Author: Abdul Hakkim

Musnad-Ahmad-23625

ஹதீஸின் தரம்: ஹஸன் - நடுத்தரமான செய்தி

23625. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இரண்டு விசயங்களை ஆதமுடைய மகன் (மனிதன்) வெறுக்கிறான். (ஒன்று) மரணம். (இரண்டு) குறைந்த பொருளாதாரம். (ஆனால்) மரணம் இறைநம்பிக்கையாளருக்கு (உலகத்தின்) குழப்பத்தை விட சிறந்தது. குறைந்த பொருளாரம் (பெற்றிருப்பது) மறுமையின் கேள்விக் கணக்கை குறைக்கும்.

அறிவிப்பவர்: மஹ்மூத் பின் லபீத் (ரலி)


اثْنَتَانِ يَكْرَهُهُمَا ابْنُ آدَمَ: الْمَوْتُ، وَالْمَوْتُ خَيْرٌ لِلْمُؤْمِنِ مِنَ الْفِتْنَةِ، وَيَكْرَهُ قِلَّةَ الْمَالِ، وَقِلَّةُ الْمَالِ أَقَلُّ لِلْحِسَابِ


Hakim-6616

ஹதீஸின் தரம்: ஹஸன் - நடுத்தரமான செய்தி

6616. அம்ர் பின் உமைய்யா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் நபி (ஸல்) அவர்களிடம், “அல்லாஹ்வின் தூதரே! நான் (ஒட்டகத்தை அவிழ்த்து விட்டு அல்லாஹ்வின் மீது முழுதும் நம்பிக்கை வைக்க வேண்டுமா?” என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “(ஒட்டகத்தை) கட்டிவைத்து விட்டு அல்லாஹ்வின் மீது முழுதும் நம்பிக்கை வைப்பீராக!” என்று பதிலளித்தார்கள்.


يَا رَسُولَ اللَّهِ أَرْسَلَ رَاحِلَتِي وَأَتَوَكَّلُ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «بَلْ قَيِّدْهَا وَتَوَكَّلْ»


Ibn-Hibban-731

ஹதீஸின் தரம்: ஹஸன் - நடுத்தரமான செய்தி

பாடம்:

731. அம்ர் பின் உமைய்யா (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம், “அல்லாஹ்வின் தூதரே! நான் (ஒட்டகத்தை அவிழ்த்து விட்டு அல்லாஹ்வின் மீது முழுதும் நம்பிக்கை வைக்க வேண்டுமா?” என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “(ஒட்டகத்தை) கட்டிவைத்து விட்டு அல்லாஹ்வின் மீது முழுதும் நம்பிக்கை வைப்பீராக!” என்று பதிலளித்தார்கள்.

இப்னு ஹிப்பான் (அபூஹாதிம்) கூறுகிறார்:

இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் யஃகூப் என்பவர் யஃகூப் பின் அம்ர் பின் அப்துல்லாஹ் பின் அம்ர் பின் உமைய்யா அள்ளம்ரிய்யு என்பவர் ஆவார். இவர் ஹிஜாஸ் பகுதியை சேர்ந்தவரும், பிரபலமானவரும் நம்பகமானவரும் ஆவார்.


قَالَ رَجُلٌ لِلنَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: أُرْسِلُ نَاقَتِي وَأَتَوَكَّلُ؟، قَالَ: «اعْقِلْهَا وَتَوَكَّلْ»


Tirmidhi-2517

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

துணைப் பாடம்:

2517. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம், “அல்லாஹ்வின் தூதரே! நான் (ஒட்டகத்தை கட்டிவைத்து விட்டு அல்லாஹ்வின் மீது முழுதும் நம்பிக்கை வைக்க வேண்டுமா? அல்லது அவிழ்த்துவிட்டு அல்லாஹ்வின் மீது முழுதும் நம்பிக்கை வைக்க வேண்டுமா?” என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “(ஒட்டகத்தை) கட்டிவைத்து விட்டு அல்லாஹ்வின் மீது முழுதும் நம்பிக்கை வைப்பீராக!” என்று பதிலளித்தார்கள்.

திர்மிதீ இமாம் கூறுகிறார்:

யஹ்யா பின் ஸயீத் அவர்கள், என் பார்வையில் இந்த செய்தி நிராகரிக்கப்பட்டதாகும் என்று கூறியதாக அம்ர் பின் அலீ அல்ஃபல்லாஸ் அவர்கள் கூறினார்.

