Author: Abdul Hakkim

Musannaf-Ibn-Abi-Shaybah-11774

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

11774.


«لَأَنْ أَطَأَ عَلَى جَمْرَةٍ، أَوْ عَلَى حَدِّ سَيْفٍ حَتَّى يَخْطِفَ رِجْلَيَّ أَحَبُّ إِلَيَّ مِنْ أَنْ أَمْشِيَ عَلَى قَبْرِ رَجُلٍ مُسْلِمٍ، وَمَا أُبَالِي أَفِي الْقُبُورِ قَضَيْتُ حَاجَتِي أَمْ فِي السُّوقِ بَيْنَ ظَهْرَانِيهِ، وَالنَّاسُ يَنْظُرُونَ»


Ibn-Majah-1567

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

1567.


«لَأَنْ أَمْشِيَ عَلَى جَمْرَةٍ، أَوْ سَيْفٍ، أَوْ أَخْصِفَ نَعْلِي بِرِجْلِي، أَحَبُّ إِلَيَّ مِنْ أَنْ أَمْشِيَ عَلَى قَبْرِ مُسْلِمٍ، وَمَا أُبَالِي أَوَسْطَ الْقُبُورِ قَضَيْتُ حَاجَتِي، أَوْ وَسْطَ السُّوقِ»


Muwatta-Malik-627

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

627. அலீ பின் அபூதாலிப் (ரலி) அவர்கள், கப்ரை தலையணையாக ஆக்கிக் கொண்டு அதில் ஒருக்களித்து படுத்துக் கொள்பவராக இருந்தார் என்ற தகவல் எனக்கு கிடைத்தது.

அறிவிப்பவர்: மாலிக் (ரஹ்)

மாலிக் இமாம் கூறுகிறார்:

கப்ருகளின் மீது உட்காரக்கூடாது என்ற தடை விசயத்தில், நம்முடைய கருத்து என்னவெனில் “இயற்கைத் தேவையை கழிப்பதற்காக உட்காருவது’ என்பது அதன் பொருளாகும்.


أَنَّ عَلِيَّ بْنَ أَبِي طَالِبٍ كَانَ يَتَوَسَّدُ الْقُبُورَ، وَيَضْطَجِعُ عَلَيْهَا.


Sharh-Maanil-Aasaar-2954

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

2954. இப்னு உமர் (ரலி) அவர்கள், அடக்கத்தலங்கள் (கப்ருகள்) மீது உட்காருபவராக இருந்தார்கள்.

அறிவிப்பவர்: நாஃபிஉ (ரஹ்)


«أَنَّ عَبْدَ اللهِ بْنَ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُمَا كَانَ يَجْلِسُ عَلَى الْقُبُورِ»


Sharh-Maanil-Aasaar-2953

ஹதீஸின் தரம்: நபித்தோழரின் செயல் - பலவீனமான செய்தி

2953. அலீ பின் அபூதாலிப் (ரலி) அவர்கள், கப்ருகளின் மீது உட்காரக்கூடியவராக இருந்தார். நான், அவருக்காக (சில நேரம்) கப்ருக்கருகில் தூங்கும் விரிப்பை விரிப்பேன். அவர், கப்ரை தலையணையாக ஆக்கிக் கொண்டு விரிப்பில் ஒருக்களித்து படுத்துக்கொள்வார்.

அறிவிப்பவர்: அலீ (ரலி) அவர்களின் குடும்பத்தாரின் அடிமை.


«أَنَّ عَلِيَّ بْنَ أَبِي طَالِبٍ رَضِيَ اللهُ عَنْهُ كَانَ يَجْلِسُ عَلَى الْقُبُورِ»

وَقَالَ الْمَوْلَى: كُنْتُ أَبْسُطُ لَهُ فِي الْمَقْبَرَةِ , فَيَتَوَسَّدُ قَبْرًا , ثُمَّ يَضْطَجِعُ


Sharh-Maanil-Aasaar-2950

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2950. ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்கள் கூறியதாவது:

எனது சகோதரரின் மகனே! இங்கே வா! அடக்கத்தலங்கள் (கப்ருகள்) மீது உட்காருவதை நபி (ஸல்) அவர்கள் ஏன் தடுத்தார்கள் என்பதை அறிவிக்கிறேன்; கப்ரின் மீது மலம் அல்லது ஜலம் கழிப்பதற்காக உட்காருவதைத்தான் நபி (ஸல்) அவர்கள் தடுத்தார்கள். (சாதாரணமாக உட்காருவதைத் தடுக்கவில்லை)

அறிவிப்பவர்: அபூஉமாமா (ரலி)


أَنَّ زَيْدَ بْنَ ثَابِتٍ قَالَ: هَلُمَّ يَا ابْنَ أَخِي , أُخْبِرْكَ إِنَّمَا نَهَى النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ الْجُلُوسِ عَلَى الْقُبُورِ , لِحَدَثِ غَائِطٍ , أَوْ بَوْلٍ


Next Page » « Previous Page