Author: Abdul Hakkim

Nasaayi-4114

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்:

மௌட்டீகத்தின் (அறியாமையின்) கொடிக்குக் கீழே நின்று போரிடக்கூடியவர் விசயத்தில் வந்துள்ள கண்டனம்.

4114. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(ஆட்சித் தலைமைக்குக்) கட்டுப்படாமல், (ஓர் ஆட்சித் தலைமையின் கீழ் ஒன்றுபட்ட) கட்டமைப்பிலிருந்து பிரிந்து, அதே நிலையில் ஒருவர் இறந்துவிட்டால், அறியாமைக் கால மரணத்தையே அவர் சந்திப்பார்.

யார் என் சமுதாயத்தாருக்கெதிராகப் புறப்பட்டு, அவர்களில் இறைநம்பிக்கையாளர்களைப் பொருட்படுத்தாமல் அவர்களில் நல்லவர்களையும் கெட்டவர்களையும் கொன்று, ஒப்பந்தம் செய்துள்ளவர்களின் ஒப்பந்தத்தை நிறைவேற்றத் தவறுகிறாரோ அவர் என்னைச் சேர்ந்தவரில்லை.

ஒருவர் (கொள்கையோ இலக்கோ இல்லாத) மௌட்டீகம் என்னும் அறியாமையின் கொடிக்குக் கீழே நின்று போரிடுகிறார்; இனவெறியில் கோபப்படுகிறார். அல்லது இனவெறிக்கு அழைப்பு விடுக்கிறார். அல்லது இன வெறிக்கு உதவி செய்கிறார். இந்நிலையில் அவர் கொல்லப்பட்டுவிட்டால், அவரது மரணம் அறியாமைக் கால மரணமே ஆகும்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


«مَنْ خَرَجَ مِنَ الطَّاعَةِ، وَفَارَقَ الْجَمَاعَةَ فَمَاتَ مَاتَ مِيتَةً جَاهِلِيَّةً، وَمَنْ خَرَجَ عَلَى أُمَّتِي يَضْرِبُ بَرَّهَا، وَفَاجِرَهَا لَا يَتَحَاشَى مِنْ مُؤْمِنِهَا، وَلَا يَفِي لِذِي عَهْدِهَا فَلَيْسَ مِنِّي، وَمَنْ قَاتَلَ تَحْتَ رَايَةٍ عُمِّيَّةٍ، يَدْعُو إِلَى عَصَبِيَّةٍ، أَوْ يَغْضَبُ لِعَصَبِيَّةٍ فَقُتِلَ فَقِتْلَةٌ جَاهِلِيَّةٌ»


Musnad-Ahmad-10334

ஹதீஸின் தரம்: நபித்தோழரின் செயல் - பலமான செய்தி

10334. ஹதீஸ் எண்-10333 இல் வரும் செய்தி இந்த அறிவிப்பாளர்தொடரிலும் சிறிது வார்த்தை மாற்றத்துடன் வந்துள்ளது.


مَنْ فَارَقَ الْجَمَاعَةَ، وَخَالَفَ الطَّاعَةَ، فَذَكَرَ مَعْنَاهُ، إِلَّا أَنَّهُ قَال: «وَلَا يَفِي لِذِي عَهْدِهَا»


Musnad-Ahmad-10333

ஹதீஸின் தரம்: நபித்தோழரின் செயல் - பலமான செய்தி

10333. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஆட்சித் தலைமைக்குக்) கட்டுப்படாமல், (ஓர் ஆட்சித் தலைமையின் கீழ் ஒன்றுபட்ட) கட்டமைப்பிலிருந்து பிரிந்து, அதே நிலையில் ஒருவர் இறந்துவிட்டால், அறியாமைக் கால மரணத்தையே அவர் சந்திப்பார்.

யார் என் சமுதாயத்தாருக்கெதிராகப் புறப்பட்டு, அவர்களில் இறைநம்பிக்கையாளர்களைப் பொருட்படுத்தாமல் அவர்களில் நல்லவர்களையும் கெட்டவர்களையும் கொன்று, ஒப்பந்தம் செய்துள்ளவர்களின் ஒப்பந்தத்தை நிறைவேற்றத் தவறுகிறாரோ அவர் என்னுடைய சமுதாயத்தைச் சேர்ந்தவரில்லை.

ஒருவர் இனவெறிக்கு அழைப்பு விடுக்கிறார். அல்லது இனவெறியில் கோபப்படுகிறார். அல்லது இனவெறியில் சண்டையிடுகிறார். (இவ்வாறு) மௌட்டீகம் என்னும் அறியாமையின் கொடிக்குக் கீழே நின்று கொல்லப்படுபவரின் மரணம் அறியாமைக் கால மரணமே ஆகும்.

