Author: Abdul Hakkim

Musnad-Ahmad-21306

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

21306. அபுல்ஆலியா அல்பர்ராஃ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

(ஒரு முறை பஸராவின் ஆளுநராக இருந்த) உபைதுல்லாஹ் பின் ஸியாத், தொழுகையை (உரிய நேரத்தில்) தொழாமல் தாமதப்படுத்தினார். நான், அப்துல்லாஹ் பின் ஸாமித் (ரஹ்) அவர்களிடம், ஸியாத் செய்தது பற்றி கேட்டேன். அப்போது அவர்கள் என் தொடையில் ஓர் அடி அடித்து விட்டு கூறியதாவது: நான் என் நண்பரான அபூதர் (ரலி) அவர்களிடம் (தொழுகையை தாமதப்படுத்தம் தலைவரகள் பற்றி) கேட்டேன்.

அதற்கவர்கள், என் தொடையில் அடித்து விட்டு, நான் என் நண்பரான-நபி (ஸல்) அவர்களிடம் இதுப் பற்றி கேட்டேன். அப்போது அவர்கள், “தொழுகையை அதன் உரிய நேரத்தில் (தனியாக) தொழுதுக் கொள்வீராக! பிறகு (தாமதப்படுத்தும்) அவர்களுடன் நீர் தொழுகையை அடைந்துக் கொண்டால் அப்போதும் அவர்களுடன் இணைந்து தொழுதுக் கொள்வீராக. (ஆனால் அந்த நேரத்தில்) நான் தொழுது விட்டேன். ஆகவே தொழமாட்டேன் என்று கூறாதீர்” என்று சொன்னார்கள் என்று கூறினார்.


أَخَّرَ عُبَيْدُ اللَّهِ بْنُ زِيَادٍ الصَّلَاةَ، فَسَأَلْتُ عَبْدَ اللَّهِ بْنَ الصَّامِتِ، فَضَرَبَ فَخِذِي، قَالَ: سَأَلَتُ خَلِيلِي أَبَا ذَرٍّ، فَضَرَبَ فَخِذِي، وَقَالَ: سَأَلْتُ خَلِيلِي يَعْنِي النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: ” صَلِّ لِمِيقَاتِهَا، فَإِنْ أَدْرَكْتَ فَصَلِّ مَعَهُمْ، وَلَا تَقُولَنَّ: إِنِّي قَدْ صَلَّيْتُ فَلَا أُصَلِّي


Musnad-Ahmad-21324

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

21324.


قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «يَا أَبَا ذَرٍّ، صَلِّ الصَّلَاةَ لِوَقْتِهَا، فَإِنْ أَتَيْتَ النَّاسَ وَقَدْ صَلَّوْا، كُنْتَ قَدْ أَحْرَزْتَ صَلَاتَكَ، وَإِنْ لَمْ يَكُونُوا صَلَّوْا، صَلَّيْتَ مَعَهُمْ وَكَانَتْ لَكَ نَافِلَةً»


Darimi-1264

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1264. அபூதர் (ரலி) அவர்கள் கூறியதாவது :

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “தொழுகையை உரிய நேரத்தில் தொழாமல் தாமதப்படுத்தும்  தலைவர்களை நீர் அடைந்தால் உமது நிலை எப்படி இருக்கும்?” என்று என்னிடம் கேட்டார்கள். அதற்கு நான் “(அப்போது) நான் என்ன செய்ய வேண்டும் எனத் தாங்கள் உத்தரவிடுகின்றீர்கள்?” என்று கேட்டேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “தொழுகையை உரிய நேரத்தில் தொழுதுக் கொள்வீராக! மக்களுடன் சேர்ந்து தொழும் தொழுகையை (நஃபிலான) உபரியான தொழுகையாக ஆக்கிக் கொள்வீராக! என்று கூறினார்கள்.


«يَا أَبَا ذَرٍّ كَيْفَ تَصْنَعُ إِذَا أَدْرَكْتَ أُمَرَاءَ يُؤَخِّرُونَ الصَّلَاةَ عَنْ وَقْتِهَا؟» قُلْتُ: مَا تَأْمُرُنِي يَا رَسُولَ اللَّهِ؟ قَالَ: «صَلِّ الصَّلَاةَ لِوَقْتِهَا. وَاجْعَلْ صَلَاتَكَ مَعَهُمْ نَافِلَةً»


Darimi-1263

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்:

நேரம் தவறி தொழக்கூடியவருக்கு பின்னால் தொழுதல்.

