Category: புஹாரி

Bukhari

Bukhari-6167

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

6167. அனஸ்(ரலி) அறிவித்தார்.

கிராமவாசிகளில் ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, ‘இறைத்தூதர் அவர்களே! மறுமை நாள் எப்போதும் சம்பவிக்கும்?’ என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள், ‘உனக்கென்ன கேடு! அதற்காக நீ என்ன முயற்சி செய்துள்ளாய்?’ என்று கேட்டார்கள். அவர் ‘நான் அதற்காக (ஏதும்) முன்முயற்சி செய்யவில்லை. ஆயினும், நான் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நேசிக்கிறேன்’ என்று பதிலளித்தார். நபி(ஸல்) அவர்கள், ‘(அப்படியானால்,) நீ யாரை நேசிக்கிறாயோ அவர்களுடன் (மறுமையில்) இருப்பாய்!’ என்றார்கள். உடனே நாங்கள், ‘நாங்களும் அவ்வாறுதானா?’ என்று கேட்டோம். நபி(ஸல்) அவர்கள், ‘ஆம்’ என்றார்கள். (இதைக் கேட்டு) அன்று நாங்கள் மிகவும் மகிழ்ந்தோம்.

-அப்போது முஃகீரா இப்னு ஷுஅபா(ரலி) அவர்களின் அடிமை (எங்களைக்) கடந்து சென்றார்கள். அவர் என் வயதொத்த (சிறு)வராக இருந்தார்.

‘இவர் உயிர் வாழ்ந்தால், இவரை முதுமை அடைவதற்கு முன்பே மறுமை சம்பவிக்கும்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அதாவது அவ்வளவு நெருக்கத்தில் மறுமை நாளை எதிர்பார்க்கலாம்.)

أَنَّ رَجُلًا مِنْ أَهْلِ البَادِيَةِ أَتَى النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، مَتَى السَّاعَةُ قَائِمَةٌ؟ قَالَ: «وَيْلَكَ، وَمَا أَعْدَدْتَ لَهَا» قَالَ: مَا أَعْدَدْتُ لَهَا إِلَّا أَنِّي أُحِبُّ اللَّهَ وَرَسُولَهُ، قَالَ: «إِنَّكَ مَعَ مَنْ أَحْبَبْتَ» فَقُلْنَا: وَنَحْنُ كَذَلِكَ؟ قَالَ: «نَعَمْ» فَفَرِحْنَا يَوْمَئِذٍ فَرَحًا شَدِيدًا، فَمَرَّ غُلاَمٌ لِلْمُغِيرَةِ وَكَانَ مِنْ أَقْرَانِي، فَقَالَ: «إِنْ أُخِّرَ هَذَا، فَلَنْ يُدْرِكَهُ الهَرَمُ حَتَّى تَقُومَ السَّاعَةُ» وَاخْتَصَرَهُ شُعْبَةُ، عَنْ قَتَادَةَ، سَمِعْتُ أَنَسًا، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ


Bukhari-6166

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

6166. (நபி (ஸல்) அவர்கள் தமது ‘விடைபெறும்’ ஹஜ் உரையில்) ‘உங்களுக்குக் கேடுதான் (வைலக்கும்)’ அல்லது ‘உங்களுக்கு அழிவுதான் (வைஹக்கும்)’. எனக்குப் பிறகு ஒருவர் மற்றவரின் கழுத்தை வெட்டிமாய்த்துக் கொள்ளும் இறை மறுப்பாளர்களாக நீங்கள் மாறிவிடாதீர்கள்’ என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

தனது ஆசிரியரான வாகித் பின் முஹம்மத் ‘வைலக்கும்’ அல்லது ‘வைஹக்கும்’ என்று சந்தேகமாக கூறியதாக ஷுஃபா (ரஹ்) அவர்கள் கூறினார் என்று மேற்கண்ட காலித் பின் ஹாரிஸின் அறிவிப்பில்  இடம்பெற்றுள்ளது.

ஷுஃபா (ரஹ்) அவர்களிடமிருந்து நள்ரு பின் ஷுமைல் அறிவிக்கும் அறிவிப்பில் ‘வைஹக்கும்’ என்று இடம் பெற்றுள்ளது.

முஹம்மத் பின் ஸைத் (ரஹ்) அவர்களிடமிருந்து அறிவிக்கும் அவர்களின் மகனான உமர் பின் முஹம்மத் அவர்களின் அறிவிப்பில் ‘வைலக்கும்’ அல்லது ‘வைஹக்கும்’ என்று இடம்பெற்றுள்ளது.

(எனவே இந்த சந்தேகம் முஹம்மத் பின் ஸைத் (ரஹ்) அவர்களிடமிருந்து ஏற்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது)

وَيْلَكُمْ أَوْ وَيْحَكُمْ – قَالَ شُعْبَةُ: شَكَّ هُوَ – لاَ تَرْجِعُوا بَعْدِي كُفَّارًا، يَضْرِبُ بَعْضُكُمْ رِقَابَ بَعْضٍ ” وَقَالَ النَّضْرُ، عَنْ شُعْبَةَ: «وَيْحَكُمْ» وَقَالَ عُمَرُ بْنُ مُحَمَّدٍ، عَنْ أَبِيهِ: «وَيْلَكُمْ، أَوْ وَيْحَكُمْ