Category: முஸ்னத் அஹ்மத்

Musnad-Ahmad

Musnad-Ahmad-23737

ஹதீஸின் தரம்: ஹஸன் - நடுத்தரமான செய்தி

23737. அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஸல்மான் ஃபாரிஸீ (ரலி) அவர்கள் என்னிடம் அவர்கள் பற்றிய நிகழ்வை அவர்களாகவே (தனது வாயால்) எனக்கு அறிவித்தார்கள்.

அவர்கள் கூறினார்கள்:

நான் பாரசீகத்தைச் சேர்ந்தவன்; அஸ்பஹான் நகரத்தில் ‘ஜய்’ என்று சொல்லப்படும் கிராமத்தைச் சேர்ந்தவன். என் தந்தை அக்கிராமத்தின் (திஹ்கான்) தலைவர் ஆவார். நான் அவருக்கு மிகவும் பிரியமான மகனாக இருந்தேன். அவர் என் மீது வைத்திருந்த அளவு கடந்த பிரியத்தின் காரணமாக, ஒரு அடிமைப் பெண்ணை வீட்டில் அடைத்து வைப்பதைப் போல என்னையும் வீட்டிலேயே அடைத்து வைத்திருந்தார்.

மேலும், நான் மஜூஸீ (எனும் நெருப்பு வணக்க) மார்க்கத்தில் மிகுந்த பற்றுள்ளவனாக இருந்தேன். அக்கிராமத்து நெருப்பிற்கு நான் காவலாளியாக இருந்தேன். அந்த நெருப்பு ஒரு நொடி நேரம்கூட அணையாமல் நான் பார்த்துக் கொள்வேன்.

என் தந்தைக்கு ஒரு பெரிய தோட்டம் இருந்தது. ஒருநாள் அவர் ஏதோ ஒரு கட்டுமான வேலையில் ஈடுபட்டு இருந்தார். அப்போது அவர் என்னிடம், “என் அன்பு மகனே! நான் இன்று இந்த கட்டுமான வேலையில் ஈடுபட்டிருப்பதால், தோட்டத்தை கவனிக்க முடியவில்லை. நீ சென்று அதைப் பார்வையிட்டுவா. அதில் நான் செய்யச் சொன்ன சில காரியங்களையும் செய்” என்று கட்டளையிட்டார்.

