3850.
أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: كَانَ إِذَا فَرَغَ مِنْ طَعَامِهِ قَالَ: «الْحَمْدُ لِلَّهِ الَّذِي أَطْعَمَنَا، وَسَقَانَا، وَجَعَلَنَا مُسْلِمِينَ»
3850.
أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: كَانَ إِذَا فَرَغَ مِنْ طَعَامِهِ قَالَ: «الْحَمْدُ لِلَّهِ الَّذِي أَطْعَمَنَا، وَسَقَانَا، وَجَعَلَنَا مُسْلِمِينَ»
5053. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் படுக்கைக்குச் செல்லும்போது “அல்ஹம்து லில்லாஹில்லதீ அத்அமனா வ ஸகானா வ கஃபானா வ ஆவானா. ஃபகம் மிம்மன் லா காஃபிய லஹூ, வலா முஃவிய” என்று கூறுவார்கள்.
(பொருள்: அனைத்துப் புகழும் அல்லாஹ்வுக்கே உரியது. அவனே நமக்கு உணவளித்தான்; குடிநீர் வழங்கினான்; (நம் தேவைகளை நிறைவேற்றி) போதுமான அளவுக்குக் கொடுத்தான்; (தங்க இடமளித்து) தஞ்சமளித்தான். ஆனால்,போதுமாக்கிவைப்பதற்கோ தஞ்சமளிப்பதற்கோ ஆளில்லாமல் எத்தனையோ பேர் இருக்கின்றனர்.)
أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا أَوَى إِلَى فِرَاشِهِ قَالَ: «الْحَمْدُ لِلَّهِ الَّذِي أَطْعَمَنَا، وَسَقَانَا، وَكَفَانَا، وَآوَانَا، فَكَمْ مِمَّنْ لَا كَافِيَ لَهُ، وَلَا مُؤْوِيَ»
பாடம்:
விவாகரத்து செய்வது வெறுப்பிற்குரியது.
2177. விவாகரத்தைப்போன்று அல்லாஹ்வுக்கு மிகவும் வெறுப்பான வேறு எதையும் அல்லாஹ் அனுமதிக்கவில்லை என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: முஹாரிப் பின் திஸார் (ரஹ்)
«مَا أَحَلَّ اللَّهُ شَيْئًا أَبْغَضَ إِلَيْهِ مِنَ الطَّلَاقِ»
820. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஃபாதிஹதுல் கிதாப்) திருக்குர்ஆனின் தோற்றுவாயான அல்ஹம்து ஸூராவையும், அதனுடன் கூடுதலாக (மற்ற) வசனத்தையும் ஓதாமல் தொழுகை இல்லை என்று மக்களுக்கு அறிவிக்கும்படி எனக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள்.
أَمَرَنِي رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ أُنَادِيَ: «أَنَّهُ لَا صَلَاةَ إِلَّا بِقِرَاءَةِ فَاتِحَةِ الْكِتَابِ» فَمَا زَادَ
819. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஃபாதிஹதுல் கிதாப்) திருக்குர்ஆனின் தோற்றுவாயான அல்ஹம்து ஸூராவையும், அதனுடன் கூடுதலாக (மற்ற) வசனத்தையும் ஓதாமல் தொழுகை இல்லை என்று (மக்களிடம்) சென்று அறிவிக்கும்படி எனக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள்.
قَالَ لِي رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اخْرُجْ فَنَادِ فِي الْمَدِينَةِ أَنَّهُ لَا صَلَاةَ إِلَّا بِقُرْآنٍ وَلَوْ بِفَاتِحَةِ الْكِتَابِ» فَمَا زَادَ
பாடம்:
லுஹர் தொழுகையில் ஓதுவது பற்றி வந்துள்ளவை.
797. அதாஉ பின் அபீரபாஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
ஒவ்வொரு தொழுகையிலும் (குர்ஆன்) ஓதப்படுகிறது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எந்த ரக்அத்தில் எங்களுக்குக் கேட்கும்படி சப்தமிட்டு ஓதினார்களோ (அதைப் போன்றே) நாங்களும் அந்த ரக்அத்தில் உங்களுக்குக் கேட்கும்படி சப்தமாக ஓதுகிறோம். அவர்கள் எந்த ரக்அத்தில் எங்களுக்குக் கேட்காத வகையில் அமைதியாக ஓதினார்களோ (அதைப் போன்றே) நாங்களும் அந்த ரக்அத்தில் உங்களுக்குக் கேட்காத வகையில் அமைதியாக ஓதுகிறோம் என்று அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்.
«فِي كُلِّ صَلَاةٍ يُقْرَأُ فَمَا أَسْمَعَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَسْمَعْنَاكُمْ وَمَا أَخْفَى عَلَيْنَا أَخْفَيْنَا عَلَيْكُمْ»
821.