1263. “தொழுகையை உரிய நேரத்தை விட்டுத் தாமதப்படுத்தும் மக்களிடையே நீர் தங்கவேண்டிய நிலை ஏற்பட்டால் “உமது நிலை எப்படி இருக்கும்?” என்று நபி (ஸல்) அவர்கள் என்னிடம் கேட்டார்கள். அதற்கு நான் அல்லாஹ்வும், அவனது தூதருமே நன்கு அறிந்தவர்கள்! என்று கூறினேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அப்போது தொழுகையை உரிய நேரத்தில் நீர் தொழுதுக் கொள்வீராக! பின்பு பள்ளிக்கு செல்வீராக! நீர் பள்ளிவாசலில் இருக்கும் போது இகாமத் சொல்லப்பட்டால் அப்போதும் மக்களுடன் சேர்ந்து தொழுதுக் கொள்வீராக! என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூதர் (ரலி)


أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَهُ: «كَيْفَ أَنْتَ إِذَا بَقِيتَ فِي قَوْمٍ يُؤَخِّرُونَ الصَّلَاةَ عَنْ وَقْتِهَا؟» قَالَ: اللَّهُ وَرَسُولُهُ أَعْلَمُ قَالَ: «صَلِّ الصَّلَاةَ لِوَقْتِهَا وَاخْرُجْ. فَإِنْ أُقِيمَتِ الصَّلَاةُ وَأَنْتَ فِي الْمَسْجِدِ فَصَلِّ مَعَهُمْ»


Nasaayi-859

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்:

நேரம் தவறிய தொழுகையை ஜமாஅத்தாக (கூட்டாக) நிறைவேற்றுதல்.

859. அபூதர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

“எனது தொடையில் அடித்து விட்டு, தொழுகையை உரிய நேரத்தை விட்டுத் தாமதப்படுத்தும் மக்களிடையே நீர் தங்கவேண்டிய நிலை ஏற்பட்டால் “உமது நிலை எப்படி இருக்கும்?” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம் கேட்டார்கள்.  நான் “(அப்போது) நான் என்ன செய்ய வேண்டும் என்று எனக்கு உத்தரவிடுகிறீர்கள்?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “தொழுகையை அதன் உரிய நேரத்தில் தொழுதுகொள்வீராக! பிறகு உமது தேவைக்காகச் செல்வீராக! நீர் பள்ளிவாசலில் இருக்கும் போது இகாமத் சொல்லப்பட்டால் (அப்போதும் மக்களுடன் சேர்ந்து) தொழுதுக் கொள்வீராக! என்று கூறினார்கள்.


قَالَ لِي رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَضَرَبَ فَخِذِي: «كَيْفَ أَنْتَ إِذَا بَقِيتَ فِي قَوْمٍ يُؤَخِّرُونَ الصَّلَاةَ عَنْ وَقْتِهَا؟» قَالَ: مَا تَأْمُرُ؟ قَالَ: «صَلِّ الصَّلَاةَ لِوَقْتِهَا ثُمَّ اذْهَبْ لِحَاجَتِكَ، فَإِنْ أُقِيمَتِ الصَّلَاةُ وَأَنْتَ فِي الْمَسْجِدِ فَصَلِّ»


Ibn-Majah-1256

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1256. தொழுகையை அதன் உரிய நேரத்தில் தொழுதுகொள்வீராக! இமாம் மக்களுக்கு தொழுகை வைக்கும் போது அவரை அடைந்தால் அப்போதும் மக்களுடன் (இணைந்து) தொழுது கொள்வீராக! இதனால் நீர் தொழுகையை பாதுகாத்தவராக ஆவீர். மேலும் அது உமக்கு கூடுதலான (நஃபில்) தொழுகையாகவும் அமையும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூதர் (ரலி)


«صَلِّ الصَّلَاةَ لِوَقْتِهَا، فَإِنْ أَدْرَكْتَ الْإِمَامَ يُصَلِّي بِهِمْ فَصَلِّ مَعَهُمْ، وَقَدْ أَحْرَزْتَ صَلَاتَكَ، وَإِلَّا فَهِيَ نَافِلَةٌ لَكَ»


Nasaayi-778

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்:

அநியாயக்கார தலைவர்களுடன் சேர்ந்து தொழுதல்.

778. அபுல்ஆலியா அல்பர்ராஃ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

(ஒரு முறை பஸராவின் ஆளுநராக இருந்த) ஸியாத், தொழுகையை (உரிய நேரத்தில்) தொழாமல் தாமதப்படுத்தினார். அப்போது அப்துல்லாஹ் பின் ஸாமித் (ரஹ்) அவர்கள் என்னிடம் வந்தார். (அவரை வரவேற்று) அவருக்காக நாற்காலியை போட அதில் அவர்கள் அமர்ந்தார். அப்போது நான் அவர்களிடம், ஸியாத் செய்தது பற்றி கேட்டேன். அப்போது அவர்கள் (கோபத்துடன்) தமது உதட்டைக் கடித்துக்கொண்டு என் தொடையில் ஓர் அடி அடித்து விட்டு கூறியதாவது: அபுல்ஆலியாவே! நீங்கள் என்னிடம் கேட்டதைப் போன்று நான் (என் தந்தையின் உடன்பிறந்த சகோதரர்) அபூதர் (ரலி) அவர்களிடம் கேட்டேன். அவர்கள், நான் உமது தொடையில் அடித்ததைப் போன்றே என் தொடையில் அடித்து விட்டு, அப்துல்லாஹ் பின் ஸாமித் அவர்களே! நீங்கள் என்னிடம் கேட்டதைப் போன்றே நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கேட்டேன். அதற்கு, நான் உமது தொடையில் அடித்ததைப் போன்று என் தொடையில் நபி (ஸல்) அவர்கள் அடித்து விட்டு, “தொழுகையை அதன் உரிய நேரத்தில் (தனியாக) தொழுதுக் கொள்ளுங்கள். பிறகு (தாமதப்படுத்தும்) அவர்களுடன் நீங்கள் தொழுகையை அடைந்துக் கொண்டால் அப்போதும் அவர்களுடன் இணைந்து தொழுதுக் கொள்ளுங்கள். (ஆனால் அந்த நேரத்தில்) நான் தொழுது

