Category: முஸ்னத் அஹ்மத்

Musnad-Ahmad

Musnad-Ahmad-4627

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

4627. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் தொழுதுகொண்டிருந்தோம். அப்போது மக்களில் ஒருவர் “அல்லாஹு அக்பர் கபீரா, வல்ஹம்து லில்லாஹி கஸீரா, வ சுப்ஹானல்லாஹி புக்ரத்தவ் வ அஸீலா” (அல்லாஹ் மிகப் பெரியவன் என்று பெருமைப்படுத்துகிறேன். எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே உரியது என்று அதிகமாகப் போற்றுகிறேன். அல்லாஹ் பரிசுத்தமானவன் என்று காலையிலும் மாலையிலும் அவனைத் துதிக்கிறேன்) என்று கூறினார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “இன்ன இன்ன வார்த்தைகளை மொழிந்தவர் யார்?” என்று கேட்டார்கள். அப்போது மக்களில் ஒருவர், “நான்தான் அல்லாஹ்வின் தூதரே!” என்று கூறினார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “நான் இதைக் கேட்டு வியப்புற்றேன். இதற்காக வானத்தின் வாசல்கள் திறக்கப்பட்டன” என்று கூறினார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறக் கேட்டதிலிருந்து நான் அதைக் கூறாமல் இருந்ததில்லை.


بَيْنَا نَحْنُ نُصَلِّي مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذْ قَالَ رَجُلٌ فِي الْقَوْمِ: اللَّهُ أَكْبَرُ كَبِيرًا، وَالْحَمْدُ لِلَّهِ كَثِيرًا، وَسُبْحَانَ اللَّهِ بُكْرَةً وَأَصِيلًا، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنِ الْقَائِلُ كَذَا وَكَذَا؟» فَقَالَ رَجُلٌ مِنَ الْقَوْمِ: أَنَا يَا رَسُولَ اللَّهِ، قَالَ: «عَجِبْتُ لَهَا، فُتِحَتْ لَهَا أَبْوَابُ السَّمَاءِ» قَالَ ابْنُ عُمَرَ: «فَمَا تَرَكْتُهُنَّ مُنْذُ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ ذَلِكَ»


Musnad-Ahmad-24195

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

24195. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அனைத்து சப்தங்களையும் செவியேற்கும் செவுப்புலன் கொண்ட அல்லாஹ்விற்கே புகழனைத்தும்! நான் வீட்டின் ஒரு ஓரத்தில் அமர்ந்திருக்கும் போது ஒரு பெண் நபி (ஸல்) அவர்களிடம் தன் கணவனைப் பற்றி முறையிட்டு வாக்குவாதம் செய்தார். அவள் கூறியதை நான் (சரியாக) கேட்கவில்லை. (ஆனால் அந்தப் பெண்ணிற்காக அல்லாஹ் விரைவாக) “தனது கணவர் பற்றி உம்மிடம் தர்க்கம் செய்து அல்லாஹ்விடம் முறையிட்டவளின் சொல்லை அல்லாஹ் செவியுற்றான். உங்களிருவரின் வாதத்தை அல்லாஹ் செவியுறுகிறான். அல்லாஹ் செவியுறுபவன்; பார்ப்பவன்” எனும் (அல்குர்ஆன் 58:1) வசனத்தை இறக்கி அருளினான்.

அறிவிப்பவர்: உர்வா (ரஹ்)


الْحَمْدُ لِلَّهِ الَّذِي وَسِعَ سَمْعُهُ الْأَصْوَاتَ، لَقَدْ جَاءَتِ الْمُجَادِلَةُ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ تُكَلِّمُهُ وَأَنَا فِي نَاحِيَةِ الْبَيْتِ، مَا أَسْمَعُ مَا تَقُولُ: فَأَنْزَلَ اللَّهُ عَزَّ وَجَلَّ: « {قَدْ سَمِعَ اللَّهُ قَوْلَ الَّتِي تُجَادِلُكَ فِي زَوْجِهَا» } [المجادلة: 1] ” إِلَى آخِرِ الْآيَةِ


Musnad-Ahmad-12558

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

12558. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அல்பைத்துல் மஃமூர் ஏழாவது வானத்தில் உள்ளது. ஒவ்வொரு நாளும் அதில் எழுபதாயிரம் வானவர்கள் நுழைகின்றனர். (ஒரு தடவை நுழைந்த) அவர்கள் மீண்டும் அதில் நுழைவதில்லை.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)


«الْبَيْتُ الْمَعْمُورُ فِي السَّمَاءِ السَّابِعَةِ، يَدْخُلُهُ كُلَّ يَوْمٍ سَبْعُونَ أَلْفَ مَلَكٍ، ثُمَّ لَا يَعُودُونَ إِلَيْهِ»


Musnad-Ahmad-11906

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

11906. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இரண்டு பெரும்குழுவினர் ஒருவரோடொருவர் போரிட்டுக் கொள்ளாதவரை உலக முடிவு நாள் வராது. அவ்விரு குழுக்களுக்குமிடையே பெரும் போர் நிகழும். ஆனால், அவ்விரண்டும் முன் வைக்கும் வாதம் ஒன்றாகவே இருக்கும்.

மேலும் அவ்விரண்டு குழுவினர்களுக்கிடையில் (கிளர்ச்சியாளர்கள்) கூட்டம் ஒன்றும் தோன்றும். இரு பிரிவினரில் சத்தியத்திற்கு மிக நெருக்கத்திலிருக்கும் பிரிவினர் அவர்களைக் கொன்றொழிப்பார்கள்.

