Category: முஸ்லிம்

Muslim-3558

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 3

விருந்து உள்ளிட்ட உபசாரம்.

3558. அபூஷுரைஹ் அல்அதவீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பேசியபோது என் காதுகளால் கேட்டேன்; என் கண்களால் பார்த்தேன். அப்போது அவர்கள், “அல்லாஹ்வின் மீதும் மறுமை நாளின் மீதும் நம்பிக்கை கொண்டவர் தம் விருந்தாளிக்குத் தமது கொடையைக் கண்ணியமாக வழங்கட்டும்” என்று கூறினார்கள். மக்கள், “அவருடைய கொடை என்ன, அல்லாஹ்வின் தூதரே?” என்று கேட்டார்கள்.

அதற்கு அவர்கள், “(அவருடைய கொடை) ஒரு பகல் ஓர் இரவு (உபசரிப்பு) ஆகும். விருந்துபசாரம் மூன்று தினங்களாகும். அவற்றுக்குப் பின்னால் (அளிக்கும் உணவும் உபசரிப்பும்) அவருக்குத் தர்மமாக அமையும். மேலும்,அல்லாஹ்வின் மீதும் மறுமை நாளின் மீதும் நம்பிக்கை கொண்டவர் (ஒன்று) நல்லதைப் பேசட்டும். அல்லது மௌனமாக இருக்கட்டும்” என்று கூறினார்கள்.

Book : 31


سَمِعَتْ أُذُنَايَ، وَأَبْصَرَتْ عَيْنَايَ، حِينَ تَكَلَّمَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: «مَنْ كَانَ يُؤْمِنُ بِاللهِ وَالْيَوْمِ الْآخِرِ فَلْيُكْرِمْ ضَيْفَهُ جَائِزَتَهُ»، قَالُوا: وَمَا جَائِزَتُهُ يَا رَسُولَ اللهِ؟ قَالَ: «يَوْمُهُ وَلَيْلَتُهُ. وَالضِّيَافَةُ ثَلَاثَةُ أَيَّامٍ، فَمَا كَانَ وَرَاءَ ذَلِكَ فَهُوَ صَدَقَةٌ عَلَيْهِ»
وَقَالَ: «مَنْ كَانَ يُؤْمِنُ بِاللهِ وَالْيَوْمِ الْآخِرِ فَلْيَقُلْ خَيْرًا أَوْ لِيَصْمُتْ»


Muslim-3557

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 2

உரிமையாளரின் அனுமதியின்றி கால்நடையில் பால் கறப்பதற்கு வந்துள்ள தடை.

3557. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒருவரது கால்நடையில் அவரது அனுமதியின்றி வேறெவரும் பால் கறக்கவேண்டாம். உங்களில் எவரும் அவரது சரக்குப் பெட்டகத்திற்கு ஒருவர் வந்து, அவரது உணவுக் கருவூலத்தை உடைத்து, அவரது உணவை எடுத்துச் சென்றுவிடுவதை விரும்புவாரா? கால் நடைகளின் மடிகள், கால்நடை உரிமையாளர்களுடைய உணவையே சேகரித்துப் பாதுகாத்து வைத்திருக்கின்றன. ஆகவே, எவரும் உரிமையாளரின் அனுமதியின்றி எவரது கால்நடையிலும் பால் கறக்க வேண்டாம்.

இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

– மேற்கண்ட ஹதீஸ் இப்னு உமர் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் பத்து அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.

