10451. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
பிறை பெரிதாக தெரிவது மறுமைநாள் நெருங்கிவிட்டதின் அடையாளமாகும்.
அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் (ரலி)
«مِنِ اقْتِرَابِ السَّاعَةِ انْتِفَاخُ الْأَهِلَّةِ»
Al-Mu’jam Al-Kabir
10451. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
பிறை பெரிதாக தெரிவது மறுமைநாள் நெருங்கிவிட்டதின் அடையாளமாகும்.
அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் (ரலி)
«مِنِ اقْتِرَابِ السَّاعَةِ انْتِفَاخُ الْأَهِلَّةِ»
7603. நபி (ஸல்) அவர்கள் திடீர் மரணத்தை விட்டு (அல்லாஹ்விடம்) பாதுகாப்புத் தேடுபவர்களாக இருந்தார்கள். மரணத்திற்கு முன் நோய்வாய்ப்படுவதை அவர்கள் விரும்பினார்கள்.
அறிவிப்பவர்: அபூஉமாமா (ரலி)
«كَانَ النَّبِيُّ صَلَّى الله عَلَيْهِ وَسَلَّمْ يَتَعَوَّذُ مِنْ مَوْتِ الْفَجْأَةِ، وَكَانَ يُعْجِبُهُ أَنْ يُمَرَّضَ قَبْلَ أَنْ يَمُوتَ»
7602. நபி (ஸல்) அவர்கள் திடீர் மரணத்தை விட்டு (அல்லாஹ்விடம்) பாதுகாப்புத் தேடுபவர்களாக இருந்தார்கள். மரணத்திற்கு முன் நோய்வாய்ப்படுவதை அவர்கள் விரும்பினார்கள்.
அறிவிப்பவர்: அபூ உமாமா (ரலி)
«كَانَ النَّبِيُّ صَلَّى الله عَلَيْهِ وَسَلَّمْ يَتَعَوَّذُ مِنْ مَوْتِ الْفَجْأَةِ، وَكَانَ يُعْجِبُهُ أَنْ يُمَرَّضَ قَبْلَ أَنْ يَمُوتَ»
8865. திடீர் மரணம் இறைநம்பிக்கையாளருக்கு இலேசாகும். இறைமறுப்பாளருக்கு கைசேதமாகும் என இப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபுல் அஹ்வஸ் (ரஹ்)
«مَوْتُ الْفَجْأَةِ تَخْفِيفٌ عَلَى الْمُؤْمِنِ، وَأَسَفٌ عَلَى الْكَافِرِ»
13573. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நீங்கள் தொழும்போது, உங்களுக்கு முன்னால் யாரையும் நடக்க விடாதீர்கள்! மீறினால் அவருடன் சண்டையிடுங்கள்! (தடுங்கள்). ஏனெனில் அவருடன் கூட்டாளி (ஷைத்தான்) இருக்கிறான்.
அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)
«إِذَا كَانَ أَحَدُكُمْ يُصَلِّي فَلَا يَدَعْ أَحَدًا يَمُرُّ بَيْنَ يَدَيْهِ فَإِنْ أَبَى فَلْيُقَاتِلْهُ فَإِنَّ مَعَهُ الْقَرِينَ»
662. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மனிதன் நிரப்புவதிலேயே அவனுடைய வயிற்றை விட மிகவும் மோசமான பாத்திரம் எதுவும் இல்லை. (உண்ணும்) ஆசை அவனை மிகைத்துவிட்டதென்றால், மூன்றில் ஒரு பாகம் அவன் மூச்சு விடுவதற்கு இருக்கட்டும்.