அறிவிப்பவர்: அபூஸயீத் (ரலி)


«لَا تَقُومُ السَّاعَةُ حَتَّى يَقْتَتِلَ فِئَتَانِ عَظِيمَتَانِ، دَعْوَاهُمَا وَاحِدَةٌ، تَمْرُقُ بَيْنَهُمَا مَارِقَةٌ يَقْتُلُهَا أَوْلَاهُمَا بِالْحَقِّ»


Musnad-Ahmad-10864

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

10864. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இரண்டு பெரும்குழுவினர் ஒருவரோடொருவர் போரிட்டுக் கொள்ளாதவரை உலக முடிவு நாள் வராது. அவ்விரு குழுக்களுக்குமிடையே பெரும் போர் நிகழும். ஆனால், அவ்விரண்டும் முன் வைக்கும் வாதம் ஒன்றாகவே இருக்கும்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


«لَا تَقُومُ السَّاعَةُ حَتَّى تَقْتَتِلَ فِئَتَانِ عَظِيمَتَانِ، تَكُونُ بَيْنَهُمَا مَقْتَلَةٌ عَظِيمَةٌ، وَدَعْوَاهُمَا وَاحِدَةٌ»


Musnad-Ahmad-10828

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

10828. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யுகமுடிவு நாளுக்கு முன்பு (தன்னை நபி என்று வாதிக்கும்) ஏறத்தாழ முப்பது பொய்யர்கள் (உலகில்) தோன்றுவார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


«بَيْنَ يَدَيِ السَّاعَةِ ثَلَاثُونَ كَذَّابًا»


Musnad-Ahmad-9818

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

9818. பெரும் பொய்யர்களான ‘தஜ்ஜால்கள்’ ஏறத்தாழ முப்பது பேர் (உலகில்) தோன்றாத வரை இறுதி நாள் வராது. அவர்களில் ஒவ்வொருவனும் அல்லாஹ்வின் மீதும், அவனது தூதரின் மீதும் பொய் கூறுவான் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


«لَا تَقُومُ السَّاعَةُ حَتَّى يَخْرُجَ ثَلَاثُونَ كَذَّابًا دجَالًا كُلُّهُمْ، يَكْذِبُ عَلَى اللَّهِ وَرَسُولِهِ»


Musnad-Ahmad-9548

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

9548. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யுகமுடிவு நாளுக்கு முன்பு பெரும் பொய்யர்களான ‘தஜ்ஜால்கள்’ ஏறத்தாழ முப்பது பேர் (உலகில்) தோன்றுவார்கள். அவர்களில் ஒவ்வொருவனும் தன்னை நபி (இறைத்தூதர்) என்று வாதிடுவான்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


بَيْنَ يَدَيِ السَّاعَةِ قَرِيبٌ مِنْ ثَلَاثِينَ دَجَّالِينَ كَذَّابِينَ، كُلُّهُمْ يَقُولُ: أَنَا نَبِيٌّ، أَنَا نَبِيٌّ


Musnad-Ahmad-9897

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

9897. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

பெரும் பொய்யர்களான ‘தஜ்ஜால்கள்’ ஏறத்தாழ முப்பது பேர் (உலகில்) தோன்றாத வரை யுகமுடிவு நாள் வராது. அவர்களில் ஒவ்வொருவனும் தன்னை இறைத்தூதர் என்று வாதிடுவான்.

(மேலும் யுகமுடிவு நாளின் நெருக்கத்தில்) செல்வம் பெருகிக் கொழிக்கும்; குழப்பங்கள் வெளிப்படும்; (பேராசையின் விளைவாக மக்களின் மனங்களில்) கருமித்தனம் உருவாக்கப்படும்; “ஹர்ஜ்” பெருகிவிடும்” என்று சொன்னார்கள். “மக்கள், “ஹர்ஜ்” என்றால் என்ன?” என்று கேட்டனர். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “கொலை” என்று மூன்று தடவை கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


«لَا تَقُومُ السَّاعَةُ حَتَّى يَظْهَرَ ثَلَاثُونَ دَجَّالُونَ، كُلُّهُمْ يَزْعُمُ أَنَّهُ رَسُولُ اللَّهِ،

وَيَفِيضَ الْمَالُ فَيَكْثُرَ، وَتَظْهَرَ الْفِتَنُ، وَيَكْثُرَ الْهَرْجُ» قَالَ: قِيلَ: أَيُّمَا الْهَرْجُ؟ قَالَ: «الْقَتْلُ الْقَتْلُ» ثَلَاثًا


Musnad-Ahmad-10865

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

10865. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

பெரும் பொய்யர்களான ‘தஜ்ஜால்கள்’ ஏறத்தாழ முப்பது பேர் (உலகில்) தோன்றாத வரை இறுதி நாள் வராது. அவர்களில் ஒவ்வொருவனும் தன்னை இறைத்தூதர் என்று வாதிடுவான்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


«لَا تَقُومُ السَّاعَةُ حَتَّى يَنْبَعِثَ دَجَّالُونَ كَذَّابُونَ قَرِيبٌ مِنْ ثَلَاثِينَ، كُلُّهُمْ يَزْعُمُ أَنَّهُ رَسُولُ اللَّهِ»


Next Page » « Previous Page