அவற்றில் லைஸ் பின் சஅத் (ரஹ்) அவர்களைத் தவிர மற்ற அனைவரது அறிவிப்புகளிலும் “எடுத்துச் சென்றுவிடுவதை”

«لَا يَحْلُبَنَّ أَحَدٌ مَاشِيَةَ أَحَدٍ إِلَّا بِإِذْنِهِ، أَيُحِبُّ أَحَدُكُمْ أَنْ تُؤْتَى مَشْرُبَتُهُ، فَتُكْسَرَ خِزَانَتُهُ، فَيُنْتَقَلَ طَعَامُهُ؟ إِنَّمَا تَخْزُنُ لَهُمْ ضُرُوعُ مَوَاشِيهِمْ أَطْعِمَتَهُمْ، فَلَا يَحْلُبَنَّ أَحَدٌ مَاشِيَةَ أَحَدٍ إِلَّا بِإِذْنِهِ»

– وَحَدَّثَنَاهُ قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، وَمُحَمَّدُ بْنُ رُمْحٍ، جَمِيعًا عَنِ اللَّيْثِ بْنِ سَعْدٍ، ح وَحَدَّثَنَاهُ أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُسْهِرٍ، ح وحَدَّثَنَا ابْنُ نُمَيْرٍ، حَدَّثَنِي أَبِي، كِلَاهُمَا عَنْ عُبَيْدِ اللهِ، ح وحَدَّثَنِي أَبُو الرَّبِيعِ، وَأَبُو كَامِلٍ، قَالَا: حَدَّثَنَا حَمَّادٌ، ح وحَدَّثَنِي زُهَيْرُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ يَعْنِي ابْنَ عُلَيَّةَ، جَمِيعًا عَنْ أَيُّوبَ، ح وحَدَّثَنَا ابْنُ أَبِي عُمَرَ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ إِسْمَاعِيلَ بْنِ أُمَيَّةَ، ح وحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ رَافِعٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، عَنْ مَعْمَرٍ، عَنْ أَيُّوبَ، وَابْنُ جُرَيْجٍ، عَنْ مُوسَى، كُلُّ هَؤُلَاءِ عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَحْوَ حَدِيثِ مَالِكٍ، غَيْرَ أَنَّ فِي حَدِيثِهِمْ جَمِيعًا: «فَيُنْتَثَلَ»، إِلَّا اللَّيْثَ بْنَ سَعْدٍ، فَإِنَّ فِي حَدِيثِهِ: «فَيُنْتَقَلَ طَعَامُهُ»، كَرِوَايَةِ مَالِكٍ


Muslim-3556

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3556. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

கண்டெடுக்கப்பட்ட பொருளைப் பற்றி அறிவிப்புச் செய்யாமல் அதைத் தம்மிடம் வைத்துக் கொண்டிருக்கும் ஒருவர் வழிகேட்டிலேயே உள்ளார்.

இதை ஸைத் பின் காலித் அல்ஜுஹனீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

Book : 31


«مَنْ آوَى ضَالَّةً فَهُوَ ضَالٌّ، مَا لَمْ يُعَرِّفْهَا»


Muslim-3555

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3555. அப்துர் ரஹ்மான் பின் உஸ்மான் அத்தைமீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ஹாஜிகள் தவறவிட்ட பொருளை எடுக்க வேண்டாமெனத் தடை விதித்தார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

Book : 31


«أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَنْ لُقَطَةِ الْحَاجِّ»


Muslim-3554

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3554. மேற்கண்ட ஹதீஸ் மேலும் ஐந்து அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.

அவற்றில் அனைவருடைய அறிவிப்பிலும் ‘மூன்று ஆண்டுக் காலத்திற்கு அறிவிப்புச் செய்(ய வேண்டும்)’ என இடம்பெறறுள்ளது. ஹம்மாத் பின் சலமா (ரஹ்) அவர்களது அறிவிப்பில் மட்டும் ‘இரண்டு ஆண்டுக் காலத்திற்கு அல்லது மூன்று ஆண்டுக் காலத்திற்கு அறிவிப்புச் செய்ய வேண்டும்’ என்று (ஐயப்பாட்டுடன்) இடம் பெற்றுள்ளது.

