ، وَلَا يَأْتِي أَحَدُكُمْ صَاحِبَهُ فَيَمْدَحَهُ، فَيَقْطَعَ ظَهْرَهُ


Tirmidhi-2147

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2147. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒரு (குறிப்பிட்ட) இடத்தில் ஓர் அடியார் இறப்பார் என அல்லாஹ் தீர்மானித்துவிட்டால், ‘அந்த இடத்தில்’ அல்லது ‘அங்கு’ அவருக்கு ஒரு தேவையை அவன் ஏற்படுத்திவிடுவான்.

அறிவிப்பவர்: அபூஅஸ்ஸா (ரலி)

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இது ‘ஸஹீஹ்’ எனும் தரத்தில் அமைந்த ஹதீஸ் ஆகும்.

(இந்த ஹதீஸின் அறிவிப்பாளரான) அபூஅஸ்ஸா (ரலி) அவர்கள் நபித்தோழர் ஆவார். அன்னாரின் இயற்பெயர், யஸார் பின் அப்த் ஆகும். (மேற்கண்ட ஹதீஸின் இரண்டாம் அறிவிப்பாளரான) அபுல்மலீஹ் அவர்களின் இயற்பெயர், ஆமிர் பின் உஸாமா பின் உமைர் அல்ஹுதலீ ஆகும். இவரை ஸைத் பின் உஸாமா என்றும் கூறப்படுகிறது.


إِذَا قَضَى اللَّهُ لِعَبْدٍ أَنْ يَمُوتَ بِأَرْضٍ جَعَلَ لَهُ إِلَيْهَا حَاجَةً، أَوْ قَالَ: بِهَا حَاجَةً


Musnad-Ahmad-21983

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

21983. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒரு (குறிப்பிட்ட) இடத்தில் ஓர் அடியார் இறப்பார் என அல்லாஹ் தீர்மானித்துவிட்டால், அந்த இடத்தில் அவருக்கு ஒரு தேவையை அவன் ஏற்படுத்திவிடுவான்.

அறிவிப்பவர்: மத்தர் பின் உகாமிஸ் (ரலி)


«إِذَا قَضَى اللَّهُ مِيتَةَ عَبْدٍ بِأَرْضٍ، جَعَلَ لَهُ إِلَيْهَا حَاجَةً»


Musnad-Ahmad-21984

ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

21984. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒரு (குறிப்பிட்ட) இடத்தில் ஒருவர் இறப்பார் என (அல்லாஹ்வால்) தீர்மானிக்கப்பட்டுவிட்டால், அந்த இடத்தில் அவருக்கு ஒரு தேவையை ஏற்படுத்தப்பட்டு, அதை விருப்பமாக்கப்பட்டுவிடும்.

அறிவிப்பவர்: மத்தர் பின் உகாமிஸ் (ரலி)


«لَا يُقَدَّرُ لِأَحَدٍ يَمُوتُ بِأَرْضٍ، إِلَّا حُبِّبَتْ إِلَيْهِ وَجُعِلَ لَهُ إِلَيْهَا حَاجَةٌ»


Next Page » « Previous Page