Author: Abdul Hakkim

Kubra-Bayhaqi-1995

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம்:

மனாராவில் (உயரமான இடத்தில் நின்று) பாங்கு சொல்லுதல்.

1995. பனூ நஜ்ஜார் கோத்திரத்தைச் சேர்ந்த ஒரு பெண் கூறியதாவது:

பள்ளியை சுற்றி உள்ள வீடுகளில் எனது வீடு மிக உயரமாக அமைந்திருந்தது. பிலால் (ரலி) அவர்கள் அதில் ஏறி பஜ்ருக்கான பாங்கு சொல்வார். ஸஹர் நேரத்தில் வந்து, அமர்ந்து பஜ்ர் நேரத்தை கவனித்துக் கொண்டிருப்பார். பஜ்ர் நேரத்தை அவர் பார்த்ததும் அவர் உடல் சிலிர்த்து எழுந்து, “அல்லாஹும்ம இன்னீ அஹ்மதுக்க வ அஸ்தயீனுக்க அலா குரைஷின் அன் யுகீமூ தீனக்க” (யாஅல்லாஹ்! உன்னைப் புகழ்கின்றேன். குறைஷிகள் உன்னுடைய மார்க்கத்தை நிலை நாட்ட வேண்டுமென உன்னிடமே உதவி தேடுகின்றேன்) என்று சொல்வார். பிறகு பாங்கு சொல்வார். ஒரு இரவு கூட இந்த வார்த்தைகளை (சொல்லாமல்) விட்டதாக நான் காணவில்லை!


كَانَ بَيْتِي مِنْ أَطْوَلِ بَيْتٍ حَوْلَ الْمَسْجِدِ فَكَانَ بِلَالٌ يُؤَذِّنُ عَلَيْهِ الْفَجْرَ فَيَأْتِي بِسَحَرٍ فَيَجْلِسُ عَلَى الْبَيْتِ ثُمَّ يَنْظُرُ إِلَى الْفَجْرِ فَإِذَا رَآهُ تَمَطَّى ثُمَّ قَالَ: ” اللهُمَّ إِنِّي أَحْمَدُكَ وَأَسْتَعِينُكَ عَلَى قُرَيْشٍ أَنْ يُقِيمُوا دِينَكَ ” قَالَتْ: ثُمَّ يُؤَذِّنُ، قَالَتْ: وَاللهُ مَا عَلِمْتُهُ كَانَ تَرَكَهَا لَيْلَةً وَاحِدَةً هَذِهِ الْكَلِمَاتِ “


Tabaqatul-Kubra-Ibn-Sahd-13021

ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

13021. யஹ்யா பின் அப்துல்லாஹ் பின் அப்துர்ரஹ்மான் பின் ஸஃத் பின் ஸுராரா அவர்கள் கூறியதாவது:

ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்களின் தாயார் நவ்வார் (ரலி) அவர்களிடம் செவியேற்ற ஒருவர் அவர் கூறியதாக எனக்கு அறிவித்தார்:

மஸ்ஜிதுன் நபவீ பள்ளியை சுற்றியுள்ள வீடுகளிலேயே என் வீடுதான் உயரமானதாக இருந்தது. அதனால், பிலால் (ரலி) அவர்கள் முதல்முதலில் பாங்கு சொல்ல ஆரம்பித்த நாள் முதல், நபி (ஸல்) அவர்கள் தங்கள் மஸ்ஜிதுன் நபவீ பள்ளியை கட்டும் வரை என் வீட்டின் மேலே நின்று பாங்கு சொன்னார்கள். பின்னர், பள்ளி கட்டப்பட்ட பிறகு, மஸ்ஜிதின் கூரை மீது, அதற்காக சற்று உயர்த்தப்பட்ட ஒன்றின் மீது நின்று பாங்கு சொன்னார்கள்.


كانَ بَيتي أَطوَلَ بَيتٍ حَولَ المَسجِد فَكانَ بِلاَلٌ يُؤَذِّنُ فَوقَهُ مِن أَوَّل ما أَذَّنَ إِلَى أَن بَنَى رَسولُ الله صَلى الله عَليه وسَلم مَسجِدَهُ فَكانَ يُؤَذِّنُ بَعدُ عَلَى ظَهر المَسجِد وقَد رُفِعَ لَهُ شَيءٌ فَوقَ ظَهرِه.


Ibn-Majah-3825

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

3825.


«أَلَا أَدُلُّكَ عَلَى كَنْزٍ مِنْ كُنُوزِ الْجَنَّةِ؟» قُلْتُ: بَلَى يَا رَسُولَ اللَّهِ، قَالَ: «لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ»


Musnad-Ahmad-21336

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

21336.


كُنْتُ أَمْشِي خَلْفَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: «أَلَا أَدُلُّكَ عَلَى كَنْزٍ مِنْ كُنُوزِ الْجَنَّةِ؟» قُلْتُ: بَلَى. قَالَ: «لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ»


Musnad-Ahmad-10736

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

10736. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள், “சொர்க்கத்தின் கருவூலங்களில் ஒரு கருவூலத்தை நான் உமக்கு அறிவிக்கட்டுமா?” என்று கேட்டார்கள். நான், “ஆம்” என்றேன். நபி (ஸல்) அவர்கள் அது, “லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ்” (அல்லாஹ்வின் உதவியில்லாமல் (பாவங்களிலிருந்து) விலகிச் செல்லவோ (நல்லறங்கள் புரிய) ஆற்றல் பெறவோ (மனிதனால்) முடியாது) என்று கூறினார்கள்.


அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:

(இதைக் கூறுவதால்) மிகவும் கண்ணியமான, மகத்துவமிக்க அல்லாஹ், “என் அடியான் சரணடைந்தான், முற்றிலும் கீழ்ப்படிந்தான்” என்று கூறுகிறான் என நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள் என நான் கருதுகிறேன்.


«أَلَا أَدُلُّكَ عَلَى كَنْزٍ مِنْ كُنُوزِ الْجَنَّةِ؟» قُلْتُ: بَلَى. قَالَ: «لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ»
قَالَ: ” أَحْسِبُهُ قَالَ: «يَقُولُ اللَّهُ عَزَّ وَجَلَّ أَسْلَمَ عَبْدِي وَاسْتَسْلَمَ»


Tirmidhi-3461

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

3461. அபூமூஸா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் ஒரு போரில் நபி (ஸல்) அவர்களுடன் இருந்தோம். நாங்கள் திரும்பி வந்து மதீனாவை நெருங்கியபோது, மக்கள் தக்பீர் கூறத் தொடங்கினர், அவர்களின் குரல்களை உயர்த்தினர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “நிச்சயமாக உங்கள் இறைவன் செவிடன் அல்ல. அவன் உங்களைவிட்டுத் தொலைவிலும் இல்லை. அவன் உங்களுக்கு இடையிலும் உங்கள் பயணப் பெட்டிகளின் தலைப்பக்கத்திலும் உள்ளான்” என்று கூறினார்கள்.

பின்னர் அவர்கள் என்னிடம், “அப்துல்லாஹ் இப்னு கைஸே! சொர்க்கத்தின் புதையல்களில் இருந்து ஒரு புதையலை நான் உங்களுக்குக் கற்றுத்தரட்டுமா?” என்று கேட்டுவிட்டு, அது “லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ்” என்று கூறினார்கள்.


திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இது ஹஸன் ஸஹீஹ் எனும் தரத்தில் அமைந்த நபிமொழி ஆகும்.

இதில் இடம்பெறும் அபூஉஸ்மான்-அந்நஹ்தீ என்பவரின் இயற்பெயர் அப்துர்ரஹ்மான் பின் முல் ஆகும். அபூநஆமா என்பவரின் பெயர் அம்ர் பின் ஈஸா ஆகும்.

உங்களுக்கு இடையிலும் உங்கள் பயணப் பெட்டிகளின் தலைப்பக்கத்திலும் உள்ளான் என்பதன் கருத்து, அவனது அறிவும் ஆற்றலும் ஆகும்.


كُنَّا مَعَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي غَزَاةٍ، فَلَمَّا قَفَلْنَا أَشْرَفْنَا عَلَى المَدِينَةِ فَكَبَّرَ النَّاسُ تَكْبِيرَةً وَرَفَعُوا بِهَا أَصْوَاتَهُمْ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ رَبَّكُمْ لَيْسَ بِأَصَمَّ وَلَا غَائِبٍ، هُوَ بَيْنَكُمْ وَبَيْنَ رُءُوسِ رِحَالِكُمْ»، ثُمَّ قَالَ: ” يَا عَبْدَ اللَّهِ بْنَ قَيْسٍ، أَلَا أُعَلِّمُكَ كَنْزًا مِنْ كُنُوزِ الجَنَّةِ: لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ “.


Abu-Dawood-1526

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

1526.


كُنْتُ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي سَفَرٍ، فَلَمَّا دَنَوْا مِنَ الْمَدِينَةِ كَبَّرَ النَّاسُ، وَرَفَعُوا أَصْوَاتَهُمْ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «يَا أَيُّهَا النَّاسُ، إِنَّكُمْ لَا تَدْعُونَ أَصَمَّ، وَلَا غَائِبًا، إِنَّ الَّذِي تَدْعُونَهُ بَيْنَكُمْ وَبَيْنَ أَعْنَاقِ رِكَابِكُمْ»، ثُمَّ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «يَا أَبَا مُوسَى، أَلَا أَدُلُّكَ عَلَى كَنْزٍ مِنْ كُنُوزِ الْجَنَّةِ؟» فَقُلْتُ، وَمَا هُوَ؟ قَالَ: «لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ»


Ibn-Majah-3824

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

3824.


سَمِعَنِي النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَنَا أَقُولُ: لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ، قَالَ: «يَا عَبْدَ اللَّهِ بْنَ قَيْسٍ أَلَا أَدُلُّكَ عَلَى كَلِمَةٍ مِنْ كُنُوزِ الْجَنَّةِ؟» ، قُلْتُ: بَلَى يَا رَسُولَ اللَّهِ، قَالَ: قُلْ: «لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ»


Nasaayi-680

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

680.


مَنْ قَالَ حِينَ يَسْمَعُ النِّدَاءَ: اللَّهُمَّ رَبَّ هَذِهِ الدَّعْوَةِ التَّامَّةِ وَالصَّلَاةِ الْقَائِمَةِ. آتِ مُحَمَّدًا الْوَسِيلَةَ وَالْفَضِيلَةَ، وَابْعَثْهُ الْمَقَامَ الْمَحْمُودَ الَّذِي وَعَدْتَهُ إِلَّا حَلَّتْ لَهُ شَفَاعَتِي يَوْمَ الْقِيَامَةِ


Next Page » « Previous Page