சுஃப்யான் பின் சயீத் (ரஹ்), ஸைத் பின் அபீஉனைசா (ரஹ்), ஹம்மாத் பின் சலமா (ரஹ்) ஆகியோரின் அறிவிப்புகளில், ‘பின்னர் யாரேனும் ஒருவர் (கண்டெடுக்கப்பட்ட) அப்பொருனின் எண்ணிக்கையையும் பையையும் அதன் முடிச்சையும் தெரிவித்து (உன்னிடம்) வந்தால் அதை அவரிடம் கொடுத்துவிட’ என்று இடம்பெற்றுள்ளது.

சுஃப்யான் பின் சயீத் (ரஹ்) அவர்களிடமிருந்து வகீஉ (ரஹ்) அவர்கள் அறிவிக்கும் அறிவிப்பில் அறிவிக்கும் அறிவிப்பில் ‘(அறிவிப்புச் செய்தும் யாரும் வராவிட்டால்) அது உனது செல்வத்தின் வகையைப் போன்றதாகும்’ என்று இடம்பெற்றுள்ளது. சுஃப்யானிடமிருந்து முஹம்மத் பின்

وحَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنِ الْأَعْمَشِ، ح وحَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا وَكِيعٌ، ح وحَدَّثَنَا ابْنُ نُمَيْرٍ، حَدَّثَنَا أَبِي، جَمِيعًا عَنْ سُفْيَانَ، ح وحَدَّثَنِي مُحَمَّدُ بْنُ حَاتِمٍ، حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ جَعْفَرٍ الرَّقِّيُّ، حَدَّثَنَا عُبَيْدُ اللهِ يَعْنِي ابْنَ عَمْرٍو، عَنْ زَيْدِ بْنِ أَبِي أُنَيْسَةَ، ح وحَدَّثَنِي عَبْدُ الرَّحْمَنِ بْنُ بِشْرٍ، حَدَّثَنَا بَهْزٌ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، كُلُّ هَؤُلَاءِ عَنْ سَلَمَةَ بْنِ كُهَيْلٍ، بِهَذَا الْإِسْنَادِ نَحْوَ حَدِيثِ شُعْبَةَ، وَفِي حَدِيثِهِمْ جَمِيعًا ثَلَاثَةَ أَحْوَالٍ، إِلَّا حَمَّادَ بْنَ سَلَمَةَ، فَإِنَّ فِي حَدِيثِهِ عَامَيْنِ أَوْ ثَلَاثَةً، وَفِي حَدِيثِ سُفْيَانَ، وَزَيْدِ بْنِ أَبِي أُنَيْسَةَ، وَحَمَّادِ بْنِ سَلَمَةَ، «فَإِنْ جَاءَ أَحَدٌ يُخْبِرُكَ بِعَدَدِهَا وَوِعَائِهَا وَوِكَائِهَا، فَأَعْطِهَا إِيَّاهُ»، وَزَادَ سُفْيَانُ فِي رِوَايَةِ وَكِيعٍ: «وَإِلَّا فَهِيَ كَسَبِيلِ مَالِكَ»، وَفِي رِوَايَةِ ابْنِ نُمَيْرٍ: «وَإِلَّا فَاسْتَمْتِعْ بِهَا»


Muslim-3553

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3553. சுவைத் பின் ஃகஃபலா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நானும் ஸைத் பின் ஸூஹான் (ரலி) அவர்களும் சல்மான பின் ரபீஆ (ரலி) அவர்களும் ஒரு போருக்காகப் புறப்பட்டுச் சென்றபோது, (ஓரிடத்தில்) சாட்டை ஒன்றை நான் கண்டேன். அதை நான் எடுத்துக் கொண்டேன். (என் தோழர்கள்) இருவரும், ‘அதை போட்டுவிடு’ என்று கூறினார்கள். நான், ‘இல்லை. நூன் இதைப் பற்றி அறிவிப்புச் செய்துகொண்டிருப்பேன். இதன் உரிமையாளர் வந்தால் சரி (அதை அவரிடம் ஒப்படைத்து விடுவேன்). இல்லையென்றால், இதை நான் பயன்படுத்திக்கொள்வேன்’ என்று அவர்களிடம் கூறி மறுத்துவிட்டேன் .

