Category: தப்ரானி – அல்முஃஜமுல் அவ்சத்

Al-Mu’jam al-Awsat

Almujam-Alawsat-3541

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

3541. ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம்  (லுஹ்ர் தொழுகைக்கு வரும் நேரத்தில்) கடுமையான வெயிலை தாங்கமுடியவில்லை என்று முறையிட்டோம். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வேறு பதிலை அளிக்காமல், லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ் (பொருள் : அல்லாஹ்வின் உதவியில்லாமல் பாவங்களிலிருந்து விலகிச் செல்லவோ (நல்லறங்கள்) புரிய ஆற்றல் பெறவோ மனிதனால் முடியாது) என்பதை அதிகமாக கூறுங்கள்.

இந்த பிரார்த்தனை தொண்ணூற்று ஒன்பது வகையான கஷ்டங்களை நீக்கும். அவற்றில் குறைந்த பட்சம்  கவலை என்னும் கஷ்டமாகும்.

 


شَكَوْنَا إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الرَّمْضَاءَ فَلَمْ يُشْكِنَا وَقَالَ: «أَكْثِرُوا مِنْ قَوْلِ لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ، فَإِنَّهَا تَدْفَعُ تِسْعَةً وَتِسْعِينَ بَابًا مِنَ الضُّرِّ، أَدْنَاهَا الْهَمُّ»


Almujam-Alawsat-6767

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

6767. ஒரு இடையனின் குழலோசை இப்னு உமர் (ரலி) அவர்களின் காதில் விழுந்தது. அப்போது அவர்கள் தமது இரு காதுகளிலும் விரலை வைத்துக் கொண்டு அந்தப் பாதையை விட்டுவிட்டு வாகனத்தைத் திருப்பினார்கள். உனக்குக் கேட்கிறதா? என்று வினவினார்கள். அதற்கு நான் ஆம் என்றேன்.

அவர்கள் (சிறிது தூரம்) சென்ற பிறகு எனக்குக் கேட்கவில்லை என்று நான் கூறினேன். கைகளை (காதிலிருந்து) எடுத்து விட்டு மறுபடியும் அதே பாதைக்கு வாகனத்தைத் திருப்பினார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு இடையனின் குழலோசையைக் கேட்ட போது அவர்கள் இதைப் போன்று செய்வதை நான் பார்த்தேன் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : நாஃபிஃ (ரஹ்)


كُنْتُ رِدْفَ ابْنِ عُمَرَ، إِذْ «مَرَّ رَاعٍ يُزَمِّرُ، فَضَرَبَ وَجْهَ النَّاقَةِ، وَصَرَفَها عَنِ الطَّرِيقِ، ثُمَّ جَعَلَ إِصْبَعَيْهِ فِي أُذُنَيْهِ» ، وَقَالَ: «رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَفْعَلُ»


Almujam-Alawsat-1173

ஹதீஸின் தரம்: Pending

1173. ஒரு இடையனின் குழலோசை இப்னு உமர் (ரலி) அவர்களின் காதில் விழுந்தது. அப்போது அவர்கள் தமது இரு காதுகளிலும் விரலை வைத்துக் கொண்டு அந்தப் பாதையை விட்டுவிட்டு வாகனத்தைத் திருப்பினார்கள். உனக்குக் கேட்கிறதா? என்று வினவினார்கள். அதற்கு நான் ஆம் என்றேன்.

அவர்கள் (சிறிது தூரம்) சென்ற பிறகு எனக்குக் கேட்கவில்லை என்று நான் கூறினேன். கைகளை (காதிலிருந்து) எடுத்து விட்டு மறுபடியும் அதே பாதைக்கு வாகனத்தைத் திருப்பினார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு இடையனின் குழலோசையைக் கேட்ட போது அவர்கள் இதைப் போன்று செய்வதை நான் பார்த்தேன் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : நாஃபிஃ (ரஹ்)


كَانَ ابْنُ عُمَرَ فِي سَفَرٍ، فَسَمِعَ صَوْتَ، زَامِرٍ فَوَضَعَ إِصْبَعَيْهِ فِي أُذُنَيْهِ، وَعَدَلَ عَنِ الطَّرِيقِ، فَقَالَ: يَا نَافِعُ، أَتَسْمَعُ؟ قُلْتُ: لَا، فَرَاجَعَ الطَّرِيقَ، ثُمَّ قَالَ: «هَكَذَا رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَعَلَ»


Almujam-Alawsat-3828

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

3828. அம்ர் பின் தீனார் கூறியதாவது:

உஸ்மான் (ரலி) அவர்கள், இப்னு உமர் (ரலி) அவர்களிடம், மக்களுக்கு தீர்ப்பளிக்கும் நீதிபதி பதவியை (பொறுப்பை) ஏற்றுக்கொள்ளுங்கள் என்று கூறி(வற்புறுத்தி)னார்கள்.