இந்தக் கருத்தில் அனஸ் (ரலி) வழியாக வந்துள்ள செய்திகளில் இந்த அறிவிப்பாளர்தொடரையே நாம் அறிகிறோம். இது அரிதான செய்தியாகும்.

மேலும் இந்த செய்தி அம்ர் பின் உமைய்யா (ரலி) —> நபி (ஸல்) என்ற அறிவிப்பாளர்தொடரிலும் அறிவிக்கப்பட்டுள்ளது.


قَالَ رَجُلٌ: يَا رَسُولَ اللَّهِ أَعْقِلُهَا وَأَتَوَكَّلُ، أَوْ أُطْلِقُهَا وَأَتَوَكَّلُ؟ قَالَ: «اعْقِلْهَا وَتَوَكَّلْ»


Nasaayi-5493

ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

பாடம்:

பைத்தியமாகுவதை விட்டு (அல்லாஹ்விடம்) பாதுகாப்பு தேடுதல்.

5493. நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹும்ம இன்னீ அவூது பிக மினல் பரஸி, வல்ஜுனூனி, வல்ஜுதாமி, வமின் ஸய்யிஇல் அஸ்காம்” என்று பிரார்த்தனை செய்பவர்களாக இருந்தார்கள்.

(துஆவின் பொருள்: அல்லாஹ்வே! வெண்குஷ்டம், பைத்தியம், உடலுறுப்புகள் அழுகிவிழும் நோய் மற்றும் பிற தீயநோய்கள் அனைத்தையும் விட்டு உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்)

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)


«اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْجُنُونِ، وَالْجُذَامِ، وَالْبَرَصِ، وَسَيِّئِ الْأَسْقَامِ»


Musnad-Ahmad-13004

ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

13004. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அல்லாஹும்ம இன்னீ அவூது பிக மினல் பரஸி, வல்ஜுனூனி, வல்ஜுதாமி, வமின் ஸய்யிஇல் அஸ்காம்” என்று பிரார்த்தனை செய்பவர்களாக இருந்தார்கள்.

(துஆவின் பொருள்: அல்லாஹ்வே! வெண்குஷ்டம், பைத்தியம், உடலுறுப்புகள் அழுகிவிழும் நோய் மற்றும் பிற தீயநோய்கள் அனைத்தையும் விட்டு உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்)

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)


«اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْبَرَصِ، وَالْجُنُونِ، وَالْجُذَامِ، وَمِنْ سَيِّئِ الْأَسْقَامِ»


Abu-Dawood-1554

ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

1554. நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹும்ம இன்னீ அவூது பிக மினல் பரஸி, வல்ஜுனூனி, வல்ஜுதாமி, வமின் ஸய்யிஇல் அஸ்காம்” என்று பிரார்த்தனை செய்பவர்களாக இருந்தார்கள்.

(துஆவின் பொருள்: அல்லாஹ்வே! வெண்குஷ்டம், பைத்தியம், உடலுறுப்புகள் அழுகிவிழும் நோய் மற்றும் பிற தீயநோய்கள் அனைத்தையும் விட்டு உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்)

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)


«اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ البَرَصِ، وَالْجُنُونِ، وَالْجُذَامِ، وَمِنْ سَيِّئِ الْأَسْقَامِ»


Nasaayi-151

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

151.

ஒரு முஸ்லிம் அழகிய முறையில் அங்கத் தூய்மை செய்து, அகத்தையும் முகத்தையும் ஒருமுகப்படுத்தி (பணிந்து,உள்ளச்சத்துடன்) தொழுதால் அவருக்குச் சொர்க்கம் கட்டாயமாகாமல் இருப்பதில்லை


«مَنْ تَوَضَّأَ فَأَحْسَنَ الْوُضُوءَ، ثُمَّ صَلَّى رَكْعَتَيْنِ يُقْبِلُ عَلَيْهِمَا بِقَلْبِهِ وَوَجْهِهِ وَجَبَتْ لَهُ الْجَنَّةُ»


Abu-Dawood-906

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

906.