நாங்கள் போரை முடித்துக்கொண்டு திரும்பியபோது, நான் ஹஜ்ஜுக்குச் செல்வேன் என என் விதியில் இருந்தது (நான் ஹஜ்ஜுக்குச் சென்றேன்). அப்போது நான் மதீனா (வழியாகச்) சென்றேன். (அங்கு) உபை பின் கஅப் (ரலி) அவர்களைச் சந்தித்தேன். அந்தச் சாட்டையைப் பற்றியும் அதைப் பற்றி என் தோழர்கள் இருவரும் கூறியதைப் பற்றியும் அவர்களிடம் தெரிவித்தேன். அப்போது உபை பின் கஅப் (ரலி) அவர்கள் கூறினார்கள்:

நான், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்தில்

خَرَجْتُ أَنَا وَزَيْدُ بْنُ صُوحَانَ، وَسَلْمَانُ بْنُ رَبِيعَةَ، غَازِينَ، فَوَجَدْتُ سَوْطًا فَأَخَذْتُهُ، فَقَالَا لِي: دَعْهُ، فَقُلْتُ: لَا، وَلَكِنِّي أُعَرِّفُهُ، فَإِنْ جَاءَ صَاحِبُهُ، وَإِلَّا اسْتَمْتَعْتُ بِهِ، قَالَ: فَأَبَيْتُ عَلَيْهِمَا، فَلَمَّا رَجَعْنَا مِنْ غَزَاتِنَا، قُضِيَ لِي أَنِّي حَجَجْتُ، فَأَتَيْتُ الْمَدِينَةَ، فَلَقِيتُ أُبَيَّ بْنَ كَعْبٍ، فَأَخْبَرْتُهُ بِشَأْنِ السَّوْطِ وَبِقَوْلِهِمَا، فَقَالَ: إِنِّي وَجَدْتُ صُرَّةً فِيهَا مِائَةُ دِينَارٍ عَلَى عَهْدِ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَأَتَيْتُ بِهَا رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: «عَرِّفْهَا حَوْلًا»، قَالَ: فَعَرَّفْتُهَا فَلَمْ أَجِدْ مَنْ يَعْرِفُهَا، ثُمَّ أَتَيْتُهُ، فَقَالَ: «عَرِّفْهَا حَوْلًا»، فَعَرَّفْتُهَا، فَلَمْ أَجِدْ مَنْ يَعْرِفُهَا، ثُمَّ أَتَيْتُهُ، فَقَالَ: «عَرِّفْهَا حَوْلًا»، فَعَرَّفْتُهَا فَلَمْ أَجِدْ مَنْ يَعْرِفُهَا، فَقَالَ: «احْفَظْ عَدَدَهَا، وَوِعَاءَهَا، وَوِكَاءَهَا، فَإِنْ جَاءَ صَاحِبُهَا وَإِلَّا، فَاسْتَمْتِعْ بِهَا»، فَاسْتَمْتَعْتُ بِهَا، فَلَقِيتُهُ بَعْدَ ذَلِكَ بِمَكَّةَ، فَقَالَ: لَا أَدْرِي بِثَلَاثَةِ أَحْوَالٍ أَوْ حَوْلٍ وَاحِدٍ

– وحَدَّثَنِي عَبْدُ الرَّحْمَنِ بْنُ بِشْرٍ الْعَبْدِيُّ، حَدَّثَنَا بَهْزٌ، حَدَّثَنَا شُعْبَةُ، أَخْبَرَنِي سَلَمَةُ بْنُ كُهَيْلٍ، أَوْ أَخْبَرَ الْقَوْمَ وَأَنَا فِيهِمْ، قَالَ: سَمِعْتُ سُوَيْدَ بْنَ غَفَلَةَ، قَالَ: خَرَجْتُ مَعَ زَيْدِ بْنِ صُوحَانَ، وَسَلْمَانَ بْنِ رَبِيعَةَ، فَوَجَدْتُ سَوْطًا، وَاقْتَصَّ الْحَدِيثَ بِمِثْلِهِ إِلَى قَوْلِهِ، فَاسْتَمْتَعْتُ بِهَا، قَالَ شُعْبَةُ: فَسَمِعْتُهُ بَعْدَ عَشْرِ سِنِينَ، يَقُولُ: عَرَّفَهَا عَامًا وَاحِدًا


Muslim-3552

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3552. மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.

