Category: தப்ரானி – அல்முஃஜமுல் கபீர்

Al-Mu’jam Al-Kabir

Almujam-Alkabir-12558

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

12558. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மதீனாவில், அச்சமில்லாத நிலையிலும் லுஹரையும் அஸரையும் சேர்த்து ஒரே நேரத்தில் தொழுதார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)


أَنَّ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «جَمَعَ بَيْنَ الظُّهْرِ وَالْعَصْرِ بِالْمَدِينَةِ فِي غَيْرِ خَوْفٍ»


Almujam-Alkabir-8026

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

8026. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

வெள்ளிக்கிழமை இரவில், அல்லது பகலில் துஃகான் (44 வது) அத்தியாயத்தை ஓதுபவருக்கு அல்லாஹ் சொர்க்கத்தில் ஒரு வீட்டைக் கட்டுவான்.

அறிவிப்பவர்: அபூ உமாமா (ரலி)


«مَنْ قَرَأَ حم الدُّخَانَ فِي لَيْلَةِ جُمُعَةٍ، أَوْ يَوْمَ جُمُعَةٍ بَنَى اللهُ لَهُ بَيْتًا فِي الْجَنَّةِ»


Almujam-Alkabir-13610

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

13610. ஒரு மனிதன் கப்ரில் வைக்கப்பட்டவுடன் அவனிடத்தில் இரு வானவர்கள் வந்து உன்னை ஒரு அடி அடிக்கப்போகிறோம்! என்று கூறுவர். என்ன காரணத்திற்காக அடிக்கப்போகிறீர்கள்? என்று அந்த மனிதன் கேட்பான். அதற்குள் அவ்விருவரும் அவனை ஒரு அடி அடித்துவிடுவார்கள். அதனால் அவனின் கப்ர் முழுவதும் நெருப்பாகிவிடும். அவனை அப்படியே விட்டுவிடுவார்கள். பயம் நீங்கி, தெளிவடைந்து எதற்காக என்னை அடித்தீர்கள்? என்று அவன் கேட்பான்.

அதற்கவர்கள், நீ உளூவின்றி ஒரு தொழுகையை தொழுதாய். அநீதமிழைக்கப்பட்டவனைக் கண்டும் அவனுக்கு உதவி செய்யாமல் அவனைக் கடந்து சென்றாய். (அதற்காகவே நாங்கள் அடித்தோம்) என்று அவ்விரு வானவர்களும் கூறுவர் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதை நான் செவியேற்றுள்ளேன்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

 


يَوْمَ أُدْخِلَ رَجُلٌ فِي قَبْرِهِ، فَأَتَاهُ مَلَكَانَ فَقَالَا لَهُ: إِنَّا ضَارِبُوكَ ضَرْبَةً، فَقَالَ لَهُمَا: عَلَامَ تَضْرِبَانِي؟ فَضَرَبَاهُ ضَرْبَةً امْتَلَأَ قَبْرُهُ مِنْهَا نَارًا، فَتَرَكَاهُ حَتَّى أَفَاقَ وَذَهَبَ عَنْهُ الرُّعْبُ، فَقَالَ لَهُمَا عَلَامَ ضَرَبْتُمَانِي؟ فَقَالَا: إِنَّكَ صَلَّيْتَ صَلَاةً، وَأَنْتَ عَلَى غَيْرِ طُهُورٍ، وَمَرَرْتَ بِرَجُلٍ مَظْلُومٍ وَلَمْ تَنْصُرْهُ


Almujam-Alkabir-755

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

755. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உளூ இல்லாதவருக்கு தொழுகை இல்லை. அல்லாஹ்வின் பெயர் கூறி உளூச் செய்யாதவருக்கு உளூ இல்லை.

என்னை நம்பிக்கை கொள்ளாதவர் அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டவராக ஆகமாட்டார். அன்ஸாரீ நபித்தோழர்களின் உரிமையை அறியாதவர் என்னை நம்பிக்கை கொண்டவராக ஆகமாட்டார்.

