Author: Abdul Hakkim

Abi-Yala-4528

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

4528. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், குர்ஆனின் வசனங்களுக்கு சுயமாக விளக்கமளிக்க மாட்டார்கள். ஜிப்ரீல் (அலை) அவர்கள் கற்றுத் தந்த சில எண்ணிக்கையில் அமைந்த வசனங்களுக்கு மட்டுமே விளக்கமளிப்பார்கள்.


أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ «لَا يُفَسِّرُ شَيْئًا مِنَ الْقُرْآنِ بِرَأْيِهِ إِلَّا آيًا بِعَدَدٍ. عَلَّمَهُنَّ إِيَّاهُ جِبْرِيلُ»


Bazzar-79

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

79. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஜிப்ரீல் (அலை) அவர்கள் கற்றுத் தந்த சில எண்ணிக்கையில் அமைந்த வசனங்களுக்கு மட்டுமே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் விளக்கமளிப்பவர்களாக இருந்தார்கள்.


مَا كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وسلم يفسر شيئا من القرآن إلا آيا بعدد علمه إياه جبريل.


Tirmidhi-2952

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

2952. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாவது:

யார் குர்ஆனில் (அதனுடைய வசனங்களில், கருத்துகளில் தன் அறிவில் தோன்றியதை) சுயமாக பேசுகிறாரோ அவரின் கூற்று (எதார்த்தமாக) சரியாகவே இருந்தாலும் (மார்க்கத்தின் பார்வையில்) அவர் தவறிழைத்தவராவார்.

அறிவிப்பவர்: ஜுன்துப் பின் அப்துல்லாஹ் (ரலி)

திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இந்த நபிமொழி “ஃகரீப்” எனும் தரத்தில் அமைந்ததாகும்.

இதில் இடம்பெறும் (ஹஸ்ம் அல்குதயீ என்பவரின் சகோதரர்)-ஸுஹைல் பின் அப்துல்லாஹ்-இப்னு அபூஹஸ்ம் என்பவரைப் பற்றி நபிமொழி ஆய்வாளர்கள் விமர்சித்துள்ளனர்.

மேலும் இவ்வாறே நபி (ஸல்) அவர்களின் தோழர்கள், அவர்களுக்குப் பின் வந்த அறிஞர் பெருமக்களில் சிலர், குர்ஆனுக்கு அதன் ஞானமின்றி சுய விளக்கம் தரக்கூடாது என்பதில் கடினமாக நடந்துகொண்டார்கள்.

தெரிந்துகொள்ளுங்கள்: முஜாஹித் (ரஹ்), கதாதா (ரஹ்) இவர்களைப் போன்ற மற்றுமுள்ள அறிஞர்கள் குர்ஆனுக்கு விளக்கமளித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் அவர்களில் எவரும் குர்ஆனுக்கு அதன் ஞானமின்றி, சுய விளக்கமளித்ததாகக் கருதவேண்டியதில்லை.

அவர்கள் அவ்வாறு குர்ஆனுக்கு

«مَنْ قَالَ فِي القُرْآنِ بِرَأْيِهِ فَأَصَابَ فَقَدْ أَخْطَأَ»

«هَذَا حَدِيثٌ غَرِيبٌ، وَقَدْ تَكَلَّمَ بَعْضُ أَهْلِ الحَدِيثِ فِي سُهَيْلِ بْنِ أَبِي حَزْمٍ، وَهَكَذَا رُوِيَ عَنْ بَعْضِ أَهْلِ العِلْمِ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَغَيْرِهِمْ، أَنَّهُمْ شَدَّدُوا فِي هَذَا فِي أَنْ يُفَسَّرَ القُرْآنُ بِغَيْرِ عِلْمٍ وَأَمَّا الَّذِي رُوِيَ عَنْ مُجَاهِدٍ وَقَتَادَةَ وَغَيْرِهِمَا مِنْ أَهْلِ العِلْمِ أَنَّهُمْ فَسَّرُوا القُرْآنَ، فَلَيْسَ الظَّنُّ بِهِمْ أَنَّهُمْ قَالُوا فِي القُرْآنِ أَوْ فَسَّرُوهُ بِغَيْرِ عِلْمٍ أَوْ مِنْ قِبَلِ أَنْفُسِهِمْ. وَقَدْ رُوِيَ عَنْهُمْ مَا يَدُلُّ عَلَى مَا قُلْنَا، أَنَّهُمْ لَمْ يَقُولُوا مِنْ قِبَلِ أَنْفُسِهِمْ بِغَيْرِ عِلْمٍ»

حَدَّثَنَا الحُسَيْنُ بْنُ مَهْدِيٍّ البَصْرِيُّ قَالَ: أَخْبَرَنَا عَبْدُ الرَّزَّاقِ، عَنْ مَعْمَرٍ، عَنْ قَتَادَةَ، قَالَ: «مَا فِي القُرْآنِ آيَةٌ إِلَّا وَقَدْ سَمِعْتُ فِيهَا شَيْئًا»

حَدَّثَنَا ابْنُ أَبِي عُمَرَ قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنِ الأَعْمَشِ، قَالَ: قَالَ مُجَاهِدٌ: «لَوْ كُنْتُ قَرَأْتُ قِرَاءَةَ ابْنِ مَسْعُودٍ لَمْ أَحْتَجْ أَنْ أَسْأَلَ ابْنَ عَبَّاسٍ عَنْ كَثِيرٍ مِنَ القُرْآنِ مِمَّا سَأَلْتُ»


Abu-Dawood-3652

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

பாடம்:

அல்லாஹ்வின் வேதமான குர்ஆனுக்கு அறிவு-ஞானமின்றி விளக்கமளிப்பது.

3652. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாவது:

யார், குர்ஆனில் (அதனுடைய வசனங்களில்,கருத்துகளில் தன் அறிவில் தோன்றியதை) சுயமாக பேசுகிறாரோ அவரின் கூற்று (எதார்த்தமாக) சரியாகவே இருந்தாலும் (மார்க்கத்தின் பார்வையில்) அவர் தவறிழைத்தவராவார்.

அறிவிப்பவர்: ஜுன்துப் பின் அப்துல்லாஹ் (ரலி)


مَنْ قَالَ: فِي كِتَابِ اللَّهِ عَزَّ وَجَلَّ بِرَأْيِهِ فَأَصَابَ، فَقَدْ أَخْطَأَ


Abi-Yala-2721

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

2721.


«اتَّقُوا الْحَدِيثَ عَنِّي إِلَّا مَا عَلِمْتُمْ، فَإِنَّهُ مَنْ كَذَبَ عَلَيَّ مُتَعَمِّدًا فَلْيَتَبَوَّأْ مَقْعَدَهُ مِنَ النَّارِ، وَمَنْ كَذَبَ بِالْقُرْآنِ بِغَيْرِ عِلْمٍ فَلْيَتَبَوَّأْ مَقْعَدَهُ مِنَ النَّارِ»


Abi-Yala-2338

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

2338.


«اتَّقُوا الْحَدِيثَ عَلَيَّ إِلَّا مَا عَلِمْتُمْ؛ فَإِنَّهُ مَنْ كَذَبَ عَلَيَّ مُتَعَمِّدًا فَلْيَتَبَوَّأْ مَقْعَدَهُ مِنَ النَّارِ، وَمَنْ كَذَبَ عَلَى الْقُرْآنِ بِغَيْرِ عِلْمٍ فَلْيَتَبَوَّأْ مَقْعَدَهُ مِنَ النَّارِ»


Next Page » « Previous Page