அறிவிப்பவர்: ஸியாத் பின் ரியாஹ் (ரஹ்)


«مَنْ خَرَجَ مِنَ الطَّاعَةِ، وَفَارَقَ الْجَمَاعَةَ، فَمَاتَ، فَمِيتَتُهُ جَاهِلِيَّةٌ، وَمَنْ خَرَجَ مِنْ أُمَّتِي يَضْرِبُ بَرَّهَا وَفَاجِرَهَا، لَا يَتَحَاشَى مِنْ مُؤْمِنِهَا، وَلَا يَفِي لِذِي عَهْدِهَا، فَلَيْسَ مِنْ أُمَّتِي، وَمَنْ قُتِلَ تَحْتَ رَايَةٍ عِمِّيَّةٍ، يَدْعُو لِلْعَصَبَةِ، أَوْ يَغْضَبُ لِلْعَصَبَةِ، أَوْ يُقَاتِلُ لِلْعَصَبَةِ، فَقِتْلَةٌ جَاهِلِيَّةٌ»


Musnad-Ahmad-8061

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

8061.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(ஆட்சித் தலைமைக்குக்) கட்டுப்படாமல், (ஓர் ஆட்சித் தலைமையின் கீழ் ஒன்றுபட்ட) கட்டமைப்பிலிருந்து பிரிந்து, அதே நிலையில் ஒருவர் இறந்துவிட்டால், அறியாமைக் கால மரணத்தையே அவர் சந்திப்பார்.

ஒருவர் (கொள்கையோ இலக்கோ இல்லாத) மௌட்டீகம் என்னும் அறியாமையின் கொடிக்குக் கீழே நின்று போரிடுகிறார்; இனவெறியில் கோபப்படுகிறார். அல்லது இனவெறிக்கு அழைப்பு விடுக்கிறார். அல்லது இனவெறிக்கு உதவி செய்கிறார். இந்நிலையில் அவர் கொல்லப்பட்டுவிட்டால், அவரது மரணம் அறியாமைக் கால மரணமே ஆகும்.

யார் என் சமுதாயத்தாருக்கெதிராகப் புறப்பட்டு, அவர்களில் இறைநம்பிக்கையாளர்களைப் பொருட்படுத்தாமல் அவர்களில் நல்லவர்களையும் கெட்டவர்களையும் கொன்று, ஒப்பந்தம் செய்துள்ளவர்களின் ஒப்பந்தத்தை நிறைவேற்றத் தவறுகிறாரோ அவர் என்னைச் சேர்ந்தவருமில்லை. நான் அவரைச் சேர்ந்தவனுமில்லை.


«مَنْ فَارَقَ الْجَمَاعَةَ، وَخَرَجَ مِنَ الطَّاعَةِ، فَمَاتَ فَمِيتَتُهُ جَاهِلِيَّةٌ، وَمَنْ خَرَجَ عَلَى أُمَّتِي بِسَيْفِهِ، يَضْرِبُ بَرَّهَا وَفَاجِرَهَا، لَا يَتَحَاشَى مُؤْمِنًا لِإِيمَانِهِ، وَلَا يَفِي لِذِي عَهْدٍ بِعَهْدِهِ، فَلَيْسَ مِنْ أُمَّتِي، وَمَنْ قُتِلَ تَحْتَ رَايَةٍ عِمِّيَّةٍ، يَغْضَبُ لِلْعَصَبِيَّةِ، أَوْ يُقَاتِلُ لِلْعَصَبِيَّةِ، أَوْ يَدْعُو إِلَى الْعَصَبِيَّةِ، فَقِتْلَةٌ جَاهِلِيَّةٌ»


Musnad-Ahmad-7944

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

7944. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(ஆட்சித் தலைமைக்குக்) கட்டுப்படாமல், (ஓர் ஆட்சித் தலைமையின் கீழ் ஒன்றுபட்ட) கட்டமைப்பிலிருந்து பிரிந்து, அதே நிலையில் ஒருவர் இறந்துவிட்டால், அறியாமைக் கால மரணத்தையே அவர் சந்திப்பார்.

ஒருவர் (கொள்கையோ இலக்கோ இல்லாத) மௌட்டீகம் என்னும் அறியாமையின் கொடிக்குக் கீழே நின்று போரிடுகிறார்; இனவெறியில் கோபப்படுகிறார். அல்லது இனவெறிக்கு அழைப்பு விடுக்கிறார். அல்லது இனவெறிக்கு உதவி செய்கிறார். இந்நிலையில் அவர் கொல்லப்பட்டுவிட்டால், அவரது மரணம் அறியாமைக் கால மரணமே ஆகும்.

