Author: Abdul Hakkim

Tirmidhi-2914

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

2914. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

குர்ஆனுடன் (அதை உணர்ந்து) வாழ்ந்தவரிடம் (அவர் சொர்க்கத்திற்குச் செல்லும்போது) “ஓதுக; (சொர்க்கப் படிநிலைகளில்) உயருக; உலகில் நீர் நிறுத்தி நிதானமாக ஓதிக்கொண்டிருந்ததைப் போன்று (இங்கும்) ஓதுக! ஏனெனில், நீர் ஓதி முடிக்கும் இறுதி வசனத்திற்கு அருகில்தான் நீர் தங்கப் போகுமிடம் அமைந்துள்ளது” என்று கூறப்படும்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)

திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இது ‘ஹஸன் ஸஹீஹ்’ எனும் தரத்தில் அமைந்த ஹதீஸாகும்.

இந்தச் செய்தியை புன்தார்-முஹம்மது பின் பஷ்ஷார் அவர்கள், அப்துர்ரஹ்மான் பின் மஹ்தீ —> ஸுஃப்யான் ஸவ்ரீ —> ஆஸிம் … என்ற அறிவிப்பாளர்தொடரில் எங்களுக்கு அறிவித்தார்.


يُقَالُ – يَعْنِي لِصَاحِبِ الْقُرْآنِ -: اقْرَأْ وَارْتَقِ وَرَتِّلْ كَمَا كُنْتَ تُرَتِّلُ فِي الدُّنْيَا، فَإِنَّ مَنْزِلَتَكَ عِنْدَ آخِرِ آيَةٍ تَقْرَأُ بِهَا

«هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ»

حَدَّثَنَا بُنْدَارٌ قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ، عَنْ سُفْيَانَ، عَنْ عَاصِمٍ، بِهَذَا الإِسْنَادِ نَحْوَهُ


Musnad-Ahmad-6799

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

6799. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

குர்ஆனுடன் (அதை உணர்ந்து) வாழ்ந்தவரிடம் (அவர் சொர்க்கத்திற்குச் செல்லும்போது) “ஓதுக; (சொர்க்கப் படிநிலைகளில்) உயருக; உலகில் நீர் நிறுத்தி நிதானமாக ஓதிக்கொண்டிருந்ததைப் போன்று (இங்கும்) ஓதுக! ஏனெனில், நீர் ஓதி முடிக்கும் இறுதி வசனத்திற்கு அருகில்தான் நீர் தங்கப் போகுமிடம் அமைந்துள்ளது” என்று கூறப்படும்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)


يُقَالُ لِصَاحِبِ الْقُرْآنِ: اقْرَأْ، وَارْقَ، وَرَتِّلْ كَمَا كُنْتَ تُرَتِّلُ فِي الدُّنْيَا، فَإِنَّ مَنْزِلَتَكَ عِنْدَ آخِرِ آيَةٍ تَقْرَؤُهَا


Abu-Dawood-1464

ஹதீஸின் தரம்: ஹஸன் - நடுத்தரமான செய்தி

பாடம்:

குர்ஆனை நிறுத்தி நிதானமாக ஓதுவது விரும்பத்தக்கது.

1464.  அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

குர்ஆனுடன் (அதை உணர்ந்து) வாழ்ந்தவரிடம் (அவர் சொர்க்கத்திற்குச் செல்லும்போது) “ஓதுக; (சொர்க்கப் படிநிலைகளில்) உயருக; உலகில் நீர் நிறுத்தி நிதானமாக ஓதிக்கொண்டிருந்ததைப் போன்று (இங்கும்) ஓதுக! ஏனெனில், நீர் ஓதி முடிக்கும் இறுதி வசனத்திற்கு அருகில்தான் நீர் தங்கப் போகுமிடம் அமைந்துள்ளது” என்று கூறப்படும்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)


