Category: தப்ரானி – அல்முஃஜமுல் அவ்சத்

Al-Mu’jam al-Awsat

Almujam-Alawsat-9267

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

9267. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

“தொழுகையின் திறவுகோல் சுத்தமாகும். (ஏனைய செயல்களை) ஹராமாக ஆக்குவது, முதல்தக்பீர் ஆகும். (ஏனைய காரியங்களை) ஹலாலாக ஆக்குவது, ஸலாம் கொடுப்பதாகும்”.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)


«مِفْتَاحُ الصَّلَاةِ الطُّهُورُ، وَتَحْرِيمُهَا التَّكْبِيرُ، وَتَحْلِيلُهَا التَّسْلِيمُ»


Almujam-Alawsat-7175

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

7175. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

“தொழுகையின் திறவுகோல் சுத்தமாகும். (ஏனைய செயல்களை) ஹராமாக ஆக்குவது, முதல்தக்பீர் ஆகும். (ஏனைய காரியங்களை) ஹலாலாக ஆக்குவது, ஸலாம் கொடுப்பதாகும்”.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் ஸைத் (ரலி)


«مِفْتَاحُ الصَّلَاةِ الطُّهُورُ، وَتَحْرِيمُهَا التَّكْبِيرُ، وَتَحْلِيلُهَا التَّسْلِيمُ»


Almujam-Alawsat-5643

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

5643. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

காலையில் தர்மம் செய்யுங்கள். ஏனெனில் சோதனைகள் அதைத் தாண்டி வரமுடியாது.

அறிவிப்பவர்: அலீ பின் அபூதாலிப் (ரலி)


«بَاكِرُوا بِالصَّدَقَةِ، فَإِنَّ الْبَلَاءَ لَا يَتَخَطَّاهَا»


Almujam-Alawsat-1963

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

1963. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்கள் செல்வங்களை ஸகாத் (வழங்குவதன்) மூலம் பாதுகாத்துக் கொள்ளுங்கள். உங்களின் நோயாளிகளை தர்மம் செய்வதன் மூலம் குணப்படுத்துங்கள். சோதனைகளை விட்டு (பாதுகாக்கப்பட) பிரார்த்தனைகளை தயார் செய்துக்கொள்ளுங்கள்.

அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் (ரலி)


«حَصِّنُوا أَمْوَالَكُمْ بِالزَّكَاةِ، وَدَاوُوا مَرْضَاكُمْ بِالصَّدَقَةِ، وَأَعِدُّوا لِلْبَلَاءِ الدُّعَاءَ»


Almujam-Alawsat-7764

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

7764. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

தொழுகையின் (முன்)வரிசை முழுமையடைந்த நிலையில் உங்களில் ஒருவர் வந்தால், அவர் (முன்)வரிசையில் உள்ள ஒருவரை இழுத்து தன்னருகில் நிற்கச் செய்யட்டும்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)


«إِذَا انْتَهَى أَحَدُكُمْ إِلَى الصَّفِّ وَقَدْ تَمَّ، فَلْيَجْذِبْ إِلَيْهِ رَجُلًا يُقِيمُهُ إِلَى جَنْبِهِ»


Almujam-Alawsat-5323

ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

5323. (தொழுகை) வரிசைக்குப் பின்னால் தனியாகத் தொழுது கொண்டிருந்த ஒருவரை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பார்த்தார்கள். அவரிடம், அத்தொழுகையை மறுபடியும் தொழுவீராக! என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


رَأَى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَجُلًا يُصَلِّي خَلْفَ الصُّفُوفِ وَحْدَهُ فَقَالَ: «أَعِدِ الصَّلَاةَ»


Almujam-Alawsat-4838

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

4838.


