Author: Abdul Hakkim

Dalail-Annubuwwah-Bayhaqi-2383

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

பாடம்:

தம்மிடம் வந்த விருந்தாளிக்கு உணவளிக்க ஒன்றுமில்லாதபோது நபி (ஸல்) அவர்கள் (அல்லாஹ்விடம்) பிரார்த்தனை செய்ய அதை அல்லாஹ் ஏற்றுக்கொண்ட நிகழ்வு.

2383. நபி (ஸல்) அவர்கள், தம்மிடம் வந்த ஒரு விருந்தினருக்கு உணவளிக்க விரும்பினார்கள். எனவே தனது மனைவியரிடம் ஏதும் உணவு இருக்கின்றதா? என்று பார்த்து வருமாறு ஆளனுப்பினார்கள். ஆனால் எந்த உணவும் அவர்களிடம் இருக்கவில்லை. அப்போது நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹும்ம இன்னீ அஸ்அலுக மின் ஃபள்லிக, வ ரஹ்மதிக; ஃப இன்னஹூ லா யம்லிகுஹா இல்லா அன்த. (பொருள்: யா அல்லாஹ்! உனது நற்பாக்கியத்திலிருந்தும், அருளிலிருந்தும் உன்னிடம் கேட்கிறேன். உன்னைத் தவிர அதற்கு அதிகாரம் படைத்தவர்கள் வேறு எவரும் இல்லை) என்று கூறினார்கள்.

(அப்போது) அவர்களுக்கு ஒரு பொறித்த ஆடு அன்பளிப்பாக வந்தது. இது அல்லாஹ்வின் நற்பாக்கியத்தில் உள்ளதாகும்; அவனது ரஹ்மத்தை நாம் எதிர்பார்த்தவர்களாக இருக்கின்றோம் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் (ரலி)

பைஹகீ இமாம் கூறுகிறார்:

இந்த செய்தியை அபூஅலீ-அல்ஹுஸைன் பின் அலீ பின் யஸீத் அவர்கள், முஹம்மது பின் அப்தான் —> அப்தான் —> ஹஸன் பின் ஹாரிஸ் —> உபைதுல்லாஹ் பின் மூஸா —> மிஸ்அர் —> ஸுபைத் என்ற அறிவிப்பாளர்தொடரில்

أَضَافَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ضَيْفًا فَأَرْسَلَ إِلَى أَزْوَاجِهِ يَبْتَغِي عِنْدَهُنَّ طَعَامًا فَلَمْ يَجِدْ عِنْدَ وَاحِدَةٍ مِنْهُنَّ شَيْئًا، فَقَالَ: «اللهُمَّ إِنِّي أَسْأَلُكَ مِنْ فَضْلِكَ وَرَحْمَتِكَ، فَإِنَّهُ لَا يَمْلِكُهَا إِلَّا أَنْتَ» ، قَالَ؛ فَأُهْدِيَتْ إِلَيْهِ شَاةٌ مَصْلِيَّةٌ،

وَفِي رِوَايَةِ الْمُقْرِئِ: فَأَهْوَتْ إِلَيْهِ شَاةٌ مَصْلِيَّةٌ، فَقَالَ: هَذِهِ مِنْ فَضْلِ اللهِ عَزَّ وَجَلَّ، وَنَحْنُ نَنْتَظِرُ الرَّحْمَةَ،

قَالَ أَبُو عَلِيٍّ: حَدَّثَنِيهِ مُحَمَّدَ بْنَ عَبْدَانَ الْأَهْوَازِيُّ عَنْهُ، وَالصَّحِيحُ عَنْ زُبَيْدٍ، قَالَ: أَضَافَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ. مُرْسَلًا مِنْ قَوْلِ زُبَيْدٍ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدَانَ الْأَهْوَازِيُّ،

حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا الْحَسَنُ بْنُ الْحَارِثِ الْأَهْوَازِيُّ، حَدَّثَنَا عُبَيْدُ اللهِ بْنُ مُوسَى، عَنْ مِسْعَرٍ، عَنْ زُبَيْدٍ، قَالَ: أَضَافَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَذَكَرَهُ


Almujam-Alkabir-10379

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

10379. நபி (ஸல்) அவர்கள், (தம்மிடம் வந்த ஒரு விருந்தினருக்கு) உணவளிக்க விரும்பினார்கள். எனவே தனது மனைவியரிடம் ஏதும் உணவு இருக்கின்றதா? என்று பார்த்து வருமாறு ஆளனுப்பினார்கள். ஆனால் எந்த உணவும் அவர்களிடம் இருக்கவில்லை. அப்போது நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹும்ம இன்னீ அஸ்அலுக மின் ஃபள்லிக, வ ரஹ்மதிக; ஃப இன்னஹூ லா யம்லிகுஹா இல்லா அன்த. (பொருள்: யா அல்லாஹ்! உனது நற்பாக்கியத்திலிருந்தும், அருளிலிருந்தும் உன்னிடம் கேட்கிறேன். உன்னைத் தவிர அதற்கு அதிகாரம் படைத்தவர்கள் வேறு எவரும் இல்லை) என்று கூறினார்கள்.