يُقَالُ لِصَاحِبِ الْقُرْآنِ: اقْرَأْ، وَارْتَقِ، وَرَتِّلْ كَمَا كُنْتَ تُرَتِّلُ فِي الدُّنْيَا، فَإِنَّ مَنْزِلَكَ عِنْدَ آخِرِ آيَةٍ تَقْرَؤُهَا


அறிவிப்பாளர்தொடர்களில் முக்கியமான அடிப்படையானவர்கள்

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ மதாருல் இஸ்னாத்-அறிவிப்பாளர்தொடர்களில் இடம்பெறும் முக்கியமான (அஸல்-அடிப்படையான) அறிவிப்பாளர்கள்-(மதாருர் ருவாத்). (அதாவது இவர்கள் வழியாகத் தான் பெரும்பான்மையான ஹதீஸ்கள் வந்திருக்கும். இவர்களிடமிருந்து தான் அதிகமான அறிவிப்பாளர்கள் அறிவித்திருப்பார்கள்.) குறிப்பிட்ட ஊர்களைச் சேர்ந்தவர்களிடமிருந்து அறிவித்தவர்கள்: 1 . மதீனாவாசிகளிடமிருந்து அறிவித்தவர்கள்: 1 . இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ. (பிறப்பு ஹிஜ்ரீ 50 முதல் 58 க்குள், இறப்பு ஹிஜ்ரீ 123 / 124) 2 . மக்காவாசிகளிடமிருந்து...

12 வகை காலகட்டத்தைச் சேர்ந்தவர்களில் முக்கிய, ஹதீஸ்அறிவிப்பாளர்கள்

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ ஹதீஸ்கலையில் ஹதீஸ்களை அறிவிக்கும் அறிவிப்பாளர்கள் பற்றி அறிந்துக் கொள்வது முக்கிய அம்சமாகும். இதனால் தான் அறிவிப்பாளர்களைப் பற்றி பலதரப்பட்ட நூல்களை அறிஞர்கள் தொகுத்துள்ளனர். இல்முல் இலல் எனும் ஹதீஸ்துறையில் அதிகமான ஹதீஸ்களை அறிவித்துள்ள அறிவிப்பாளர்கள் பற்றி தெரிந்துக் கொள்வதும் ஒரு முக்கிய அம்சமாகும். இதன் ஆரம்பக்கட்டமாக 12 வகை காலகட்டத்தைச் சேர்ந்தவர்களில் முக்கிய ஹதீஸ்அறிவிப்பாளர்கள்; அதிகம் ஹதீஸ்களை அறிவித்தவர்கள்; இவர்களைப் பற்றிய சில குறிப்புகள்...

முக்கிய துறைகளில் முக்கிய அறிஞர்கள்

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ முக்கிய கல்வித்துறைகளில் முக்கிய அறிஞர்கள். மார்க்கச் சட்டம் (ஃபிக்ஹ்) 1 . உமர் பின் அல்கத்தாப் (ரலி) 2 . அலீ பின் அபூதாலிப் (ரலி) 3 . இப்னு மஸ்ஊத் (ரலி) 4 . உபை பின் கஅப் (ரலி) 5 . முஆத் பின் ஜபல் (ரலி) 6 . ஸைத் பின் ஸாபித் (ரலி) (நபித்தோழர்களின் கல்வியை முக்கியமான மேற்கண்ட...

Al-Adabul-Mufrad-388

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்:

மக்களின் தீங்கை சகித்துக் கொள்ளுதல்.

388. “மக்களைச் சந்திக்காமலும் அவர்களிடமிருந்து ஏற்படும் தீங்குகளைச் சகித்துக் கொள்ள முடியாமலும் இருக்கின்ற ஒரு முஸ்லிமை விட, மக்களோடு வாழ்ந்து அவர்களிடமிருந்து வரும் தீங்குகளைச் சகித்துக் கொள்ளும் முஸ்லிம் சிறந்தவர் ஆவார்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)


«الْمُؤْمِنُ الَّذِي يُخَالِطُ النَّاسَ، وَيَصْبِرُ عَلَى أَذَاهُمْ، خَيْرٌ مِنَ الَّذِي لَا يُخَالِطُ النَّاسَ، وَلَا يَصْبِرُ عَلَى أَذَاهُمْ»


