Category: ஹாகிம்

Hakim

Hakim-7937

ஹதீஸின் தரம்: Pending

7937. ஷத்தாத் பின் அவ்ஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் காலத்தில், (ரியா) முகஸ்துதியை சிறிய இணை வைத்தலாக கருதிவந்தோம்.

அறிவிப்பவர்: யஃலா பின் ஷத்தாத் (ரஹ்)


«كُنَّا نَعُدُّ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّ الرِّيَاءَ الشِّرْكُ الْأَصْغَرُ»


Hakim-932

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

932.


أَتَيْنَا جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ، فَقَالَ: سِرْتُ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي غَزْوَةٍ، فَقَامَ يُصَلِّي وَكَانَتْ عَلَيَّ بُرْدَةٌ، فَذَهَبْتُ أُخَالِفُ بَيْنَ أَطْرَافِهَا، ثُمَّ تَوَاثَقْتُ عَلَيْهَا لَا تَسْقُطُ ثُمَّ جِئْتُ عَنْ يَسَارِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَخَذَ بِيَدِي فَأَدَارَنِي حَتَّى أَقَامَنِي عَنْ يَمِينِهِ، فَجَاءَ ابْنُ صَخْرٍ حَتَّى قَامَ عَنْ يَسَارِهِ فَأَخَذَنَا بِيَدَيْهِ جَمِيعًا حَتَّى أَقَامَنَا خَلْفَهُ، قَالَ: وَجَعَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَرْمُقُنِي وَأَنَا لَا أَشْعُرُ، ثُمَّ فَطِنْتُ بِهِ فَأَشَارَ إِلَيَّ أَنْ أَتَّزِرَ بِهَا، فَلَمَّا فَرَغَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «يَا جَابِرُ» قُلْتُ: لَبَّيْكَ يَا رَسُولَ اللَّهِ، قَالَ: «إِذَا كَانَ وَاسِعًا فَخَالِفْ بَيْنَ طَرَفَيْهِ، وَإِذَا كَانَ ضَيِّقًا فَاشْدُدْهُ عَلَى حَقْوِكَ»


Hakim-992

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

992. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உளூ இல்லாதவருக்கு தொழுகை இல்லை. உளூச் செய்யும் போது பிஸ்மில்லாஹ் (அல்லாஹ்வின் பெயரால் என்று) கூறாதவருக்கு உளூ இல்லை. தனது தொழுகையில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மீது ஸலவாத் கூறாதவருக்கு தொழுகை இல்லை.

அறிவிப்பவர்: ஸஹ்ல் பின் ஸஃத் (ரலி)


«لَا صَلَاةَ لِمَنْ لَا وُضُوءَ لَهُ، وَلَا وُضُوءَ لِمَنْ لَمْ يَذْكُرِ اللَّهَ عَلَيْهِ، وَلَا صَلَاةَ لِمَنْ لَمْ يُصَلِّ عَلَى نَبِيِّ اللَّهِ فِي صَلَاتِهِ»


Hakim-6899

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

6899. உளூ இல்லாதவருக்கு தொழுகை இல்லை. அல்லாஹ்வின் பெயர் கூறி உளூச் செய்யாதவருக்கு உளூ இல்லை.

என்னை நம்பிக்கை கொள்ளாதவரும், அன்ஸாரீ நபித்தோழர்களை நேசிக்காதவரும் அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டவராக ஆகமாட்டார் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை நான் செவியேற்றுள்ளேன்.

அறிவிப்பவர்: அஸ்மா பின்த் ஸயீத் பின் ஸைத் (ரலி)


«لَا صَلَاةَ لِمَنْ لَا وُضُوءَ لَهُ، وَلَا وُضُوءَ لِمَنْ لَمْ يَذْكُرِ اسْمَ اللَّهِ تَعَالَى عَلَيْهِ، وَلَا يُؤْمِنُ بِاللَّهِ مَنْ لَا يُؤْمِنُ بِي وَلَا يُحِبُّ الْأَنْصَارَ»


Hakim-519

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

519. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உளூ இல்லாதவருக்கு தொழுகை இல்லை. உளூச் செய்யும் போது பிஸ்மில்லாஹ் (அல்லாஹ்வின் பெயரால் என்று) கூறாதவருக்கு உளூ இல்லை.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


«لَا صَلَاةَ لِمَنْ لَا وُضُوءَ لَهُ، وَلَا وُضُوءَ لِمَنْ لَمْ يَذْكُرِ اسْمَ اللَّهِ عَلَيْهِ»


Hakim-518

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

518. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உளூ இல்லாதவருக்கு தொழுகை இல்லை. உளூச் செய்யும் போது பிஸ்மில்லாஹ் (அல்லாஹ்வின் பெயரால் என்று) கூறாதவருக்கு உளூ இல்லை.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


«لَا صَلَاةَ لِمَنْ لَا وُضُوءَ لَهُ، وَلَا وُضُوءَ لِمَنْ لَمْ يَذْكُرِ اسْمَ اللَّهِ عَلَيْهِ»


Hakim-520

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

520. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உளூ இல்லாதவருக்கு அவரின் தொழுகை செல்லுபடியாகாது. உளூச் செய்யும் போது பிஸ்மில்லாஹ் (அல்லாஹ்வின் பெயரால் என்று) கூறாதவருக்கு அவரின் உளூ செல்லுபடியாகாது.

அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ (ரலி)


«لَا صَلَاةَ لِمَنْ لَا وُضُوءَ لَهُ، وَلَا وُضُوءَ لِمَنْ لَمْ يَذْكُرِ اسْمَ اللَّهِ عَلَيْهِ»

فَأَخْبَرَنِي عَلِيُّ بْنُ بُنْدَارٍ الزَّاهِدُ، ثنا عُمَرُ بْنُ مُحَمَّدِ بْنِ جُبَيْرٍ، ثنا أَبُو بَكْرٍ الْأَثْرَمُ. وَقَالَ: سَمِعْتُ أَحْمَدَ بْنَ حَنْبَلٍ، وَسُئِلَ عَمَّنْ يَتَوَضَّأُ وَلَا يُسَمِّي فَقَالَ أَحْمَدُ: أَحْسَنُ مَا يُرْوَى فِي هَذَا الْحَدِيثِ كَثِيرُ بْنُ زَيْدٍ


Hakim-445

ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

445. அம்ர் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் மஸ்ஜிதுன் நபவி பள்ளிவாசலில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை சுற்றி அமர்ந்திருந்தோம்…

மூஸா (அலை) அவர்களின் சமுதாயத்தின் பனீ இஸ்ரவேலர்கள் எழுபத்தி ஒரு கூட்டத்தினராக பிரிந்தனர். அனைவரும் வழிகெட்டுவிட்டனர். இஸ்லாத்தை பின்பற்றிய ஒரு கூட்டத்தை தவிர. ஈஸா (அலை) அவர்களின் சமுதாயத்தின் பனீ இஸ்ரவேலர்கள் எழுபத்தி ஒரு கூட்டத்தினராக பிரிந்தனர். அனைவரும் வழிகெட்டுவிட்டனர். இஸ்லாத்தை பின்பற்றிய ஒரு கூட்டத்தை தவிர. பின்பு நீங்கள் எழுபத்திரண்டு கூட்டத்தினராக பிரிவீர்கள். அனைவரும் வழிகெட்டுவிட்டனர். இஸ்லாத்தை பின்பற்றிய ஒரு கூட்டத்தை தவிர! என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.


كُنَّا قُعُودًا حَوْلَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي مَسْجِدِهِ، فَقَالَ: «لَتَسْلُكُنَّ سَنَنَ مَنْ قَبْلَكُمْ حَذْوَ النَّعْلِ بِالنَّعْلِ، وَلَتَأْخُذُنَّ مِثْلَ أَخْذِهِمْ إِنْ شِبْرًا فَشِبْرٌ، وَإِنْ ذِرَاعًا فَذِرَاعٌ، وَإِنْ بَاعًا فَبَاعٌ، حَتَّى لَوْ دَخَلُوا جُحْرَ ضَبٍّ دَخَلْتُمْ فِيهِ، أَلَا إِنَّ بَنِي إِسْرَائِيلَ افْتَرَقَتْ عَلَى مُوسَى عَلَى إِحْدَى وَسَبْعِينَ فِرْقَةً كُلُّهَا ضَالَّةٌ إِلَّا فِرْقَةٌ وَاحِدَةٌ الْإِسْلَامُ وَجَمَاعَتُهُمْ، وَإِنَّهَا افْتَرَقَتْ عَلَى عِيسَى ابْنِ مَرْيَمَ عَلَى إِحْدَى وَسَبْعِينَ فِرْقَةً كُلُّهَا ضَالَّةٌ إِلَّا فِرْقَةٌ وَاحِدَةٌ الْإِسْلَامُ وَجَمَاعَتُهُمْ، ثُمَّ إِنَّهُمْ يَكُونُونَ عَلَى اثْنَتَيْنِ وَسَبْعِينَ فِرْقَةً كُلُّهَا ضَالَّةٌ إِلَّا فِرْقَةٌ وَاحِدَةٌ الْإِسْلَامُ وَجَمَاعَتُهُمْ»

آخِرُ كِتَابِ الْعِلْمِ


Hakim-8325

ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

8325. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

எனது சமுதாயத்தினர் எழுபதுக்கு மேற்பட்ட பிரிவினராக பிரிவார்கள். தங்கள் சுயசிந்தனையால் அனுமதிக்கப்பட்டதை தடுக்கப்பட்டது என்றும், தடுக்கப்பட்டதை அனுமதிக்கப்பட்டது என்றும் கூறுவார்கள். இவர்கள் தான் எனது சமுதாயத்திற்கு மிகப்பெரும் சோதனையாக இருப்பார்கள்.

அறிவிப்பவர்: அவ்ஃப் பின் மாலிக் (ரலி)


«سَتَفْتَرِقُ أُمَّتِي عَلَى بِضْعٍ وَسَبْعِينَ فِرْقَةً، أَعْظَمُهَا فِرْقَةُ قَوْمٍ يَقِيسُونَ الْأُمُورَ بِرَأْيِهِمْ فَيُحَرِّمُونَ الْحَلَالَ وَيُحَلِّلُونَ الْحَرَامَ»


Hakim-6325

ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

6325. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

எனது சமுதாயத்தினர் எழுபதுக்கு மேற்பட்ட பிரிவினராக பிரிவார்கள். தங்கள் சுயசிந்தனையால் அனுமதிக்கப்பட்டதை தடுக்கப்பட்டது என்றும், தடுக்கப்பட்டதை அனுமதிக்கப்பட்டது என்றும் கூறுவார்கள். இவர்கள் தான் எனது சமுதாயத்திற்கு மிகப்பெரும் சோதனையாக இருப்பார்கள்.

அறிவிப்பவர்: அவ்ஃப் பின் மாலிக் (ரலி)


«تَفْتَرِقُ أُمَّتِي عَلَى بِضْعٍ وَسَبْعِينَ فِرْقَةً، أَعْظَمُهَا فِتْنَةٌ عَلَى أُمَّتِي قَوْمٌ يَقِيسُونَ الْأُمُورَ بِرَأْيِهِمْ فَيُحِلُّونَ الْحَرَامَ وَيُحَرِّمُونَ الْحَلَالَ»


Next Page » « Previous Page