Author: Abdul Hakkim

Almujam-Alawsat-1709

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

1709. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ்வின் அர்ஷை சுமக்கும் வானவர்களில் ஒருவரைப் பற்றி அறிவிப்பதற்கு எனக்கு (அல்லாஹ்விடமிருந்து) அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அவரின் காது சோனையிலிருந்து தோள்புஜம் வரை உள்ள இடைவெளியானது 400 ஆண்டுகள் பயணிக்கும் தொலைவாகும்.

அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி)

 


«أُذِنَ لِي أَنْ أُحَدِّثَ عَنْ مَلَكٍ مِنَ الْمَلَائِكَةِ مِنْ حَمَلَةِ الْعَرْشِ، مَا بَيْنَ شَحْمَةِ أُذُنِهِ إِلَى عَاتِقِهِ مَسِيرَةُ أَرْبَعِ مِائَةِ عَامٍ»


Abu-Dawood-4727

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

4727. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ்வின் அர்ஷை சுமக்கும் வானவர்களில் ஒருவரைப் பற்றி அறிவிப்பதற்கு எனக்கு (அல்லாஹ்விடமிருந்து) அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அவரின் காது சோனையிலிருந்து தோள்புஜம் வரை உள்ள இடைவெளியானது எழுநூறு ஆண்டுகள் பயணிக்கும் தொலைவாகும்.

அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி)


«أُذِنَ لِي أَنْ أُحَدِّثَ عَنْ مَلَكٍ مِنْ مَلَائِكَةِ اللَّهِ مِنْ حَمَلَةِ الْعَرْشِ، إِنَّ مَا بَيْنَ شَحْمَةِ أُذُنِهِ إِلَى عَاتِقِهِ مَسِيرَةُ سَبْعِ مِائَةِ عَامٍ»


Abi-Yala-6619

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

6619. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(அல்லாஹ்வின் அர்ஷை சுமக்கும் வானவர்களில்) ஒரு வானவரைப் பற்றி அறிவிப்பதற்கு எனக்கு (அல்லாஹ்விடமிருந்து) அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அவரின் இரு கால்களும் ஏழாவது பூமியில் ஊன்றியுள்ளன. அவரின் தோளில் அர்ஷ் உள்ளது. மேலும், அவர் “ஸுப்ஹானக, அய்ன குன்த, வ அய்ன தகூனு (அல்லாஹ்வே! நீ (இதற்குமுன்) எங்கிருந்திருந்தாலும், (இதற்குபின்) எங்கிருந்தாலும் நீ தூய்மையானவன்! என்று கூறிக்கொண்டிருப்பார்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


أُذِنَ لِي أَنْ أُحَدِّثَ عَنْ مَلَكٍ قَدْ مَرَقَتْ رِجْلَاهُ الْأَرْضَ السَّابِعَةَ، وَالْعَرْشُ عَلَى مَنْكِبِهِ، وَهُوَ يَقُولُ: سُبْحَانَكَ أَيْنَ كُنْتَ؟ وَأَيْنَ تَكُونُ؟


Almujam-Alkabir-7391

ஹதீஸின் தரம்: நபித்தோழரின் செயல் - பலவீனமான செய்தி

7391.


«إِنَّ لِلَّهِ دِيكًا رَأْسُهُ تَحْتَ الْعَرْشِ، وجَنَاحُهُ فِي الْهَوَاءِ، وَبَرَاثِنُهُ فِي الْأَرْضِ، فَإِذَا كَانَ فِي الْأسحارِ، وَأَدْبَارِ الصَّلَوَاتِ، خَفَقَ بِجَنَاحِهِ، وَصَفَّقَ بِالتَّسْبِيحِ، فَتَصِيحُ الدِّيَكَةُ تُجِيبُهُ بِالتَّسْبِيحِ»


Almujam-Alawsat-7324

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

7324.


«إِنَّ اللَّهَ جَلَّ ذِكْرُهُ أَذِنَ لِي أَنْ أُحَدِّثَ عَنْ دِيكٍ قَدْ مَرَقَتْ رِجْلَاهُ الْأَرْضَ، وعُنُقُهُ مُنْثَنِي تَحْتَ الْعَرْشِ، وَهُوَ يَقُولُ: سُبْحَانَكَ مَا أَعْظَمَكَ رَبَّنَا فَرَدَّ عَلَيْهِ: مَا يَعْلَمُ ذَلِكَ مَنْ حَلَفَ بِي كَاذِبًا»


Hakim-7813

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

7813.