أَنَّ رَجُلًا صَلَّى خَلْفَ الصُّفُوفِ وَحْدَهُ، «فَأَمَرَهُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يُعِيدَ الصَّلَاةَ»


Almujam-Alawsat-5902

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

5902. இறைநம்பிக்கையாளரின் உயிர் வியர்வை வர (இலேசான சிரமத்துடன்) வெளியேறும். கழுதை இறப்பது போன்று இறப்பதை நான் விரும்பமாட்டேன் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது அவர்களிடம், “கழுதை இறப்பது போன்று என்றால் என்ன? என்று கேட்கப்பட்டது. அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “திடீரென இறந்துவிடுவது” என்று பதிலளித்தார்கள்.

பின்பு இறைமறுப்பாளரின் உயிர், தாடை வழியாக வெளியேறுகிறது என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் (ரலி)


«إِنَّ نَفْسَ الْمُؤْمِنِ تَخْرُجُ رَشْحًا، وَلَا أُحِبُّ مَوْتًا كَمَوْتِ الْحِمَارِ» ، قِيلَ: وَمَا مَوْتُ الْحِمَارِ؟ قَالَ: «مَوْتُ الْفَجْأَةِ»

قَالَ: «وَرُوحُ الْكَافِرِ تَخْرُجُ مِنْ أَشْدَاقِهِ»


Almujam-Alkabir-165

ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

165. அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், திடீர் மரணத்தை விட்டும், பாம்பு கடித்து இறப்பதை விட்டும், வனவிலங்குகள் தாக்கி இறப்பதை விட்டும், தீயினால் கருகி இறப்பதை விட்டும், நீரில் மூழ்கி இறப்பதை விட்டும், ஏதேனும் ஒன்றின்மேல் விழுந்து இறப்பதை விட்டும், தன் மீது ஏதெனும் விழுந்து இறப்பதை விட்டும், யுத்தக்கலத்தில் (தன் படையினரிடம்) பின்னோக்கிசெல்லும் போது கொல்லப்பட்டு இறப்பதை விட்டும் போன்ற இந்த ஏழு மரணங்களை விட்டு அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுவார்கள்.


«أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ اسْتَعَاذَ مِنْ سَبْعٍ، مِنْ مَوْتِ الْفَجْأَةِ، وَمِنْ لَدْغِ الْحَيَّةِ، وَمِنْ أَكْلِ السَّبُعِ، وَمِنَ الْحَرْقِ، وَمِنَ الْغَرَقِ، وَمِنْ أَنْ يَخِرَّ عَلَيْهِ شَىءٌ، وَمِنَ الْقَتْلِ فِرَارًا مِنَ الزَّحْفِ»


Almujam-Alawsat-173

ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

173. அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், திடீர் மரணத்தை விட்டும், பாம்பு கடித்து இறப்பதை விட்டும், வனவிலங்குகள் தாக்கி இறப்பதை விட்டும், தீயினால் கருகி இறப்பதை விட்டும், நீரில் மூழ்கி இறப்பதை விட்டும், ஏதேனும் ஒன்றின்மேல் விழுந்து இறப்பதை விட்டும், தன் மீது ஏதெனும் விழுந்து இறப்பதை விட்டும், யுத்தக்களத்தில் (தன் படையினரிடம்) பின்னோக்கிசெல்லும் போது கொல்லப்பட்டு இறப்பதை விட்டும் போன்ற இந்த ஏழு மரணங்களை விட்டு அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுவார்கள்.


أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ اسْتَعَاذَ مِنْ سَبْعِ مَوْتَاتٍ: «مِنْ مَوْتِ الْفَجْأَةِ، وَمِنْ لَدْغِ الْحَيَّةِ، وَمِنْ أَكَلِ السَّبْعِ، وَمِنَ الْغَرَقِ، وَمِنَ الْحَرْقِ، وَمِنْ أَنْ يَخِرَّ عَلَى شَيْءٍ أَوْ يَخِرَّ عَلَيْهِ شَيْءٌ، وَمِنَ الْقَتْلِ عِنْدَ فِرَارِ الزَّحْفِ»


Next Page » « Previous Page