அதில் “பின்னர் அதற்குரியவர் அறிந்து கொள்ளப்பட்டால் அதை (அவரிடம்) ஒப்படைத்துவிடு. இல்லையென்றால், அதன் பையையும் முடிச்சையும் எண்ணிக்கையையும் நீ அறிந்து வைத்துக்கொள்” என்று இடம்பெற்றுள்ளது.

Book : 31


وحَدَّثَنِيهِ إِسْحَاقُ بْنُ مَنْصُورٍ، أَخْبَرَنَا أَبُو بَكْرٍ الْحَنَفِيُّ، حَدَّثَنَا الضَّحَّاكُ بْنُ عُثْمَانَ، بِهَذَا الْإِسْنَادِ، وَقَالَ فِي الْحَدِيثِ: «فَإِنِ اعْتُرِفَتْ فَأَدِّهَا، وَإِلَّا، فَاعْرِفْ عِفَاصَهَا، وَوِكَاءَهَا، وَعَدَدَهَا»


Muslim-3551

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3551. ஸைத் பின் காலித் அல்ஜுஹனி (ரலி) அவர்கள் கூறியதாவது :

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கண்டெடுக்கப்பட்ட பொருள் குறித்து வினவப்பட்டது. அப்போது அவர்கள் “ஓராண்டுக் காலத்திற்கு அதைப் பற்றி அறிவிப்புச் செய்து கொண்டேயிரு (அதற்குரியவர்) அறியப்படாவிட்டால் அதன் பையையும் முடிச்சையும் நீ அறிந்து வைத்துகொள். பிறகு நீ அதை உண்ணலாம. பிறகு அதற்குரியவர் வந்தால் அவரிடம் அ(தற்குரிய)தை செலுத்திவிடு” என்று கூறினார்கள்.

Book : 31


سُئِلَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ اللُّقَطَةِ، فَقَالَ: «عَرِّفْهَا سَنَةً، فَإِنْ لَمْ تُعْتَرَفْ، فَاعْرِفْ عِفَاصَهَا وَوِكَاءَهَا، ثُمَّ كُلْهَا، فَإِنْ جَاءَ صَاحِبُهَا، فَأَدِّهَا إِلَيْهِ»


Muslim-3550

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3550. மேற்கண்ட ஹதீஸ் ஸைத் பின் காலித் அல்ஜுஹனீ (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.

அவற்றில் ‘ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வழிதவறி வந்த ஒட்டகத்தை பற்றிக் கேட்டார்’ என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது.

அவற்றில் ரபீஆ பின் அபீஅப்திர் ரஹ்மான் அர்ரஃயு (ரஹ்) அவர்களது அறிவிப்பில் ‘இதைக் கேட்டதும் நபி(ஸல்) அவர்கள் தம் கன்னங்கள் சிவக்குமளவுக்குக் கோபப்பட்டார்கள்’ என்று கூடுதலாக இடம்பெற்றுள்ளது. மற்ற விவரங்கள் மேற்கண்ட ஹதீஸ்களில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.

மேலும், ‘அதன் உரிமையாளர் (அதை தேடிக்கொண்டு) வந்து, (நீ அதன் அடையாளத்தைப் பற்றி கேட்கும்போது) அவர் அதன் பையையும் எண்ணிக்கையையும் முடிச்சையும் (சரியாக) அறிந்திருந்தால் அவரிடம் அதைக் கொடுத்துவிடு. இல்லையேல், அது உனக்கே உரியது’ என்று கூறினார்கள் எனக் கூடுதலாக இடம்பெற்றுள்ளது.

