தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bazzar-712

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

பெண்களே! அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். உங்கள் கணவனின் அன்பைத் தேடிக்கொள்ளுங்கள்.

ஒரு பெண் தன் கணவனுக்கு உள்ள உரிமையை உண்மையாக அறிந்திருந்தால் அவன் காலை உணவையோ, இரவு உணவையோ உண்டு முடிக்கும் வரை நின்றுக் கொண்டே இருப்பாள்.

அறிவிப்பவர்: அலீ பின் அபூதாலிப் (ரலி)

பஸ்ஸார் இமாம் கூறுகிறார்:

இந்தச் செய்தி அலீ (ரலி) அவர்கள் வழியாக, இந்த வகை அறிவிப்பாளர் தொடரில் மட்டுமே வந்துள்ளதாக நாம் அறிகிறோம்.

(bazzar-712: 712)

حَدَّثَنَا أَبُو طَاهِرٍ عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ رَبِّهِ، قَالَ: نا سُلَيْمَانُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، قَالَ: نا الْحَكَمُ بْنُ يَعْلَى بْنِ عَطَاءٍ الْمُحَارِبِيُّ، قَالَ: نا عَبْدُ الْغَفَّارِ بْنُ الْقَاسِمِ، عَنْ عَمْرِو بْنِ مُرَّةَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ سَلَمَةَ، عَنْ عَلِيٍّ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ:

«يَا مَعْشَرَ النِّسَاءِ اتَّقِينَ اللَّهَ وَالْتَمِسُوا مَرْضَاتِ أَزْوَاجِكُنَّ، فَإِنَّ الْمَرْأَةَ لَوْ تَعْلَمُ مَا حَقُّ زَوْجِهَا، لَمْ تَزَلْ قَائِمَةً مَا حَضَرَ غَدَاؤُهُ وَعَشَاؤُهُ»

وَهَذَا الْحَدِيثُ لَا نَعْلَمُ يُرْوَى عَنْ عَلِيٍّ إِلَّا مِنْ هَذَا الْوَجْهِ بِهَذَا الْإِسْنَادِ


Bazzar-Tamil-.
Bazzar-TamilMisc-.
Bazzar-Shamila-712.
Bazzar-Alamiah-.
Bazzar-JawamiulKalim-662.




இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

1 . பஸ்ஸார் இமாம்.

2 . அபூதாஹிர் அப்துல்லாஹ் பின் அப்து ரப்பிஹ்.

3 . ஸுலைமான் பின் அப்துர்ரஹ்மான்.

4 . ஹகம் பின் யஃலா பின் அதாஃ.

5 . அப்துல் ஃகஃப்பார் பின் காஸிம்.

6 . அம்ர் பின் முர்ரா.

7 . அப்துல்லாஹ் பின் ஸலமா.

8 . அலீ பின் அபூதாலிப் (ரலி).


  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-24984-அப்துல்லாஹ் பின் அப்து ரப்பிஹ் என்பவரின் நிலை அறியப்படவில்லை.
  • ராவீ-13822-ஹகம் பின் யஃலா பின் அதாஃ என்பவரையும், ராவீ-23215-அப்துல் ஃகஃப்பார் பின் காஸிம் என்பவரையும் ஹதீஸ்கலை அறிஞர்கள் விடப்பட்டவர் என்றும் பொய்யர் كذاب - وضاع நபி (ஸல்) அவர்கள் கூறாதவற்றை, கூறியதாக வேண்டுமென்றே பொய்யாக அறிவிப்பவர். என்றும், முன்கருல் ஹதீஸ் என்றும் விமர்சித்துள்ளனர்…

(நூல்கள்: அல்ஜர்ஹு வத்தஃதீல்-3/130, 6/53, அல்காமிலு ஃபிள்ளுஅஃபா-2/495, 7/18, தாரீகுல் இஸ்லாம்-4/838, 4/442, லிஸானுல் மீஸான்-3/258, 5/226)

எனவ இது மிக பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.


2 . இந்தக் கருத்தில் அலீ பின் அபூதாலிப் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: முஸ்னத் பஸ்ஸார்-712, அக்பாரு அஸ்பஹான்-1411, கஷ்ஃபுல் அஸ்தார்-1459,


  • கஷ்ஃபுல் அஸ்தார்-1459.

كشف الأستار عن زوائد البزار على الكتب الستة (2/ 174)
1459- حَدَّثَنَا أَبُو طَاهِرٍ عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ رَبِّهِ ، حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ ، حَدَّثَنَا الْحَكَمُ بْنُ يَعْلَى بْنِ عَطَاءِ الْمُحَارِبِيُّ ، حَدَّثَنَا عَبْدُ الْغَفَّارِ بْنِ الْقَاسِمِ ، عَنْ عَمْرِو بْنِ مُرَّةَ ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ سَلَمَةَ ، عَنْ عَلِيٍّ ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى الله عَلَيْهِ وَسَلَّمَ ، قَالَ : يَا مَعْشَرَ النِّسَاءِ ، اتَّقِينَ اللَّهَ وَالْتَمِسُوا مَرْضَاتِ أَزْوَاجِكُنَّ ، فَإِنَّ الْمَرْأَةَ لَوْ تَعْلَمُ مَا حَقُّ زَوْجِهَا لَمْ تَزَلْ قَائِمَةً مَا حَضَرَ غَدَاؤُهُ وَعَشَاؤُهُ.
قَالَ الْبَزَّارُ : لا نَعْلَمُهُ عَنْ عَلِيٍّ إِلا بِهَذَا الإِسْنَادِ.

இந்தச் செய்தி பஸ்ஸார்-712 இல் இடம்பெற்ற செய்தியே.


மேலும் பார்க்க: முஸ்னத் பஸ்ஸார்-2665.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.