Category: இப்னுமாஜா

Ibn-Majah-394

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

394. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் ஒருவர் தூக்கத்திலிருந்து விழித்தெழுந்தால் கைகளில் தண்ணீர் ‎ஊற்றிக் கழுவாமல் தனது கையைப் பாத்திரத்தில் விடவேண்டாம்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


«إِذَا اسْتَيْقَظَ أَحَدُكُمْ مِنْ نَوْمِهِ، فَلَا يُدْخِلْ يَدَهُ فِي الْإِنَاءِ حَتَّى يَغْسِلَهَا»


Ibn-Majah-393

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்:

ஒருவர் (உறங்கி) விழித்தெழுந்தால் கைகளைக் கழுவதற்கு முன் உளூச் செய்யும் பாத்திரத்தில் கைகளை விடலாமா?

393. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இரவில் உங்களில் ஒருவர் (உறங்கி) விழித்தெழுந்தால் இரண்டு அல்லது மூன்று முறை கைகளில் தண்ணீர் ‎ஊற்றிக் கழுவாமல் தனது கையைப் பாத்திரத்தில் விடவேண்டாம். ஏனெனில் இரவில் ‎அவரது கை எங்கெங்கு பட்டது என்பதை அவர் அறிய மாட்டார்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


«إِذَا اسْتَيْقَظَ أَحَدُكُمْ مِنَ اللَّيْلِ، فَلَا يُدْخِلْ يَدَهُ فِي الْإِنَاءِ، حَتَّى يُفْرِغَ عَلَيْهَا مَرَّتَيْنِ أَوْ ثَلَاثًا، فَإِنَّ أَحَدَكُمْ لَا يَدْرِي فِيمَ بَاتَتْ يَدُهُ»


Ibn-Majah-274

ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

274. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(உளூ எனும்) அங்கத் தூய்மையின்றி எந்தத் தொழுகையையும் அல்லாஹ் ஏற்கமாட்டான். மோசடி செய்த பொருளால் செய்யப்படும் எந்த தானதர்மத்தையும் அல்லாஹ் ஏற்கமாட்டான்.

அறிவிப்பவர்: அபூபக்ரா (நுஃபைஃ பின் ஹாரிஸ்-ரலி)


«لَا يَقْبَلُ اللَّهُ صَلَاةً بِغَيْرِ طُهُورٍ، وَلَا صَدَقَةً مِنْ غُلُولٍ»


Ibn-Majah-273

ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

273. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(உளூ எனும்) அங்கத் தூய்மையின்றி எந்தத் தொழுகையையும் அல்லாஹ் ஏற்கமாட்டான். மோசடி செய்த பொருளால் செய்யப்படும் எந்த தானதர்மத்தையும் அல்லாஹ் ஏற்கமாட்டான்.

அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)


«لَا يَقْبَلُ اللَّهُ صَلَاةً بِغَيْرِ طُهُورٍ، وَلَا صَدَقَةً مِنْ غُلُولٍ»


Ibn-Majah-271

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 2

(உளூ எனும்) அங்கத் தூய்மையில்லாத ‎தொழுகையை அல்லாஹ் ஏற்றுக் கொள்ளமாட்டான்.

271. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உளூ இல்லாத எந்தத் ‎தொழுகையையும்; மோசடிப் பொருளால் வழங்கப்படும் எந்தத் தர்மத்தையும் அல்லாஹ் ஏற்றுக் கொள்ளமாட்டான்.

அறிவிப்பவர்: உஸாமா பின் உமைர் (ரலி)


«لَا يَقْبَلُ اللَّهُ صَلَاةً إِلَّا بِطُهُورٍ، وَلَا يَقْبَلُ صَدَقَةً مِنْ غُلُولٍ»

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ قَالَ: حَدَّثَنَا عُبَيْدُ بْنُ سَعِيدٍ، وَشَبَابَةُ بْنُ سَوَّارٍ، عَنْ شُعْبَةَ نَحْوَهُ


Ibn-Majah-272

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

272. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(உளூ எனும்) அங்கத் தூய்மையின்றி எந்தத் தொழுகையையும் அல்லாஹ் ஏற்கமாட்டான். மோசடி செய்த பொருளால் செய்யப்படும் எந்த தானதர்மத்தையும் அல்லாஹ் ஏற்கமாட்டான்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)


«لَا يَقْبَلُ اللَّهُ صَلَاةً إِلَّا بِطُهُورٍ، وَلَا صَدَقَةً مِنْ غُلُولٍ»


Ibn-Majah-858

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்:

ருகூவிற்கு செல்லும் போதும், ருகூவிலிருந்து தலையை உயர்த்தும் போதும் இருகைகளை உயர்த்துவது.

858. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுகையை ஆரம்பிக்கும் போதும், ருகூவுக்கு செல்லும் போதும், ருகூவிலிருந்து தலையை உயர்த்தும் போதும் தம் இருகைகளையும் தம் இருதோள்களுக்கு நேராக உயர்த்துவதையும், இரு ஸஜ்தாக்களுக்கிடையில் இவ்வாறு கைகளை உயர்த்தாமலிருப்பதையும் நான் பார்த்துள்ளேன்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)


«رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، إِذَا افْتَتَحَ الصَّلَاةَ رَفَعَ يَدَيْهِ حَتَّى يُحَاذِيَ بِهِمَا مَنْكِبَيْهِ، وَإِذَا رَكَعَ، وَإِذَا رَفَعَ رَأْسَهُ مِنَ الرُّكُوعِ، وَلَا يَرْفَعُ بَيْنَ السَّجْدَتَيْنِ»


Ibn-Majah-4227

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்:

எண்ணம்.

4227. செயல்கள் அனைத்தும் எண்ணங்களைப் பொருத்தே அமைகின்றன. ஒவ்வொருவருக்கும் அவர் எண்ணியதே கிடைக்கிறது. எனவே, எவருடைய ஹிஜ்ரத் (நாடு துறத்தல்) அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் (திருப்பதிப்படுத்துவதை) நோக்கமாகக் கொண்டு அமைகிறதோ, அவரின் ஹிஜ்ரத்(தின் பலனும் அவ்வாறே) அல்லாஹ்விடமும் அவனுடைய தூதரிடமும் அமையும்.

எவருடைய ஹிஜ்ரத் அவர் அடைய விரும்பும் உலக(ஆதாய)த்தை, அல்லது அவர் மணக்கவிரும்பும் பெண்ணை நோக்கமாகக் கொண்டுள்ளதோ, அவரின் ஹிஜ்ரத்(தின் பலனும்) அதுவாகத்தான் இருக்கும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை நான் செவியேற்றேன் என  மக்களுக்கு உமர் (ரலி) அவர்கள் உரைநிகழ்த்தும் போது கூறியதை நான் செவியேற்றேன்.

அறிவிப்பவர்: அல்கமா பின் வக்காஸ் அல்லைஸிய்யீ (ரஹ்)


إِنَّهُ سَمِعَ عُمَرَ بْنَ الْخَطَّابِ، وَهُوَ يَخْطُبُ النَّاسَ، فَقَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ: «إِنَّمَا الْأَعْمَالُ بِالنِّيَّاتِ، وَلِكُلِّ امْرِئٍ مَا نَوَى، فَمَنْ كَانَتْ هِجْرَتُهُ إِلَى اللَّهِ، وَإِلَى رَسُولِهِ، فَهِجْرَتُهُ إِلَى اللَّهِ، وَإِلَى رَسُولِهِ، وَمَنْ كَانَتْ هِجْرَتُهُ لِدُنْيَا يُصِيبُهَا، أَوِ امْرَأَةٍ يَتَزَوَّجُهَا، فَهِجْرَتُهُ إِلَى مَا هَاجَرَ إِلَيْهِ»


Ibn-Majah-3547

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

3547. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் ஒருவர் (பயணத்தில்) ஓரிடத்தில் இறங்கித் தங்கும்போது. “அஊது பி கலிமாத்தில்லாஹித் தாம்மாத்தி மின் ஷர்ரி மா கலக” என்று கூறினால். அவர் அங்கிருந்து புறப்பட்டுச் செல்லும்வரை அவருக்கு எதுவும் தீங்கிழைக்காது.

அறிவிப்பவர்: கவ்லா பின்த் ஹகீம் (ரலி)


لَوْ أَنَّ أَحَدَكُمْ إِذَا نَزَلَ مَنْزِلًا قَالَ: أَعُوذُ بِكَلِمَاتِ اللَّهِ التَّامَّاتِ مِنْ شَرِّ مَا خَلَقَ لَمْ يَضُرَّهُ فِي ذَلِكَ الْمَنْزِلِ شَيْءٌ حَتَّى يَرْتَحِلَ مِنْهُ


Ibn-Majah-1595

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

1595. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

(இறந்தவருக்காக அழுவதன் காரணமாக இறைநம்பிக்கையாளரை அல்லாஹ் வேதனை செய்வான்” என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறவில்லை. மாறாக,) ஒரு யூதப்பெண் இறந்தபோது (அவரது குடும்பத்தினர்) அவருக்காக அழுவதை செவியேற்ற நபி (ஸல்) அவர்கள், “இவரின் குடும்பத்தினர் அவருக்காக அழுகின்றனர்; ஆனால் அவரோ கப்ரில் வேதனைசெய்யப்படுகிறார்” என்றுதான் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உபைதுல்லாஹ் (ரஹ்)


إِنَّمَا كَانَتْ يَهُودِيَّةٌ مَاتَتْ، فَسَمِعَهُمُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَبْكُونَ عَلَيْهَا، قَالَ: «فَإِنَّ أَهْلَهَا يَبْكُونَ عَلَيْهَا، وَإِنَّهَا تُعَذَّبُ فِي قَبْرِهَا»


Next Page » « Previous Page