Author: Abdul Hakkim

Ibn-Hibban-3166

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்:

3166. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் ஒருவர், ஒரு நெருப்புக்கங்கின் மீது அமர்ந்து அது அவரது ஆடையைக் கரித்து அவரது சருமம்வரை சென்றடைவதானது, ஓர் அடக்கத்தலத்தின் (கப்ரு) மீது அவர் உட்காருவதைவிட அவருக்குச் சிறந்ததாகும்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


«لَأَنَّ يَجْلِسَ أَحَدُكُمْ عَلَى جَمْرَةٍ فَتُحْرِقَ ثِيَابَهُ حَتَّى تَخْلُصَ إِلَيْهِ خَيْرٌ مِنْ أَنْ يَقْعُدَ عَلَى قَبْرٍ»


Kubra-Bayhaqi-7214

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம்:

7214. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் ஒருவர், ஒரு நெருப்புக்கங்கின் மீது அமர்ந்து அது அவரது ஆடையைக் கரித்து அவரது சருமம்வரை சென்றடைவதானது, ஓர் அடக்கத்தலத்தின் (கப்ரு) மீது அவர் உட்காருவதைவிட அவருக்குச் சிறந்ததாகும்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


لَأَنْ يَجْلِسَ أَحَدُكُمْ عَلَى جَمْرَةٍ أَوْ عَلَى نَارٍ فَتُحْرِقُ ثِيَابَهُ حَتَّى تَخْلُصَ إِلَيْهِ خَيْرٌ لَهُ مِنْ أَنْ يَجْلِسَ عَلَى قَبْرٍ “

وَفِي رِوَايَةِ عَلِيٍّ ” لَأَنْ يَجْلِسَ أَحَدُكُمْ عَلَى جَمْرَةٍ فَتُحْرِقَ ثِيَابَهُ حَتَّى تَصِلَ إِلَى جِلْدِهِ خَيْرٌ مِنْ أَنْ يَجْلِسَ عَلَى قَبْرٍ


Kubra-Nasaayi-2182

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்:

அடக்கத்தலத்தின் மீது உட்காருவது குறித்து வந்துள்ள கண்டனம்.

2182. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் ஒருவர், ஒரு நெருப்புக்கங்கின் மீது அமர்ந்து அது அவரது ஆடையைக் கரித்து விடுவதானது, ஓர் அடக்கத்தலத்தின் (கப்ரு) மீது அவர் உட்காருவதைவிட அவருக்குச் சிறந்ததாகும்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


«لَأَنْ يَجْلِسَ أَحَدُكُمْ عَلَى جَمْرَةٍ حَتَّى تَحْرِقَ ثِيَابَهُ خَيْرٌ لَهُ مِنْ أَنْ يَجْلِسَ عَلَى قَبْرٍ»


Musannaf-Ibn-Abi-Shaybah-11777

ஹதீஸின் தரம்: நபித்தோழரின் செயல் - பலமான செய்தி

11777. …உங்களில் ஒருவர் நெருப்புக்கங்கின் மீது அமர்ந்து அது அவரது  ஆடையையும், பிறகு சட்டையையும், பிறகு கீழாடையையும் கரித்து பிறகு அவரது சருமம்வரை சென்றடைவதானது, அவர் ஒரு அடக்கத்தலத்தின் (கப்று)மீது உட்காருவதைவிட எனக்கு விருப்பமானதாகும் என்று அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்.

அறிவிப்பவர்: அபூயஹ்யா ஸம்ஆன் (ரஹ்)


كُنْتُ أَتْبَعُ أَبَا هُرَيْرَةَ فِي الْجَنَائِزِ فَكَانَ يَقْضِي الْقُبُورَ قَالَ: «لَأَنْ يَجْلِسَ أَحَدُكُمْ عَلَى جَمْرَةٍ، فَتُحْرِقَ ثِيَابَهُ، ثُمَّ قَمِيصَهُ، ثُمَّ إِزَارَهُ حَتَّى تَخْلُصَ إِلَى جِلْدِهِ أَحَبُّ إِلَيَّ مِنْ أَنْ يَجْلِسَ عَلَى قَبْرٍ»


Abu-Dawood-3228

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்:

அடக்கத்தலத்தின் மீது உட்காருவது வெறுப்பிற்குரிய செயல்.

