Category: புஹாரி

Bukhari

Bukhari-3451

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3451. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களுக்கு முன்னிருந்தவர்களிடையே வாழ்ந்த ஒரு மனிதரிடம் (உயிரைக் கைப்பற்றும்) வானவர் அவரின் உயிரைக் கைப்பற்றிச் செல்ல வந்தார். அந்த மனிதரிடம், ‘(உன் வாழ்நாளில்) நீ ஏதாவது நன்மை செய்திருப்பதாக அறிந்திருக்கிறாயா?’ என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், ‘(அப்படி எதுவும்) எனக்குத் தெரியவில்லை’ என்று பதிலளித்தார்.

‘(நன்மை ஏதாவது செய்திருக்கிறாயா என்று) சிந்தித்துப் பார்’ என்று கூறப்பட்டது. அவர், ‘அப்படி எதுவும் (நன்மை) செய்ததாக எனக்குத் தெரியவில்லை. ஆனால், நான் உலக மக்களிடம் கொடுக்கல் வாங்கல் செய்து வந்தேன். அப்போது, அவர்களிடம் நான் கொடுத்த கடனைத் திருப்பிக் கேட்பேன். அப்போது, வசதியுள்ளவருக்கு (கடனை அடைக்க) அவகாசம் தருவேன். வசதியில்லாதவரை மன்னித்து (கடனைத் தள்ளுபடி செய்து) விடுவேன்’ என்று பதிலளித்தார். அதன் காரணத்தால் அல்லாஹ் அவரை சொர்க்கத்தில் புகுத்தினான். என ஹுதைஃபா(ரலி) அறிவித்தார்.
Book :60


إِنَّ رَجُلًا كَانَ فِيمَنْ كَانَ قَبْلَكُمْ، أَتَاهُ المَلَكُ لِيَقْبِضَ رُوحَهُ، فَقِيلَ لَهُ: هَلْ عَمِلْتَ مِنْ خَيْرٍ؟ قَالَ: مَا أَعْلَمُ، قِيلَ لَهُ: انْظُرْ، قَالَ: مَا أَعْلَمُ شَيْئًا غَيْرَ أَنِّي كُنْتُ أُبَايِعُ النَّاسَ فِي الدُّنْيَا وَأُجَازِيهِمْ، فَأُنْظِرُ المُوسِرَ، وَأَتَجَاوَزُ عَنِ المُعْسِرِ، فَأَدْخَلَهُ اللَّهُ الجَنَّةَ


Bukhari-3450

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 50

பனூ இஸ்ராயீல்-இஸ்ராயீலின் சந்ததிகள் பற்றிய குறிப்பு.

3450. ரிப்யீ இப்னு ஹிராஷ் (ரஹ்) அறிவித்தார்

உக்பா இப்னு ஆமிர்(ரலி), ஹுதைஃபா(ரலி) அவர்களிடம், ‘இறைத்தூதர்(ஸல்) அவர்களிடமிருந்து நீங்கள் கேட்டதை எங்களுக்கு அறிவிக்கமாட்டீர்களா?’ என்று கேட்டார். ஹுதைஃபா(ரலி), ‘தஜ்ஜால் வெளியே வரும்போது அவனுடன் தண்ணீரும் நெருப்பும் இருக்கும். மக்கள் எதை ‘இது நெருப்பு’ என்று கருதுகிறார்களோ அது (உண்மையில்) குளிர்ந்த நீராக இருக்கும்.

மக்கள் எதை ‘இது குளிர்ந்த நீர்’ என்று கருதுகிறார்களோ, அது (உண்மையில்) எரித்துக் கரித்துவிடும் நெருப்பாக இருக்கும். அவனை உங்களில் சந்திக்கிறவர், தான் நெருப்பாகக் கருதுவதில் விழட்டும். ஏனெனில், அது குளிர்ந்த சுவையான நீராகும்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூற கேட்டிருக்கிறேன்’ என்று கூறினார்கள்.
Book : 60


«إِنَّ مَعَ الدَّجَّالِ إِذَا خَرَجَ مَاءً وَنَارًا، فَأَمَّا الَّذِي يَرَى النَّاسُ أَنَّهَا النَّارُ فَمَاءٌ بَارِدٌ، وَأَمَّا الَّذِي يَرَى النَّاسُ أَنَّهُ مَاءٌ بَارِدٌ فَنَارٌ تُحْرِقُ، فَمَنْ أَدْرَكَ مِنْكُمْ فَلْيَقَعْ فِي الَّذِي يَرَى أَنَّهَا نَارٌ، فَإِنَّهُ عَذْبٌ بَارِدٌ»