நான் தந்தையின் தோட்டத்தை

حَدَّثَنِي سَلْمَانُ الْفَارِسِيُّ حَدِيثَهُ مِنْ فِيهِ، قَالَ: كُنْتُ رَجُلًا فَارِسِيًّا مِنْ أَهْلِ أَصْبَهَانَ مِنْ أَهْلِ قَرْيَةٍ مِنْهَا يُقَالُ لَهَا جَيٌّ، وَكَانَ أَبِي دِهْقَانَ قَرْيَتِهِ، وَكُنْتُ أَحَبَّ خَلْقِ اللَّهِ إِلَيْهِ، فَلَمْ يَزَلْ بِهِ حُبُّهُ إِيَّايَ حَتَّى حَبَسَنِي فِي بَيْتِهِ كَمَا تُحْبَسُ الْجَارِيَةُ، واَجْتهَدْتُ فِي الْمَجُوسِيَّةِ حَتَّى كُنْتُ قَطَنَ النَّارِ الَّذِي يُوقِدُهَا لَا يَتْرُكُهَا تَخْبُو سَاعَةً،
قَالَ: وَكَانَتْ لِأَبِي ضَيْعَةٌ عَظِيمَةٌ، قَالَ: فَشُغِلَ فِي بُنْيَانٍ لَهُ يَوْمًا، فَقَالَ لِي: يَا بُنَيَّ، إِنِّي قَدْ شُغِلْتُ فِي بُنْيَانٍ هَذَا الْيَوْمَ عَنْ ضَيْعَتِي، فَاذْهَبْ فَاطَّلِعْهَا، وَأَمَرَنِي فِيهَا بِبَعْضِ مَا يُرِيدُ، فَخَرَجْتُ أُرِيدُ ضَيْعَتَهُ، فَمَرَرْتُ بِكَنِيسَةٍ مِنْ كَنَائِسِ النَّصَارَى، فَسَمِعْتُ أَصْوَاتَهُمْ فِيهَا وَهُمْ يُصَلُّونَ، وَكُنْتُ لَا أَدْرِي مَا أَمْرُ النَّاسِ لِحَبْسِ أَبِي إِيَّايَ فِي بَيْتِهِ، فَلَمَّا مَرَرْتُ بِهِمْ، وَسَمِعْتُ أَصْوَاتَهُمْ، دَخَلْتُ عَلَيْهِمْ أَنْظُرُ مَا يَصْنَعُونَ، قَالَ: فَلَمَّا رَأَيْتُهُمْ أَعْجَبَنِي صَلَاتُهُمْ، وَرَغِبْتُ فِي أَمْرِهِمْ، وَقُلْتُ: هَذَا وَاللَّهِ خَيْرٌ مِنَ الدِّينِ الَّذِي نَحْنُ عَلَيْهِ، فَوَاللَّهِ مَا تَرَكْتُهُمْ حَتَّى غَرَبَتِ الشَّمْسُ، وَتَرَكْتُ ضَيْعَةَ أَبِي وَلَمْ آتِهَا، فَقُلْتُ لَهُمْ: أَيْنَ أَصْلُ هَذَا الدِّينِ؟ قَالُوا: بِالشَّامِ
قَالَ: ثُمَّ رَجَعْتُ إِلَى أَبِي، وَقَدْ بَعَثَ فِي طَلَبِي وَشَغَلْتُهُ عَنْ عَمَلِهِ كُلِّهِ، قَالَ: فَلَمَّا جِئْتُهُ، قَالَ: أَيْ بُنَيَّ، أَيْنَ كُنْتَ؟ أَلَمْ أَكُنْ عَهِدْتُ إِلَيْكَ مَا عَهِدْتُ؟ قَالَ: قُلْتُ: يَا أَبَتِ، مَرَرْتُ بِنَاسٍ يُصَلُّونَ فِي كَنِيسَةٍ لَهُمْ فَأَعْجَبَنِي مَا رَأَيْتُ مِنْ دِينِهِمْ، فَوَاللَّهِ مَازِلْتُ عِنْدَهُمْ حَتَّى غَرَبَتِ الشَّمْسُ، قَالَ: أَيْ بُنَيَّ، لَيْسَ فِي ذَلِكَ الدِّينِ خَيْرٌ، دِينُكَ وَدِينُ آبَائِكَ خَيْرٌ مِنْهُ، قَالَ: قُلْتُ: كَلَّا وَاللَّهِ إِنَّهُ لَخَيْرٌ مِنْ دِينِنَا، قَالَ: فَخَافَنِي، فَجَعَلَ فِي رِجْلَيَّ قَيْدًا، ثُمَّ حَبَسَنِي فِي بَيْتِهِ، قَالَ: وَبَعَثَتُ إِلَى النَّصَارَى فَقُلْتُ لَهُمْ: إِذَا قَدِمَ عَلَيْكُمْ رَكْبٌ مِنَ الشَّامِ تُجَّارٌ مِنَ النَّصَارَى فَأَخْبِرُونِي بِهِمْ، قَالَ: فَقَدِمَ عَلَيْهِمْ رَكْبٌ مِنَ الشَّامِ تُجَّارٌ مِنَ النَّصَارَى، قَالَ: فَأَخْبَرُونِي بِهِمْ، قَالَ: فَقُلْتُ لَهُمْ: إِذَا قَضَوْا حَوَائِجَهُمْ وَأَرَادُوا الرَّجْعَةَ إِلَى بِلَادِهِمْ فَآذِنُونِي بِهِمْ، قَالَ: فَلَمَّا أَرَادُوا الرَّجْعَةَ إِلَى بِلَادِهِمْ أَخْبَرُونِي بِهِمْ، فَأَلْقَيْتُ الْحَدِيدَ مِنْ رِجْلَيَّ، ثُمَّ خَرَجْتُ مَعَهُمْ حَتَّى قَدِمْتُ الشَّامَ، فَلَمَّا قَدِمْتُهَا، قُلْتُ: مَنْ أَفْضَلُ أَهْلِ هَذَا الدِّينِ؟ قَالُوا: الْأَسْقُفُّ فِي الْكَنِيسَةِ، قَالَ: فَجِئْتُهُ، فَقُلْتُ: إِنِّي قَدْ رَغِبْتُ فِي هَذَا الدِّينِ، وَأَحْبَبْتُ أَنْ أَكُونَ مَعَكَ أَخْدُمُكَ فِي كَنِيسَتِكَ، وَأَتَعَلَّمُ مِنْكَ وَأُصَلِّي مَعَكَ، قَالَ: فَادْخُلْ فَدَخَلْتُ مَعَهُ، قَالَ: فَكَانَ رَجُلَ سَوْءٍ يَأْمُرُهُمْ بِالصَّدَقَةِ وَيُرَغِّبُهُمْ فِيهَا، فَإِذَا جَمَعُوا إِلَيْهِ مِنْهَا أَشْيَاءَ، اكْتَنَزَهُ لِنَفْسِهِ،


