Category: ஸுனன் அபூதாவூத்

Abu-Dawood-5103

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

5103. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

நீங்கள் இரவில் நாய்கள் கத்துவதையும், கழுதைகள் கத்துவதையும் செவியுற்றால் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுங்கள். ஏனென்றால் அவைகள் உங்களால் பார்க்க முடியாத (தீய)வற்றை பார்க்கின்றன.

அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி)


«إِذَا سَمِعْتُمْ نُبَاحَ الْكِلَابِ، وَنَهِيقَ الْحُمُرِ بِاللَّيْلِ، فَتَعَوَّذُوا بِاللَّهِ فَإِنَّهُنَّ يَرَيْنَ مَا لَا تَرَوْنَ»


Abu-Dawood-4877

ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

4877. …ஒரு முஸ்லிமின் மானத்தில் உரிமை இல்லாமல் வரம்பு மீறுவதுதான் (மனிதனுக்கு செய்யும் பாவங்களில்) தண்டனைகளிலே மிகப்பெரியது என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


«إِنَّ مِنْ أَكْبَرِ الْكَبَائِرِ، اسْتِطَالَةَ الْمَرْءِ فِي عِرْضِ رَجُلٍ مُسْلِمٍ بِغَيْرِ حَقٍّ، وَمِنَ الكَبَائِرِ السَّبَّتَانِ بِالسَّبَّةِ»


Abu-Dawood-3598

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

3598.


بِمَعْنَاهُ، قَالَ: «وَمَنْ أَعَانَ عَلَى خُصُومَةٍ بِظُلْمٍ فَقَدْ بَاءَ بِغَضَبٍ مِنَ اللَّهِ عَزَّ وَجَلَّ»


Abu-Dawood-3597

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

பாடம்:

விவரம் அறியாமல் ஏதேனும் ஒரு வழக்கில் உதவி செய்தல்.

3597. யஹ்யா பின் ராஷித் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களுக்காக (அவர்களின் வருகையை எதிர்பார்த்து) அமர்ந்திருந்தோம். அப்போது அவர்கள் எங்களிடம் வந்து அமர்ந்தார்கள். பிறகு பின்வருமாறு கூறினார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொல்ல நான் கேட்டுள்ளேன்:

யாரின் பரிந்துரை, அல்லாஹ்வின் சட்டங்களில் ஒரு சட்டத்தை நிறைவேற்ற விடாமல் தடுத்து விடுகிறதோ, அவர் நிச்சயமாக அல்லாஹ்வை எதிர்த்து விட்டார்.

யார் ஒரு அநீதியான வழக்கில், அது அநீதி என்று தெரிந்தே (அதற்காக) வாதிடுகிறாரோ, அவர் அதிலிருந்து விலகும் வரை அல்லாஹ்வின் கோபத்திலேயே இருக்கிறார்.

யார் ஒரு இறைநம்பிக்கையாளர் மீது அவரிடம் இல்லாத ஒரு குறையைக் கூறி அவதூறு சுமத்துகிறாரோ, அவர் கூறிய வார்த்தையிலிருந்து (தண்டனை பெற்று தூய்மையாகி) வெளியேறும் வரை அவரை ‘ரத்ஃகதுல் கபால்’ (எனும் நரகவாசிகளின் உடலில் இருந்து வழியும் சீழ் மற்றும் அழுக்குகள் நிறைந்த) இடத்தில் அல்லாஹ் தங்க வைப்பான்.


جَلَسْنَا لِعَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ فَخَرَجَ إِلَيْنَا فَجَلَسَ، فَقَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «مَنْ حَالَتْ شَفَاعَتُهُ دُونَ حَدٍّ مِنْ حُدُودِ اللَّهِ، فَقَدْ ضَادَّ اللَّهَ، وَمَنْ خَاصَمَ فِي بَاطِلٍ وَهُوَ يَعْلَمُهُ، لَمْ يَزَلْ فِي سَخَطِ اللَّهِ حَتَّى يَنْزِعَ عَنْهُ، وَمَنْ قَالَ فِي مُؤْمِنٍ مَا لَيْسَ فِيهِ أَسْكَنَهُ اللَّهُ رَدْغَةَ الْخَبَالِ حَتَّى يَخْرُجَ مِمَّا قَالَ»


Abu-Dawood-4772

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

4772. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யார் தன்னுடைய பொருளை பாதுகாப்பதற்காக போரிட்டு கொல்லப்படுகிறாரோ அவர் ஷஹீதாவார். யார் தன்னுடைய குடும்பத்தை பாதுகாப்பதற்காக போரிட்டு கொல்லப்படுகிறாரோ அவரும் ஷஹீதாவார். யார் தன்னை பாதுகாப்பதற்கு போரிட்டு கொல்லப்படுகிறோரோ அவரும் ஷஹீதாவார். யார் தன்னுடைய மார்க்கத்திற்காக கொல்லப்படுகிறாரோ அவரும் ஷஹீதாவார்.

