Category: தப்ரானி – அல்முஃஜமுல் கபீர்

Al-Mu’jam Al-Kabir

Almujam-Alkabir-14368

ஹதீஸின் தரம்: More Info

14368. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

பெற்றோரின் திருப்தியில் இறைவனின் திருப்தி உள்ளது. பெற்றோரின் அதிருப்தியில் இறைவனின் அதிருப்தி உள்ளது.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)


«رِضَا الرَّبِّ في رَضَا الوَالِدَيْنِ، وسَخَطُ الرَّبِّ في سَخَطِهِمَا»


Almujam-Alkabir-14367

ஹதீஸின் தரம்: More Info

14367. தந்தையின் திருப்தியில் இறைவனின் திருப்தி உள்ளது. தந்தையின் அதிருப்தியில் இறைவனின் அதிருப்தி உள்ளது என்று அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அதாஉ அல்ஆமிரீ


رِضا الرَّبِّ في رِضا الوالد، وسَخَطُ الرَّبِّ عز وجل في سَخَطِ الوالد.


Almujam-Alkabir-62

ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

62. பனூ இஸ்ரவேலர்களுக்கு ஏற்பட்ட அதே நிலை எனது சமுதாயத்திற்கும் ஏற்படும். எந்தளவுக்கென்றால், அவர்களில் சிலர் தன் தாயிடம் பகிரங்கமாக (தவறான எண்ணத்தில்) வந்ததைப் போன்றே சரிக்கு சமமாக என் சமுதாயத்திலும் அவ்வாறு செய்பவர்கள் தோன்றுவர்.

பனூ இஸ்ரவேலர்கள் எழுபத்திரண்டு கூட்டங்களாக பிரிந்தனர். எனது சமுதாயத்தினர் எழுபத்தி மூன்று கூட்டங்களாக பிரிவர். அனைவரும் நரகம் செல்வர். ஒரு கூட்டத்தைத் தவிர என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது மக்கள் அவர்கள் யார் அல்லாஹ்வின் தூதரே! என்று கேட்டனர். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “நானும் எனது தோழர்களும் எதில் இருக்கிறோமோ அதில் இருப்பவர்கள்” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)


«لَيَأْتِيَنَّ عَلَى أُمَّتِي مَا أَتَى عَلَى بَنِي إِسْرَائِيلَ، لَوْ كَانَ فِيهِمْ مَنْ يَأْتِي أُمَّهُ عَلَانِيَةً كَانَ فِيهِمْ مَنْ يَأْتِي أُمَّهُ عَلَانِيَةً حَذْوَ النَّعْلِ بِالنَّعْلِ. وَإِنَّ بَنِي إِسْرَائِيلَ افْتَرَقُوا عَلَى ثِنْتَيْنِ وَسَبْعِينَ فِرْقَةً. وَإِنَّ أُمَّتِي سَتَفْتَرِقُ عَلَى ثَلَاثَةٍ وَسَبْعِينَ فِرْقَةً كُلُّهَا فِي النَّارِ إِلَّا فِرْقَةً وَاحِدَةً» قِيلَ: يَا رَسُولَ اللهِ مَنْ هُمْ؟ قَالَ: «مَا أَنَا عَلَيْهِ وَأَصْحَابِي»


Almujam-Alkabir-11369

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

11369. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

“தொழுகையின் திறவுகோல் சுத்தமாகும். (ஏனைய செயல்களை) ஹராமாக ஆக்குவது, முதல்தக்பீர் ஆகும். (ஏனைய காரியங்களை) ஹலாலாக ஆக்குவது, ஸலாம் கொடுப்பதாகும்”.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)


«مِفْتَاحُ الصَّلَاةِ الطُّهُورُ، وَتَحْرِيمُهَا التَّكْبِيرُ، وَتَحْلِيلُهَا التَّسْلِيمُ»


Almujam-Alkabir-10196

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

10196. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்கள் செல்வங்களை ஸகாத் (வழங்குவதன்) மூலம் பாதுகாத்துக் கொள்ளுங்கள். உங்களின் நோயாளிகளை தர்மம் செய்வதன் மூலம் குணப்படுத்துங்கள். சோதனைகளை விட்டு (பாதுகாக்கப்பட) பிரார்த்தனைகளை தயார் செய்துக்கொள்ளுங்கள்.

அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் (ரலி)


«حَصِّنُوا أَمْوَالَكُمْ بِالزَّكَاةِ، وَدَاوُوا مَرْضَاكُمْ بِالصَّدَقَةِ، وَأَعِدُّوا لِلْبَلَاءِ الدُّعَاءَ»


Almujam-Alkabir-11658

ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

11658. (தொழுகை) வரிசைக்குப் பின்னால் தனியாகத் தொழுத ஒரு மனிதருக்கு, (அத்தொழுகையை மறுபடியும்) மீட்டுமாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உத்தரவிட்டார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)


أَنَّ رَجُلًا صَلَّى خَلْفَ الصُّفُوفِ وَحْدَهُ «فَأَمَرَهُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يُعِيدَ الصَّلَاةَ»


Almujam-Alkabir-10417

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

10417. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் இறப்பின் நெருக்கத்தில் இருப்போருக்கு “லா இலாஹ இல்லல்லாஹ்” (“அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை” எனும் கலிமா)வை நினைவுபடுத்துங்கள்.

இறைநம்பிக்கையாளரின் உயிர் வியர்வை வர (இலேசான சிரமத்துடன்) வெளியேறும். இறைமறுப்பாளரின் உயிர், கழுதையின் உயிர் வெளியேறுவதைப் போன்று தாடை வழியாக வெளியேறும்.

அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் (ரலி)


«لَقِّنُوا مَوْتَاكُمْ لَا إِلَهَ إِلَّا اللهُ؛ فَإِنَّ نَفْسَ الْمُؤْمِنِ تَخْرُجُ رَشْحًا، وَنَفَسَ الْكَافِرِ تَخْرُجُ مِنْ شِدْقِهِ، كَمَا تَخْرُجُ نَفْسُ الْحِمَارِ»


Almujam-Alkabir-10049

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

10049. இறைநம்பிக்கையாளரின் உயிர் வியர்வை வர (இலேசான சிரமத்துடன்) வெளியேறும். கழுதை இறப்பது போன்று இறப்பதை நான் விரும்பமாட்டேன் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது அவர்களிடம், “கழுதை இறப்பது போன்று என்றால் என்ன? என்று கேட்கப்பட்டது…

அதற்கு நபி (ஸல்) அவர்கள், இறைமறுப்பாளரின் உயிர், கழுதையின் உயிர் வெளியேறுவதைப் போன்று தாடை வழியாக வெளியேறும் என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் (ரலி)


«إِنَّ نَفْسَ الْمُؤْمِنِ يَخْرُجُ رَشْحًا، وَلَا أُحِبُّ مَوْتًا كَمَوْتِ الْحِمَارِ» ، قِيلَ: وَمَا مَوْتُ الْحِمَارِ؟ قَالَ: «رُوحُ الْكَافِرِ يَخْرُجُ مِنْ أَشْدَاقِهِ»


Almujam-Alkabir-10015

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

10015. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இறைநம்பிக்கையாளரின் உயிர், வியர்வை வர (இலேசான சிரமத்துடன்) வெளியேறும். இறைமறுப்பாளரின் உயிர், கழுதையின் உயிர் வெளியேறுவதைப் போன்று (இலேசாக) வெளியேறும்.

இறைநம்பிக்கையாளர் செய்த சில தவறுகளை மன்னிப்பதற்காக மரணத்தருவாயில் உயிர் பிரிவது அவருக்கு கடினமாக்கப்படும். இறைமறுப்பாளர் செய்த சில நன்மைகளுக்கு (கூலியாக) மரணத்தருவாயில் உயிர் பிரிவது அவருக்கு இலேசாக்கப்படும்.

அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் (ரலி)


«إِنَّ نَفْسَ الْمُؤْمِنِ تَخْرُجُ رَشْحًا، وَإِنَّ نَفْسَ الْكَافِرِ تَسِيلُ كَمَا تَخْرُجُ نَفْسُ الْحِمَارِ، وَإِنَّ الْمُؤْمِنَ لَيَعْمَلُ الْخَطِيئَةَ فَيُشَدَّدُ بِهَا عَلَيْهِ عِنْدَ الْمَوْتِ لِيُكَفَّرَ بِهَا، وَإِنَّ الْكَافِرَ لَيَعْمَلُ الْحَسَنَةَ فَيُسَهَّلُ عَلَيْهِ عِنْدَ الْمَوْتِ لِيُجْزَى بِهَا»


Almujam-Alkabir-8866

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

8866. “இறைநம்பிக்கையாளரின் உயிர், நெற்றியில் வியர்வை வர (இலேசான சிரமத்துடன்) வெளியேறும். இறைமறுப்பாளரின் உயிர், கழுதையின் உயிர் வெளியேறுவதைப் போன்று தாடை வழியாக வெளியேறும் என்று அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூவாயில் (ரஹ்)


«إِنَّ الْمُؤْمِنَ يَخْرُجُ نَفْسُهُ رَشْحًا، وَإِنَّ الْكَافِرَ يَخْرُجُ نَفْسُهُ فِي شِدْقِهِ كَمَا يَخْرُجُ نَفَسُ الْحِمَارِ»


Next Page » « Previous Page