பாடம்:
(எதிரி) சமுதாயங்கள் இஸ்லாத்திற்கு எதிராக ஒருவர் மற்றவரை அழைப்பது.
4297. உணவு உண்பவர்கள், (ஒருவர் மற்றொருவரை) உணவுத் தட்டை நோக்கி அழைப்பது போன்று, (எதிரி) சமூகங்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து உங்களுக்கெதிராகச் செயல்பட அழைத்துக்கொள்வார்கள் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அப்போது ஒருவர், ‘அந்நேரம் நாங்கள் எண்ணிக்கை குறைந்தவர்களாக இருப்போமா?’ எனக் கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ‘இல்லை, அந்நேரம் நீங்கள் எண்ணிக்கை கூடியவர்களாக இருப்பீர்கள். எனினும் நீங்கள் வெள்ளத்தில் அடிபட்டுச் செல்லும் சருகுகளைப் போன்று இருப்பீர்கள். இன்னும், உங்களைப் பற்றிய பயத்தை உங்கள் எதிரிகளின் உள்ளங்களிலிருந்து அல்லாஹ் கழற்றி எடுத்துவிட்டு, உங்கள் உள்ளங்களிலே ‘வஹ்ன்’ எனும் சிந்தனையைப் போட்டு விடுவான்’ எனக் கூறினார்கள். ‘அல்லாஹ்வின் தூதரே! ‘வஹ்ன்’ என்றால் என்ன?’ என ஒரு மனிதர் கேட்க, ‘உலகத்தை நேசிப்பதும், மரணத்தை வெறுப்பதும், என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஸவ்பான் (ரலி)
«يُوشِكُ الْأُمَمُ أَنْ تَدَاعَى عَلَيْكُمْ كَمَا تَدَاعَى الْأَكَلَةُ إِلَى قَصْعَتِهَا»، فَقَالَ قَائِلٌ: وَمِنْ قِلَّةٍ نَحْنُ يَوْمَئِذٍ؟ قَالَ: «بَلْ أَنْتُمْ يَوْمَئِذٍ كَثِيرٌ، وَلَكِنَّكُمْ غُثَاءٌ كَغُثَاءِ السَّيْلِ، وَلَيَنْزَعَنَّ اللَّهُ مِنْ صُدُورِ عَدُوِّكُمُ الْمَهَابَةَ مِنْكُمْ، وَلَيَقْذِفَنَّ اللَّهُ فِي قُلُوبِكُمُ الْوَهْنَ»، فَقَالَ قَائِلٌ: يَا رَسُولَ اللَّهِ، وَمَا الْوَهْنُ؟ قَالَ: «حُبُّ الدُّنْيَا، وَكَرَاهِيَةُ الْمَوْتِ»
சமீப விமர்சனங்கள்