Category: தப்ரானி – அல்முஃஜமுல் அவ்சத்

Al-Mu’jam al-Awsat

Almujam-Alawsat-4591

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

4591. நிச்சயமாக அல்லாஹ் வெட்கப்படுபவன், சங்கையானவன். அவனுடைய அடியார் தனது கையை அவன் பக்கம் உயர்த்தும் போது அந்த இரு கைகளையும் வெறுமனே அனுப்புவதற்கு வெட்கப்படுகிறான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்…

அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி)


«إِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ حَيِيٌّ كَرِيمٌ، يَسْتَحِي مِنْ عَبْدِهِ أَنْ يَرْفَعَ إِلَيْهِ يَدَيْهِ فَيَرُدَّهُمَا صفْرًا لَيْسَ فِيهِمَا شَيْءٌ»


Almujam-Alawsat-5440

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

5440. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ரமளானில் 20 ரக்அத்களும், வித்ரும் தொழுபவர்களாக இருந்தனர்.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)


«كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي فِي رَمَضَانَ عِشْرِينَ رَكْعَةً وَالْوِتْرَ»


Almujam-Alawsat-798

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

798. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வித்ரைத் தவிர 20 ரக்அத்களை ரமளானில் தொழுபவர்களாக இருந்தனர்.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)


أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ «يُصَلِّي فِي رَمَضَانَ عِشْرِينَ رَكْعَةً سِوَى الْوِتْرِ»


Almujam-Alawsat-8094

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

8094. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒரு பயணத்தில் மூவர் இருந்தால் அவர்களில் ஒருவரை அமீராக்கிக் கொள்ளட்டும்.

அறிவிப்பவர் : அபூ ஸயீத் அல்குத்ரி (ரலி)


«إِذَا كَانَ ثَلَاثَةٌ فِي سَفَرٍ فَلْيُؤَمِّرُوا عَلَيْهِمْ أَحَدَهُمْ»


Almujam-Alawsat-8093

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

8093. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மூவர் பயணத்தில் புறப்பட்டால் அவர்கள் தம்மில் ஒருவரை அமீராக்கிக் கொள்ளட்டும்.

அறிவிப்பவர் : அபூ ஸயீத் அல்குத்ரி (ரலி)


«إِذَا خَرَجَ ثَلَاثَةٌ فِي سَفَرٍ فَلْيُؤَمِّرُوا أَحَدَهُمْ»


Almujam-Alawsat-4420

ஹதீஸின் தரம்: More Info

4420. இறை நம்பிக்கை கொண்டவர்களில் முழுமையான இறை நம்பிக்கை கொண்டவர் அவர்களில் நற்குணம் கொண்டவரே! உங்களில் சிறந்தவர் உங்கள் மனைவியரிடம் நற்பண்பால் சிறந்து விளங்குபவரே!” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்…

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)


«أَكْمَلُ الْمُؤْمِنِينَ إِيمَانًا أَحْسَنُهُمْ خُلُقًا، وَخَيْرُكُمْ خَيْرُكُمْ لِأَهْلِهِ»


Almujam-Alawsat-6145

ஹதீஸின் தரம்: More Info

6145. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் சிறந்தவர் உங்கள் மனைவியரிடம் நற்பண்பால் சிறந்து விளங்குபவரே!

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)


«خَيْرُكُمْ خَيْرُكُمْ لِأَهْلِهِ»


Almujam-Alawsat-3126

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

3126. ஒரு முஸ்லிம், தன் நற்பண்புகளால் (அவ்வாறில்லாத) அதிகம் நோன்பு வைத்து, அதிகம் இரவில் நின்று தொழும் தொழுகையாளியின் அந்தஸ்தை எட்டி விடுகிறார் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் செவியேற்றுள்ளேன்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)


«إِنَّ الْمُسْلِمَ لَيُدْرِكُ دَرَجَةَ الصَّوَّامِ الْقَوَّامِ بِحُسْنِ خُلُقِهِ»