Book : 31


أَنَّ رَجُلًا سَأَلَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، عَنْ ضَالَّةِ الْإِبِلِ، زَادَ رَبِيعَةُ: فَغَضِبَ حَتَّى احْمَرَّتْ وَجْنَتَاهُ، وَاقْتَصَّ الْحَدِيثَ بِنَحْوِ حَدِيثِهِمْ، وَزَادَ: فَإِنْ جَاءَ صَاحِبُهَا فَعَرَفَ عِفَاصَهَا، وَعَدَدَهَا وَوِكَاءَهَا، فَأَعْطِهَا إِيَّاهُ وَإِلَّا فَهِيَ لَكَ


Muslim-3549

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3549. நபித்தோழர் ஸைத் பின் காலித் அல்ஜுஹனீ (ரலி) அவர்கள் கூறியவதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கண்டெடுக்கப்பட்ட தங்கம், வெள்ளி ஆகியவை பற்றிக் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், ‘அதன் பையையும் (உறையையும்) முடிச்சையும் (மூடியையும்) அடையாளம் பார்த்து வைத்துக்கொள். பிறகு ஓராண்டுக் காலத்திற்கு அதைப் பற்றி அறிவிப்புச் செய்துகொண்டேயிரு. (அதற்கு உரியவரை) நீ கண்டுடிபிடிக்காவிட்டால் நீயே அதைச் செலவிட்டுக்கொள். ஆனால், அது உன்னிடம் அடைக்கலமாகவே இருக்கட்டும். ஆதைத் தேடிக்கொண்டு யாரும் என்றைக்காவது ஒரு நாள் வந்தால் அவரிடம் அதை ஒப்படைத்துவிடு’ என்ற கூறினார்கள்.

அவர்களிடம் கேள்வி கேட்டவர், வழி தவறி வந்த ஒட்டகத்தைப் பற்றி கேட்டதற்கு, ‘உனக்கும் அதற்கும் என்ன தொடர்பு (அதன் வழியில்) அதை விட்டுவிடு. ஏனெனில், அதனுடன் (நடப்பதற்கு) கால்குளம்பும், (குடிப்பதற்கு) அதன் தண்ணீர்ப் பையும்(திமிலும்) உள்ளது. அதை அதன் உரிமையாளர் கண்டுபிடிக்கும்வரை அது நீர் நிலைக்குச் செல்கிறது. மரங்களிலுருந்து (இலைகளை) தின்கிறது (அதைப் பற்றி நீ ஏன் கவலைப்படவேண்டும்?)’ என்று கூறினார்கள்.

سُئِلَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ اللُّقَطَةِ، الذَّهَبِ، أَوِ الْوَرِقِ؟ فَقَالَ: «اعْرِفْ وِكَاءَهَا وَعِفَاصَهَا، ثُمَّ عَرِّفْهَا سَنَةً، فَإِنْ لَمْ تَعْرِفْ فَاسْتَنْفِقْهَا، وَلْتَكُنْ وَدِيعَةً عِنْدَكَ، فَإِنْ جَاءَ طَالِبُهَا يَوْمًا مِنَ الدَّهْرِ فَأَدِّهَا إِلَيْهِ»، وَسَأَلَهُ عَنْ ضَالَّةِ الْإِبِلِ، فَقَالَ: «مَا لَكَ وَلَهَا، دَعْهَا، فَإِنَّ مَعَهَا حِذَاءَهَا وَسِقَاءَهَا، تَرِدُ الْمَاءَ، وَتَأْكُلُ الشَّجَرَ، حَتَّى يَجِدَهَا رَبُّهَا»، وَسَأَلَهُ عَنِ الشَّاةِ، فَقَالَ: «خُذْهَا، فَإِنَّمَا هِيَ لَكَ، أَوْ لِأَخِيكَ، أَوْ لِلذِّئْبِ»


Next Page » « Previous Page