அறிவிப்பவர்: அபூஸப்ரா (ரலி)


«لَا صَلَاةَ إِلَّا بِوُضُوءٍ، وَلَا وُضُوءَ لِمَنْ لَمْ يَذْكُرِ اسْمَ اللهِ عَلَيْهِ، وَلَا يُؤْمِنُ بِاللهِ مَنْ لَمْ يُؤْمِنْ بِي، وَلَمْ يُؤْمِنْ بِي مَنْ لَمْ يَعْرِفْ حَقَّ الْأَنْصَارِ»


Almujam-Alkabir-5699

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

5699. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உளூ இல்லாதவருக்கு தொழுகை இல்லை. உளூச் செய்யும் போது பிஸ்மில்லாஹ் (அல்லாஹ்வின் பெயரால் என்று) கூறாதவருக்கு உளூ இல்லை. நபி (ஸல்) அவர்கள் மீது ஸலவாத் கூறாதவருக்கு தொழுகை இல்லை. அன்ஸாரீ நபித்தோழர்களை நேசிக்காதவருக்கு ஸலவாத் இல்லை.

அறிவிப்பவர்: ஸஹ்ல் பின் ஸஃத் (ரலி)


«لَا صَلَاةَ لِمَنْ لَا وُضُوءَ لَهُ، وَلَا وُضُوءَ لِمَنْ لَمْ يَذْكُرِ اسْمَ اللهِ عَلَيْهِ، وَلَا صَلَاةَ لِمَنْ لَا يُصَلِّي عَلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَلَا صَلَاةَ لِمَنْ لَا يُحِبُّ الْأَنْصَارَ»


Almujam-Alkabir-5698

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

5698. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(இந்த) நபியின் மீது ஸலவாத் கூறாதவருக்கு உளூ இல்லை.

அறிவிப்பவர்: ஸஹ்ல் பின் ஸஃத் (ரலி)


«لَا وُضُوءَ لِمَنْ لَمْ يُصَلِّ عَلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ»


Almujam-Alkabir-10357

ஹதீஸின் தரம்: ஹஸன் - நடுத்தரமான செய்தி

10357. இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இப்னு மஸ்ஊதே!” என்று அழைத்தார்கள். நான், “இதோ வந்துவிட்டேன், கட்டுப்பட்டேன் என்று மூன்று தடவை கூறினேன். அப்போது அவர்கள், “ஈமானின் (இறைநம்பிக்கையின்) கயிறுகளில் மிகவும் பலமானது எது என்று நீங்கள் அறிவீர்களா?” என்று கேட்டார்கள். அதற்கு நான், “அல்லாஹ்வும் அவனது தூதருமே நன்கறிந்தவர்கள்” என்றேன். அதற்கவர்கள், “அல்லாஹ்விற்காக நேசம் கொள்வதும், அல்லாஹ்விற்காகவே பகைமை கொள்வதும், அல்லாஹ்விற்காகவே நட்பு பாராட்டுவதும் ஆகும்” என்று கூறினார்கள்.

மீண்டும் அவர்கள், “இப்னு மஸ்ஊதே!” என்று அழைத்தார்கள். நான், “அல்லாஹ்வின் தூதரே! இதோ வந்துவிட்டேன், கட்டுப்பட்டேன் என்று கூறினேன். அவர்கள், “முஃமின்களில் (இறைநம்பிக்கையாளர்களில்) சிறந்தவர் யார்?” என்று கேட்டார்கள். அதற்கு நான், “அல்லாஹ்வும் அவனது தூதருமே நன்கறிந்தவர்கள்” என்றேன். அதற்கவர்கள், “தங்கள் மார்க்கத்தைப் புரிந்து கொண்டு, அதில் அழகிய முறையில் செயல்படுபவர்களே சிறந்தவர்கள்” என்று கூறினார்கள்.

பிறகு அவர்கள், “இப்னு மஸ்ஊதே! இறைநம்பிக்கையாளர்களில் மிகுந்த அறிவுடையவர் யார் என்று உமக்குத் தெரியுமா?” என்று கேட்டார்கள். அதற்கு நான், “அல்லாஹ்வும் அவனது

«يَا ابْنَ مَسْعُودٍ» ، قُلْتُ: لَبَّيْكَ ثَلَاثًا، قَالَ: «هَلْ تَدْرُونَ أَيُّ عُرَى الْإِيمَانِ أَوْثَقُ؟» قُلْتُ: اللهُ وَرَسُولُهُ أَعْلَمُ، قَالَ: «الْوَلَايَةُ فِي اللهِ، وَالْحُبُّ فِي اللهِ، وَالْبُغْضُ فِي اللهِ»

قَالَ: «يَا ابْنَ مَسْعُودٍ» ، قُلْتُ: لَبَّيْكَ يَا رَسُولَ اللهِ، قَالَ: «أَيُّ الْمُؤْمِنِينَ أَفْضَلُ؟» قُلْتُ: اللهُ وَرَسُولُهُ أَعْلَمُ، قَالَ: «إِذا عَرَفُوا دِينَهُمْ أَحْسَنُهُمْ عَمَلًا»