(அப்போது) அவர்களுக்கு ஒரு பொறித்த ஆடு அன்பளிப்பாக வந்தது. இது அல்லாஹ்வின் நற்பாக்கியத்தில் உள்ளதாகும்; அவனது ரஹ்மத்தை நாம் எதிர்பார்த்தவர்களாக இருக்கின்றோம் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் (ரலி)


ضَافَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَأَرْسَلَ إِلَى أَزْوَاجِهِ يَبْتَغِي عِنْدَهُنَّ طَعَامًا، فَلَمْ يَجِدْ عِنْدَ وَاحِدَةٍ مِنْهُنَّ، فَقَالَ: «اللهُمَّ إِنِّي أَسْأَلُكَ مِنْ فَضْلِكَ وَرَحْمَتِكَ؛ فَإِنَّهُ لَا يَمْلِكُهَا إِلَّا أَنْتَ» ، فَأُهْدِيَتْ إِلَيْهِ شَاةٌ مَصْلِيَّةٌ، فَقَالَ: «هَذِهِ مِنْ فَضْلِ اللهِ، وَنَحْنُ نَنْتَظِرُ الرَّحْمَةَ»


Almujam-Alawsat-1767

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

1767. நபி (ஸல்) அவர்கள் ஒரு நாள் ஐந்து நேர தொழுகைகளைப் பற்றி குறிப்பிட்டார்கள். அப்போது அவர்கள், “யார் அதை பேணிக் கொள்கிறாரோ அவருக்கு அது மறுமை நாளில் ஒளியாகவும் ஆதாரமாகவும் வெற்றியாகவும் இருக்கும்” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)


أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ذَكَرَ الصَّلَوَاتِ الْخَمْسَ، فَقَالَ: «مَنْ حَافَظَ عَلَيْهِنَّ كُنَّ لَهُ نُورًا، وَبُرْهَانًا، وَنَجَاةً يَوْمَ الْقِيَامَةِ»


Sharh-Mushkil-Al-Athar-3180

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம்:

யார் தொழுகையை பேணவில்லையோ அவர் மறுமை நாளில் காரூன், ஃபிர்அவ்ன், ஹாமான், உபைய்யு பின் கலஃப்… ஆகியாருடன் இருப்பார் என்ற ஹதீஸில் ஏற்படும் விமர்சனத்திற்கு விளக்கம்.

3180. நபி (ஸல்) அவர்கள் ஒரு நாள் தொழுகையைப் பற்றி குறிப்பிட்டார்கள். அப்போது யார் அதை பேணிக் கொள்கிறாரோ அவருக்கு அது மறுமை நாளில் ஒளியாகவும் ஆதாரமாகவும் வெற்றியாகவும் இருக்கும். மேலும் யார் அதை பேணவில்லையோ அவருக்கு அது மறுமை நாளில் ஒளியாகவும் வெற்றியாகவும் ஆதாரமாகவும் இருக்காது.

மேலும் அவர் மறுமை நாளில் காரூன், ஃபிர்அவ்ன், ஹாமான், உபைய்யு பின் கலஃப்… ஆகியாருடன் இருப்பார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)


ذَكَرَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الصَّلَاةَ يَوْمًا فَقَالَ: ” مَنْ حَافَظَ عَلَيْهَا كَانَتْ لَهُ نُورًا وَبُرْهَانًا وَنَجَاةً يَوْمَ الْقِيَامَةِ، وَمَنْ لَمْ يُحَافِظْ عَلَيْهَا لَمْ تَكُنْ لَهُ نُورًا وَلَا بُرْهَانًا وَلَا نَجَاةً، وَكَانَ يَوْمَ الْقِيَامَةِ مَعَ فِرْعَوْنَ، وَقَارُونَ، وَهَامَانَ، وَأُبَيٍّ صَاحِبِ الْعِظَامِ


Almujam-Alkabir-13827

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

13827. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒருநாள் விட்டு ஒருநாள் தலைக்கு எண்ணெய் தேய்ப்பதைத் தவிர (அடிக்கடி வரம்புமீறி) எண்ணெய் தேய்ப்பதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடுத்தார்கள்.


نَهَى رسولُ الله صلى الله عليه وسلم أن نَدَّهِنَ إلاَّ غِبًّا


Next Page » « Previous Page