Category: முஸ்னத் அஹ்மத்

Musnad-Ahmad

Musnad-Ahmad-12209

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

12209. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து நான் கேட்ட ஒரு நபிமொழியை உங்களுக்கு அறிவிக்கட்டுமா? எனக்குப் பின்னர் வேறெவரும் அவர்களிடமிருந்து அதைக் கேட்டு உங்களுக்கு அறிவிக்கமுடியாது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(குடும்பத்தில்) ஐம்பது பெண்களுக்கு ஒரே ஆண் நிர்வாகியாக இருக்கும் அளவுக்கு ஆண்கள் (எண்ணிக்கை குறைந்து) போய், பெண்கள் அதிகமாக ஆவது நீகழாமல் யுகமுடிவு நாள் வராது.


لَأُحَدِّثَنَّكُمْ بِحَدِيثٍ سَمِعْتُهُ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا يُحَدِّثُكُمْ أَحَدٌ بَعْدِي، سَمِعْتُهُ يَقُولُ: «لَا تَقُومُ السَّاعَةُ حَتَّى يَكُونَ فِي الْخَمْسِينَ امْرَأَةً الْقَيِّمُ الْوَاحِدُ، وَتَكْثُرَ النِّسَاءُ ، وَيَقِلَّ الرِّجَالُ»


Musnad-Ahmad-11944

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

11944. கல்வி அகற்றப்படுவதும்; அறியாமை வெளிப்படுவதும்; (குடும்பத்தில்) ஐம்பது பெண்களுக்கு ஒரே ஆண் நிர்வாகியாக இருக்கும் அளவுக்கு ஆண்கள் (எண்ணிக்கை குறைந்து) போய், பெண்கள் அதிகமாக ஆவதும் நிகழாமல் யுகமுடிவு நாள் வராது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)


«لَا تَقُومُ السَّاعَةُ حَتَّى يُرْفَعَ الْعِلْمُ، وَيَظْهَرَ الْجَهْلُ، وَيَقِلَّ الرِّجَالُ، وَتَكْثُرُ النِّسَاءُ، حَتَّى يَكُونَ قَيِّمَ خَمْسِينَ امْرَأَةً رَجُلٌ وَاحِدٌ»


Musnad-Ahmad-8530

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

8530. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நான் (கனவில்) என் இரண்டு கைகளிலும் இரண்டு தங்கக் காப்புகளைக் கண்டேன். நான் அவற்றை ஊதி விட, அவ்விரண்டும் கீழே விழுந்துவிட்டன.

நான் அவ்விரண்டும் (எனக்குப் பின் தோன்றவிருக்கிற தம்மை இறைத்தூதர்கள் என்று வாதிக்கப் போகும் பொய்யர்களில்) யமாமா வாசியான இந்த முஸைலிமாவும் ஒருவன் என்று (அவற்றுக்கு) விளக்கம் கண்டேன்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


«رَأَيْتُ فِيمَا يَرَى النَّائِمُ كَأَنَّ فِي يَدِي سِوَارَيْنِ، فَنَفَخْتُهُمَا فَوَقَعَا، فَأَوَّلْتُ أَنَّ أَحَدَهُمَا مُسَيْلِمَةُ»


Musnad-Ahmad-8460

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

8460. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நான் (கனவில்) என் இரண்டு கைகளிலும் இரண்டு தங்கக் காப்புகளைக் கண்டேன். நான் அவற்றை ஊதி விட, அவ்விரண்டும் பறந்து போய்விட்டன.

நான் அவ்விரண்டும் (எனக்குப் பின் தோன்றவிருக்கிற தம்மை இறைத்தூதர்கள் என்று வாதிக்கப் போகும் இரண்டு பொய்யர்களான) யமாமா வாசியான இந்த முஸைலிமா என்றும், ஸன்ஆவாசியான இந்த (அஸ்வத்) அல்அன்ஸிய்யி என்றும் (அவற்றுக்கு) விளக்கம் கண்டேன்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


«رَأَيْتُ فِيمَا يَرَى النَّائِمُ، كَأَنَّ فِي يَدَيَّ سِوَارَيْنِ مِنْ ذَهَبٍ، فَنَفَخْتُهُمَا فَوَقَعَا، فَأَوَّلْتُ أَنَّ أَحَدَهُمَا مُسَيْلِمَةُ، وَالْآخَرَ الْعَنْسِيُّ»


