Category: ஸுனன் அபூதாவூத்

Abu-Dawood-2130

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2130. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் திருமணத்தில் மணமக்களை வாழ்த்தும் போது பாரக்கல்லாஹு லக வபாரக்க அலைக வஜமஅ பைனகுமா ஃபீ கைர் என்று கூறுவார்கள்.

(பொருள் : அல்லாஹ் உங்களுக்கு பரக்கத் செய்வானாக. நல்ல விஷயங்களில் உங்கள் இருவரையும் ஒன்று சேர்ப்பானாக!)

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)


أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا رَفَّأَ الْإِنْسَانَ إِذَا تَزَوَّجَ، قَالَ: «بَارَكَ اللَّهُ لَكَ، وَبَارَكَ عَلَيْكَ، وَجَمَعَ بَيْنَكُمَا فِي خَيْرٍ»


Abu-Dawood-4078

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

4078. …“நமக்கும் இணை வைப்பவர்களுக்கும் மத்தியில் உள்ள வேறுபாடு, தொப்பிகளின் மீது தலைப்பாகைகளை அணிவதாகும்” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்…

அறிவிப்பவர் : ருக்கானா (ரலி)


«فَرْقُ مَا بَيْنَنَا وَبَيْنَ الْمُشْرِكِينَ، الْعَمَائِمُ عَلَى الْقَلَانِسِ»


Abu-Dawood-4062

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் :

அழுக்கான ஆடையைத் துவைத்தல்.

4062. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடம் வந்தபோது தலைவிரி கோலத்துடன் ஒரு மனிதரை கண்டார்கள். அப்போது, “இவர் தமது முடியைப் படிய வைக்கும் ஒரு பொருளைப் பெற்றுக் கொள்ளவில்லையா?” என்று கேட்டார்கள்.

அழுக்கு ஆடையுடன் மற்றொரு மனிதரை அவர்கள் கண்டார்கள். அப்போது, “இவர் தமது ஆடையை துவைப்பதற்கு தண்ணீரை பெற்றுக் கொள்ளவில்லையா?” என்று கேட்டார்கள்.

அறிவிப்பவர் : ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி)


أَتَانَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَرَأَى رَجُلًا شَعِثًا قَدْ تَفَرَّقَ شَعْرُهُ فَقَالَ: «أَمَا كَانَ يَجِدُ هَذَا مَا يُسَكِّنُ بِهِ شَعْرَهُ، وَرَأَى رَجُلًا آخَرَ وَعَلْيِهِ ثِيَابٌ وَسِخَةٌ، فَقَالَ أَمَا كَانَ هَذَا يَجِدُ مَاءً يَغْسِلُ بِهِ ثَوْبَهُ»


Abu-Dawood-4190

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

4190. நான் நீண்ட முடியுடையவனாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் சென்றேன். அப்போது ஆட்சேபணை செய்வது போன்ற ஒரு சொல்லைக் கூறினார்கள். உடனே நான் சென்று என் முடியைக் கத்தரித்து விட்டுச் சென்றேன். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், “நான் உன்னைச் சொல்லவில்லை என்றாலும் இது (முன்பை விட) அழகாக உள்ளது” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : வாயில் பின் ஹுஜ்ர் (ரலி)


أَتَيْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَلِي شَعْرٌ طَوِيلٌ، فَلَمَّا رَآنِي رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «ذُبَابٌ ذُبَابٌ» قَالَ: فَرَجَعْتُ فَجَزَزْتُهُ، ثُمَّ أَتَيْتُهُ مِنَ الْغَدِ، فَقَالَ: «إِنِّي لَمْ أَعْنِكَ، وَهَذَا أَحْسَنُ»


Abu-Dawood-1761

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1761. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்களிடம் பலிப்பிராணியில் ஏறிச் செல்வதைப் பற்றிக் கேட்கப்பட்டது., நீங்கள் அதில் ஏறிச் செல்ல வேண்டிய நிலைக்குக் கட்டாயப்படுத்தப்பட்டால் பயண வாகனம் கிடைக்கும் வரை முறையோடு அதில் ஏறிச் செல்க என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதை நான் கேட்டுள்ளேன் என அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : இப்னு ஜுரைஹ் (ரஹ்)


«ارْكَبْهَا بِالْمَعْرُوفِ، إِذَا أُلْجِئْتَ إِلَيْهَا حَتَّى تَجِدَ ظَهْرًا»


Abu-Dawood-2792

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

2792. கருப்பு நிறத்தால் நடக்கக்கூடிய கருப்பு நிறத்தால் அமரக்கூடிய கருப்பு நிறத்தால் பார்க்கக்கூடிய கொம்புள்ள ஒரு ஆட்டை குர்பானி கொடுக்க வாங்கி வருமாறு நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள். (ஆடு வந்ததும்) ஆயிஷாவே கத்தியை எடுத்து வா என்றார்கள். பிறகு அதை கல்லில் தீட்டு என்றார்கள். நான் அப்படியே செய்தேன். பிறகு அந்தக் கத்தியை வாங்கி அந்தச் செம்மறியாட்டைப் பிடித்து சரித்துப் படுக்கவைத்து அறுத்தார்கள்.

