Category: தப்ரானி – அல்முஃஜமுல் அவ்சத்

Al-Mu’jam al-Awsat

Almujam-Alawsat-7485

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

7485. அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

இரண்டு நற்குணங்களை (கடைப்பிடித்துவர ) எளிதானவை தான். ஆனால் அதன்படி செயல்படுபவர்கள் குறைவானவர்களே! அவைகளை வழமையாக கடைப்பிடித்து வரும் எவரும் கண்டிப்பாக சுவர்க்கத்தில் நுழைவார்.

அவைகள், ஒவ்வொரு கடமையான தொழுகைக்குப் பின்பும் அல்லாஹு அக்பர் 10-தடவையும், ஸுப்ஹானல்லாஹ் 10-தடவையும், அல்ஹம்துலில்லாஹ் 10-தடவையும் கூறுவதாகும்.

இவைகள் (ஐந்து நேர தொழுகையின் மொத்த எண்ணிக்கை, நாவில் மொழிவதின்படி 150-நூற்றி ஐம்பது ஆகும். (நன்மை, தீமை நிறுக்கப்படும்) தராசில் (ஒரு நன்மைக்கு பத்து என்ற கணக்கின்படி ) 1500-ஆயிரத்தி ஐநூறு நன்மைகளாகும்.

(தூங்கும் முன்) படுக்கையில் ஸுப்ஹானல்லாஹ் 33-தடவையும், அல்ஹம்துலில்லாஹ் 33-தடவையும்,  அல்லாஹு அக்பர் 34-தடவையும் கூறுவதாகும். இவைகள் நாவில் நூறு தடவையாகும். (நன்மை, தீமை நிறுக்கப்படும்) தராசில் 1000-ஆயிரம் நன்மைகளாகும். (ஆக மொத்த நன்மைகள் 2500-இரண்டாயிரத்தி ஐநூறு நன்மைகளாகும்) என்று கூறிய  அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்,  “உங்களில் யார் தான்  ஒரு நாளில் இரவிலும், பகலிலும் 2500-இரண்டாயிரத்தி ஐநூறு தீமைகளை செய்வார்? எனக் கேட்டார்கள்.

அப்போது நபித்தோழர்களில் சிலர், மேற்கண்ட நற்செயல்களை செய்வது எளிதான காரியம் தானே என்று கூறினர். அதற்கு அல்லாஹ்வின் தூதர்

«خَلَّتَانِ هُمَا يَسِيرٌ، وَمَنْ يَعْمَلُ بِهِمَا قَلِيلٌ، لَا يُوَاظِبُ عَلَيْهِمَا أَحَدٌ إِلَّا دَخَلَ الْجَنَّةَ: فِي دُبُرِ كُلِّ صَلَاةٍ عَشْرُ تَكْبِيرَاتٍ، وَعَشْرُ تَسْبِيحَاتٍ، وَعَشْرُ تَحْمِيدَاتٍ، فَهَذِهِ خَمْسُونَ وَمِائَةٌ عَلَى اللِّسَانِ، وَأَلْفٌ وَخَمْسُمِائَةٍ فِي الْمِيزَانِ، وَإِذَا أَوَى إِلَى فِرَاشِهِ سَبَّحَ ثَلَاثًا وَثَلَاثِينَ، وَحَمِدَ ثَلَاثًا وَثَلَاثِينَ، وَكَبَّرَ أَرْبَعًا وَثَلَاثِينَ، فَذَاكَ مِائَةٌ عَلَى اللِّسَانِ وَأَلْفٌ فِي الْمِيزَانِ، فَأَيُّكُمْ يُذْنِبُ فِي الْيَوْمِ وَاللَّيْلَةِ أَلْفَيْنِ وَخَمْسَمِائَةِ ذَنْبٍ؟» فَقَالَ بَعْضُهُمْ: إِنَّ هَذَا أَمْرٌ الْعَمَلُ فِيهِ يَسِيرٌ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ الشَّيْطَانَ يَأْتِي أَحَدَكُمْ إِذَا فَرَغَ مِنْ صَلَاتِهِ فَيَقُولُ: اذْكُرْ حَاجَةَ كَذَا وَحَاجَةَ كَذَا»