ثُمَّ قَالَ: «يَا ابْنَ مَسْعُودٍ، هَلْ تَدْرِي أَيُّ الْمُؤْمِنِينَ أَعْلَمُ؟» قُلْتُ: اللهُ وَرَسُولُهُ أَعْلَمُ، قَالَ: «إِذَا اخْتَلَفُوا – وَشَبَّكَ بَيْنَ أَصَابِعِهِ – أَبْصَرُهُمْ بِالْحَقِّ، وَإِنْ كَانَ فِي عَمَلِهِ تَقْصِيرٌ، وَإِنْ كَانَ يَزْحَفُ زَحْفًا»

ثُمَّ قَالَ: ” يَا ابْنَ مَسْعُودٍ، هَلْ عَلِمْتَ أَنَّ بَنِي إِسْرَائِيلَ افْتَرَقُوا عَلَى اثْنَتَيْنِ وَسَبْعِينَ فِرْقَةً، لَمْ يَنْجُ مِنْهَا إِلَّا ثَلَاثُ فِرَقٍ، فِرْقَةٌ أَقَامَتْ فِي الْمُلُوكِ وَالْجَبَابِرَةِ، فَدَعَتْ إِلَى دِينِ عِيسَى، فَأُخِذَتْ فَقُتِلَتْ بِالْمَنَاشِيرِ، وَحُرِّقَتْ بِالنِّيرَانِ، فَصَبَرَتْ حَتَّى لَحِقَتْ بِاللهِ، ثُمَّ قَامَتْ طَائِفَةٌ أُخْرَى لَمْ تَكُنْ لَهُمْ قُوَّةٌ، وَلَمْ تُطِقِ الْقِيَامَ بِالْقِسْطَ، فَلَحِقَتْ بِالْجِبَالِ، فَتَعَبَّدَتْ وَتَرَهَّبَتْ، وَهُمُ الَّذِينَ ذَكَرَهُمُ اللهُ فَقَالَ {وَرَهْبَانِيَّةً ابْتَدَعُوهَا مَا كَتَبْنَاهَا عَلَيْهِمْ إِلَّا ابْتِغَاءَ رِضْوَانَ اللهِ} [الحديد: 27] إِلَى {وَكَثِيرٌ مِنْهُمْ فَاسِقُونَ} [الحديد: 16] ، وَفِرْقَةٌ مِنْهُمْ آمَنَتْ، فَهُمُ الَّذِينَ آمَنُوا وَصَدَّقُونِي، وَهُمُ الَّذِينَ رَعَوْهَا حَقَّ رِعَايَتِهَا، وَكَثِيرٌ مِنْهُمْ فَاسِقُونَ، وَهُمُ الَّذِينَ لَمْ يُؤْمِنُوا بِي وَلَمْ يُصَدِّقُونِي، وَلَمْ يَرْعَوْهَا حَقَّ رِعَايَتِهَا، وَهُمُ الَّذِينَ فَسَّقَهُمُ اللهُ “


Almujam-Alkabir-8054

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

8054.


«افْتَرَقَتْ بَنُو إِسْرَائِيلَ عَلَى إِحْدَى وَسَبْعِينَ فِرْقَةً تَزِيدُ عَلَيْهَا أُمَّتِي فِرْقَةً كُلُّهَا فِي النَّارِ إِلَّا السَّوَادَ الْأَعْظَمَ»


Almujam-Alkabir-8053

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

8053.


«تَفَرَّقَتْ بَنُو إِسْرَائِيلَ عَلَى ثِنْتَيْنِ وَسَبْعِينَ فِرْقَةً، وَسَتَفْتَرِقُ هَذِهِ الْأُمَّةُ عَلَى مَا تَفَرَّقَتْ عَلَيْهِ بَنُو إِسْرَائِيلَ تَزِيدُ فِرْقَةً كُلُّهَا فِي النَّارِ إِلَّا السَّوَادَ» فَقُلْنَا: يَا أَبَا أُمَامَةَ: أَوَ لَيْسَ فِي السَّوَادِ مَا يَكْفِيهِ؟ قَالَ: «وَاللهِ إِنَّا لَنُنْكِرُ مَا تَعْمَلُونَ»


Next Page » « Previous Page