Author: Abdul Hakkim

Sharh-Maanil-Aasaar-2949

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

2949.


«لَأَنْ يَجْلِسَ أَحَدُكُمْ عَلَى جَمْرَةٍ حَتَّى تُحَرِّقَ ثِيَابَهُ , وَتَخْلُصَ إِلَى جِلْدِهِ , خَيْرٌ لَهُ مِنْ أَنْ يَجْلِسَ عَلَى قَبْرٍ»


Almujam-Alawsat-706

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

706. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் ஒருவர், ஒரு நெருப்புக்கங்கின் மீது அமர்ந்து அது அவரது ஆடையைக் கரித்து விடுவதானது, ஓர் அடக்கத்தலத்தின் (கப்ரு) மீது அவர் உட்காருவதைவிட அவருக்குச் சிறந்ததாகும்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


«لَأَنْ يَجْلِسَ أَحَدُكُمْ عَلَى جَمْرَةٍ، فَتُحْرِقَ ثِيَابَهُ، حَتَّى تُفْضِيَ إِلَيْهِ، خَيْرٌ لَهُ مِنْ أَنْ يَجْلِسَ عَلَى قَبْرٍ»


Musannaf-Abdur-Razzaq-6511

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

6511. நான் ஒரு நெருப்புக்கங்கின் மீது அமர்ந்து அது எனது மேலாடையையும், பிறகு சட்டையையும், பிறகு கீழாடையையும் கரித்து பிறகு எனது சருமம்வரை சென்றடைவதானது, நான் ஒரு முஸ்லிமான மனிதரின் அடக்கத்தலத்தின் (கப்று)மீது உட்காருவதைவிட எனக்கு விருப்பமானதாகும் என்று அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்.

அறிவிப்பவர்: ஸைத் பின் அஸ்லம் (ரஹ்)


«لِأَنْ أَجْلِسَ عَلَى جَمْرَةٍ فَتَحْرِقَ رِدَائِي، ثُمَّ قَمِيصِي، ثُمَّ إِزَارِي، ثُمَّ تُفْضِي إِلَى جِلْدِي أَحَبُّ إِلَيَّ مِنْ أَنْ أَجْلِسَ عَلَى قَبْرِ رَجُلٍ مُسْلِمٍ»


Tayalisi-2667

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

2667. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் ஒருவர், ஒரு நெருப்புக்கங்கின் மீது அமர்வது (கப்று)மீது அவர் உட்காருவதைவிட அவருக்குச் சிறந்ததாகும்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

இதன் அறிவிப்பாளர்களில் ஒருவர் (முஹம்மது பின் கஃப்) கூறினார்:

அபூஹுரைரா (ரலி) அவர்கள், இதன் கருத்து மலம், ஜலம் கழிப்பதற்காக கப்ரின் மீது உட்காருவதாகும் என்று கூறினார்.


«لَأَنْ يَجْلِسَ أَحَدُكُمْ عَلَى جَمْرَةٍ خَيْرٌ لَهُ مِنْ أَنْ يَجْلِسَ عَلَى قَبْرٍ»

قَالَ أَبُو هُرَيْرَةَ: يَعْنِي: أَنْ يَجْلِسَ بِغَائِطٍ أَوْ بَوْلٍ


Musnad-Ahmad-10832

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

10832. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் ஒருவர், ஒரு நெருப்புக்கங்கின் மீது அமர்ந்து அது அவரது ஆடையைக் கரித்து அவரது சருமம்வரை சென்றடைவதானது, ஓர் அடக்கத்தலத்தை (கப்று)மீது அவர் மிதிப்பதை விட அவருக்குச் சிறந்ததாகும்…

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


«لَأَنْ يَجْلِسَ أَحَدُكُمْ عَلَى جَمْرَةٍ حَتَّى تَحْتَرِقَ ثِيَابُهُ، وَتَخْلُصَ إِلَيْهِ، خَيْرٌ لَهُ مِنْ أَنْ يَطَأَ عَلَى قَبْرٍ»


Musnad-Ahmad-9732

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

9732. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் ஒருவர், ஒரு நெருப்புக்கங்கின் மீது அமர்ந்து அது அவரது ஆடையைக் கரித்து விடுவதானது, ஓர் அடக்கத்தலத்தை (கப்று)மீது அவர் மிதிப்பதை விட அவருக்குச் சிறந்ததாகும்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


«لَأَنْ يَجْلِسَ أَحَدُكُمْ عَلَى جَمْرَةٍ حَتَّى تَحْتَرِقَ ثِيَابُهُ، خَيْرٌ لَهُ مِنْ أَنْ يَجْلِسَ عَلَى قَبْرٍ»


Musnad-Ahmad-9048

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

9048. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் ஒருவர், ஒரு நெருப்புக்கங்கின் மீது அமர்ந்து அது அவரது ஆடையைக் கரித்து அவரது சருமம்வரை சென்றடைவதானது, ஒரு முஸ்லிமான மனிதரின் அடக்கத்தலத்தை அவர் மிதிப்பதை விட அவருக்குச் சிறந்ததாகும்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


«لَأَنْ يَجْلِسَ أَحَدُكُمْ عَلَى جَمْرَةٍ، فَتُحْرِقَ ثِيَابَهُ حَتَّى تَخْلُصَ إِلَيْهِ، خَيْرٌ لُهُ مِنْ أَنْ يَطَأَ عَلَى قَبْرِ رَجُلٍ مُسْلِمٍ»


Musnad-Ahmad-8108

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

8108. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் ஒருவர், ஒரு நெருப்புக்கங்கின் மீது அமர்ந்து அது அவரது ஆடையைக் கரித்து அவரது சருமம்வரை சென்றடைவதானது, ஓர் அடக்கத்தலத்தின் (கப்று)மீது அவர் உட்காருவதைவிட அவருக்குச் சிறந்ததாகும்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


«لَأَنْ يَجْلِسَ أَحَدُكُمْ عَلَى جَمْرَةٍ فَتُحْرِقَ ثِيَابَهُ حَتَّى تُفْضِيَ إِلَى جِلْدِهِ، خَيْرٌ لَهُ مِنْ أَنْ يَجْلِسَ عَلَى قَبْرٍ»


Next Page » « Previous Page