(அறுப்பதற்கு முன்) பிஸ்மில்லாஹி அல்லாஹும்ம தகப்பல்மின் முஹம்மதின் வஆலி முஹம்மதின் வமின் உம்மதி முஹம்மதின் (அல்லாஹ்வின் பெயரால் அறுக்கிறேன். இறைவா முஹம்மதிடமிருந்தும் முஹம்மதின் குடும்பத்தாரிடமிருந்தும் முஹம்மதின் சமுதாயத்தாரிடமிருந்தும் இதை ஏற்றுக்கொள்வாயாக என்று கூறி அதை அறுத்தார்கள்…

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)


«أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَمَرَ بِكَبْشٍ أَقْرَنَ يَطَأُ فِي سَوَادٍ، وَيَنْظُرُ فِي سَوَادٍ، وَيَبْرُكُ فِي سَوَادٍ، فَأُتِيَ بِهِ فَضَحَّى بِهِ». فَقَالَ: «يَا عَائِشَةُ هَلُمِّي الْمُدْيَةَ». ثُمَّ قَالَ: «اشْحَذِيهَا بِحَجَرٍ». فَفَعَلَتْ فَأَخَذَهَا وَأَخَذَ الْكَبْشَ، فَأَضْجَعَهُ وَذَبَحَهُ وَقَالَ: «بِسْمِ اللَّهِ، اللَّهُمَّ تَقَبَّلْ مِنْ مُحَمَّدٍ وَآلِ مُحَمَّدٍ، وَمِنْ أُمَّةِ مُحَمَّدٍ». ثُمَّ ضَحَّى بِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ


Abu-Dawood-2815

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2815. ஷத்தாத் பின் அவ்ஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் இரண்டு நல்ல குணங்களை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து செவியேற்று (மனனமிட்டு)ள்ளேன். (அவை)

அல்லாஹ் எல்லாவற்றிலும் எளிய முறையை விதியாக்கியுள்ளான். எனவே,கொல்லும்போதும் எளிய முறையில் கொல்லுங்கள். அறுக்கும்போதும் எளிய முறையில் அறுங்கள். உங்களில் ஒருவர் அறுப்பதற்கு முன் கத்தியைத் தீட்டிக்கொள்ளட்டும். அறுக்கப்படும் பிராணியை ஆசுவாசப்படுத்தட்டும்.


خَصْلَتَانِ سَمِعْتُهُمَا مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” إِنَّ اللَّهَ كَتَبَ الْإِحْسَانَ عَلَى كُلِّ شَيْءٍ، فَإِذَا قَتَلْتُمْ فَأَحْسِنُوا – قَالَ غَيْرُ مُسْلِمٍ يَقُولُ: «فَأَحْسِنُوا الْقِتْلَةَ» – وَإِذَا ذَبَحْتُمْ فَأَحْسِنُوا الذَّبْحَ، وَلْيُحِدَّ أَحَدُكُمْ شَفْرَتَهُ، وَلْيُرِحْ ذَبِيحَتَهُ


Abu-Dawood-2811

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

2811. இப்னு உமர் (ரலி) கூறினார்:

நபி (ஸல்) அவர்கள் (பெருநாள்) தொழும் திடலிலேயே குர்பானிப் பிராணிகளை அறுப்பவர்களாக இருந்தார்கள்…


«أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَذْبَحُ أُضْحِيَّتَهُ بِالْمُصَلَّى»

وَكَانَ ابْنُ عُمَرَ يَفْعَلُهُ


Abu-Dawood-2117

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2117. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், ஒரு மனிதருக்கு திருமணம் நடத்திவைக்கும் போது அவரிடம், நான் இந்த பெண்ணை உனக்கு திருமணம் முடித்துவைப்பதை நீர் பொருந்திக்கொள்கிறீரா? என்று (சம்மதம்) கேட்டார்கள். அதற்கு அவர் ஆம் என்று கூறினார். அந்த பெண்ணிடமும் நான் இந்த மனிதரை உனக்கு திருமணம் முடித்துவைப்பதை நீர் பொருந்திக்கொள்கிறீரா? என்று (சம்மதம்) கேட்டார்கள். அதற்கு அந்த பெண்ணும் ஆம் என்று கூறினார்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், மஹர் எதையும் நிர்ணயிக்காமலேயே அவ்விருவருக்கும் திருமணம் முடித்துவைத்தார்கள். அந்த மனிதர் இல்லறவாழ்கையில் ஈடுபட்ட பின்பும் மஹர் தரவில்லை.

