Author: Abdul Hakkim

Shuabul-Iman-8521

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

8521. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒருவர், மற்றவருக்கு ஒரு விரலின் மூலம் சைக்கினை செய்து ஸலாம் கூறுவது யூதர்களின் செயலாகும்.

அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி)


تَسْلِيمُ الرَّجُلِ عَلَى الرَّجُلِ بِإِصْبَعٍ وَاحِدَةٍ فِعْلُ الْيَهُودِ


Shuabul-Iman-8520

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

8520. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யூதர்கள் மற்றும் கிறித்தவர்கள் ஸலாம் கூறுவதைப் போன்று நீங்கள் ஸலாம் கூறாதீர்கள். அவர்களுடைய ஸலாம் (வார்த்தைகள் இல்லாமல்) முன்கைகள் மூலமும், புருவத்தின் (அல்லது கண் இமையின் சைக்கினையின்) மூலமும் இருக்கும்.

அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி)


لَا تُسَلِّمُوا تَسْلِيمَ الْيَهُودِ، وَالنَّصَارَى، فَإِنَّ تَسْلِيمَهُمْ إِشَارَةٌ بِالْكُفُوفِ والْحَوَاجِبِ


Kubra-Nasaayi-10100

ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

10100. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யூதர்கள் மற்றும் கிறித்தவர்கள் ஸலாம் கூறுவதைப் போன்று நீங்கள் ஸலாம் கூறாதீர்கள். அவர்களுடைய ஸலாம் (வார்த்தைகள் இல்லாமல்) முன்கைகள் மூலமும், தலை (தாழ்த்துவதின்) சைக்கினையின் மூலமும் இருக்கும்.

அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி)


«لَا تُسَلِّمُوا تَسْلِيمَ الْيَهُودِ وَالنَّصَارَى، فَإِنَّ تَسْلِيمَهُمْ بِالْأَكُفِّ وَالرُّؤوسِ وَالْإِشَارَةِ»


Musnad-Ahmad-23581

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

23581. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நான்கு காரியங்கள் நபிமார்களின் வழிமுறையைச் சார்ந்தது. அவை

1 . வாசனை திரவியம் பூசுவது.

2 . திருமணம் செய்வது.

3 . மிஸ்வாக் செய்வது (பல் துலக்குவது)

4 . வெட்கம்.

அறிவிப்பவர்: அபூஅய்யூப் (ரலி)


أَرْبَعٌ مِنْ سُنَنِ الْمُرْسَلِينَ: التَّعَطُّرُ، وَالنِّكَاحُ، وَالسِّوَاكُ، وَالْحَيَاءُ


Musannaf-Ibn-Abi-Shaybah-1802

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

1802. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நான்கு காரியங்கள் நபிமார்களின் வழிமுறையைச் சார்ந்தது. அவை

1 . வாசனை திரவியம் பூசுவது.

2 . திருமணம் செய்வது.

3 . மிஸ்வாக் செய்வது (பல் துலக்குவது)

4 . (நரைமுடிக்கு) மருதாணி இடுவது.

அறிவிப்பவர்: அபூஅய்யூப் (ரலி)


أَرْبَعٌ مِنْ سُنَنِ الْمُرْسَلِينَ التَّعْطِيرُ وَالنِّكَاحُ وَالسِّوَاكُ وَالْحِنَّاءُ


Musannaf-Abdur-Razzaq-10390

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

10390. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

விருத்தசேதனம் செய்துகொள்வது, பல் துலக்குவது, வாசனை திரவியம் பூசுவது, திருமணம் செய்வது போன்றவை என்னுடயை வழிமுறையாகும்.

அறிவிப்பவர்: அபூஅய்யூப் (ரலி)


«الْخِتَانُ، وَالسِّوَاكُ، وَالتَّعَطُّرُ، وَالنِّكَاحُ مِنْ سُنَّتِي»


Almujam-Alkabir-4085

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம்:

அபூஅய்யூப் (ரலி) அவர்களிடமிருந்து அபுஷ்ஷிமால் பின் ளிபாப் என்பவர் அறிவிக்கும் செய்திகள்.

4085. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நான்கு காரியங்கள் நபிமார்களின் வழிமுறையைச் சார்ந்தது. அவை

1 . வெட்கம்.

2 . வாசனை திரவியம் பூசுவது.

3 . திருமணம் செய்வது.

