Author: Abdul Hakkim

Musannaf-Abdur-Razzaq-11331

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

11331. முஆதே! அடிமையை உரிமைவிடுவது போன்று அல்லாஹ்வுக்கு மிகவும் பிடித்தமான வேறு (செயல்) எதையும் அல்லாஹ் இந்த பூமியில் படைக்கவில்லை. விவாகரத்தைப்போன்று அல்லாஹ்வுக்கு மிகவும் வெறுப்பான வேறு (செயல்) எதையும் அல்லாஹ் இந்த பூமியில் படைக்கவில்லை.

ஒருவர், தனது அடிமையிடம்,”அல்லாஹ் நாடினால்! நீ சுதந்திரமானவன் (விடுதலைபெற்றுவிட்டாய்)” என்று கூறினால் அவர் சுதந்திரமானவரே! அவருக்கு அதில் விதிவிலக்கு செய்ய உரிமை இல்லை.

ஒருவர் தனது மனைவியிடம், அல்லாஹ் நாடினால்! நீ தலாக் விடப்பட்டுவிட்டாய்” என்று கூறினால் அவருக்கு அதில் விதிவிலக்கு செய்ய உரிமை உண்டு. அவர் தலாக் கூறியவராக ஆகமாட்டார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: முஆத் பின் ஜபல் (ரலி)


يَا مُعَاذُ مَا خَلَقَ اللَّهُ عَلَى ظَهْرِ الْأَرْضِ أَحَبُّ إِلَيْهِ مِنْ عَتَاقٍ، وَمَا خَلَقَ اللَّهُ عَلَى وَجْهِ الْأَرْضِ أَبْغَضَ إِلَيْهِ مِنَ الطَّلَاقِ، فَإِذَا قَالَ الرَّجُلُ لِعَبْدِهِ: هُوَ حُرٌّ إِنْ شَاءَ اللَّهُ، فَهُوَ حُرٌّ، وَلَا اسْتِثْنَاءَ لَهُ، وَإِذَا قَالَ لِامْرَأَتِهِ: أَنْتِ طَالِقٌ إِنْ شَاءَ اللَّهُ، فَلَهُ اسْتِثْنَاؤُهُ وَلَا طَلَاقَ عَلَيْهِ


Daraqutni-3985

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

3985. ஹதீஸ் எண்-3984 இல் வரும் செய்தி இந்த அறிவிப்பாளர்தொடரிலும் வந்துள்ளது.

ஹுமைத் பின் அர்ரபீஃ கூறியதாவது:

ஹுமைத் பின் மாலிக் அல்லக்மீ அறியப்பட்டவர் என்பதற்கு என்ன செய்தி இருக்கிறது? என்று என்னிடம் யஸீத் பின் ஹாரூன் கேட்டார். நான் அவர் என்னுடைய பாட்டனார் என்று கூறினேன். உடனே யஸீத் அவர்கள், என்னை மகிழ்ச்சியடைச் செய்தாய்! என்னை மகிழ்ச்சியடைச் செய்தாய்! இப்போது தான் இந்த செய்தி ஹதீஸாக மாறிவிட்டது என்று கூறினார்.


قَالَ حُمَيْدٌ: قَالَ لِي يَزِيدُ بْنُ هَارُونَ: وَأَيُّ حَدِيثٍ لَوْ كَانَ حُمَيْدُ بْنُ مَالِكٍ اللَّخْمِيُّ مَعْرُوفًا؟ , قُلْتُ: هُوَ جَدِّي , قَالَ يَزِيدُ: سَرَرْتَنِي سَرَرْتَنِي الْآنَ صَارَ حَدِيثًا


Daraqutni-3984

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

3984. முஆதே! அடிமையை உரிமைவிடுவது போன்று அல்லாஹ்வுக்கு மிகவும் பிடித்தமான வேறு (செயல்) எதையும் அல்லாஹ் இந்த பூமியில் படைக்கவில்லை. விவாகரத்தைப்போன்று அல்லாஹ்வுக்கு மிகவும் வெறுப்பான வேறு (செயல்) எதையும் அல்லாஹ் இந்த பூமியில் படைக்கவில்லை.

ஒருவர், தனது அடிமையிடம்,”அல்லாஹ் நாடினால்! நீ சுதந்திரமானவன் (விடுதலைபெற்றுவிட்டாய்)” என்று கூறினால் அவர் சுதந்திரமானவரே! அவருக்கு அதில் விதிவிலக்கு செய்ய உரிமை இல்லை.