அவர் ஹுதைபியா உடன்படிக்கையில் கலந்துக்கொண்டவர். ஹுதைபியா உடன்படிக்கையில் கலந்துக்கொண்டவர்களுக்கு கைபர் போரில் பங்குண்டு என்ற வகையில் அவருக்கு ஒரு பங்கு கிடைத்தது.

அவரின் மரணத்தருவாயில், தன் அருகில் இருந்தவர்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், நான் மஹர் எதுவும் நிர்ணயிக்காமலேயே எனக்கு இந்த பெண்ணை திருமணம் முடித்து வைத்தார்கள். நானும் இதுவரை மஹர் எதுவும் தரவில்லை. இப்போது கைபர் போரில் எனக்கு கிடைத்த பங்கை அந்தப்பெண்ணுக்கு மஹராக தருகிறேன், நீங்களே இதற்கு சாட்சி என்று கூறினார். அந்தபெண் கைபரின் பங்கை அவரிடம் மஹராக வாங்கி, அதை விற்று ஒரு

أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لِرَجُلٍ: «أَتَرْضَى أَنْ أُزَوِّجَكَ فُلَانَةَ؟»، قَالَ: نَعَمْ، وَقَالَ لِلْمَرْأَةِ: «أَتَرْضَيْنَ أَنْ أُزَوِّجَكِ فُلَانًا؟»، قَالَتْ: نَعَمْ، فَزَوَّجَ أَحَدَهُمَا صَاحِبَهُ فَدَخَلَ بِهَا الرَّجُلُ وَلَمْ يَفْرِضْ لَهَا صَدَاقًا، وَلَمْ يُعْطِهَا شَيْئًا وَكَانَ مِمَّنْ شَهِدَ الْحُدَيْبِيَةَ وَكَانَ مَنْ شَهِدَ الْحُدَيْبِيَةَ لَهُ سَهْمٌ بِخَيْبَرَ فَلَمَّا حَضَرَتْهُ الْوَفَاةُ قَالَ: إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ زَوَّجَنِي فُلَانَةَ، وَلَمْ أَفْرِضْ لَهَا صَدَاقًا، وَلَمْ أُعْطِهَا شَيْئًا، وَإِنِّي أُشْهِدُكُمْ أَنِّي أَعْطَيْتُهَا مِنْ صَدَاقِهَا سَهْمِي بِخَيْبَرَ، فَأَخَذَتْ سَهْمًا فَبَاعَتْهُ بِمِائَةِ أَلْفٍ.


Abu-Dawood-2051

ஹதீஸின் தரம்: ஹஸன் - நடுத்தரமான செய்தி

2051. அப்துல்லாஹ் பின் அம்ர் பின் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:

(மதீனாவில்) மர்ஸத் பின் அபூமர்ஸத் (ரலி) எனும் ஒரு மனிதர் இருந்தார். அவர் மக்காவிலிருந்து மதீனாவிற்குக் கைதிகளை (இரவோடு இரவாக) தூக்கி வந்து சேர்ப்பவராகவும் இருந்தார். (இவர் இஸ்லாத்தில் இணைவதற்கு முன்பு) மக்காவில் அனாக் என்று கூறப்படும் ஒரு விபச்சாரி இவருடைய காதலியாக இருந்தாள்.

மர்ஸத் பின் அபூமர்ஸத் அல்ஃகனவீ (ரலி) கூறுகிறார்:

நான் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, அல்லாஹ்வின் தூதரே!  நான் அனாக்கை  திருமணம் செய்துக் கொள்ளலாமா? என்று கேட்டேன். (அதற்கு பதலளிக்காமல்) அவர்கள் மௌனமாக இருந்தார்கள். அப்போது (தான்),

விபச்சாரம் செய்தவளை, விபச்சாரம் செய்தவனோ இணை கற்பிப்பவனோ தவிர மற்றவர்கள் மணந்து கொள்ள மாட்டார்கள்

எனும் (அல்குர்ஆன்: 24:3) வசனம் இறங்கியது. உடனே அவர்கள் என்னை அழைத்து அதை என்னிடம் ஓதிக்காட்டி அவளை மண முடிக்காதே! என்று கூறினார்கள்.


أَنَّ مَرْثَدَ بْنَ أَبِي مَرْثَدٍ الْغَنَوِيَّ كَانَ يَحْمِلُ الْأَسَارَى بِمَكَّةَ، وَكَانَ بِمَكَّةَ بَغِيٌّ يُقَالُ لَهَا: عَنَاقُ وَكَانَتْ صَدِيقَتَهُ، قَالَ: جِئْتُ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، أَنْكِحُ عَنَاقَ؟ قَالَ : فَسَكَتَ عَنِّي، فَنَزَلَتْ: {وَالزَّانِيَةُ لَا يَنْكِحُهَا إِلَّا زَانٍ أَوْ مُشْرِكٌ} [النور: 3] فَدَعَانِي فَقَرَأَهَا عَلَيَّ وَقَالَ: «لَا تَنْكِحْهَا»


Next Page » « Previous Page