Author: Abdul Hakkim

Musnad-Ahmad-13999

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

13999. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கழிப்பிடம் செல்லும் போது “அஊது பில்லாஹி மினல் குப்ஸி வல்கபீஸ் அல்லது “வல்கபாயிஸ்” (பொருள்: இறைவா! அருவருக்கத் தக்க செயல்கள், இழிவான எண்ணங்கள் ஆகியவற்றைத் தூண்டும் ஆண், பெண் ஷைத்தானி(ன் தீங்கி)லிருந்து உன்னிடம் நான் பாதுகாப்புக் கோருகிறேன்) என்று கூறுவார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

அப்துல்அஸீஸ் அவர்கள் (இந்தப் பிராத்தனையை) இருவகையான வாசகத்திலும் அறிவித்தார் என ஷுஅபா அவர்கள் கூறினார்.


كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا أَتَى الْخَلَاءَ، قَالَ: «أَعُوذُ بِاللَّهِ مِنَ الْخُبْثِ، وَالْخَبِيثِ – أَوِ الْخَبَائِثِ -» ، قَالَ شُعْبَةُ: «وَقَدْ قَالَهُمَا جَمِيعًا»


Musnad-Ahmad-11983

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

11983. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கழிவறைக்குள் நுழையும் போது “அல்லாஹும்ம இன்னீ அஊதுபி(க்)க மினல் குப்ஸி வல்கபாயிஸ்” (பொருள்: இறைவா! அருவருக்கத் தக்க செயல்கள், இழிவான எண்ணங்கள் ஆகியவற்றைத் தூண்டும் ஆண், பெண் ஷைத்தானி(ன் தீங்கி)லிருந்து உன்னிடம் நான் பாதுகாப்புக் கோருகிறேன்) என்று கூறுவார்கள்.


كَانَ نَبِيُّ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، إِذَا دَخَلَ الْخَلَاءَ قَالَ: «أَعُوذُ بِاللَّهِ مِنَ الْخُبْثِ وَالْخَبَائِثِ»


Musnad-Ahmad-11947

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

11947. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கழிவறைக்குள் நுழையும் போது “அல்லாஹும்ம இன்னீ அஊதுபி(க்)க மினல் குப்ஸி வல்கபாயிஸ்” (பொருள்: இறைவா! அருவருக்கத் தக்க செயல்கள், இழிவான எண்ணங்கள் ஆகியவற்றைத் தூண்டும் ஆண், பெண் ஷைத்தானி(ன் தீங்கி)லிருந்து உன்னிடம் நான் பாதுகாப்புக் கோருகிறேன்) என்று கூறுவார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)


أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا دَخَلَ الْخَلَاءَ قَالَ: «اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْخُبْثِ وَالْخَبَائِثِ»


Darimi-696

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்:

கழிப்பிடத்திற்குள் நுழையும் போது சொல்ல வேண்டியவை.

696. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் கழிப்பிடத்திற்குள் நுழையும்போது, “அல்லாஹும்ம இன்னீ அஊதுபி(க்)க மினல் குப்ஸி வல்கபாயிஸ்” (இறைவா! அருவருக்கத் தக்க செயல்கள், இழிவான எண்ணங்கள் ஆகியவற்றைத் தூண்டும் ஆண், பெண் ஷைத்தானி(ன் தீங்கி)லிருந்து உன்னிடம் நான் பாதுகாப்புக் கோருகிறேன்) என்று கூறுவார்கள்.


كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا دَخَلَ الْخَلَاءَ، قَالَ: «اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْخُبْثِ وَالْخَبَائِثِ»


Ibn-Majah-298

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

298. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் கழிப்பிடத்திற்குள் நுழையும்போது, “அஊது பில்லாஹி மினல் குபுஸி வல்கபாயிஸ்” (அருவருக்கத் தக்க செயல்கள், இழிவான எண்ணங்கள் ஆகியவற்றைத் தூண்டும் ஆண், பெண் ஷைத்தானி(ன் தீங்கி)லிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருகிறேன்) என்று கூறுவார்கள்.


كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا دَخَلَ الْخَلَاءَ، قَالَ: «أَعُوذُ بِاللَّهِ مِنَ الْخُبُثِ وَالْخَبَائِثِ»


Tirmidhi-6

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

6. நபி (ஸல்) அவர்கள் கழிவறைக்குள் நுழையும் போது “அல்லாஹும்ம இன்னீ அஊதுபி(க்)க மினல் குபுஸி வல்கபாயிஸ்” (பொருள்: இறைவா! அருவருக்கத் தக்க செயல்கள், இழிவான எண்ணங்கள் ஆகியவற்றைத் தூண்டும் ஆண், பெண் ஷைத்தானி(ன் தீங்கி)லிருந்து உன்னிடம் நான் பாதுகாப்புக் கோருகிறேன்) என்று கூறுவார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)


أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا دَخَلَ الْخَلَاءَ، قَالَ: «اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْخُبْثِ وَالْخَبَائِثِ»


Tirmidhi-5

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்:

கழிப்பிடத்திற்குள் நுழையும் போது சொல்ல வேண்டியவை.

5. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் கழிப்பிடத்திற்குள் நுழையும்போது, “அல்லாஹும்ம இன்னீ அஊதுபி(க்)க மினல் குபுஸி வல்கபாயிஸ்” (இறைவா! அருவருக்கத் தக்க செயல்கள், இழிவான எண்ணங்கள் ஆகியவற்றைத் தூண்டும் ஆண், பெண் ஷைத்தானி(ன் தீங்கி)லிருந்து உன்னிடம் நான் பாதுகாப்புக் கோருகிறேன்) என்று கூறுவார்கள்.

அப்துல்அஸீஸ் அவர்கள் ஒரு தடவை இந்த பிரார்த்தனையை, “அல்லாஹும்ம இன்னீ அஊதுபி(க்)க மினல் குப்ஸி வல்கபீஸ் அல்லது மினல் குபுஸி வல்கபாஇஸ்” என்றும், மற்றொரு தடவை, “அஊது பில்லாஹி மினல் குப்ஸி வல்கபீஸ் அல்லது மினல் குபுஸி வல்கபாஇஸ்”  என்றும் கூறியதாக ஷுஅபா அவர்கள் கூறினார்.

திர்மிதீ இமாம் கூறுகிறார்:


كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا دَخَلَ الْخَلَاءَ، قَالَ: اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ ” قَالَ شُعْبَةُ: وَقَدْ قَالَ مَرَّةً أُخْرَى: «أَعُوذُ بِاللَّهِ مِنَ الْخُبْثِ وَالْخَبِيثِ – أَوِ الْخُبُثِ وَالْخَبَائِثِ -»


Nasaayi-19

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்:

கழிவறைக்குள் நுழையும் போது கூறவேண்டிய சொல்.

19. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கழிவறைக்குள் நுழையும் போது “அல்லாஹும்ம இன்னீ அஊதுபி(க்)க மினல் குபுஸி வல்கபாயிஸ்” (பொருள்: இறைவா! அருவருக்கத் தக்க செயல்கள், இழிவான எண்ணங்கள் ஆகியவற்றைத் தூண்டும் ஆண், பெண் ஷைத்தானி(ன் தீங்கி)லிருந்து உன்னிடம் நான் பாதுகாப்புக் கோருகிறேன்) என்று கூறுவார்கள்.


كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ” إِذَا دَخَلَ الْخَلَاءَ قَالَ: اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْخُبُثِ وَالْخَبَائِثِ


Almujam-Alkabir-7233

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

7233. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

காய்ச்சல் உடலை மெலியவைத்துவிடும்; இரத்தத்தை வற்றச் செய்துவிடும்; அதனின் குளிரும், சூடும் நரகத்தைச் சேர்ந்ததாகும்.

அறிவிப்பவர்: ஷபீப் பின் நுஐம் (ரஹ்)


«أُمُّ مِلْدَمٍ تَأْكُلُ اللَّحْمَ، وَتُشْرَبُ الدَّمَ، بَرْدُهَا وَحَرُّهَا مِنْ جَهَنَّمَ»


Musannaf-Abdur-Razzaq-21235

ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

21235. ஒரு தடவை) நபி (ஸல்) அவர்கள் பள்ளிவாசலில் இருக்கும்போது வெளிப்படையில் (பார்க்கும் போது) நல்ல திடகாத்திரமான கிராமவாசி வந்தார். அப்போது அவரிடம், “உமக்கு நோய் ஏற்பட்டு அதன் வலியை நீ உணர்ந்ததுண்டா? என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கவர், இல்லை என்று கூறினார். பிறகு நபி (ஸல்) அவர்கள், அவரிடம் இரு நெற்றிப்பொட்டை சுட்டிக்காட்டி “உமக்கு தலைவலி(யாவது) ஏற்பட்டதுண்டா? என்று கேட்டார்கள். அதற்கவர், இல்லை என்று கூறினார். பிறகு அவர் திரும்பிச் சென்றார். அப்போது நபி (ஸல்) அவர்கள், “நரகவாசிகளில் ஒரு மனிதரைக் காண விருப்பமுள்ளவர்கள் இவரைப் பார்த்துக் கொள்ளட்டும்” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஸைத் பின் அஸ்லம் (ரஹ்)


أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بَيْنَا هُوَ فِي المَسْجِدِ، إِذْ (1) دَخَلَ عَلَيْهِ أَعْرَابِيٌّ مُصَحَّحٌ، أَوْ قَالَ: ظَاهِرُ الصِّحَّةِ، قَالَ: فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: هَلْ شَكَيْتَ قَطُّ؟ قَالَ: لاَ، قَالَ: هَلْ ضُرِبَ عَلَيْكَ هَذَانِ قَطُّ؟ وَأَشَارَ إِلَى صُدْغَيْهِ، قَالَ: لاَ، فَلَمَّا وَلَّى قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: مَنْ سَرَّهُ أَنْ يَنْظُرَ إِلَى رَجُلٍ مِنْ أَهْلِ النَّارِ فَلْيَنْظُرْ إِلَى هَذَا.


Next Page » « Previous Page