أَخَّرَ زِيَادٌ الصَّلَاةَ فَأَتَانِي ابْنُ صَامِتٍ فَأَلْقَيْتُ لَهُ كُرْسِيًّا فَجَلَسَ عَلَيْهِ، فَذَكَرْتُ لَهُ صُنْعَ زِيَادٍ فَعَضَّ عَلَى شَفَتَيْهِ وَضَرَبَ عَلَى فَخِذِي وَقَالَ: إِنِّي سَأَلْتُ أَبَا ذَرٍّ كَمَا سَأَلْتَنِي فَضَرَبَ فَخِذِي كَمَا ضَرَبْتُ فَخِذَكَ وَقَالَ: إِنِّي سَأَلْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَمَا سَأَلْتَنِي فَضَرَبَ فَخِذِي كَمَا ضَرَبْتُ فَخِذَكَ فَقَالَ عَلَيْهِ الصَّلَاة وَالسَّلَامُ: ” صَلِّ الصَّلَاةَ لِوَقْتِهَا، فَإِنْ أَدْرَكْتَ مَعَهُمْ فَصَلِّ وَلَا تَقُلْ: إِنِّي صَلَّيْتُ فَلَا أُصَلِّي


Tirmidhi-176

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம்:

தலைவர் தொழுகையைத் தாமதப்படுத்தும்போது (மக்கள் உரியநேரத்தில்) விரைவாக தொழுதுவிடுவது பற்றி வந்துள்ளவை.

176. அபூதர்ரே எனக்கு பிறகு வரும் சில தலைவர்கள், தொழுகையை உரியநேரத்தில் தொழாமல் பாழாக்குவார்கள். அப்போது, தொழுகையை அதற்குரிய நேரத்தில் நீ தொழுவிடு பிறகு அவர்களுடன் சேரந்து நீ தொழுதால் அது உமக்கு உபரியான தொழுகையாக அமையும். மேலும் உமது தொழுகையை பாதுகாத்தவராக இருப்பாய் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.


«يَا أَبَا ذَرٍّ، أُمَرَاءُ يَكُونُونَ بَعْدِي يُمِيتُونَ الصَّلَاةَ، فَصَلِّ الصَّلَاةَ لِوَقْتِهَا، فَإِنْ صُلِّيَتْ لِوَقْتِهَا كَانَتْ لَكَ نَافِلَةً، وَإِلَّا كُنْتَ قَدْ أَحْرَزْتَ صَلَاتَكَ»


Musnad-Ahmad-3889

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

3889.


«كَيْفَ بِكَ يَا عَبْدَ اللَّهِ، إِذَا كَانَ عَلَيْكُمْ أُمَرَاءُ يُضَيِّعُونَ السُّنَّةَ، وَيُؤَخِّرُونَ الصَّلَاةَ عَنْ مِيقَاتِهَا؟» قَالَ: كَيْفَ تَأْمُرُنِي يَا رَسُولَ اللَّهِ؟ قَالَ: «تَسْأَلُنِي ابْنَ أُمِّ عَبْدٍ، كَيْفَ تَفْعَلُ؟ لَا طَاعَةَ لِمَخْلُوقٍ فِي مَعْصِيَةِ اللَّهِ عَزَّ وَجَلَّ»


Musannaf-Abdur-Razzaq-3788

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

3788.


«كَيْفَ بِكَ يَا أَبَا عَبْدِ الرَّحْمَنِ إِذَا كَانَ عَلَيْكَ أُمَرَاءُ يُطْفُونَ السُّنَّةَ، وَيُؤَخِّرُونَ الصَّلَاةَ عَنْ مِيقَاتِهَا؟» قَالَ: فَكَيْفَ تَأْمُرُنِي يَا رَسُولَ اللَّهِ؟ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «تَسْأَلُنِي ابْنَ أُمِّ عَبْدٍ كَيْفَ تَفْعَلُ لَا طَاعَةَ لِمَخْلُوقٍ فِي مَعْصِيَةِ اللَّهِ»


Next Page » « Previous Page