இப்னு உமர் (ரலி) அவர்கள் அதை மறுத்து, “நீதிபதிகள் மூன்று வகைப்படுவர். ஒருவர் தப்பித்துவிடுவார். இருவர் நரகத்தில் நுழைவர். மனோஇச்சைப்படி தீர்ப்பளிப்பவரும், அநியாயமாக தீர்ப்பளிப்பவரும் அழிந்து நாசமாகிவிடுவர். நீதமாக தீர்ப்பளிப்பவர் தப்பித்துவிடுவார்” என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் செவியேற்றுள்ளேன் என்று கூறினார்கள்.


أَرَادَهُ عُثْمَانُ عَلَى الْقَضَاءِ فَأَبَى، وَقَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «الْقُضَاةُ ثَلَاثَةٌ، وَاحِدٌ نَاجٍ، وَاثْنَانِ فِي النَّارِ: مَنْ قَضَى بِالْجَوْرِ أَوْ بِالْهَوَى هَلَكَ، وَمَنْ قَضَى بِالْحَقِّ نَجَا»


Almujam-Alawsat-2729

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

2729. அப்துல்லாஹ் பின் மவ்ஹப் கூறியதாவது:

உஸ்மான் (ரலி) அவர்கள், இப்னு உமர் (ரலி) அவர்களிடம், மக்களுக்கு தீர்ப்பளிக்கும் நீதிபதி பதவியை (பொறுப்பை) ஏற்றுக்கொள்ளுங்கள் என்று கூறினார்கள்.

அதற்கு இப்னு உமர் (ரலி) அவர்கள், அமீருல் முஃமினீன் அவர்களே என்னை விட்டுவிடுங்கள் என்று கூறினார்கள்.

மேலும் இப்னு உமர் (ரலி) அவர்கள், உண்மையை அறியாமல் தீர்ப்பளிப்பவர் நரகத்தில் நுழைவார். நீதமாக தீர்ப்பளிப்பவர் தப்பித்து விடுவார். (அவருக்கு லாபமும் இல்லை, நட்டமும் இல்லை) என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை செவியேற்றுள்ளேன். இதற்கு பின்பும் இந்த நீதிபதி பொறுப்பிற்கு நான் ஆசைப்படுவேனா? என்று உஸ்மான் (ரலி) அவர்களுக்கு பதிலளித்தார்கள்…


أَنَّ عُثْمَانَ قَالَ لِابْنِ عُمَرَ: اذْهَبْ فَكُنْ قَاضِيًا، فَقَالَ: أَوَتُعْفِينِي يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ؟ فَإِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «مَنْ كَانَ قَاضِيًا فَقَضَى بِجَهْلٍ كَانَ مِنْ أَهْلِ النَّارِ، وَمَنْ كَانَ قَاضِيًا عَالِمًا فَقَضَى بِحَقٍّ أَوْ بعَدْلٍ، سَأَلَ التَّفَلُّتَ كَفَافًا» فَمَا أَرْجُو مِنْهُ بَعْدَ هَذَا؟


Almujam-Alawsat-3616

ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

3616.


«الْقُضَاةُ ثَلَاثَةٌ: فَرَجُلٌ قَضَى فَاجْتَهَدَ فَأَصَابَ فَلَهُ الْجَنَّةُ، وَرَجُلٌ قَضَى فَاجْتَهَدَ فَأَخْطَأَ فَلَهُ الْجَنَّةُ، وَرَجُلٌ قَضَى فَجَارَ فَفِي النَّارِ»


Almujam-Alawsat-6786

ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

6786. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நீதிபதிகள் மூன்று வகைப்படுவர். இருவர் நரகத்திலும், ஒருவர் சுவர்க்கத்திலும் நுழைவர்.

  1. நீதியை அறிந்தும் அதன்படி தீர்ப்பளிக்காமல், தீர்ப்பில் அநீதி செய்தவர். இவர் நரகத்தில் நுழைவார்.
  2. உண்மையை அறியாமல் தன்னுடைய அறியாமையுடனேயே தீர்ப்பு வழங்கி மக்களின் உரிமைகளை நாசமாக்கியவர். இவர் நரகத்தில் நுழைவார்.
  3. நீதியை அறிந்து அதன்படி தீர்ப்பளித்தவர். இவர் சுவர்க்கத்தில் நுழைவார்.