Musnad-Ahmad-15524

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

15524.


أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَدْعُو فَيَقُولُ: «اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْهَدْمِ، وَالتَّرَدِّي، وَالْهَرَمِ، وَالْغَرَقِ، وَالْحَرِيقِ، وَأَعُوذُ بِكَ أَنْ يَتَخَبَّطَنِي الشَّيْطَانُ عِنْدَ الْمَوْتِ، وَأَنْ أُقْتَلَ فِي سَبِيلِكَ مُدْبِرًا، وَأَنْ أَمُوتَ لَدِيغًا»


Musnad-Ahmad-15523

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

15523. அபுல்யஸர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பின்வரும்) இந்த ஏழு (ஒன்பது) வார்த்தைகளைக் கொண்டு பிரார்த்தனை செய்பவர்களாக இருந்தார்கள்.

“அல்லாஹும்ம இன்னீ அஊது பிக மினல் ஹத்மி, வ அஊது பிக மினத் தரத்தீ, வ அஊது பிக மினல் ஃகம்மி, வல்ஃகரகி, வல்ஹரகி, வல்ஹரம். வ அஊது பிக அய் யதகப்பத்தனிஷ் ஷைத்தானு இன்தல் மவ்த். வ அஊது பிக அன் அமூத ஃபீ ஸபீலிக முத்பிரா. வ அஊது பிக அன் அமூத லதீஃகா”

(பொருள்: அல்லாஹ்வே! இடிபாடுகளுக்குள் சிக்கி மரணிப்பதை விட்டும், உயரமான இடத்திலிருந்து கீழே விழுந்து மரணிப்பதை விட்டும், துக்கத்தில் மரணிப்பதை விட்டும், நீருக்குள் மூழ்கி மரணிப்பதை விட்டும், நெருப்பில் கருகி மரணிப்பதை விட்டும், தள்ளாத வயதில் மரணிப்பதை விட்டும் உன்னிடம் நான் பாதுகாவல் தேடுகிறேன். மரண வேளையில் ஷைத்தான் என்னை தீண்டுவதை விட்டும் உன்னிடம் நான் பாதுகாவல் தேடுகிறேன். உன்னுடைய வழியை விட்டு புறக்கணித்தவனாக நான் மரணிப்பதை விட்டும், (நச்சு உயிரினங்களால்) தீண்டப்பட்டு மரணிப்பதை விட்டும் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன்)


أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَدْعُو بِهَؤُلَاءِ الْكَلِمَاتِ السَّبْعِ يَقُولُ: «اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْهَدَمِ، وَأَعُوذُ بِكَ مِنَ التَّرَدِّي، وَأَعُوذُ بِكَ مِنَ الْغَمِّ، وَالْغَرَقِ، وَالْحَرَقِ، وَالْهَرَمِ، وَأَعُوذُ بِكَ أَنْ يَتَخَبَّطَنِي الشَّيْطَانُ عِنْدَ الْمَوْتِ، وَأَعُوذُ بِكَ أَنْ أَمُوتَ فِي سَبِيلِكَ مُدْبِرًا، وَأَعُوذُ بِكَ أَنْ أَمُوتَ لَدِيغًا»


Musnad-Ahmad-1465

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

1465.