Almujam-Alawsat-6215

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

6215. அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

“இரவிலும், பகலிலும் இரண்டு நற்குணங்களை  வழமையாக கடைப்பிடித்து வரும் முஸ்லிமான அடியாரை, அல்லாஹ் கண்டிப்பாக சுவர்க்கத்தில் நுழையச் செய்வான். அவ்விரண்டு நற்செயல்களும் (கடைப்பிடித்துவர ) எளிதானவை தான். ஆனால் அதன்படி செயல்படுபவர்கள் குறைவானவர்களே! என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அதற்கு நபித்தோழர்கள் அல்லாஹ்வின் தூதரே! அவ்விரண்டு நற்செயல்களும் எவைகள்? என்று கேட்டார்கள்.

அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அவை ஒரு அடியார் ஒவ்வொரு கடமையான தொழுகைக்குப் பின்பும் ஸுப்ஹானல்லாஹ் 10-தடவையும், அல்லாஹு அக்பர் 10-தடவையும், லாஇலாஹ இல்லல்லாஹ் 10-தடவையும் கூறுவதாகும். இவைகள் இரவிலும், பகலிலும் நாவில் மொழிவதின்படி 150-நூற்றி ஐம்பது ஆகும். ஆனால் அல்லாஹ்விடத்தில் (ஒரு நன்மைக்கு பத்து என்ற கணக்கின்படி ) 1500-ஆயிரத்தி ஐநூறு நன்மைகளாகும்.

நபித்தோழர்கள் அல்லாஹ்வின் தூதரே! இதை நாங்கள் ஏன் வழமையாக கடைப்பிடிக்க முடியாது? என்று கேட்டார்கள்.

அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “உங்களில் ஒருவர் தொழுகையை நிறைவேற்றிய பிறகு ஷைத்தான் அவரிடம் வந்து அவரின் தேவைகளை நினைவூட்டுவான். எனவே அந்த தஸ்பீஹ்களை கூறுவதற்கு முன் அவர் எழுந்து விடுவார்.

“உங்களில்

«خَصْلَتَانِ لَا يُحَافِظُ عَلَيْهِمَا عَبْدٌ مُسْلِمٌ فِي يَوْمِهِ وَلَيْلَتِهِ إِلَّا أَدْخَلَهُ اللَّهُ الْجَنَّهَ، وَهُمَا يَسِيرَانِ، وَقَلِيلٌ مَنْ يُحَافِظُ عَلَيْهِمَا» ، قَالُوا: وَمَا هُمَا يَا رَسُولَ اللَّهِ؟ قَالَ: «تَسْبِيحُ الْعَبْدِ فِي دُبُرِ كُلِّ صَلَاةٍ عَشْرًا، وَيَحْمَدُ عَشْرًا، وَيُهَلِّلُ عَشْرًا، وَهِيَ خَمْسُونَ وَمِائَةٌ فِي يَوْمِهِ وَلَيْلَتِهِ، وَهِيَ عِنْدَ اللَّهِ أَلْفٌ وَخَمْسُ مِائَةِ حَسَنَةٍ، وَيُسَبِّحُ ثَلَاثًا وَثَلَاثِينَ تَسْبِيحَةً، وَيَحْمَدُ ثَلَاثًا وَثَلَاثِينَ تَحْمِيدَةً، وَيُكَبِّرُ أَرْبَعًا وَثَلَاثِينَ تَكْبِيرَةً، فَذَلِكَ مِائَةٌ، وَهِيَ عِنْدَ اللَّهِ أَلْفُ حَسَنَةٍ، فَذَلِكَ أَلْفَانِ وَخَمْسُ مِائَةِ حَسَنَةٍ» . قَالُوا: يَا رَسُولَ اللَّهِ، وَمَا لَنَا لَا نُحَافِظُ عَلَى ذَلِكَ؟ قَالَ: «إِنَّ أَحَدَكُمْ إِذَا قَضَى صَلَاتَهُ أَتَاهُ الشَّيْطَانُ، فَذَكَّرَهُ حَوَائِجَهُ، فَيَقُومُ قَبْلَ أَنْ يَقُولَهَا، فَإِذَا أَوَى إِلَى فِرَاشِهِ أَتَاهُ، فَأَلْهَاهُ عَنْهَا حَتَّى يَنَامَ»