إِنَّ اللَّهَ أَذِنَ لِي أَنْ أُحَدِّثَ عَنْ دِيكٍ رِجْلَاهُ فِي الْأَرْضِ وَعُنُقُهُ مَثْنِيَّةٌ تَحْتَ الْعَرْشِ وَهُوَ يَقُولُ: سُبْحَانَكَ مَا أَعْظَمَ رَبَّنَا ” قَالَ: «فَيَرُدُّ عَلَيْهِ مَا يَعْلَمُ ذَلِكَ مَنْ حَلَفَ بِي كَاذِبًا»


Musannaf-Ibn-Abi-Shaybah-24175

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

24175. முஹம்மது பின் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்ர் அவர்கள் கூறியதாவது:

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் அருகில் ஒருவர் வந்து அமர்ந்தார். அவரிடம், இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், “நீ எங்கிருந்து வருகிறாய்! என்று கேட்டார்கள். அதற்கவர், “ஸம்ஸம் கிணற்றுக்கு சென்று தண்ணீர் குடித்துவிட்டு வருகிறேன்” என்று கூறினார். அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், நீர், ஸம்ஸம் தண்ணீரை குடிக்க வேண்டிய முறைப்படி குடித்தீரா? என்று கேட்டுவிட்டு, “நீர், ஸம்ஸம் தண்ணீரை குடிப்பதாக இருந்தால் கஃபா திசையை முன்னோக்க வேண்டும்; பிறகு பிஸ்மில்லாஹ்-அல்லாஹ்வின் பெயரால் என்று கூறி, மூன்று முறை மூச்சு விட்டுப் பருக வேண்டும் என்று கூறினார்.


جَلَسَ رَجُلٌ إِلَى ابْنِ عَبَّاسٍ، وَقَالَ لَهُ: مِنْ أَيْنَ جِئْتَ؟ قَالَ: شَرِبْتُ مِنْ مَاءِ زَمْزَمَ قَالَ: فَشَرِبْتَ مِنْهَا كَمَا يَنْبَغِي؟ قَالَ: «إِذَا شَرِبْتَ مِنْهَا فَاسْتَقْبِلِ الْكَعْبَةَ، وَاذْكُرِ اسْمَ اللَّهِ، وَتَنَفَّسْ ثَلَاثًا»


Musannaf-Abdur-Razzaq-9111

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

9111. அப்துல்லாஹ் பின் உபைதுல்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் அருகில் அமர்ந்திருந்தேன். அப்போது அவரிடம் ஒரு மனிதர் வந்து அருகில் அமர்ந்தார். அவரிடம், இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், “நீ எங்கிருந்து வருகிறாய்! என்று கேட்டார்கள். அதற்கவர், “ஸம்ஸம் கிணற்றுக்கு சென்றுவிட்டு அங்கிருந்து வருகிறேன்” என்று கூறினார். அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், நீர், ஸம்ஸம் தண்ணீரை குடிக்க வேண்டிய முறைப்படி குடித்தீரா? என்று கேட்டார். அதற்கவர், குடிக்கவேண்டிய முறை என்றால் அது எவ்வாறு? என்று வினவினார். அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், “நீர், ஸம்ஸம் தண்ணீரை குடிப்பதாக இருந்தால் கஃபா திசையை முன்னோக்க வேண்டும்; பிறகு பிஸ்மில்லாஹ்-அல்லாஹ்வின் பெயரால் என்று கூறி, மூன்று முறை மூச்சு விட்டுப் பருக வேண்டும். மேலும் வயிறு நிரம்ப அதிகமாகக் குடிக்க வேண்டும்; பிறகு அல்ஹம்துலில்லாஹ் என்று கூறி அல்லாஹ்வைப் புகழ வேண்டும்.

ஏனெனில், “நமக்கும், நயவஞ்சகர்களுக்கும் இடையில் உள்ள வித்தியாசம் அவர்கள், ஸம்ஸம் நீரை வயிறு நிரம்ப குடிக்கமாட்டார்கள். (நாம் வயிறு நிரம்ப குடிப்போம்)” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள் என்று கூறினார்.


كُنْتُ عِنْدَ ابْنِ عَبَّاسٍ، فَجَاءَهُ رَجُلٌ، فَجَلَسَ إِلَى جَنْبِهِ فَقَالَ لَهُ ابْنُ عَبَّاسٍ: مِنْ أَيْنَ جِئْتَ؟ قَالَ: شَرِبْتُ مِنْ زَمْزَمَ قَالَ: شَرِبْتَهَا كَمَا يَنْبَغِي؟ قَالَ: وَكَيْفَ يَنْبَغِي يَا ابْنَ عَبَّاسٍ؟ قَالَ: تَسْتَقْبِلُ الْقِبْلَةَ، وَتُسَمِّي اللَّهَ ثُمَّ تَشْرَبُ، وَتَتَنَفَّسُ ثَلَاثَ مَرَّاتٍ، فَإِذَا فَرَغْتَ حَمِدْتَ اللَّهَ تَعَالَى، وَتَتَضَلَّعُ مِنْهَا فَإِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «إِنَّ آيَةَ مَا بَيْنَنَا وَبَيْنَ الْمُنَافِقِينَ أَنَّهُمْ لَا يَتَضَلَّعُونَ مِنْ زَمْزَمَ»


Next Page » « Previous Page