Bukhari-3449

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3449. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களைச் சேர்ந்த ஒருவரே உங்களுக்கு(த் தொழுகை நடத்தும்) இமாமாக இருக்க மர்யமின் மகன் உங்களிடையே இறங்குவாரேயானால் அப்போது உங்களுக்கு எப்படியிருக்கும்? என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

உகைல் இப்னு காலித்(ரஹ்) அவர்களும் அப்துர்ரஹ்மான் இப்னு அம்ர் அல் அவ்ஸாயீ(ரஹ்) அவர்களும் இதே போன்று அறிவித்தார்கள்.
Book :60


«كَيْفَ أَنْتُمْ إِذَا نَزَلَ ابْنُ مَرْيَمَ فِيكُمْ، وَإِمَامُكُمْ مِنْكُمْ»


Bukhari-3448

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 49

மர்யமின் மைந்தர் ஈசா (அலை) அவர்கள் (பூமிக்கு) இறங்கி வருவது.

3448. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

என் உயிரைத் தன் கையில் வைத்திருப்பவன் மீது சத்தியமாக! விரைவில் (உலக அழிவுக்கு முன்) மர்யமின் மகன் உங்களிடையே நேர்மையாகத் தீர்ப்பளிக்கும் நீதிபதியாக இறங்கவிருக்கிறார். அவர் சிலுவையை உடைப்பார்; பன்றியைக் கொல்வார்; ஜிஸ்யா (எனும் காப்பு) வரியை வாங்க மறுப்பார்; (இஸ்லாம் ஒன்றையே மக்களிடமிருந்து ஏற்பார்.)

செல்வம் (பெரும்) வழிந்தோடும். எந்த அளவுக்கென்றால் அதை வாங்கிக் கொள்பவர் எவரும் இருக்க மாட்டார். அந்த நேரத்தில், ஒரேயொரு சஜ்தா (நெற்றி நிலத்தில் பட அல்லாஹ்வை வணங்குவது) இந்த உலகத்தையும் அதிலுள்ளவற்றையும் விடச் சிறந்ததாக (மக்களின் பார்வையில்) ஆகிவிடும்.

இந்த நபிமொழியை அறிவித்துவிட்டு அபூ ஹுரைரா(ரலி),

‘வேதம் வழங்கப்பட்டவர்களில் எவரும், தாம் இறப்பதற்கு முன்பாக அவர் (முஹம்மதின்) மீது நம்பிக்கை கொள்ளாமல் போக மாட்டார். மேலும், மறுமை நாளில் அவர்களுக்கெதிராக அவர் சாட்சியம் அளிப்பார்’ (திருக்குர்ஆன் 04:159) என்னும் வசனத்தை நீங்கள் விரும்பினால் ஓதிக் கொள்ளுங்கள்’ என்று கூறினார்கள்.
Book : 60


«وَالَّذِي نَفْسِي بِيَدِهِ، لَيُوشِكَنَّ أَنْ يَنْزِلَ فِيكُمْ ابْنُ مَرْيَمَ حَكَمًا عَدْلًا، فَيَكْسِرَ الصَّلِيبَ، وَيَقْتُلَ الخِنْزِيرَ، وَيَضَعَ الجِزْيَةَ، وَيَفِيضَ المَالُ حَتَّى لاَ يَقْبَلَهُ أَحَدٌ، حَتَّى تَكُونَ السَّجْدَةُ الوَاحِدَةُ خَيْرًا مِنَ الدُّنْيَا وَمَا فِيهَا»، ثُمَّ يَقُولُ أَبُو هُرَيْرَةَ: ” وَاقْرَءُوا إِنْ شِئْتُمْ: {وَإِنْ مِنْ أَهْلِ الكِتَابِ إِلَّا لَيُؤْمِنَنَّ بِهِ قَبْلَ مَوْتِهِ، وَيَوْمَ القِيَامَةِ يَكُونُ عَلَيْهِمْ شَهِيدًا} [النساء: 159]


Bukhari-3447

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3447. இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘நீங்கள் (மறுமை நாளில்) காலில் செருப்பணியாதவர்களாகவும், நிர்வாணமானவர்களாகவும் விருத்தசேதனம் செய்யப்படாதவர்களாகவும் எழுப்பப்படுவீர்கள்’ என்று கூறிவிட்டு, பிறகு,

‘எழுதப்பட்ட ஏடு சுருட்டப்படுவதைப் போல் நாம் வானத்தை சுருட்டும் அந்நாளில், நாம் முதலில் எவ்வாறு படைக்கத் தொடங்கினோமோ அவ்வாறே நாம் மீட்டுவோம். இது நம்முடைய பொறுப்பிலுள்ள ஒரு வாக்குறுதியாகும. அதனை நாம் நிறைவேற்றியே தீருவோம்’ என்னும் (திருக்குர்ஆன் 21:104) இறைவசனத்தை ஓதினார்கள்.