Almujam-Alawsat-5608

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

5608. அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(அதிக நன்மைகள் தரும்) நற்செயல்கள் அதிகம் உள்ளன. அதை செய்பவர்கள் குறைவானவர்களே! என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.


«الْخَيْرُ كَثِيرٌ، وَمَنْ يَعْمَلُ بِهِ قَلِيلٌ»


Almujam-Alawsat-2953

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

2953. அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

“இரண்டு நற்செயல்கள் (கடைப்பிடித்துவர ) எளிதானவை தான். ஆனால் அதைச் செய்பவர்கள் குறைவானவர்களே!

(அவ்விரண்டில் முதல் நற்செயல்) நீ ஒவ்வொரு கடமையான தொழுகைக்குப் பின்பும் ஸுப்ஹானல்லாஹ் 10-பத்து தடவையும், அல்ஹம்துலில்லாஹ் 10-பத்து தடவையும், அல்லாஹு அக்பர் 10-பத்து தடவையும் கூறுவதாகும்.

இவைகள் (ஐந்து நேர தொழுகையின் மொத்த எண்ணிக்கை, நாவில் மொழிவதின்படி 150-நூற்றி ஐம்பது ஆகும். (நன்மை, தீமை நிறுக்கப்படும்) தராசில் (ஒரு நன்மைக்கு பத்து என்ற கணக்கின்படி ) 1500-ஆயிரத்தி ஐநூறு நன்மைகளாகும்.

(அவ்விரண்டில் இரண்டாவது  நற்செயல்) நீ (தூங்கும் முன்) படுக்கையில் ஸுப்ஹானல்லாஹ், அல்லாஹு அக்பர், அல்ஹம்துலில்லாஹ் என்று 100-தடவை கூறுவதாகும். இவைகள் உனக்கு நாவில் நூறு தடவையாகும். (நன்மை, தீமை நிறுக்கப்படும்) தராசில் 1000-ஆயிரம் நன்மைகளாகும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (எனக்கு) கூறினார்கள்.


«خَصْلَتَانِ، أَوْ خَلَّتَانِ هُمَا يَسِيرٌ، وَمَنْ يَعْمَلُ بِهِمَا قَلِيلٌ: الصَّلَوَاتُ الْخَمْسُ، تُسَبِّحُ فِي دُبُرِ كُلِّ صَلَاةٍ عَشْرًا، وَتَحْمَدُهُ عَشْرًا، وَتُكَبِّرُهُ عَشْرًا، فَتِلْكَ خَمْسُونَ وَمِائَةٌ بِاللِّسَانِ، وَأَلْفٌ وَخَمْسُمِائَةٍ فِي الْمِيزَانِ، وَإِذَا أَوَيْتَ إِلَى فِرَاشِكَ، سَبَّحْتَ وَكَبَّرْتَ وَحَمَّدْتَ مِائَةَ مَرَّةٍ فَلَكَ مِائَةٌ بِاللِّسَانِ وَأَلْفٌ فِي الْمِيزَانِ»


Almujam-Alawsat-7035

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

7035. அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், தஹ்பீஹ் செய்யும் போது (அல்லாஹ்வைத் துதிக்கும் போது அதை கை விரல்களால்) எண்ணி செய்வதை பார்த்தேன்.


«رَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَعْقِدُ التَّسْبِيحَ»


Almujam-Alawsat-8568

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

8568. அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், தஹ்பீஹ் செய்யும் போது (அல்லாஹ்வைத் துதிக்கும் போது அதை கை விரல்களால்) எண்ணுவதை பார்த்தேன்.


«رَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَعْقِدُ التَّسْبِيحَ»


Almujam-Alawsat-7296

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

7296. தனது குழந்தைக்கு நெருப்பால் ஆன இரு காப்பை அணிவிக்க விரும்பினால் அவர் தங்கத்தால் ஆன காப்பை அதற்கு அணிவிக்கட்டும். எனவே வெள்ளியை உபயோகித்து அதன் மூலம் (ஆபரணங்களை செய்து) விளையாடுங்கள் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஸஹ்ல் பின் ஸஃத் (ரலி)


«مَنْ أَحَبَّ أَنْ يُسَوَّرَ وَلَدُهُ بِسِوَارٍ مِنْ نَارٍ فَلْيُسَوِّرْهُ بِسِوَارٍ مِنْ ذَهَبٍ، وَلَكِنِ الْفِضَّةُ اعْمَلُوا بِهَا كَيْفَ شِئْتُمْ»


Almujam-Alawsat-3450

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

3450. முஆவியா பின் ஹைதா (ரலி) அவர்கள் கூறியதாவது:

இரகசியமாக தர்மம் செய்வது இறைவனின் கோபத்தை தணித்துவிடும் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.


«إِنَّ صَدَقَةَ السِّرِّ تُطْفِئُ غَضَبَ الرَّبِّ تَبَارَكَ وَتَعَالَى»


Almujam-Alawsat-943

ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

943. முஆவியா பின் ஹைதா (ரலி) அவர்கள் கூறியதாவது:

“இரகசியமாக தர்மம் செய்வது, இறைவனின் கோபத்தை தணித்துவிடும்.

நன்மைகள், தீமைகளை வீழ்த்திவிடும்.

உறவை பேணி நடப்பது, ஆயுளை அதிகரிக்க செய்யும். வறுமையை நீக்கும்.

லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ் என்பதை அதிகமாக கூறுங்கள். ஏனெனில், அது சொர்க்கத்தின் கருவூலங்களில் ஒரு கருவூலமாகும்.

மேலும் அதில் தொண்ணூற்று ஒன்பது வகையான நோய்களுக்கு மருந்துள்ளது. அவற்றில் மிகச் சிறியது கவலையாகும்” என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.


«إِنَّ صَدَقَةَ السِّرِّ تُطْفِئُ غَضَبَ الرَّبِّ، وَإِنَّ صَنَائِعَ الْمَعْرُوفِ تَقِي مَصَارِعَ السَّوْءِ، وَإِنَّ صِلَةَ الرَّحِمِ تَزِيدُ فِي الْعُمُرِ، وَتَقِي الْفَقْرَ. وَأَكْثِرُوا مِنْ قَوْلِ: لَا حَوْلَ وَلَا وَقُوَّةَ إِلَّا بِاللَّهِ، فَإِنَّهَا كَنْزٌ مِنْ كُنُوزِ الْجَنَّةِ، وَإِنَّ فِيهَا شِفَاءً مِنْ تِسْعَةٍ وَتِسْعِينَ دَاءً، أَدْنَاهَا الْهَمُّ»


Almujam-Alawsat-5028

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

5028. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ் என்ற வார்த்தை தொண்ணூற்று ஒன்பது வகையான நோய்களுக்கும் மருந்தாகும்.

அதில் குறைந்த பட்சம் கவலை என்னும் நோயிக்கு மருந்தாகும் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.


«لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ، دَوَاءٌ مِنْ تِسْعَةٍ وَتِسْعِينَ دَاءً أَيْسَرُهَا الْهَمُّ»


Next Page » « Previous Page