ஒருவர் தனது மனைவியிடம், அல்லாஹ் நாடினால்! நீ தலாக் விடப்பட்டுவிட்டாய்” என்று கூறினால் அவருக்கு அதில் விதிவிலக்கு செய்ய உரிமை உண்டு. அவர் தலாக் கூறியவராக ஆகமாட்டார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: முஆத் பின் ஜபல் (ரலி)


يَا مُعَاذُ مَا خَلَقَ اللَّهُ شَيْئًا عَلَى وَجْهِ الْأَرْضِ أَحَبَّ إِلَيْهِ مِنَ الْعَتَاقِ , وَلَا خَلَقَ اللَّهُ شَيْئًا عَلَى وَجْهِ الْأَرْضِ أَبْغَضَ إِلَيْهِ مِنَ الطَّلَاقِ , فَإِذَا قَالَ الرَّجُلُ لِمَمْلُوكِهِ: أَنْتَ حُرٌّ إِنْ شَاءَ اللَّهُ فَهُوَ حُرٌّ وَلَا اسْتِثْنَاءَ لَهُ , وَإِذَا قَالَ الرَّجُلُ لِامْرَأَتِهِ: أَنْتِ طَالِقٌ إِنْ شَاءَ اللَّهُ فَلَهُ اسْتِثْنَاؤُهُ وَلَا طَلَاقَ عَلَيْهِ


Almujam-Alkabir-13813

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

13813. அனுமதிக்கப்பட்டவைகளில் அல்லாஹ்வுக்கு மிகவும் வெறுப்பானது விவாகரத்தாகும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)


«أَبْغَضُ الحَلاَلِ إِلى اللهِ الطَّلاَقُ»


Kubra-Bayhaqi-14894

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

பாடம்:

விவாகரத்து செய்வது வெறுப்பிற்குரிய செயல் என்பது பற்றி வந்துள்ளவை.

14894. அனுமதிக்கப்பட்டவைகளில் அல்லாஹ்வுக்கு மிகவும் வெறுப்பானது விவாகரத்தாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)


أَبْغَضُ الْحَلَالِ إِلَى اللهِ الطَّلَاقُ


Hakim-2794

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

2794. விவாகரத்தைப்போன்று அல்லாஹ்வுக்கு மிகவும் வெறுப்பான வேறு எதையும் அல்லாஹ் அனுமதிக்கவில்லை என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)


«مَا أَحَلَّ اللَّهُ شَيْئًا أَبْغَضَ إِلَيْهِ مِنَ الطَّلَاقِ»


Ibn-Majah-2018

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

2018. அனுமதிக்கப்பட்டவைகளில் அல்லாஹ்வுக்கு மிகவும் வெறுப்பானது விவாகரத்தாகும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)


«أَبْغَضُ الْحَلَالِ إِلَى اللَّهِ الطَّلَاقُ»


Musannaf-Ibn-Abi-Shaybah-19194

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

19194. அனுமதிக்கப்பட்டவைகளில் அல்லாஹ்வுக்கு மிகவும் வெறுப்பானது, விவாகரத்தை விட வேறு எதுவுமில்லை என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: முஹாரிப் பின் திஸார் (ரஹ்)


«لَيْسَ شَيْءٌ مِمَّا أَحَلَّ اللَّهُ أَبْغَضَ إِلَيْهِ مِنَ الطَّلَاقِ»


Kubra-Bayhaqi-14896

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

14896.


تَزَوَّجَ رَجُلٌ عَلَى عَهْدِ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ امْرَأَةً فَطَلَّقَهَا فَقَالَ لَهُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” أَتَزَوَّجْتَ؟ ” قَالَ: نَعَمْ قَالَ: ” ثُمَّ مَاذَا؟ ” قَالَ: ثُمَّ طَلَّقْتُ قَالَ: ” أَمِنْ رِيبَةٍ؟ ” قَالَ: لَا قَالَ: ” قَدْ يَفْعَلُ ذَلِكَ الرَّجُلُ ” قَالَ: ثُمَّ تَزَوَّجَ امْرَأَةً أُخْرَى فَطَلَّقَهَا فَقَالَ لَهُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِثْلَ ذَلِكَ قَالَ مُعَرَّفٌ: فَمَا أَدْرِي أَعِنْدَ هَذَا أَوْ عِنْدَ الثَّالِثَةِ قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” إِنَّهُ لَيْسَ شَيْءٌ مِنَ الْحَلَالِ أَبْغَضَ إِلَى اللهِ مِنَ الطَّلَاقِ


Kubra-Bayhaqi-14895

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

14895. விவாகரத்தைப்போன்று அல்லாஹ்வுக்கு மிகவும் வெறுப்பான வேறு எதையும் அல்லாஹ் அனுமதிக்கவில்லை என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: முஹாரிப் பின் திஸார் (ரஹ்)

பைஹகீ இமாம் கூறுகிறார்:


مَا أَحَلَّ اللهُ شَيْئًا أَبْغَضَ إِلَيْهِ مِنَ الطَّلَاقِ


Next Page » « Previous Page