«إِنِّي لأرْجُو أَنْ لَا تَعْجِزَ أُمَّتِي عِنْدَ رَبِّي أَنْ يُؤَخِّرَهُمْ نِصْفَ يَوْمٍ» فَقِيلَ لِسَعْدٍ: وَكَمْ نِصْفُ يَوْمٍ؟ قَالَ: «خَمْسُ مِائَةِ سَنَةٍ»


Musnad-Ahmad-1464

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

1464.


أَنَّهُ كَانَ يَقُولُ: «لَا تَعْجِزُ أُمَّتِي عِنْدَ رَبِّي أَنْ يُؤَخِّرَهَا نِصْفَ يَوْمٍ» ، وَسَأَلْتُ رَاشِدًا: هَلْ بَلَغَكَ مَاذَا النِّصْفُ يَوْمٍ؟ قَالَ: «خَمْسُ مِائَةِ سَنَةٍ»


Musnad-Ahmad-8553

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

8553.


«تَعَوَّذُوا بِاللَّهِ مِنْ شَرِّ جَارِ الْمَقَامِ، فَإِنَّ جَارَ الْمُسَافِرِ إِذَا شَاءَ أَنْ يُزَايِلَ زَايَلَ»


Musnad-Ahmad-4318

ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

4318. ஒரு அடியானுக்குத் துன்பமோ, கவலையோ ஏற்படும் போது

“அல்லாஹும்ம இன்னீ அப்துக, இப்னு அப்தி(க்)க, இப்னு அம(த்)திக, நாசிய(த்)தீ பியதிக, மாளின் ஃபிய்ய ஹுக்முக, அத்லுன் ஃபிய்ய களாவுக,

அஸ்அலு(க்)க பிகுல்லி இஸ்மின் ஹுவ லக ஸம்மய்த்த பிஹி நஃப்ஸக, அவ் அன்ஸல்த்தஹு ஃபீ கிதாபிக, அவ் அல்லம்தஹு அஹதம் மின் கல்கிக, அவ் இஸ்தஃஸர்த்த பிஹி ஃபீ இல்மில் ஃகைபி இன்தக, அன் தஜ்அலல் குர்ஆன ரபீஅ கல்பீ, வ நூர ஸத்ரீ, வ ஜிலாஅ ஹுஸ்னீ, வ தஹாப ஹம்மீ”

(பொருள்: அல்லாஹ்வே நான் உன்னுடைய அடியான். உன் அடியானின் மகன். உனது பெண் அடிமையின் மகன். என்னுடைய நெற்றிமுடி உன் கையில் இருக்கிறது. என் விஷயத்தில் உன்னுடைய தீர்ப்பு செல்லுபடியாகும். என் விஷயத்தில் உன் தீர்ப்பு நீதமானது.

அல்லாஹ்வே! உனக்கு நீயே சூட்டிக் கொண்ட, அல்லது உன்னுடைய வேதத்தில் நீ இறக்கி வைத்த, அல்லது உன்னுடைய படைப்பினங்களில் யாருக்காவது நீ கற்றுக் கொடுத்த, அல்லது உன்னிடத்தில் உள்ள மறைவான ஞானத்தில் நீ தேர்ந்தெடுத்துக் கொண்ட உனது அத்தனை பெயர்களைக் கொண்டும் நான் உன்னிடத்தில் வேண்டுகிறேன்.

இந்தக் குர்ஆனை என்னுடைய உள்ளத்தின் வசந்தமாகவும், என்னுடைய நெஞ்சின் ஒளியாகவும், என்னுடைய கவலை அகற்றியாகவும், துன்பம் நீக்கியாகவும் நீ ஆக்க வேண்டும்)