ஒரு முஸ்லிம் அழகிய முறையில் அங்கத் தூய்மை செய்து, அகத்தையும் முகத்தையும் ஒருமுகப்படுத்தி (பணிந்து,உள்ளச்சத்துடன்) தொழுதால் அவருக்குச் சொர்க்கம் கட்டாயமாகாமல் இருப்பதில்லை


«مَا مِنْ أَحَدٍ يَتَوَضَّأُ فَيُحْسِنُ الْوُضُوءَ، وَيُصَلِّي رَكْعَتَيْنِ، يُقْبِلُ بِقَلْبِهِ وَوَجْهِهِ عَلَيْهِمَا، إِلَّا وَجَبَتْ لَهُ الْجَنَّةُ»


Musnad-Ahmad-17393

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

17393.

உக்பா பின் ஆமிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் (முறைவைத்து) ஒட்டகங்கள் மேய்த்துவந்தோம். இந்நிலையில் எனது முறை வந்தபோது மாலை நேரத்தில் நான் அவற்றை ஓட்டிக்கொண்டு மேய்ச்சல் நிலத்திற்குச் சென்றேன். (பிறகு நான் திரும்பிவந்தேன்.) அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்களிடையே நின்று உரையாற்றிக் கொண்டிருந்தார்கள். அப்போது அவர்கள்,ஒரு முஸ்லிம் அழகிய முறையில் அங்கத் தூய்மை செய்து, அகத்தையும் முகத்தையும் ஒருமுகப்படுத்தி (பணிந்து,உள்ளச்சத்துடன்) தொழுதால் அவருக்குச் சொர்க்கம் கட்டாயமாகாமல் இருப்பதில்லை என்று கூறுவதை நான் கேட்டேன்.

உடனே நான் என்ன அருமையான வார்த்தை! என்றேன். அப்போது எனக்கு முன்னால் இருந்த ஒருவர் இதற்கு முன்னர் சொன்ன வார்த்தை இதைவிட அருமையானது என்றார். உடனே நான் (அவர் யார் என்று) பார்த்தேன். அங்கே உமர் (ரலி) அவர்கள் இருந்தார்கள். உமர் (ரலி) அவர்கள் (என்னிடம்) கூறினார்கள்: சற்று முன்னர்தான் நீங்கள் இங்கு வந்தீர்கள்; நான் பார்த்தேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (நீங்கள் வருவதற்கு முன் பின்வருமாறு) கூறினார்கள்:

உங்களில் ஒருவர் முழுமையான முறையில் அங்கத் தூய்மை செய்துவிட்டு, அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹு வ அன்ன முஹம்மதன் அப்துல்லாஹி வரசூலுஹு (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை

كَانَتْ عَلَيْنَا رِعَايَةُ الْإِبِلِ، فَجَاءَتْ نَوْبَتِي فَرَوَّحْتُهَا بِعَشِيٍّ، فَأَدْرَكْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَائِمًا، يُحَدِّثُ النَّاسَ، فَأَدْرَكْتُ مِنْ قَوْلِهِ: «مَا مِنْ مُسْلِمٍ يَتَوَضَّأُ فَيُحْسِنُ الْوُضُوءَ، ثُمَّ يَقُومُ فَيُصَلِّي رَكْعَتَيْنِ مُقْبِلًا عَلَيْهِمَا بِقَلْبِهِ وَوَجْهِهِ، إِلَّا وَجَبَتْ لَهُ الْجَنَّةُ» فَقُلْتُ: مَا أَجْوَدَ هَذِهِ؟ فَإِذَا قَائِلٌ بَيْنَ يَدَيَّ يَقُولُ: الَّتِي قَبْلَهَا أَجْوَدُ مِنْهَا. فَنَظَرْتُ فَإِذَا عُمَرُ بْنُ الْخَطَّابِ، قَالَ إِنِّي قَدْ رَأَيْتُكَ جِئْتَ آنِفًا، قَالَ: مَا مِنْكُمْ مِنْ أَحَدٍ يَتَوَضَّأُ، فَيُسْبِغُ الْوُضُوءَ، ثُمَّ يَقُولُ: أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ، وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، إِلَّا فُتِحَتْ لَهُ أَبْوَابُ الْجَنَّةِ الثَّمَانِيَةُ يَدْخُلُ مِنْ أَيِّهَا شَاءَ


Next Page » « Previous Page