Musnad-Ahmad-8249

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

8249. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்

நான் தூங்கிக்கொண்டிருக்கும்போது (கனவில்) பூமியின் கருவூலங்கள் எனக்கு வழங்கப்பட்டன. அப்போது என் கையில் தங்கக் காப்புகள் இரண்டு வைக்கப்பட்டன. அவை எனக்குப் பெரும் சுமையாகத் தென்பட்டன. அப்போது அவ்விரண்டையும் ஊதும்படி எனக்குக் கட்டளையிடப்பட்டது. அவ்விரண்டையும் நான் ஊதினேன். அவ்விரண்டும் (பறந்து) சென்றுவிட்டன. ‘அவ்விரண்டும், எந்த இரண்டு மகா பொய்யர்களுக்கிடையே நான் இருக்கிறேனோ அவர்களைக் குறீக்கும்’ என்று நான் விளக்கம் கண்டேன். அவ்விரு பொய்யர்கள் (அன்ஸீ என்ற) ‘ஸன்ஆ’ வாசியும் (முஸைலிமா என்ற) ‘யமாமா’ வாசியும் ஆவர்.


بَيْنَمَا أَنَا نَائِمٌ أُوتِيتُ بِخَزَائِنِ الْأَرْضِ، فَوُضِعَ فِي يَدَيَّ سِوَارَانِ مِنْ ذَهَبٍ، فَكَبُرَا عَلَيَّ وَأَهَمَّانِي، فَأُوحِيَ إِلَيَّ: أَنِ انْفُخْهُمَا، فَنَفَخْتُهُمَا فَذَهَبَا، فَأَوَّلْتُهُمَا الْكَذَّابَيْنِ اللَّذَيْنِ أَنَا بَيْنَهُمَا: صَاحِبُ صَنْعَاءَ، وَصَاحِبُ الْيَمَامَةِ


Musnad-Ahmad-2373

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2373. உபைதுல்லாஹ் பின் அப்துல்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எடுத்துரைத்த அவர்களின் கனவைப் பற்றி நான் அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்களிடம் கேட்டேன்.

அப்போது அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரலி) கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள் என என்னிடம் கூறப்பட்டது:

நான் உறங்கிக் கொண்டிருந்தபோது (கனவில்) என் கைகளில் தங்கத்தலான இரண்டு காப்புகள் வைக்கப்பட்டன. நான் அவ்விரண்டையும் கண்டு அதிர்ச்சிக்குள்ளாக்கப்பட்டதுடன் அவற்றை வெறுக்கவும் செய்தேன். உடனே (அவற்றை ஊதிவிட) எனக்கு அனுமதியளிக்கப்பட்டது. நான் அவ்விரண்டையும் ஊத, அவை பறந்து போய்விட்டன. அவ்விரண்டும் (இனி வரவிருக்கும்) இரண்டு பெரும் பொய்யர்களைக் குறிப்பதாக அதற்கு விளக்கமும் கண்டேன்.

அறிவிப்பாளர் உபைத்துல்லாஹ் இப்னு அப்தில்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

அவ்விருவரில் ஒருவன் யமன் நாட்டில் ஃபைரோஸ் என்பவரால் கொல்லப்பட்ட ‘(அஸ்வத்) அல்அன்ஸீ’ ஆவான்; மற்றொருவன் முஸைலிமா ஆவான்.


قَالَ عُبَيْدُ اللَّهِ، سَأَلْتُ عَبْدَ اللَّهِ بْنَ عَبَّاسٍ عَنْ رُؤْيَا رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، الَّتِي ذَكَرَ؟، فَقَالَ ابْنُ عَبَّاسٍ: ذَكَرَ لِي أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «بَيْنَمَا أَنَا نَائِمٌ أُرِيتُ أَنَّهُ وُضِعَ فِي يَدَيَّ سِوَارَانِ مِنْ ذَهَبٍ، فَفَظِعْتُهُمَا، فَكَرِهْتُهُمَا، فَأُذِنَ لِي فَنَفَخْتُهُمَا فَطَارَا، فَأَوَّلْتُهُ كَذَّابَيْنِ يَخْرُجَانِ» قَالَ عُبَيْدُ اللَّهِ: «أَحَدُهُمَا الْعَنْسِيُّ الَّذِي قَتَلَهُ فَيْرُوزُ بِالْيَمَنِ، وَالْآخَرُ مُسَيْلِمَةُ»


Musnad-Ahmad-20643

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

20643. ஹதீஸ் எண்-20640 இல் வரும் செய்தி இந்த அறிவிப்பாளர்தொடரிலும் வந்துள்ளது.