அறிவிப்பவர் : புரைதா (ரலி)


«الْقُضَاةُ ثَلَاثَةٌ: قَاضِيَانِ فِي النَّارِ وَقَاضٍ فِي الْجَنَّةِ، قَاضٍ تَرَكَ الْحَقَّ وَهُوَ يَعْلَمُ، وَقَاضٍ قَضَى بِغَيْرِ الْحَقِّ وَهُوَ لَا يَعْلَمُ فَأُهْلِكَ بِحُقُوقِ النَّاسِ، فَهَذَانِ فِي النَّارِ، وَقَاضٍ قَضَى بِالْحَقِّ فَهَذَا فِي الْجَنَّةِ»


Almujam-Alawsat-6757

ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

6757. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நீதிபதிகள் மூன்று வகைப்படுவர். இருவர் நரகத்திலும், ஒருவர் சுவர்க்கத்திலும் புகுவர்.

  1. தீர்ப்பின் சட்டங்களை அறிந்துக்கொள்ளாமல் நீதிபதி பதவியில் அமர்ந்து மக்களின் உரிமைகளை நாசமாக்கியவர். இவர் நரகத்தில் புகுவார்.
  2. நீதியை அறிந்தும் அதன்படி தீர்ப்பளிக்காமல், தீர்ப்பில் அநீதி செய்தவர். இவர் நரகத்தில் புகுவார்.
  3. நீதியை அறிந்து நியாயமாக தீர்ப்பளிப்பவர். இவர் சுவர்க்கத்தில் புகுவார்.

அறிவிப்பவர் : புரைதா (ரலி)


«الْقُضَاةُ ثَلَاثَةٌ، اثْنَانِ فِي النَّارِ وَوَاحِدٌ فِي الْجَنَّةِ، رَجُلٌ قَعَدَ لِلنَّاسِ فَقَضَى بَيْنَهُمْ، وَلَا عِلْمَ لَهُ بِالْقَضَاءِ، فَأَهْلَكَ حُقُوقَهُمْ، وَرَجُلٌ عَلِمَ فَجَارَ وَهُوَ يَعْلَمُ، وَرَجُلٌ عَلِمَ فَقَضَى بِعِلْمِهِ بِالْحَقِّ فَهَذَا فِي الْجَنَّةِ»


Almujam-Alawsat-5214

ஹதீஸின் தரம்: Pending

5214. “என் தந்தையே! நீங்கள் நபி (ஸல்) அவர்களையும், அபூபக்ர் (ரலி), உமர் (ரலி), உஸ்மான் (ரலி) ஆகியோரையும் பின்பற்றித் தொழுதுள்ளீர்கள். அலீ (ரலி) யை கூஃபாவில் ஏறத்தாழ ஐந்தாண்டுகள் பின்பற்றித் தொழுதுள்ளீர்கள். அவர்களெல்லாம் ஃபஜ்ரில் குனூத் ஓதுவார்களா?” என்று என் தந்தையிடம் கேட்டேன். அதற்கவர் “அருமை மகனே! அது பின்னர் உருவாக்கப்பட்ட பித்அத்தாகும்” என விடையளித்தார்.

அறிவிப்பவர் : அபூ மாலிக் அஷ்ஜயீ


قُلْتُ: يَا أَبَتَاهُ، صَلَّيْتَ خَلْفَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَخَلْفَ أَبِي بَكْرٍ، وَخَلْفَ عُمَرَ، وَخَلْفَ عُثْمَانَ، فَهَلْ كَانُوا يَقْنُتُونَ فِي الْفَجْرِ؟ قَالَ: « يَا بُنَيَّ، هِيَ مُحْدَثَةٌ»


Almujam-Alawsat-723

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

723. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ஒரு மனிதருக்கு ஒரு பெண்ணை திருமணம் முடித்துவைக்கும் போது , அந்த பெண்ணிடம் நான் இந்த மனிதரை உனக்கு திருமணம் முடித்துவைப்பதை நீர் விரும்புகிறாயா? என்று (சம்மதம்) கேட்டார்கள். அந்த மனிதரிடமும் நான் இந்த பெண்ணை  உனக்கு திருமணம் முடித்துவைப்பதை நீ விரும்புகிறாயா? என்று (சம்மதம்) கேட்டார்கள்.

(மஹர் எதுவும் நிர்ணயிக்காமலே திருமணம் முடித்து வைத்தார்கள்.)

அறிவிப்பவர் : உக்பா பின் ஆமிர் (ரலி)

 


أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَرَادَ أَنْ يُزَوِّجَ رَجُلًا مِنِ امْرَأَةٍ، فَقَالَ: «يَا فُلَانَةُ، أَتُحِبِّينَ أَنْ أُزَوِّجَكِ فُلَانًا؟ يَا فُلَانُ، أَتُحِبُّ أَنْ أُزَوِّجَكَ فُلَانَةً؟»


Next Page » « Previous Page