Author: Abdul Hakkim

Hakim-729

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

729. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் ஒருவர் (நோன்பு வைக்க ஸஹர் உணவு உண்ணும் போது) தமது கையில் உணவுத் தட்டு வைத்திருக்கும் நிலையில் தொழுகை அறிவிப்பை செவியுற்றால் அதிலிருந்து தமது தேவைக்கேற்ப உண்டு முடிக்கும்வரை பாத்திரத்தை கீழே வைக்க வேண்டாம்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

ஹாகிம் இமாம் கூறுகிறார்:

அபூபக்ர் பின் இஸ்ஹாக் அவர்கள், இந்த செய்தியை ஹம்மாத் பின் ஸலமா —> அம்மார் பின் அபூஅம்மார் —> அபூஹுரைரா (ரலி) —> நபி (ஸல்) என்ற அறிவிப்பாளர்தொடரிலும் அறிவித்துள்ளார்.

மேற்கண்ட செய்தி முஸ்லிம் இமாமின் நிபந்தனைப்படி உள்ள செய்தியாகும். புகாரீ, முஸ்லிம் ஆகியோர் இதைப் பதிவு செய்யவில்லை.

«إِذَا سَمِعَ أَحَدُكُمُ النِّدَاءَ وَالْإِنَاءُ عَلَى يَدِهِ فَلَا يَضَعُهُ حَتَّى يَقْضِيَ حَاجَتَهُ مِنْهُ»

وَفِي حَدِيثِ أَبِي بَكْرِ بْنِ إِسْحَاقَ، قَالَ: وَحَدَّثَنَا حَمَّادٌ، عَنْ عَمَّارٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ بِمِثْلِهِ.

Daraqutni-2182

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம்:

ஸஹர் நேரம்.

2182. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் ஒருவர் (நோன்பு வைக்க ஸஹர் உணவு உண்ணும் போது) தமது கையில் உணவுத் தட்டு வைத்திருக்கும் நிலையில் தொழுகை அறிவிப்பை செவியுற்றால் அதிலிருந்து தமது தேவைக்கேற்ப உண்டு முடிக்கும்வரை பாத்திரத்தை கீழே வைக்க வேண்டாம்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

தாரகுத்னீ இமாம் கூறுகிறார்:

இந்தச் செய்தியை (ஹம்மாத் பின் ஸலமாவிடமிருந்து அறிவிக்கும் அப்துல்அஃலா என்பவர் நபியின் கூற்றாக அறிவித்திருப்பதைப் போன்றே) ரவ்ஹு பின் உபாதாவும் நபியின் கூற்றாக அறிவித்துள்ளார் என அபூதாவூத் இமாம் கூறினார்.

«إِذَا سَمِعَ أَحَدُكُمُ النِّدَاءَ وَالْإِنَاءُ عَلَى يَدِهِ فَلَا يَضَعْهُ حَتَّى يَقْضِيَ حَاجَتَهُ مِنْهُ».

Musnad-Ahmad-10630

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

10630. ஹதீஸ் எண்-10629 இல் வரும் செய்தி இந்த அறிவிப்பாளர்தொடரிலும் வந்துள்ளது. மேலும் இதில் “தொழுகை அறிவிப்பாளர் ஃபஜ்ர் உதயமாகும் போது பாங்கு கூறுவார்” என்ற கூடுதலான வாசகம் இடம்பெற்றுள்ளது.

وَكَانَ الْمُؤَذِّنُ يُؤَذِّنُ إِذَا بَزَغَ الْفَجْرُ

Musnad-Ahmad-10629

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

10629. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் ஒருவர் (நோன்பு வைக்க ஸஹர் உணவு உண்ணும் போது) தமது கையில் உணவுத் தட்டு வைத்திருக்கும் நிலையில் தொழுகை அறிவிப்பை செவியுற்றால் அதிலிருந்து தமது தேவைக்கேற்ப உண்டு முடிக்கும்வரை பாத்திரத்தை கீழே வைக்க வேண்டாம்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

«إِذَا سَمِعَ أَحَدُكُمُ النِّدَاءَ وَالْإِنَاءُ عَلَى يَدِهِ، فَلَا يَضَعْهُ حَتَّى يَقْضِيَ حَاجَتَهُ مِنْهُ»

Musnad-Ahmad-9474

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

9474. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் ஒருவர் (நோன்பு வைக்க ஸஹர் உணவு உண்ணும் போது) தமது கையில் உணவுத் தட்டு வைத்திருக்கும் நிலையில் தொழுகை அறிவிப்பை செவியுற்றால் அதிலிருந்து தமது தேவைக்கேற்ப உண்டு முடிக்கும்வரை பாத்திரத்தை கீழே வைக்க வேண்டாம்.

அறிவிப்பவர்கள்: அபூஹுரைரா (ரலி), ஹஸன் பஸரீ (ரஹ்)

இந்த செய்தி இரண்டு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

«إِذَا سَمِعَ أَحَدُكُمُ الْأَذَانَ، وَالْإِنَاءُ عَلَى يَدِهِ، فَلَا يَدَعْهُ حَتَّى يَقْضِيَ مِنْهُ»

Abu-Dawood-2350

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

பாடம்:

ஒருவர் தனது கையில் உணவுத் தட்டு வைத்திருக்கும் போது தொழுகை அறிவிப்பை செவியுற்றால் (என்ன செய்வது?)