என்றாலும் இதில் “பிறகு நபி (ஸல்) அவர்களிடம் சென்று அதைப் பற்றி அபூபக்ர் (ரலி) அவர்கள் தெரிவித்தபோது, “அபூபக்ரே! ” என்று இடம்பெற்றுள்ளது.


أَنَّ صُهَيْبًا، وَسَلْمَانَ، وَبِلَالًا كَانُوا قُعُودًا ، فَذَكَرَ نَحْوَهُ، إِلَّا أَنَّهُ قَالَ: فَأَتَى النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَأَخْبَرَهُ بِذَلِكَ، فَقَالَ: «يَا أَبَا بَكْرٍ»


Musnad-Ahmad-20640

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

20640. ஆயித் பின் அம்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

சல்மான், ஸுஹைப், பிலால் (ரலி) ஆகியோர் கொண்ட ஒரு குழுவினரிடம் (அது வரை இஸ்லாத்தை எற்காதிருந்த) அபூசுஃப்யான் வந்தபோது, அக்குழுவினர் “அல்லாஹ்வின் மீதாணையாக! இந்த இறைவிரோதியின் கழுத்தில் (இன்னும்) உரிய முறையில் இறைவனின் வாட்கள் பதம் பார்க்கவில்லையே!” என்று கூறினர்.

அப்போது அவர்களிடம் அபூபக்ர் (ரலி) அவர்கள், “குறைஷியரில் மூத்தவரும் அவர்களின் தலைவருமான ஒருவரைப் பார்த்தா இவ்வாறு கூறுகிறீர்கள்!” என்று (கடிந்து) கூறினார்கள்.

இந்த சம்பவம் பற்றி நபி (ஸல்) அவர்களிடம் தெரிவிக்கப்பட்டபோது நபி (ஸல்) அவர்கள் “அபூபக்ரே! நீங்கள் அ(க்குழுவிலுள்ள)வர்களைக் கோபப்படுத்தியிருப்பீர்கள் போலும்! அவர்களை நீங்கள் கோபப்படுத்தியிருந்தால், உங்கள் இறைவனை நீங்கள் கோபப்படுத்திவிட்டீர்கள்” என்று சொன்னார்கள்.

ஆகவே, அவர்களிடம் அபூபக்ர் (ரலி) அவர்கள் வந்து, “என் சகோதரர்களே! நான் உங்களைக் கோப்படுத்திவிட்டேனா?” என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், “இல்லை, அபூபக்ர் அவர்களே! அல்லாஹ் உங்களை மன்னிப்பானாக!” என்று கூறினார்கள்.


أَنَّ سَلْمَانَ، وَصُهَيْبًا، وبِلَالًا كَانُوا قُعُودًا فِي أُنَاسٍ، فَمَرَّ بِهِمْ أَبُو سُفْيَانَ بْنُ حَرْبٍ، فَقَالُوا: مَا أَخَذَتْ سُيُوفُ اللَّهِ مِنْ عُنُقِ عَدُوِّ اللَّهِ مَأْخَذَهَا بَعْدُ، فَقَالَ أَبُو بَكْرٍ: أَتَقُولُونَ هَذَا لِشَيْخِ قُرَيْشٍ وَسَيِّدِهَا؟ قَالَ: فَأُخْبِرَ بِذَلِكَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: ” يَا أَبَا بَكْرٍ، لَعَلَّكَ أَغْضَبْتَهُمْ، فَلَئِنْ كُنْتَ أَغْضَبْتَهُمْ، لَقَدْ أَغْضَبْتَ رَبَّكَ فَرَجَعَ إِلَيْهِمْ، فَقَالَ: أَيْ إِخْوَتَنَا لَعَلَّكُمْ غَضِبْتُمْ، فَقَالُوا: لَا يَا أَبَا بَكْرٍ، يَغْفِرُ اللَّهُ لَكَ،


Next Page » « Previous Page