«مَنْ صَلَّى صَلَاةً لَمْ يَقْرَأْ فِيهَا بِأُمِّ الْقُرْآنِ فَهِيَ خِدَاجٌ فَهِيَ خِدَاجٌ فَهِيَ خِدَاجٌ غَيْرُ تَمَامٍ»
قَالَ: فَقُلْتُ يَا أَبَا هُرَيْرَةَ، إِنِّي أَكُونُ أَحْيَانًا وَرَاءَ الْإِمَامِ قَالَ: فَغَمَزَ ذِرَاعِي، وَقَالَ: اقْرَأْ بِهَا يَا فَارِسِيُّ فِي نَفْسِكَ فَإِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: ” قَالَ اللَّهُ تَعَالَى: قَسَمْتُ الصَّلَاةَ بَيْنِي وَبَيْنَ عَبْدِي نِصْفَيْنِ: فَنِصْفُهَا لِي، وَنِصْفُهَا لِعَبْدِي، وَلِعَبْدِي مَا سَأَلَ ” قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” اقْرَءُوا يَقُولُ الْعَبْدُ {الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ} [الفاتحة: 2] يَقُولُ اللَّهُ عَزَّ وَجَلَّ: حَمِدَنِي عَبْدِي، يَقُولُ: {الرَّحْمَنِ الرَّحِيمِ} [الفاتحة: 1]، يَقُولُ اللَّهُ عَزَّ وَجَلَّ: أَثْنَىعَلَيَّ عَبْدِي، يَقُولُ الْعَبْدُ {مَالِكِ يَوْمِ الدِّينِ}، يَقُولُ اللَّهُ عَزَّ وَجَلَّ: مَجَّدَنِي عَبْدِي، يَقُولُ الْعَبْدُ {إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ} [الفاتحة: 5]، يَقُولُ اللَّهُ: هَذِهِ بَيْنِي وَبَيْنَ عَبْدِي وَلِعَبْدِي مَا سَأَلَ، يَقُولُ الْعَبْدُ {اهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ، صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ، وَلَا الضَّالِّينَ} [الفاتحة: 7]، يَقُولُ اللَّهُ: فَهَؤُلَاءِ لِعَبْدِي وَلِعَبْدِي مَا سَأَلَ
பாடம்:
இமாம் சொற்பொழிவு நிகழ்த்தும் போது பேசுதல்.
1112. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
‘இமாம் சொற்பொழிவு நிகழ்த்தும்போது (உன் அருகிலிருப்பவரிடம்) ‘வாய்மூடு!’ என்று கூறினால் நீ வீணான காரியத்தில் ஈடுபட்டுவிட்டாய்.’
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
إِذَا قُلْتَ: أَنْصِتْ وَالْإِمَامُ يَخْطُبُ، فَقَدْ لَغَوْتَ
3661. அல்லாஹ்வின் மீது ஆணையாக! உங்கள் மூலமாக அல்லாஹ் ஒருவரை நேர்வழியில் செலுத்துவது (அரபுகளின் உயர்ந்த சொத்தான) சிகப்பு ஒட்டகங்களை விட உங்களுக்குச் சிறந்ததாகும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஸஹ்ல் பின் ஸஃத் (ரலி)
«وَاللَّهِ لَأَنْ يَهْدِيَ اللَّهُ بِهُدَاكَ رَجُلًا وَاحِدًا خَيْرٌ لَكَ مِنْ حُمْرِ النَّعَمِ»
873. அவ்ஃப் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு நாள் இரவு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் (இரவுத்தொழுகை) தொழ நின்றேன். (பிறகு) அவர்கள் நின்ற நிலையில் திருக்குர்ஆனின் 2 வது அத்தியாயமான ஸூரத்துல் பகராவை ஓதினார்கள். அதில் அல்லாஹ்வின் அருள் சம்பந்தமான வசனங்கள் வரும் போதெல்லாம் ஓதுவதை நிறுத்திவிட்டு அல்லாஹ்வின் அருளைக் கேட்டார்கள். அதில் அல்லாஹ்வின் தண்டனை சம்பந்தமான வசனங்கள் வரும்போதெல்லாம் ஓதுவதை நிறுத்திவிட்டு அல்லாஹ்வின் தண்டனையை விட்டு பாதுகாப்பு கேட்டார்கள். பின்பு அவர்கள் நிலையில் நின்ற அளவு ருகூஃவில் (குனிந்து) இருந்தார்கள். மேலும் அந்த ருகூவில், “ஸுப்ஹான தில்ஜபரூத்தி, வல்மலகூத்தி, வல்கிப்ரியாயி வல்அளமஹ்” (பொருள்: அடக்கி ஆளுதலும், அதிகாரமும், பெருமையும், மகத்துவமும் மிக்க அல்லாஹ் பரிசுத்தமானவன்) என்று கூறினார்கள்.
பிறகு ஸஜ்தாவில், நிலையில் நின்ற அளவு இருந்தார்கள். ஸஜ்தாவிலும் அந்த பிரார்த்தனையை கூறினார்கள். பின்பு நிலைக்கு எழுந்து 3 வது அத்தியாயமான ஸூரத்து ஆல இம்ரானை ஓதினார்கள். பிறகு அடுத்தடுத்த அத்தியாயங்களை ஓதினார்கள்.
قُمْتُ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَيْلَةً، فَقَامَ فَقَرَأَ سُورَةَ الْبَقَرَةِ، لَا يَمُرُّ بِآيَةِ رَحْمَةٍ إِلَّا وَقَفَ فَسَأَلَ، وَلَا يَمُرُّ بِآيَةِ عَذَابٍ إِلَّا وَقَفَ فَتَعَوَّذَ، قَالَ: ثُمَّ رَكَعَ بِقَدْرِ قِيَامِهِ، يَقُولُ فِي رُكُوعِهِ: «سُبْحَانَ ذِي الْجَبَرُوتِ وَالْمَلَكُوتِ وَالْكِبْرِيَاءِ وَالْعَظَمَةِ»، ثُمَّ سَجَدَ بِقَدْرِ قِيَامِهِ، ثُمَّ قَالَ فِي سُجُودِهِ مِثْلَ ذَلِكَ، ثُمَّ قَامَ فَقَرَأَ بِآلِ عِمْرَانَ، ثُمَّ قَرَأَ سُورَةً سُورَةً
சமீப விமர்சனங்கள்