அறிவிப்பவர்: மிக்தாம் பின் மஃதீகரிப் (ரலி)
«مَا مَلَأَ أَحَدٌ وِعَاءً شَرًّا مِنْ بَطْنٍ، فَإِنْ غَلَبَتْهُ نَفْسُهُ فَلْيَدَعْ ثُلُثَا لِنَفْسِهِ»
645. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மனிதன் நிரப்புவதிலேயே அவனுடைய வயிற்றை விட மிகவும் மோசமான பாத்திரம் எதுவும் இல்லை. ஒரு முஸ்லிமுக்கு, அவரின் முதுகை நிமிர்த்துவதற்கு (தேவையான) சில கவளங்களே போதும். அது முடியவில்லை என்றால், மூன்றில் ஒரு பாகம் உணவுக்கும், மூன்றில் ஒரு பாகம் நீருக்கும், மூன்றில் ஒரு பாகம் அவன் மூச்சு விடுவதற்கும் இருக்கட்டும்.
அறிவிப்பவர்: மிக்தாம் பின் மஃதீகரிப் (ரலி)
«مَا وَعَى ابْنُ آدَمَ وِعَاءً شَرًّا مِنْ بَطْنٍ، بِحَسْبِ الْمُسْلِمِ أُكُلَاتٍ يُقِمْنَ صُلْبَهُ، فَإِنْ كَانَ لَا مَحَالَةَ فَثُلُثًا لِطَعَامِهِ، وَثُلُثًا لِشَرَابِهِ، وَثُلُثًا لِنَفْسِهِ»
644. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மனிதன் நிரப்புவதிலேயே அவனுடைய வயிற்றை விட மிகவும் மோசமான பாத்திரம் எதுவும் இல்லை. ஆதமுடைய மகனுக்கு, அவனுடைய முதுகை நிமிர்த்த (தேவையான) சில கவளங்களே போதும். அது முடியவில்லை என்றால், மூன்றில் ஒரு பாகம் உணவும், மூன்றில் ஒரு பாகம் நீருக்கும், மூன்றில் ஒரு பாகம் அவன் மூச்சு விடுவதற்கும் இருக்கட்டும்.
அறிவிப்பவர்: மிக்தாம் பின் மஃதீகரிப் (ரலி)
«مَا مَلَأَ آدَمِيٌّ وِعَاءً شَرًّا مِنْ بَطْنٍ، حَسَبُ ابْنِ آدَمَ أُكُلَاتٍ يُقِمْنَ صُلْبَهُ، فَإِنْ كَانَ لَا مَحَالَةَ فَثُلُثًا طَعَامًا، وَثُلُثًا شَرَابًا، وَثُلُثًا لِنَفْسِهِ»
4735. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு முஸ்லிமின் மானம் பறிக்கப்படும் போது, அவரின் மரியாதைக்கு பங்கம் ஏற்படும்போது எவர் உதவி செய்யாமல் இருந்துவிடுவாரோ அவருக்கு அல்லாஹ்வின் உதவி தேவைப்படும் போது, அல்லாஹ் தன் உதவியைவிட்டும் அவரைத் தடுத்துவிடுகிறான்.
மேலும், ஒரு முஸ்லிமின் மானம் பறிக்கப்படும் போது, அவரின் மரியாதைக்கு பங்கம் ஏற்படும்போது எவர் உதவி செய்கிறாரோ அவருக்கு அல்லாஹ்வின் உதவி தேவைப்படும் போது, அல்லாஹ் அவருக்கு உதவிசெய்கிறான்.
அறிவிப்பவர்கள்: ஜாபிர் (ரலி), அபூதல்ஹா (ரலி)
«مَا مِنَ امْرِئٍ يَخْذُلُ مُسْلِمًا فِي مَوْطِنٍ يُنْتَقَصُ فِيهِ مِنْ عِرْضِهِ وَيُنْتَهَكُ فِيهِ مِنْ حُرْمَتِهِ إِلَّا خَذَلَهُ اللهُ فِي مَوْطِنٍ يُحِبُّ فِيهِ نُصْرَتَهُ وَمَا مِنْ أَحَدٍ يَنْصُرُ مُسْلِمًا فِي مَوْطِنٍ يُنْتَقَصُ فِيهِ مِنْ عِرْضِهِ وَيُنْتَهَكُ فِيهِ مِنْ حُرْمَتِهِ إِلَّا نَصَرَهُ اللهُ فِي مَوْطِنٍ يُحِبُّ فِيهِ نُصْرَتَهُ»
சமீப விமர்சனங்கள்