4 . மிஸ்வாக் செய்வது (பல் துலக்குவது).

அறிவிப்பவர்: அபூஅய்யூப் (ரலி)


أَرْبَعٌ مِنْ سُنَنِ الْمُرْسَلِينَ: الْحَيَاءُ، وَالتَّعَطُّرُ، وَالنِّكَاحُ، وَالسِّوَاكُ


Tirmidhi-1080

ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

அத்தியாயம்: 9

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து அறிவிக்கப்பட்டுள்ள திருமணம் பற்றிய செய்திகள்.

பாடம்:

திருமணம் செய்வதின் சிறப்பு பற்றியும், அதை வலியுறுத்தியும் வந்துள்ள செய்திகள்.

1080. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நான்கு காரியங்கள் நபிமார்களின் வழிமுறையைச் சார்ந்தது. அவை

1 . வெட்கம்.

2 . வாசனை திரவியம் பூசுவது.

3 . மிஸ்வாக் செய்வது (பல் துலக்குவது)

4 . திருமணம் செய்வது.

அறிவிப்பவர்: அபூஅய்யூப் (ரலி)

திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இந்தப் பாடப் பொருளில் உஸ்மான் (ரலி), ஸவ்பான் (ரலி), இப்னு மஸ்வூத் (ரலி), ஆயிஷா (ரலி), அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி), அபூநஜீஹ் (ரலி), ஜாபிர் (ரலி), அக்காஃப் (ரலி) ஆகியோர் வழியாகவும் ஹதீஸ்கள் வந்துள்ளன.

அபூஅய்யூப் (ரலி) வழியாக வரும் (மேற்கண்ட) செய்தி ஹஸன் ஃகரீப் என்ற தரத்தில் அமைந்த செய்தியாகும்.

இந்த செய்தி வேறு சில அறிவிப்பாளர்தொடர்களிலும் வந்துள்ளது. அவற்றில் மக்ஹூல் அவர்களுக்கும், அபூஅய்யூப் (ரலி) அவர்களுக்குமிடையில் அபுஷ்ஷிமால் என்பவர் இடம்பெறவில்லை.

அபுஷ்ஷிமாலை கூறி அறிவிக்கும் ஹஃப்ஸ், அப்பாத் பின் அவ்வாம் ஆகியோர் அறிவிக்கும் செய்தியே மிகச் சரியானதாகும்.


أَرْبَعٌ مِنْ سُنَنِ المُرْسَلِينَ: الحَيَاءُ، وَالتَّعَطُّرُ، وَالسِّوَاكُ، وَالنِّكَاحُ

وَفِي البَاب عَنْ عُثْمَانَ، وَثَوْبَانَ، وَابْنِ مَسْعُودٍ، وَعَائِشَةَ، وَعَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، وَأَبِي نَجِيحٍ، وَجَابِرٍ، وَعَكَّافٍ.: «حَدِيثُ أَبِي أَيُّوبَ حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ».

حَدَّثَنَا مَحْمُودُ بْنُ خِدَاشٍ البَغْدَادِيُّ قَالَ: حَدَّثَنَا عَبَّادُ بْنُ العَوَّامِ، عَنِ الحَجَّاجِ، عَنْ مَكْحُولٍ، عَنْ أَبِي الشِّمَالِ، عَنْ أَبِي أَيُّوبَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَحْوَ حَدِيثِ حَفْصٍ.

وَرَوَى هَذَا الحَدِيثَ هُشَيْمٌ، وَمُحَمَّدُ بْنُ يَزِيدَ الوَاسِطِيُّ، وَأَبُو مُعَاوِيَةَ، وَغَيْرُ وَاحِدٍ، عَنِ الحَجَّاجِ، عَنْ مَكْحُولٍ، عَنْ أَبِي أَيُّوبَ،

«وَلَمْ يَذْكُرُوا فِيهِ، عَنْ أَبِي الشِّمَالِ، وَحَدِيثُ حَفْصِ بْنِ غِيَاثٍ وَعَبَّادِ بْنِ العَوَّامِ أَصَحُّ»


Musannaf-Abdur-Razzaq-29664

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

29664.


«الذِّكْرُ الْخَفِيُّ الَّذِي لَا يَكْتُبُهُ الْحَفَظَةُ يُضَاعَفُ عَلَى مَا سِوَاهُ مِنَ الذِّكْرِ سَبْعِينَ ضِعْفًا»


Next Page » « Previous Page