என்று கூறினால் அல்லாஹ் அவருடைய கவலையைப் போக்கி

” مَا قَالَ عَبْدٌ قَطُّ إِذَا أَصَابَهُ هَمٌّ وَحَزَنٌ: اللَّهُمَّ إِنِّي عَبْدُكَ، وَابْنُ عَبْدِكَ، ابْنُ أَمَتِكَ، نَاصِيَتِي بِيَدِكَ، مَاضٍ فِيَّ حُكْمُكَ، عَدْلٌ فِيَّ قَضَاؤُكَ، أَسْأَلُكَ بِكُلِّ اسْمٍ هُوَ لَكَ، سَمَّيْتَ بِهِ نَفْسَكَ، أَوْ أَنْزَلْتَهُ فِي كِتَابِكَ، أَوْ عَلَّمْتَهُ أَحَدًا مِنْ خَلْقِكَ، أَوِ اسْتَأْثَرْتَ بِهِ فِي عِلْمِ الْغَيْبِ عِنْدَكَ، أَنْ تَجْعَلَ الْقُرْآنَ رَبِيعَ قَلْبِي، وَنُورَ صَدْرِي، وَجِلَاءَ حُزْنِي، وَذَهَابَ هَمِّي، إِلَّا أَذْهَبَ اللَّهُ عَزَّ وَجَلَّ هَمَّهُ، وَأَبْدَلَهُ مَكَانَ حُزْنِهِ فَرَحًا “، قَالُوا: يَا رَسُولَ اللَّهِ يَنْبَغِي لَنَا أَنْ نَتَعَلَّمَ هَؤُلَاءِ الْكَلِمَاتِ؟ قَالَ: «أَجَلْ، يَنْبَغِي لِمَنْ سَمِعَهُنَّ أَنْ يَتَعَلَّمَهُنَّ»


Musnad-Ahmad-21540

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

21540. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ் கூறுகின்றான்:

“என் அடியார்களே! நான் பாவங்களை மன்னித்து அருள்புரிந்தவரைத் தவிர உங்கள் யாவரும் பாவிகளே! எனவே, நீங்கள் என்னிடம் பாவமன்னிப்புத் தேடுங்கள்! உங்களை மன்னிப்பேன்! மேலும், உங்களில் எவரேனும் பாவங்களை மன்னிக்க நான் ஆற்றலுடையவன் என்று அறிந்து கொண்டு, என் ஆற்றலின் மூலம் என்னிடம் பாவமன்னிப்புத் தேடினால் அவரை நான் மன்னிப்பேன். நான் அலட்டிக் கொள்ள மாட்டேன்.

மேலும், நான் நேர்வழியில் செலுத்தியவரைத் தவிர உங்கள் யாவரும் வழிதவறியவர்களே! எனவே, நீங்கள் என்னிடம் நேர்வழி கேளுங்கள்! உங்களுக்கு நேர்வழி காட்டுவேன்!

மேலும், நான் செல்வம் அளித்தவரைத் தவிர உங்கள் யாவரும் வறியவர்களே! எனவே, நீங்கள் என்னிடம் கேளுங்கள்! உங்களுக்கு நான் உணவளிப்பேன்!

மேலும், உங்களில் உயிர் வாழ்வோரும், இறந்து போனவரும், உங்கள் முந்தியவரும், உங்கள் பிந்தியவரும், உங்களில் ஈரமானதும்…, உங்கள் காய்ந்ததுமான… யாவரும் என் அடியார்களில் மிக அஞ்சிய அடியானின் உள்ளத்தின் மீது கூடி நின்றாலும், என் ஆட்சியில் ஓர் கொசுவின் இறக்கையளவும் அதிகரிக்க முடியாது.

மேலும், உங்களில் உயிர் வாழ்வோரும், இறந்து போனவரும், உங்கள் முந்தியவரும், உங்கள் பிந்தியவரும், உங்களில் ஈரமானதும், உங்கள் காய்ந்ததுமான யாவரும்

