ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி ❌
4024. அபூஸயீத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தபோது (அவர்களை நலம் விசாரிக்க) நான் சென்றேன். அப்போது அவர்கள் மீது என் கையை வைத்தேன். அவர்களின் (மீதிருந்த) போர்வையின் மேலிருந்து கூட நான் காய்ச்சலின் வெப்பத்தை உணர்ந்தேன்.
உடனே நான், “அல்லாஹ்வின் தூதரே! உங்களுக்கு இவ்வளவு கடுமையான காய்ச்சல் இருக்கிறதே!” என்று கூறினேன். அதற்கவர்கள் ‘நாங்கள் (நபிமார்கள்) அப்படித்தான் சோதனை எங்களுக்குப் பலமடங்கு இருக்கும்; அதனால் (அல்லாஹ்வின்) கூலியும் எங்களுக்கு பலமடங்கு கிடைக்கும்’ என்று கூறினார்கள். உடனே நான், “அல்லாஹ்வின் தூதரே! மக்களில் அதிகம் சோதிக்கப்பட்டோர் யார்? என்று கேட்டேன். அதற்கவர்கள், “நபிமார்கள்” என்று பதிலளித்தார்கள். அவர்களை அடுத்து யார்? என்று கேட்டேன். அதற்கவர்கள், “நல்லோர்கள்” என்று கூறிவிட்டு,
“அவர்கள் எந்தளவிற்கு வறுமையால் சோதிக்கப்பட்டார்கள் என்றால் அவர்கள் போர்த்திக்கொள்ளும் ஒரு ஆடையைத் தவிர வேறு எதுவும் அவர்களிடம் இருக்காது. மேலும் உங்களில் ஒருவருக்கு செல்வசெழிப்பும் வசதியும் கிடைக்கும்போது அவர் எந்தளவிற்கு மகிழ்ச்சி அடைவாரோ அது போன்று அவர்கள் சோதனைகளால் மகிழ்ச்சி அடைவார்கள்” என்று கூறினார்கள்.
دَخَلْتُ عَلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ يُوعَكُ، فَوَضَعْتُ يَدِي عَلَيْهِ فَوَجَدْتُ حَرَّهُ بَيْنَ يَدَيَّ فَوْقَ اللِّحَافِ، فَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ مَا أَشَدَّهَا عَلَيْكَ قَالَ: «إِنَّا كَذَلِكَ يُضَعَّفُ لَنَا الْبَلَاءُ، وَيُضَعَّفُ لَنَا الْأَجْرُ» قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ أَيُّ النَّاسِ أَشَدُّ بَلَاءً؟ قَالَ: «الْأَنْبِيَاءُ» ، قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ ثُمَّ مَنْ؟ قَالَ: «ثُمَّ الصَّالِحُونَ،
إِنْ كَانَ أَحَدُهُمْ لَيُبْتَلَى بِالْفَقْرِ، حَتَّى مَا يَجِدُ أَحَدُهُمْ إِلَّا الْعَبَاءَةَ يَحُوبُهَا، وَإِنْ كَانَ أَحَدُهُمْ لَيَفْرَحُ بِالْبَلَاءِ، كَمَا يَفْرَحُ أَحَدُكُمْ بِالرَّخَاءِ»
சமீப விமர்சனங்கள்