3228. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் ஒருவர், ஒரு நெருப்புக்கங்கின் மீது அமர்ந்து அது அவரது ஆடையைக் கரித்து அவரது சருமம்வரை சென்றடைவதானது, ஓர் அடக்கத்தலத்தின் (கப்ரு) மீது அவர் உட்காருவதைவிட அவருக்குச் சிறந்ததாகும்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


«لَأَنْ يَجْلِسَ أَحَدُكُمْ عَلَى جَمْرَةٍ فَتُحْرِقَ ثِيَابَهُ، حَتَّى تَخْلُصَ إِلَى جِلْدِهِ، خَيْرٌ لَهُ مِنْ أَنْ يَجْلِسَ عَلَى قَبْرٍ»


Ibn-Majah-1566

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம்:

அடக்கத்தலத்தின் மீது நடப்பதற்கும், உட்காருவதற்கும் வந்துள்ள தடை.

1566. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் ஒருவர், ஒரு நெருப்புக்கங்கின் மீது அமர்ந்து அது அவரது ஆடையைக் கரித்து விடுவதானது, ஓர் அடக்கத்தலத்தின் மீது அவர்  உட்காருவதைவிட அவருக்குச் சிறந்ததாகும்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


«لَأَنْ يَجْلِسَ أَحَدُكُمْ عَلَى جَمْرَةٍ تُحْرِقُهُ خَيْرٌ لَهُ مِنْ أَنْ يَجْلِسَ عَلَى قَبْرٍ»


Nasaayi-2044

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்:

அடக்கத்தலத்தின் மீது உட்காருவது குறித்து வந்துள்ள கண்டனம்.

2044. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் ஒருவர், ஒரு நெருப்புக்கங்கின் மீது அமர்ந்து அது அவரது ஆடையைக் கரித்து விடுவதானது, ஓர் அடக்கத்தலத்தின் (கப்ரு) மீது அவர் உட்காருவதைவிட அவருக்குச் சிறந்ததாகும்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


«لَأَنْ يَجْلِسَ أَحَدُكُمْ عَلَى جَمْرَةٍ حَتَّى تَحْرُقَ ثِيَابَهُ خَيْرٌ لَهُ مِنْ أَنْ يَجْلِسَ عَلَى قَبْرٍ»


Almujam-Alkabir-12051

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

12051. நீங்கள் (கப்ருகளை) அடக்கத்தலங்களை நோக்கித் தொழாதீர்கள்; அவற்றின் மீதும் தொழாதீர்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)


«لَا تُصَلُّوا إِلَى قَبْرٍ، وَلَا تُصَلُّوا عَلَى قَبْرٍ»


Almujam-Alkabir-12168

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

12168. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(கப்ருகளை) அடக்கத்தலங்களை நோக்கியும் தொழக்கூடாது; அவற்றின் மீதும் தொழக்கூடாது.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

 


«لَا يُصَلَّى إِلَى قَبْرٍ وَلَا عَلَى قَبْرٍ»


Musnad-Ahmad-26556

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

26556. கப்ரை, காரையால் (சுண்ணாம்புக் கலவையால்) பூசுவதையும்; அதன் மீது கட்டடம் எழுப்புவதையும்; அதன் மீது உட்காருவதையும் நபி (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்.

அறிவிப்பவர்: உம்மு ஸலமா (ரலி) அவர்களின் அடிமையான நாஇம் (ரஹ்)

அப்துல்லாஹ் பின் அஹ்மத் அவர்கள் கூறுகிறார்:

எனது தந்தை (இமாம் அஹ்மத் அவர்கள்), இந்த செய்தியில் உம்மு ஸலமா (ரலி) அவர்கள் கூறப்படவில்லை என்று கூறினார்.


«أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى أَنْ يُجَصَّصَ قَبْرٌ، أَنْ يُبْنَى عَلَيْهِ، أَوْ يُجْلَسَ عَلَيْهِ»

قَالَ أَبِي: لَيْسَ فِيهِ أُمُّ سَلَمَةَ


Next Page » « Previous Page