முதலாவதாக ஆடை அணிவிக்கப்படுபவர்கள் இப்ராஹீம்(அலை) அவர்கள் ஆவார்கள். பிறகு, என் தோழர்களில் சிலர் (சொர்க்கத்திற்காக) வலப்பக்கமும், (சிலர் நரகத்திற்காக) இடப்பக்கமும் கொண்டு செல்லப்படுவார்கள். நான், ‘இவர்கள் என் தோழர்கள்’ என்று கூறுவேன். ‘இவர்களை விட்டு நீங்கள் பிரிந்ததிலிருந்து இவர்கள், தம் கால் சுவடுகளின் வழியே (எங்கிருந்து) வந்தார்களோ அந்த மதத்திற்குத்) திரும்பிச் சென்று கொண்டிருந்தார்கள்’ என்று சொல்லப்படும்.

அதற்கு நான் நல்லடியாரான மர்யமின் மகன் ஈசா(அலை) அவர்கள் சொன்னதைப் போன்றே, ‘(இறைவா!) நான் இவர்களிடையே (உயிருடன்) வாழ்ந்து வந்த வரை நான் இவர்களைக் கண்காணித்துக் கொண்டிருந்தேன். நீ என்னைத் திரும்ப அழைத்தபோது

تُحْشَرُونَ حُفَاةً، عُرَاةً، غُرْلًا، ثُمَّ قَرَأَ: {كَمَا بَدَأْنَا أَوَّلَ خَلْقٍ نُعِيدُهُ وَعْدًا عَلَيْنَا إِنَّا كُنَّا فَاعِلِينَ} [الأنبياء: 104] فَأَوَّلُ مَنْ يُكْسَى إِبْرَاهِيمُ، ثُمَّ يُؤْخَذُ بِرِجَالٍ مِنْ أَصْحَابِي ذَاتَ اليَمِينِ وَذَاتَ الشِّمَالِ، فَأَقُولُ: أَصْحَابِي، فَيُقَالُ: إِنَّهُمْ لَمْ يَزَالُوا مُرْتَدِّينَ عَلَى أَعْقَابِهِمْ مُنْذُ فَارَقْتَهُمْ، فَأَقُولُ كَمَا قَالَ العَبْدُ الصَّالِحُ عِيسَى ابْنُ مَرْيَمَ: {وَكُنْتُ عَلَيْهِمْ شَهِيدًا مَا دُمْتُ فِيهِمْ، فَلَمَّا تَوَفَّيْتَنِي كُنْتَ أَنْتَ الرَّقِيبَ عَلَيْهِمْ، وَأَنْتَ عَلَى كُلِّ شَيْءٍ شَهِيدٌ، إِنْ تُعَذِّبْهُمْ فَإِنَّهُمْ عِبَادُكَ، وَإِنْ تَغْفِرْ لَهُمْ فَإِنَّكَ أَنْتَ العَزِيزُ الحَكِيمُ} [المائدة: 118]، قَالَ: مُحَمَّدُ بْنُ يُوسُفَ الفَرَبْرِيُّ، ذُكِرَ عَنْ أَبِي عَبْدِ اللَّهِ، عَنْ قَبِيصَةَ، قَالَ: ” هُمُ المُرْتَدُّونَ الَّذِينَ ارْتَدُّوا عَلَى عَهْدِ أَبِي بَكْرٍ فَقَاتَلَهُمْ أَبُو بَكرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ


Bukhari-3446

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3446. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒருவர் தன் அடிமைப் பெண்ணுக்கு ஒழுக்கம் கற்பித்து, அவளுக்கு ஒழுக்கம் கற்பிக்கும் பணியைச் செம்மையான முறையில் செய்து, பிறகு அவளுக்கு விடுதலை அளித்து அவளை (தானே) மணமும் முடித்தார் எனில் அவருக்கு இரண்டு நற்பலன்கள் கிடைக்கும்.

ஒருவர் ஈசாவின் மீது நம்பிக்கை கொண்டு, பிறகு என்னை நம்பினால் அவருக்கு இரண்டு நற்பலன்கள் கிடைக்கும், ஓர் அடிமை தன் இறைவனுக்கு அஞ்சி, தன் எஜமானார்களுக்குக் கீழ்ப்படிந்து நடப்பானாயின் அவனுக்கும் இரண்டு நற்பலன்கள் கிடைக்கும். என அபூ மூஸா அல் அஷ்அரீ(ரலி) அறிவித்தார்.
Book :60