Musnad-Ahmad-5022

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

5022. “மக்களைச் சந்திக்காமலும் அவர்களிடமிருந்து ஏற்படும் தீங்குகளைச் சகித்துக் கொள்ள முடியாமலும் இருக்கின்ற ஒரு முஸ்லிமை விட, மக்களோடு வாழ்ந்து அவர்களிடமிருந்து வரும் தீங்குகளைச் சகித்துக் கொள்ளும் முஸ்லிம் (அல்லாஹ்விடம்) மகத்தான நற்கூலியை பெறுபவர் ஆவார்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

ஷுஅபா அவர்களிடமிருந்து அறிவிக்கும் முஹம்மது பின் ஜஃபர் அவர்கள் இவ்வாறு ஹதீஸின் வாசகத்தை அறிவித்துள்ளார்.

ஷுஅபா அவர்களிடமிருந்து அறிவிக்கும் ஹஜ்ஜாஜ் பின் முஹம்மத் அவர்கள், “தீங்குகளைச் சகித்துக் கொள்ளும் முஸ்லிம் சிறந்தவர் ஆவார்” என்று அறிவித்துள்ளார்.

இதில் நபித்தோழர்களில் ஒருபெரியவர் என்று குறிப்பிடப்படுபவர் இப்னு உமர் (ரலி) ஆவார் என்று ஸுலைமான் (பின் மிஹ்ரான்-அல்அஃமஷ்) அவர்கள் கூறினார்கள் என ஷுஅபா அவர்கள் குறிப்பிட்டார்.


«الْمُؤْمِنُ الَّذِي يُخَالِطُ النَّاسَ، وَيَصْبِرُ عَلَى أَذَاهُمْ، أَعْظَمُ أَجْرًا مِنَ الَّذِي لَا يُخَالِطُهُمْ، وَلَا يَصْبِرُ عَلَى أَذَاهُمْ»

قَالَ: حَجَّاجٌ: «خَيْرٌ مِنَ الَّذِي لَا يُخَالِطُهُمْ»


Musnad-Ahmad-23098

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

23098. “மக்களைச் சந்திக்காமலும் அவர்களிடமிருந்து ஏற்படும் தீங்குகளைச் சகித்துக் கொள்ள முடியாமலும் இருக்கின்ற ஒரு முஸ்லிமை விட, மக்களோடு வாழ்ந்து அவர்களிடமிருந்து வரும் தீங்குகளைச் சகித்துக் கொள்ளும் முஸ்லிம் (அல்லாஹ்விடம்) மகத்தான நற்கூலியை பெறுபவர் ஆவார்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)


«الْمُؤْمِنُ الَّذِي يُخَالِطُ النَّاسَ وَيَصْبِرُ عَلَى أَذَاهُمْ، أَعْظَمُ أَجْرًا مِنَ الَّذِي لَا يُخَالِطُ النَّاسَ وَلَا يَصْبِرُ عَلَى أَذَاهُمْ»


Ibn-Majah-4032

ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

4032. “மக்களைச் சந்திக்காமலும் அவர்களிடமிருந்து ஏற்படும் தீங்குகளைச் சகித்துக் கொள்ள முடியாமலும் இருக்கின்ற ஒரு முஸ்லிமை விட, மக்களோடு வாழ்ந்து அவர்களிடமிருந்து வரும் தீங்குகளைச் சகித்துக் கொள்ளும் முஸ்லிம் (அல்லாஹ்விடம்) மகத்தான நற்கூலியை பெறுபவர் ஆவார்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)


«الْمُؤْمِنُ الَّذِي يُخَالِطُ النَّاسَ، وَيَصْبِرُ عَلَى أَذَاهُمْ، أَعْظَمُ أَجْرًا مِنَ الْمُؤْمِنِ الَّذِي لَا يُخَالِطُ النَّاسَ، وَلَا يَصْبِرُ عَلَى أَذَاهُمْ»


Next Page » « Previous Page