அறிவிப்பவர்: ஸயீத் பின் ஸைத் (ரலி)


«مَنْ قُتِلَ دُونَ مَالِهِ فَهُوَ شَهِيدٌ، وَمَنْ قُتِلَ دُونَ أَهْلِهِ، أَوْ دُونَ دَمِهِ، أَوْ دُونَ دِينِهِ فَهُوَ شَهِيدٌ»


Abu-Dawood-2948

ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

2948. முஸ்லிம்களின் விவகாரங்களில் ஏதாவது ஒன்றை ஒருவருக்கு பொறுப்புக் கொடுத்து, அவர், மக்களின் தேவைகளை, அவசியத் தேவைகளையும் வறுமைகளையும் (கண்டுகொள்ளாமல்) தடுத்துக் கொண்டால் இவனின் தேவைகளையும் அவசியத் தேவைகளையும் வறுமையையும் அல்லாஹ் கண்டுகொள்ளாமல் தடுத்துவிடுவான் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை நான் செவியேற்றுள்ளேன்.

அறிவிப்பவர் : முஆவியா (ரலி)


«مَنْ وَلَّاهُ اللَّهُ عَزَّ وَجَلَّ شَيْئًا مِنْ أَمْرِ الْمُسْلِمِينَ فَاحْتَجَبَ دُونَ حَاجَتِهِمْ، وَخَلَّتِهِمْ وَفَقْرِهِمْ، احْتَجَبَ اللَّهُ عَنْهُ دُونَ حَاجَتِهِ وَخَلَّتِهِ، وَفَقْرِهِ» قَالَ: فَجَعَلَ رَجُلًا عَلَى حَوَائِجِ النَّاسِ


Abu-Dawood-664

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

664


كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَتَخَلَّلُ الصَّفَّ مِنْ نَاحِيَةٍ إِلَى نَاحِيَةٍ يَمْسَحُ صُدُورَنَا وَمَنَاكِبَنَا وَيَقُولُ: «لَا تَخْتَلِفُوا فَتَخْتَلِفَ قُلُوبُكُمْ» وَكَانَ يَقُولُ: «إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى الصُّفُوفِ الْأُوَلِ»


Abu-Dawood-543

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

543. மினாவில் நாங்கள் தொழுகைக்காக தயாராக நின்றோம். இமாம் வராததால் எங்களில் சிலர் உட்கார்ந்து கொண்டிருந்தனர். கூபாவைச் சேர்ந்த ஓர் அறிஞர் நீங்கள் ஏன் உட்கார்ந்து இருக்கின்றீர்கள்! என என்னிடம் வினவிய போது இது தான் சமூத் (இமாம் வருமுன் எழுந்து நிற்பது) ஆகும் என இப்னு புரைதா சொன்னார் என பதில் சொன்னேன். உடனே அவர் பர்ரா பின் ஆஸிப் வழியாக அப்துற் றஹ்மான் பின் அவஸஜா வழியாக அறிவித்ததாவது : –

தக்பீர் சொல்வதற்கு முன்னால் நீண்ட நேரம் நபி (ஸல்) அவர்கள் காலத்தில் வரிசைகளில் நின்று கொண்டிருப்போம் என்றும் மகத்துவமும் கண்ணியமும் நிறைந்த அல்லாஹ்வும் அவனது மலக்குகளும் முதல் வரிசைகளில் நிற்பவர்கள் மீது அருள் மாரி பொழிகிறார்கள். (தொழுகையின்) வரிசையில் வந்தடைவதற்காக நடந்து வரும் போது எடுத்து வைக்கும் அடிதான் அல்லாஹ்விற்கு விருப்பமான அடியாகும் என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள் என்றும் பர்ரா பின் ஆஸிப் (ரலி) அறிவித்தார்.


قُمْنَا إِلَى الصَّلَاةِ بِمِنًى وَالْإِمَامُ لَمْ يَخْرُجْ فَقَعَدَ بَعْضُنَا، فَقَالَ لِي شَيْخٌ مِنْ أَهْلِ الْكُوفَةِ: مَا يُقْعِدُكَ؟ قُلْتُ: ابْنُ بُرَيْدَةَ، قَالَ: هَذَا السُّمُودُ: فَقَالَ لِي الشَّيْخُ: حَدَّثَنِي عَبْدُ الرَّحْمَنِ بْنُ عَوْسَجَةَ، عَنِ الْبَرَاءِ بْنِ عَازِبٍ، قَالَ: «كُنَّا نَقُومُ فِي الصُّفُوفِ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ طَوِيلًا قَبْلَ أَنْ يُكَبِّرَ»، قَالَ: وَقَالَ: «إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى الَّذِينَ يَلُونَ الصُّفُوفَ الْأُوَلَ، وَمَا مِنْ خُطْوَةٍ أَحَبُّ إِلَى اللَّهِ مِنْ خُطْوَةٍ يَمْشِيهَا يَصِلُ بِهَا صَفًّا»


Abu-Dawood-2208

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

2208.


أَنَّهُ طَلَّقَ امْرَأَتَهُ الْبَتَّةَ، فَأَتَى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: مَا أَرَدْتَ، قَالَ: وَاحِدَةً، قَالَ: «آللَّهِ؟»، قَالَ: آللَّهِ، قَالَ: «هُوَ عَلَى مَا أَرَدْتَ»،


Next Page » « Previous Page