Almujam-Alawsat-2509

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

2509. ஃபாத்திமா ! எழு! உன்னுடைய பிராணியிடத்தில் ஆஜராகு! ஏனெனில் குர்பானி பிராணியின் முதலாவது சொட்டு இரத்தம் விழும் போதே உனது அனைத்துப் பாவங்களும் மன்னிக்கப்பட்டு விடுகின்றன. மேலும் இந்தப் பிராணி மறுமை நாளில் இதனுடைய இரத்தமும் மாமிசமும் எழுபது மடங்கு கூடுதலாகக் கொண்டு வரப்படும். இதை உன்னுடைய மீஸானில் (நன்மைத் தட்டில்) வைக்கப்படும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறிய போது அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதரே! இந்த பாக்கியம் முஹம்மத் நபி (ஸல்) அவர்களின் குடும்பத்தினருக்குரியதா? அல்லது எல்லா மக்களுக்கும் உரியதா? எனக் கேட்டார்கள். முஹம்மதுடைய குடும்பத்திற்கும் எல்லா மக்களுக்கும் பொதுவானது தான் என பதிலளித்தார்கள்…

அறிவிப்பவர்கள் : இம்ரான் பின் ஹுஸைன் (ரலி)


«يَا فَاطِمَةُ قَوْمِي فَاشْهَدَيِ أُضْحِيَّتَكَ، فَإِنَّهُ يُغْفَرُ لَكِ بِكُلِّ قَطْرَةٍ مِنْ دَمِهَا كُلُّ ذَنْبٍ عَمِلْتِيهِ، وَقُولِي: إِنَّ صَلَاتِي وَنُسُكِي وَمَحْيَايَ وَمَمَاتِي لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ، لَا شَرِيكَ لَهُ، وَبِذَلِكَ أُمِرْتُ وَأَنَا أَوَّلُ الْمُسْلِمِينَ» فَقَالَ عِمْرَانُ: يَا رَسُولَ اللَّهِ، هَذَا لَكَ وَلِأَهْلِ بَيْتِكَ خَاصَّةً، فَأَهْلُ ذَلِكَ أَنْتُمْ، أَمْ لِلْمُسْلِمِينَ عَامَّةً؟ قَالَ: «بَلْ لِلْمُسْلِمِينَ عَامَّةً»


Almujam-Alawsat-3590

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3590. ஒருவர் ஓர் ஆட்டைப் படுக்க வைத்து, அதன் பக்கவாட்டில் தனது காலை வைத்து, தனது கத்தியைக் கூர் தீட்டிக் கொண்டிருந்தார். அந்த ஆடு அவரையே பார்த்துக் கொண்டிருந்தது.

அப்போது நபி (ஸல்) அவர்கள் அவரைக் கடந்துச் சென்றார்கள். அதனைக் கண்ட நபி (ஸல்) அவர்கள், “இதற்கு முன்பே (கத்தியைக் கூர் தீட்டி) வைத்திருக்கக் கூடாதா? இரண்டு முறை அதை மரணிக்கச் செய்ய விரும்புகிறாயா?” என்று கேட்டார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)


தப்ரானீ இமாம் கூறுகிறார்:

இந்தச் செய்தியை, ஆஸிம் பின் ஸுலைமான் —> இக்ரிமா —> இப்னு அப்பாஸ் (ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரில் அப்துர்ரஹீம் பின் ஸுலைமான் அவர்கள் மட்டுமே மவ்ஸூலாக அறிவித்துள்ளார்.

மேலும், அப்துர்ரஹீம் பின் ஸுலைமான் அவர்களிடமிருந்து யூஸுஃப் பின் அதீ மட்டுமே இதை தனித்து அறிவித்துள்ளார்.


مَرَّ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى رَجُلٍ وَاضِعٍ رِجْلَهُ عَلَى صَفْحَةِ شَاةٍ وَهُوَ يُحِدُّ شَفْرَتَهُ وَهِيَ تَلْحَظُ إِلَيْهِ بِبَصَرِهَا، فَقَالَ: «أَفَلَا قَبْلَ هَذَا تُرِيدُ أَنْ تُمِيتَهَا مَوْتَتَيْنِ»


Next Page » « Previous Page