«إِذَا أَدَّبَ الرَّجُلُ أَمَتَهُ فَأَحْسَنَ تَأْدِيبَهَا، وَعَلَّمَهَا فَأَحْسَنَ تَعْلِيمَهَا، ثُمَّ أَعْتَقَهَا فَتَزَوَّجَهَا كَانَ لَهُ أَجْرَانِ، وَإِذَا آمَنَ بِعِيسَى، ثُمَّ آمَنَ بِي فَلَهُ أَجْرَانِ، وَالعَبْدُ إِذَا اتَّقَى رَبَّهُ وَأَطَاعَ مَوَالِيَهُ، فَلَهُ أَجْرَانِ»


Bukhari-3445

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3445. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்

‘நபி(ஸல்) அவர்கள், ‘கிறிஸ்தவர்கள் மர்யமின் மகன் ஈசாவை (அளவுக்கு மீறிப் புகழ்ந்து கடவுள் நிலைக்கு) உயர்த்திவிட்டதைப் போல் நீங்கள் என்னை உயர்த்தி விடாதீர்கள்.

ஏனெனில், நான் அல்லாஹ்வின் அடியான் தான். (அப்படி ஏதாவது என்னைப் பற்றிச் சொல்வதாயிருந்தால்) ‘அல்லாஹ்வின் அடியார்’ என்றும் ‘இறைத்தூதர் என்றும் சொல்லுங்கள்’ என்று கூறினார்கள்’ என மிம்பரின் (உரை மேடை) மீதிருந்தபடி உமர்(ரலி) சொல்ல கேட்டிருக்கிறேன்.
Book :60


«لاَ تُطْرُونِي، كَمَا أَطْرَتْ النَّصَارَى ابْنَ مَرْيَمَ، فَإِنَّمَا أَنَا عَبْدُهُ، فَقُولُوا عَبْدُ اللَّهِ، وَرَسُولُهُ»


Bukhari-3444

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3444. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மர்யமின் மகன் ஈசா(அலை) அவர்கள், ஒருவர் திருடிக் கொண்டிருப்பதைக் கண்டார்கள். அவனிடம், ‘நீ திருடினாயா’ என்று கேட்டார்கள். அதற்கு அவன், ‘இல்லை; எவனைத் தவிர வணக்கத்திற்குரியவர் வேறெவருமில்லையோ அவன் மீதாணையாக!’ என்று பதிலளித்தான்.

உடனே ஈசா(அலை) அவர்கள், ‘அல்லாஹ்வின் மீது நான் நம்பிக்கை கொண்டு, என் கண்ணை நம்ப மறுத்து விட்டேன்’ என்று கூறினார்கள். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Book :60


رَأَى عِيسَى ابْنُ مَرْيَمَ رَجُلًا يَسْرِقُ، فَقَالَ لَهُ: أَسَرَقْتَ؟ قَالَ: كَلَّا وَاللَّهِ الَّذِي لاَ إِلَهَ إِلَّا هُوَ، فَقَالَ عِيسَى: آمَنْتُ بِاللَّهِ، وَكَذَّبْتُ عَيْنِي


Bukhari-3443

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3443. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நான் மர்யமின் மகன் ஈசா(அலை)  அவர்களுக்கு உலகிலும் மறுமையிலும் மக்களிலேயே மிகவும் நெருக்கமானவன் ஆவேன். இறைத் தூதர்கள் ஒரே தந்தையின் பிள்ளைகள் ஆவர். அவர்களின் தாய்மார்கள் பலராவர். அவர்களின் மார்க்கம் ஒன்றே.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

இதே நபிமொழி அபூ ஹுரைரா(ரலி) அவர்களிடமிருந்து வேறொரு அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Book :60


«أَنَا أَوْلَى النَّاسِ بِعِيسَى ابْنِ مَرْيَمَ فِي الدُّنْيَا وَالْآخِرَةِ، وَالْأَنْبِيَاءُ إِخْوَةٌ لِعَلَّاتٍ، أُمَّهَاتُهُمْ شَتَّى وَدِينُهُمْ وَاحِدٌ» وَقَالَ: إِبْرَاهِيمُ بْنُ طَهْمَانَ، عَنْ مُوسَى بْنِ عُقْبَةَ، عَنْ صَفْوَانَ بْنِ سُلَيْمٍ، عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ


Bukhari-3442

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3442. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நான் மர்யமின் மைந்தருக்கு மிகவும் நெருக்கமானவன் ஆவேன் – இறைத் தூதர்கள். தந்தை வழிச் சகோதரர்கள் ஆவர் – எனக்கும் அவருக்கும் இடையே இறைத்தூதர் எவருமில்லை. என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Book :60


«أَنَا أَوْلَى النَّاسِ بِابْنِ مَرْيَمَ، وَالأَنْبِيَاءُ أَوْلاَدُ عَلَّاتٍ، لَيْسَ بَيْنِي وَبَيْنَهُ نَبِيٌّ»


Next Page » « Previous Page