Author: Abdul Hakkim

Kubra-Bayhaqi-5026

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்:

மல, ஜல இயற்கை உபாதை போன்ற ஏதாவது நிர்பந்தம் இருக்கும்போது அதிலிருந்து தூய்மையாகும் வரை ஜமாஅத் தொழுகையை விடுவதற்குள்ள அனுமதி.

5026. “உங்களில் எவரும் உணவு ‎தயாராக இருக்கும் போதும், மலஜலத்தை அடக்கிக் கொண்டும் தொழவேண்டாம்” ‎என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

பைஹகீ இமாம் கூறுகிறார்:

இந்த செய்தியை இப்னு அபூமர்யம் அவர்கள், மற்றொரு அறிவிப்பாளர்தொடரிலும் அறிவித்துள்ளார்.


لَا يُصَلِّيَنَّ أَحَدُكُمْ بِحَضْرَةِ الطَّعَامِ، وَلَا وَهُوَ يُدَافِعُ الْأَخْبَثَيْنِ: الْغَائِطَ وَالْبَوْلَ


Abi-Yala-4804

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

4804. நாங்கள் (அன்னை) ஆயிஷா (ரலி) அவர்களுடன் இருக்கும் போது அவர்களுக்கு உணவு ‎கொண்டு வரப்பட்டது. அப்போது (அபூபக்ர் ஸித்தீக் (ரலி) அவர்களின் பேரன்) காஸிம் ‎அவர்கள் தொழ எழுந்தார். அப்போது (அன்னை) ஆயிஷா (ரலி) அவர்கள், “உணவு ‎தயாராக இருக்கும் போதும், மலஜல உபாதைகளை அடக்கிக் கொண்டும் தொழக் கூடாது ‎என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறக் கேட்டிருக்கிறேன்” எனக் ‎கூறினார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் முஹம்மத்-இப்னு அபூஅதீக் (ரஹ்)


كُنَّا عِنْدَ عَائِشَةَ فَجِيءَ بِطَعَامٍ، فَقَامَ الْقَاسِمُ يُصَلِّي فَقَالَتْ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «لَا يُصَلَّ بِحَضْرَةِ الطَّعَامِ، وَلَا وَهُوَ يُدَافِعُ الْأَخْبَثَيْنِ»


Almujam-Alawsat-2361

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

2361. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், தனது வயிற்றில் (இயற்கைத் தேவை போன்ற) எதையாவது உணர்ந்தால் அப்போது தொழ (நிற்க) மாட்டார்கள்.

அறிவிப்பவர்: உர்வா பின் ஸுபைர் (ரஹ்)


كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا يُصَلِّي وَهُوَ يَجِدُ فِي بَطْنِهِ شَيْئًا


Hakim-599

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

599. நாங்கள் (அன்னை) ஆயிஷா (ரலி) அவர்களுடன் இருக்கும் போது அவர்களுக்கு உணவு ‎கொண்டு வரப்பட்டது. அப்போது (அபூபக்ர் ஸித்தீக் (ரலி) அவர்களின் பேரன்) காஸிம் ‎அவர்கள் தொழ எழுந்தார். அப்போது (அன்னை) ஆயிஷா (ரலி) அவர்கள், “உணவு ‎தயாராக இருக்கும் போதும், மலஜல உபாதைகளை அடக்கிக் கொண்டும் தொழக் கூடாது ‎என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறக் கேட்டிருக்கிறேன்” எனக் ‎கூறினார்கள்.

அறிவிப்பவர்: காஸிம் பின் முஹம்மத் பின் அபூபக்ர் (ரஹ்)


كُنَّا عِنْدَ عَائِشَةَ فَجِيءَ بِطَعَامِهَا فَقَامَ الْقَاسِمُ بْنُ مُحَمَّدٍ يُصَلِّي فَقَالَتْ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «لَا يُصَلَّى بِحَضْرَةِ الطَّعَامِ، وَلَا هُوَ يُدَافِعُ الْأَخْبَثَانِ»


Ibn-Hibban-2074

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

2074. ஆயிஷா (ரலி) அவர்களுக்கும், அவர்களின் சகோதரர் மகன்களில் ஒருவருக்குமிடையில் ஒரு பிரச்சனை இருந்தது. அவர் ஆயிஷா (ரலி) அவர்களிடம் வந்தபோது உணவு கொண்டு வந்து வைக்கப்பட்டது. உடனே அவர் எழுந்து பள்ளிவாசலுக்கு செல்ல தயாரானார்.