யார் என் சமுதாயத்தாருக்கெதிராகப் புறப்பட்டு, அவர்களில் இறைநம்பிக்கையாளர்களைப் பொருட்படுத்தாமல் அவர்களில் நல்லவர்களையும் கெட்டவர்களையும் கொன்று, ஒப்பந்தம் செய்துள்ளவர்களின் ஒப்பந்தத்தை நிறைவேற்றத் தவறுகிறாரோ அவர் என்னைச் சேர்ந்தவருமில்லை. நான் அவரைச் சேர்ந்தவனுமில்லை.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


«مَنْ خَرَجَ مِنَ الطَّاعَةِ، وَفَارَقَ الْجَمَاعَةَ، فَمَاتَ، فَمِيتَةٌ جَاهِلِيَّةٌ، وَمَنْ قَاتَلَ تَحْتَ رَايَةٍ عِمِّيَّةٍ، يَغْضَبُ لِعَصَبَتِهِ، وَيُقَاتِلُ لِعَصَبَتِهِ وَيَنْصُرُ عَصَبَتَهُ فَقُتِلَ، فَقِتْلَةٌ جَاهِلِيَّةٌ، وَمَنْ خَرَجَ عَلَى أُمَّتِي، يَضْرِبُ بَرَّهَا وَفَاجِرَهَا، لَا يَنْحَاشُ لِمُؤْمِنِهَا، وَلَا يَفِي لِذِي عَهْدِهَا، فَلَيْسَ مِنِّي، وَلَسْتُ مِنْهُ»


Abu-Dawood-5121

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

5121.


«لَيْسَ مِنَّا مَنْ دَعَا إِلَى عَصَبِيَّةٍ، وَلَيْسَ مِنَّا مَنْ قَاتَلَ عَلَى عَصَبِيَّةٍ، وَلَيْسَ مِنَّا مَنْ مَاتَ عَلَى عَصَبِيَّةٍ»


Almujam-Alkabir-10204

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

10204. கோடைக் காலத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் லுஹர் தொழுகையின் (நேர) அளவு, ஒருவரின் நிழல் அவரது மூன்று பாதங்கள் அளவிற்கு வந்ததிலிருந்து ஐந்து பாதங்கள் வரும் வரை இருக்கும். குளிர் காலத்தில் ஐந்து பாதங்கள் முதல் ஏழு பாதங்கள் அளவிற்கு வரும் வரை இருக்கும்.

அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் (ரலி)


«كَانَ قَدْرُ صَلَاةِ الظُّهْرِ مَعَ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الصَّيْفِ ثَلَاثَةَ أَقْدَامٍ إِلَى خَمْسَةِ أَقْدَامٍ، وَفِي الشِّتَاءِ خَمْسَةَ أَقْدَامٍ إِلَى سَبْعَةٍ»


Hakim-716

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

716. கோடைக் காலத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் லுஹர் தொழுகையின் (நேர) அளவு, ஒருவரின் நிழல் அவரது மூன்று பாதங்கள் அளவிற்கு வந்ததிலிருந்து இருக்கும். குளிர் காலத்தில் ஐந்து பாதங்கள் முதல் ஏழு பாதங்கள் அளவிற்கு வரும் வரை இருக்கும்.

அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் (ரலி)


«كَانَ قَدْرُ صَلَاةِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ثَلَاثَةَ أَقْدَامٍ، وَفِي الشِّتَاءِ خَمْسَةُ أَقْدَامٍ إِلَى سَبْعَةِ أَقْدَامٍ»


Kubra-Bayhaqi-1708

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1708. கோடைக் காலத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் லுஹர் தொழுகையின் (நேர) அளவு, ஒருவரின் நிழல் அவரது மூன்று பாதங்கள் அளவிற்கு வந்ததிலிருந்து ஐந்து பாதங்கள் வரும் வரை இருக்கும். குளிர் காலத்தில் ஐந்து பாதங்கள் முதல் ஏழு பாதங்கள் அளவிற்கு வரும் வரை இருக்கும்.

அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் (ரலி)

பைஹகீ இமாம் கூறுகிறார்:

அபூதாவூத் அவர்களின் இந்த செய்தியின் கருத்து நாட்டுக்கு நாடு வித்தியாசப்படும். எனவே அதற்கு தகுந்தவாறு (லுஹர் தொழுகையின் நேரத்தைக்) கணக்கிட்டுக்கொள்ளவேண்டும்.


كَانَ قَدْرُ صَلَاةِ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الصَّيْفِ ثَلَاثَةَ أَقْدَامٍ إِلَى خَمْسَةِ أَقْدَامٍ وَفِي الشِّتَاءِ خَمْسَةَ أَقْدَامٍ إِلَى سَبْعَةِ أَقْدَامٍ


Kubra-Nasaayi-1504

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1504. கோடைக் காலத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் லுஹர் தொழுகையின் (நேர) அளவு, ஒருவரின் நிழல் அவரது மூன்று பாதங்கள் அளவிற்கு வந்ததிலிருந்து ஐந்து பாதங்கள் வரும் வரை இருக்கும். குளிர் காலத்தில் ஐந்து பாதங்கள் முதல் ஏழு பாதங்கள் அளவிற்கு வரும் வரை இருக்கும்.

அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் (ரலி)


كَانَ «قَدْرُ صَلَاةِ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الظُّهْرَ فِي الصَّيْفِ ثَلَاثَةَ أَقْدَامٍ إِلَى خَمْسَةِ أَقْدَامٍ، وَفِي الشِّتَاءِ خَمْسَةَ أَقْدَامٍ إِلَى سَبْعَةِ أَقْدَامٍ»


Next Page » « Previous Page