” إِنَّ اللَّهَ يَقُولُ: يَا عِبَادِي، كُلُّكُمْ مُذْنِبٌ إِلَّا مَنْ عَافَيْتُ، فَاسْتَغْفِرُونِي أَغْفِرْ لَكُمْ، وَمَنْ عَلِمَ مِنْكُمْ أَنِّي ذُو قُدْرَةٍ عَلَى الْمَغْفِرَةِ فَاسْتَغْفَرَنِي بِقُدْرَتِي، غَفَرْتُ لَهُ وَلَا أُبَالِي، وَكُلُّكُمْ ضَالٌّ إِلَّا مَنْ هَدَيْتُ، فَسَلُونِي الْهُدَى أَهْدِكُمْ، وَكُلُّكُمْ فَقِيرٌ إِلَّا مَنْ أَغْنَيْتُ، فَسَلُونِي أَرْزُقْكُمْ، وَلَوْ أَنَّ حَيَّكُمْ وَمَيِّتَكُمْ وَأُولَاكُمْ وَأُخْرَاكُمْ، وَرَطْبَكُمْ وَيَابِسَكُمْ، اجْتَمَعُوا عَلَى قَلْبِ أَتْقَى عَبْدٍ مِنْ عِبَادِي لَمْ يَزِيدُوا فِي مُلْكِي جَنَاحَ بَعُوضَةٍ، وَلَوْ أَنَّ حَيَّكُمْ وَمَيِّتَكُمْ، وَأُولَاكُمْ وَآَخِرَكُمْ، وَرَطْبَكُمْ وَيَابِسَكُمْ اجْتَمَعُوا فَسَأَلَ كُلُّ سَائِلٍ مِنْهُمْ مَا بَلَغَتْ أُمْنِيَّتُهُ، وَأَعْطَيْتُ كُلَّ سَائِلٍ مَا سَأَلَ، لَمْ يَنْقُصْنِي، إِلَّا كَمَا لَوْ مَرَّ أَحَدُكُمْ عَلَى شَفَةِ الْبَحْرِ، فَغَمَسَ إِبْرَةً ثُمَّ انْتَزَعَهَا، ذَلِكَ لِأَنِّي جَوَادٌ مَاجِدٌ وَاجِدٌ، أَفْعَلُ مَا أَشَاءُ، عَطَائِي كَلَامٌ، وَعَذَابِي كَلَامٌ، إِذَا أَرَدْتُ شَيْئًا فَإِنَّمَا أَقُولُ لَهُ: كُنْ فَيَكُونُ “


Musnad-Ahmad-6730

ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

6730.


«تُؤْخَذُ صَدَقَاتُ الْمُسْلِمِينَ عَلَى مِيَاهِهِمْ»


Musnad-Ahmad-14498

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

14498. ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குர்பானி கொடுத்தார்கள். பின்னர் தலைமுடியைக் களைந்தார்கள். மக்களுக்காக அமர்ந்திருந்தார்கள். அவர்களிடம் (ஹஜ்ஜின் கிரியைகளை) முன்-பின் செய்ததைப் பற்றி எதுவும் கேட்கப்பட்டாலும், அதற்கவர்கள், ‘குற்றமில்லை, குற்றமில்லை’ என்றே கூறினார்கள்.

ஒருவர் வந்து, “குர்பானி கொடுப்பதற்கு முன் நான் தலைமுடியைக் களைந்து விட்டேன்” என்று கேட்டார். அதற்கு அவர்கள், “குற்றமில்லை” என்று கூறினார்கள்.

பின்னர் வேறொருவர் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! கல்லெறிவதற்கு முன் நான் தலைமுடியைக் களைந்து விட்டேன்” என்று கேட்டார். அதற்கு அவர்கள், “குற்றமில்லை” என்று கூறினார்கள்.

பின்னர், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அரஃபா-பெருவெளி முழுவதும் தங்கும் இடமே. முஸ்தலிஃபா முழுவதும் தங்கும் இடமே. மினா முழுவதும் குர்பானி கொடுக்கும் இடமே. மக்காவின் எல்லாப் பாதைகளும் வழியும் குர்பானி கொடுக்கும் இடமே” என்று கூறினார்கள்.


نَحَرَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، ثُمَّ حَلَقَ، وَجَلَسَ لِلنَّاسِ، فَمَا سُئِلَ عَنْ شَيْءٍ إِلَّا قَالَ: «لَا حَرَجَ، لَا حَرَجَ» ، حَتَّى جَاءَهُ رَجُلٌ، فَقَالَ: حَلَقْتُ قَبْلَ أَنْ أَنْحَرَ، قَالَ: «لَا حَرَجَ» ، ثُمَّ جَاءَهُ آخَرُ، فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، حَلَقْتُ قَبْلَ أَنْ أَرْمِيَ، قَالَ: «لَا حَرَجَ» ، قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «عَرَفَةُ كُلُّهَا مَوْقِفٌ، وَالْمُزْدَلِفَةُ كُلُّهَا مَوْقِفٌ، وَمِنًى كُلُّهَا مَنْحَرٌ، وَكُلُّ فِجَاجِ مَكَّةَ طَرِيقٌ وَمَنْحَرٌ»


Next Page » « Previous Page