உடனே ஆயிஷா (ரலி) அவர்கள், “அவசரக்காரனே! உட்கார்! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “உணவு வந்து காத்திருக்கும்போதும், சிறுநீர் மற்றும் மலத்தை அடக்கிக்கொண்டும் தொழக்கூடாது” என்று கூறியதை நான் கேட்டுள்ளேன்” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: காஸிம் பின் முஹம்மத் பின் அபூபக்ர் (ரஹ்)


كَانَ بَيْنَ عَائِشَةَ وَبَيْنَ بَعْضِ بَنِي أَخِيهَا شَيْءٌ، فَدَخَلَ عَلَيْهَا فَلَمَّا جَلَسَ جِيءَ بِالطَّعَامِ، فَقَامَ إِلَى الْمَسْجِدِ فَقَالَتْ لَهُ: اجْلِسْ غُدَرُ، فَإِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «لَا يُصَلِّي أَحَدُكُمْ بِحَضْرَةِ الطَّعَامِ، وَلَا وَهُوَ يُدَافِعُهُ الْأَخْبَثَانِ».


Ibn-Hibban-2073

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம்:

நாம் கூறிய கருத்து சரியானது என்று தெளிவாக உணர்த்தும் இரண்டாவது செய்தி.

2073. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “உங்களில் எவரும் உணவு வந்து காத்திருக்கும்போதும், சிறுநீர் மற்றும் மலத்தை அடக்கிக்கொண்டும் தொழவேண்டாம்” என்று கூறியதை நான் கேட்டுள்ளேன்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)


«لَا يَقُومُ أَحَدُكُمْ إِلَى الصَّلَاةِ وَهُوَ بِحَضْرَةِ الطَّعَامِ وَلَا هُوَ يُدَافِعُهُ الْأَخْبَثَانِ الْغَائِطُ وَالْبَوْلُ»


Ibn-Khuzaymah-933

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம்:

தொழுகையில் மலஜலத்தை அடக்கிக் கொண்டு தொழுவது பற்றி வந்துள்ள கண்டனம்.

933. நாங்கள் (அன்னை) ஆயிஷா (ரலி) அவர்களுடன் இருக்கும் போது அவர்களுக்கு உணவு ‎கொண்டு வரப்பட்டது. அப்போது (அபூபக்ர் ஸித்தீக் (ரலி) அவர்களின் பேரன்) காஸிம் ‎அவர்கள் தொழ எழுந்தார். அப்போது (அன்னை) ஆயிஷா (ரலி) அவர்கள், “உணவு ‎தயாராக இருக்கும் போதும், மலஜல உபாதைகளை அடக்கிக் கொண்டும் தொழக் கூடாது ‎என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறக் கேட்டிருக்கிறேன்” எனக் ‎கூறினார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் முஹம்மத் பின் அபூபக்ர் (ரஹ்)


كُنَّا عِنْدَ عَائِشَةَ فَجِيءَ بِطَعَامٍ فَقَامَ الْقَاسِمُ يُصَلِّي، فَقَالَتْ عَائِشَةُ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «لَا يُصَلَّى صَلَاةً بِحَضْرَةِ الطَّعَامِ، وَلَا وَهُوَ يُدَافِعُهُ الْأَخْبَثَانِ»


Musnad-Ahmad-24449

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

24449. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் எவரும் உணவு வந்து காத்திருக்கும்போதும், சிறுநீர் மற்றும் மலத்தை அடக்கிக்கொண்டும் தொழவேண்டாம்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)


«لَا يُصَلِّيَنَّ أَحَدُكُمْ بِحَضْرَةِ الطَّعَامِ، وَلَا وَهُوَ يُدَافِعُهُ الْأَخْبَثَانِ»


Musnad-Ahmad-24270

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

24270. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “உணவு வந்து காத்திருக்கும்போதும், சிறுநீர் மற்றும் மலத்தை அடக்கிக்கொண்டும் தொழக்கூடாது” என்று கூறியதை நான் கேட்டுள்ளேன்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)


«لَا يُصَلَّى بِحَضْرَةِ الطَّعَامِ، وَلَا وَهُوَ يُدَافِعُهُ الْأَخْبَثَانِ»


Musnad-Ahmad-24166

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

24166. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “உணவு வந்து காத்திருக்கும்போதும், சிறுநீர் மற்றும் மலத்தை அடக்கிக்கொண்டும் தொழக்கூடாது” என்று கூறியதை நான் கேட்டுள்ளேன்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)


«لَا يُصَلَّى بِحَضْرَةِ الطَّعَامِ، وَلَا وَهُوَ يُدَافِعُهُ الْأَخْبَثَانِ»


Next Page » « Previous Page