Category: தப்ரானி – அல்முஃஜமுல் கபீர்

Al-Mu’jam Al-Kabir

Almujam-Alkabir-576

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

576. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(மறுமை நாளின் அளவில்) பாதி நாள் வரை எனது சமுதாயத்தை (அழித்துவிடாமல்) தாமதப்படுத்துவதற்கு எனது இறைவன் இயலாதவனில்லை.

அறிவிப்பவர்: அபூ ஸஅலபா (ரலி)


«لَنْ يُعْجِزَ رَبِّي أَنْ يُؤَخِّرَ أُمَّتِي نِصْفَ يَوْمٍ»


Almujam-Alkabir-572

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

572. “(மறுமை நாளின் அளவில்) பாதி நாளை இந்த சமுதாயம் கடந்துவிடுவதை அல்லாஹ் இயலாததாக ஆக்கிவிடமாட்டான். (யுகமுடிவு நாளின் நெருக்கத்தில்) ஷாம் நாட்டினர் ஒரு மனிதரின் தலைமையிலும், அவரின் குடும்பத்தின் தலைமையிலும் ஒன்றுப்படுவதை நீ கண்டால் கான்ஸ்டாண்டிநோபிள் வெற்றிக்கொள்ளப்படும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூ ஸஅலபா (ரலி)

அறிவிப்பாளர் முஆவியா பின் ஸாலிஹ் அவர்கள், இந்த செய்தியை சிலநேரம் நபி (ஸல்) அவர்களின் சொல்லாகவும், சிலநேரம் அபூ ஸஅலபா (ரலி) அவர்களின் சொல்லாகவும் அறிவித்துள்ளார்.


«إِنَّ اللهَ لَا يُعْجِزُ هَذِهِ الْأُمَّةَ مِنْ نِصْفِ يَوْمٍ وَإِذَا رَأَيْتَ الشَّامَ مَائِدَةَ رَجُلٍ وَأَهْلِ بَيْتِهِ فَعِنْدَ ذَلِكَ تُفْتَحُ الْقُسْطَنْطِينِيَّةُ»


Almujam-Alkabir-174

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

174. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(உலகஅழிவு நாளில்) மாபெரும் யுத்தம், கான்ஸ்டாண்டிநோபிள் நகரம் கைப்பற்றப்படுவது, தஜ்ஜால் வெளிப்படுவது (போன்ற இம்மூன்றும்)  ஏழுமாத (கால)த்திற்குள் நடைப்பெறும்.

அறிவிப்பவர்: முஆத் பின் ஜபல் (ரலி)


«الْمَلْحَمَةُ الْعُظْمَى، وَفَتْحُ قُسْطَنْطِينِيَّةَ، وَخُرُوجُ الدَّجَّالِ فِي سَبْعَةِ أَشْهُرٍ»


Almujam-Alkabir-173

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

173. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(உலகஅழிவு நாளில்) மாபெரும் யுத்தம், கான்ஸ்டாண்டிநோபிள் நகரம் கைப்பற்றப்படுவது, தஜ்ஜால் வெளிப்படுவது (போன்ற இம்மூன்றும்)  ஏழுமாத (கால)த்திற்குள் நடைப்பெறும்.

அறிவிப்பவர்: முஆத் பின் ஜபல் (ரலி)


«الْمَلْحَمَةُ الْعُظْمَى، وَفَتْحُ الْقُسْطَنْطِينِيَّةِ، وَخُرُوجُ الدَّجَّالِ فِي سَبْعَةِ أَشْهُرٍ»


Almujam-Alkabir-214

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

214.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஜெரூசலம் நகரம் செழித்து மலரும் போது யஸ்ரிப் (மதீனா) நகரம் இடிந்து சின்னாபின்னமாகி விடும். மதீனா நகரம் இடிந்து சிதைவடைவது மல்ஹமா எனும் மாபெரும் யுத்தத்தின் போதே நிகழும். மல்ஹமா எனும் மாபெரும் போர் கான்ஸ்டாண்டிநோபிள் நகரம் கைப்பற்றப்படும் போதே நிகழும். கான்ஸ்டாண்டிநோபிள் நகரம் வெற்றி கொள்ளப்படுவது தஜ்ஜால் வெளிப்படும் போதே நிகழும்.

அறிவிப்பவர்: முஆத் பின் ஜபல் (ரலி)


«عُمْرَانُ بَيْتِ الْمَقْدِسِ خَرَابُ يَثْرِبَ، وَخَرَابُ يَثْرِبَ خُرُوجُ الْمَلْحَمَةِ، وَخُرُوجُ الْمَلْحَمَةِ فَتْحُ الْقُسْطَنْطِينِيَّةِ، وَفَتْحُ الْقُسْطَنْطِينِيَّةَ خُرُوجُ الدَّجَّالِ»


Almujam-Alkabir-8089

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

8089. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(ரமலானுடைய) ஒவ்வொரு நோன்பிலும் நரகத்திற்குரியவர்கள் அல்லாஹ்வால் விடுதலைச் செய்யப்படுகின்றனர்.

அறிவிப்பவர்: அபூஉமாமா (ரலி)


«لِلَّهِ عِنْدَ كُلِّ فِطْرٍ عُتَقَاءُ مِنَ النَّارِ»


Almujam-Alkabir-8088

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

8088. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(ரமலானுடைய) ஒவ்வொரு நோன்பிலும் நரகத்திற்குரியவர்கள் அல்லாஹ்வால் விடுதலைச் செய்யப்படுகின்றனர்.

அறிவிப்பவர்: அபூஉமாமா (ரலி)


«إِنَّ لِلَّهِ عُتَقَاءَ عِنْدَ كُلِّ فِطْرٍ»


Almujam-Alkabir-7143

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

7143. யார் தன்னை சுயபரிசோதனை செய்துக் கொண்டு மரணத்திற்குப் பிறகு உள்ள வாழ்விற்காக நற்செயல் செய்கிறாரோ அவர் தான் அறிவாளி. யார் தன் மன இச்சைப்படி வாழ்ந்து, (அல்லாஹ் தனக்கு சொர்க்கத்தை தந்துவிடுவான் என்று) அல்லாஹ்வின் மீது மேலெண்ணம் கொள்கிறாரோ அவர் அறிவற்றவர்’ என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஷத்தாத் பின் அவ்ஸ் (ரலி)


«الْكَيِّسُ مَنْ دَانَ نَفْسَهُ، وَعَمِلَ لِمَا بَعْدَ الْمَوْتِ، وَالْعَاجِزُ مَنْ أَتْبَعَ نَفْسَهُ هَوَاهَا، وَتَمَنَّى عَلَى اللهِ»


Almujam-Alkabir-7141

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

7141. யார் தன்னை சுயபரிசோதனை செய்துக் கொண்டு மரணத்திற்குப் பிறகு உள்ள வாழ்விற்காக நற்செயல் செய்கிறாரோ அவர் தான் அறிவாளி. யார் தன் மன இச்சைப்படி வாழ்ந்து, (அல்லாஹ் தனக்கு சொர்க்கத்தை தந்துவிடுவான் என்று) அல்லாஹ்வின் மீது மேலெண்ணம் கொள்கிறாரோ அவர் அறிவற்றவர்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஷத்தாத் பின் அவ்ஸ் (ரலி)


«الْكَيِّسُ مَنْ دَانَ نَفْسَهُ، وَعَمِلَ لِمَا بَعْدَ الْمَوْتِ، وَالْعَاجِزُ مَنْ أَتْبَعَ نَفْسَهُ هَوَاهَا، وَتَمَنَّى عَلَى اللهِ»


Next Page » « Previous Page