2350. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் ஒருவர் (நோன்பு வைக்க ஸஹர் உணவு உண்ணும் போது) தமது கையில் உணவுத் தட்டு வைத்திருக்கும் நிலையில் தொழுகை அறிவிப்பை செவியுற்றால் அதிலிருந்து தமது தேவைக்கேற்ப உண்டு முடிக்கும்வரை பாத்திரத்தை கீழே வைக்க வேண்டாம்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

«إِذَا سَمِعَ أَحَدُكُمُ النِّدَاءَ وَالْإِنَاءُ عَلَى يَدِهِ، فَلَا يَضَعْهُ حَتَّى يَقْضِيَ حَاجَتَهُ مِنْهُ»

Abu-Dawood-938

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

938. நாங்கள் அபூஸுஹைர் அன்னுமைரீ (ரலி) அவர்கள் அருகே அமர்ந்திருந்தோம். அவர் நபித்தோழர்களில் ஒருவராவார். ஆதலால் மிக அழகான ஹதீஸ்களை அவர் அறிவிப்பார். எங்களில் ஒருவர் ஒரு பிரார்த்தனையை செய்தால் அதை ஆமீன் கூறி முடித்துக் கொள்க!. ஏனெனில் அது ஒரு ஏட்டின் மீதுள்ள முத்திரையை போன்றதாகும் என்று கூறுவார். மேலும் அபூஸுஹைர் (ரலி) அவர்கள், உங்களுக்கு இது தொடர்பாக ஹதீஸ் அறிவிக்கட்டுமா? என்று கேட்டு பின்வரும் ஹதீஸையும் அறிவிப்பார்.

அல்லாஹ்வின் திருத்தூதர் (ஸல்) அவர்களுடன் நாங்கள் ஓர் இரவில் புறப்பட்டு ஒருவரிடம் சென்றோம். அவர் துஆ செய்வதில் மும்முரமாக ஈடுபட்டிருந்தார். எனவே நபி (ஸல்) அவர்கள் அவரின் பிரார்த்தனையை செவியுற்றவாறு நின்றார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், அவர் முத்திரையிட்டு விட்டால் (சுவனத்தை) உறுதி செய்தவராவார் என்று சொன்னார்கள். அப்போது கூட்டத்திலிருந்து ஒருவர் எதைக் கொண்டு அவர் முத்திரையிடல் வேண்டும்? என்று கேட்டார். ஆமீன் என்பதைக் கொண்டு முத்திரையிட வேண்டும். ஏனெனில் ஆமீன் என்பதைக் கொண்டு அவர் முத்திரையிட்டு விட்டால் அவர் (தனக்கு) சுவனத்தை உறுதியாக்கிவிட்டார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். நபி (ஸல்) அவர்களிடம் (எதைக் கொண்டு முத்திரையிடுவது எனக்) கேட்டவர், (துஆவில் ஈடுபட்டுக் கொண்டிருந்த) மனிதரிடம்

كُنَّا نَجْلِسُ إِلَى أَبِي زُهَيْرٍ النُّمَيْرِيِّ، وَكَانَ مِنَ الصَّحَابَةِ، فَيَتَحَدَّثُ أَحْسَنَ الْحَدِيثِ، فَإِذَا دَعَا الرَّجُلُ مِنَّا بِدُعَاءٍ قَالَ: اخْتِمْهُ بِآمِينَ، فَإِنَّ آمِينَ مِثْلُ الطَّابَعِ عَلَى الصَّحِيفَةِ، قَالَ أَبُو زُهَيْرٍ: أُخْبِرُكُمْ عَنْ ذَلِكَ؟ خَرَجْنَا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ذَاتَ لَيْلَةٍ، فَأَتَيْنَا عَلَى رَجُلٍ قَدْ أَلَحَّ فِي الْمَسْأَلَةِ، فَوَقَفَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَسْتَمِعُ مِنْهُ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَوْجَبَ إِنْ خَتَمَ»، فَقَالَ رَجُلٌ مِنَ الْقَوْمِ: بِأَيِّ شَيْءٍ يَخْتِمُ؟ قَالَ: «بِآمِينَ، فَإِنَّهُ إِنْ خَتَمَ بِآمِينَ فَقَدْ أَوْجَبَ»، فَانْصَرَفَ الرَّجُلُ الَّذِي سَأَلَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَأَتَى الرَّجُلَ، فَقَالَ: اخْتِمْ يَا فُلَانُ بِآمِينَ، وَأَبْشِرْ،

وَهَذَا لَفْظٌ مَحْمُودٌ،

Musannaf-Ibn-Abi-Shaybah-7689

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

7689.

«أَدْرَكْتُ النَّاسَ بِالْمَدِينَةِ فِي زَمَنِ عُمَرَ بْنِ عَبْدِ الْعَزِيزِ، وَأَبَانَ بْنِ عُثْمَانَ يُصَلُّونَ سِتًّا وَثَلَاثِينَ رَكْعَةً وَيُوتِرُونَ بِثَلَاثٍ»

Musnad-Ahmad-1721

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1721. நபி (ஸல் ) அவர்கள், குனூதில் ஓதவேண்டியதை எனக்கு கற்றுக் கொடுத்தார்கள் என்று ஹஸன் பின் அலீ (ரலி) அவர்கள் கூறினார்.

அறிவிப்பவர்: அபுல்ஹவ்ரா (ரஹ்)

இதற்கு பிறகு (ஹதீஸ் எண்-1718 இல்) யூனுஸ் அவர்கள் அறிவித்த செய்தி போன்று அறிவித்தார்…

أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَّمَهُ أَنْ يَقُولَ فِي الْوَتْرِ،

فَذَكَرَ مِثْلَ حَدِيثِ يُونُسَ

Next Page » « Previous Page