Category: முஸ்னத் அஹ்மத்

Musnad-Ahmad

Musnad-Ahmad-12347

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

12347. நாங்கள் அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களிடம் சென்று (ஆளுநர்) ஹஜ்ஜாஜ் மூலம் நாங்கள் அனுபவித்துவரும் கொடுமைகள் குறித்து முறையிட்டோம். அதற்கு அவர்கள், ‘நீங்கள் உங்களுடைய இறைவனைச் சந்திக்கும் வரை பொறுமையோடு இருங்கள். ஏனெனில், உங்களிடம் ஒரு காலம் அல்லது நாள் வந்தால், அதற்குப் பின்வரும் காலம் அதைவிட மோசமானதாகவே இருக்கும்’ என்று கூறிவிட்டு, ‘இதை நான் உங்கள் நபி (ஸல்) அவர்களிடமிருந்து செவியுற்றேன்’ என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஸுபைர் பின் அதீ (ரஹ்)


شَكَوْنَا إِلَى أَنَسِ بْنِ مَالِكٍ مَا نَلْقَى مِنَ الْحَجَّاجِ فَقَالَ: «اصْبِرُوا، فَإِنَّهُ لَا يَأْتِي عَلَيْكُمْ عَامٌ أَوْ يَوْمٌ إِلَّا الَّذِي بَعْدَهُ شَرٌّ مِنْهُ، حَتَّى تَلْقَوْا رَبَّكُمْ» سَمِعْتُهُ مِنْ نَبِيِّكُمْ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ


Musnad-Ahmad-12162

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

12162. “உங்களிடம் ஒரு காலம் வந்தால், அது அதற்கு முன்னுள்ள காலத்தைவிட மோசமானதாகவே இருக்கும். இதை நாங்கள் உங்கள் நபி (ஸல்) அவர்களிடமிருந்து செவியுற்றோம் என்று அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் இரண்டு தடவை கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஸுபைர் பின் அதீ (ரஹ்)


«لَا يَأْتِي عَلَيْكُمْ زَمَانٌ إِلَّا هُوَ شَرٌّ مِنَ الزَّمَانِ الَّذِي قَبْلَهُ» . سَمِعْنَا ذَلِكَ مِنْ نَبِيِّكُمْ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَرَّتَيْنِ


Musnad-Ahmad-16784

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

16784. (ஒரு சமயம்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுவதை நான் பார்த்தேன். அப்போது அவர்கள், அல்லாஹு அக்பர் கபீரா! அல்லாஹு அக்பர் கபீரா! அல்லாஹு அக்பர் கபீரா! அல்ஹம்துலில்லாஹி புக்ரதவ் வ அஸீலா! (மூன்றுதடவை), ஸுப்ஹானல்லாஹி புக்ரதவ் வ அஸீலா! (மூன்றுதடவை), அல்லாஹும்ம இன்னீ அவூது பிக மினஷ்ஷைத்தானிர் ரஜீம் மின் ஹம்ஸிஹீ, வ நஃப்கிஹீ, வ நஃப்ஸிஹீ…என்று கூறினார்கள்.

(துஆவின் பொருள்: அல்லாஹ் மிகப்பெரியவன்! அல்லாஹ் மிகப்பெரியவன்! அல்லாஹ் மிகப்பெரியவன்! காலையிலும் மாலையிலும் அதிகமதிகமான புகழ் அல்லாஹ்வுக்கே உரியது. (மூன்றுதடவை). காலையிலும் மாலையிலும் நான் அல்லாஹ்வைத் தூய்மைப்படுத்துகிறேன். (மூன்றுதடவை). விரட்டப்பட்ட ஷைத்தானை விட்டும், அவனுடைய தீய தூண்டுதல், துப்புதல், ஊதுதல் போன்றவற்றை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாப்பு தேடுகிறேன்.)

அறிவிப்பவர்: ஜுபைர் பின் முத்இம் (ரலி)

இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான அம்ர் பின் முர்ரா அவர்கள் கூறினார்:

ஷைத்தானின் தீய தூண்டுதல் என்றால் பைத்தியம்; அவனுடைய துப்புதல் என்றால் பெருமை; அவனுடைய ஊதுதல் என்றால் கவிதை என்று பொருளாகும்.


رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حِينَ دَخَلَ فِي صَلَاةٍ، فَقَالَ: «اللَّهُ أَكْبَرُ كَبِيرًا، اللَّهُ أَكْبَرُ كَبِيرًا، اللَّهُ أَكْبَرُ كَبِيرًا، الْحَمْدُ لِلَّهِ بُكْرَةً وَأَصِيلًا – ثَلَاثًا – سُبْحَانَ اللَّهِ بُكْرَةً وَأَصِيلًا – ثَلَاثًا – اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ، مِنْ هَمْزِهِ وَنَفْخِهِ وَنَفْثِهِ»

قَالَ عَمْرو: ” وَهَمْزُهُ: الْمُوتَةُ، وَنَفْخُهُ: الْكِبْرُ، وَنَفْثُهُ: الشِّعْرُ


Musnad-Ahmad-16760

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

16760. (ஒரு சமயம்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுகையை ஆரம்பிக்கும்போது, “அல்லாஹு அக்பர் கபீரா! (மூன்றுதடவை), அல்ஹம்துலில்லாஹி கஸீரா! (மூன்றுதடவை), ஸுப்ஹானல்லாஹி புக்ரதவ் வ அஸீலா! (மூன்றுதடவை), அல்லாஹும்ம இன்னீ அவூது பிக மினஷ்ஷைத்தானி மின் ஹம்ஸிஹீ, வ நஃப்ஸிஹீ, வ நஃப்கிஹீ…என்று கூறியதை செவியேற்றேன்.

(துஆவின் பொருள்: அல்லாஹ் மிகப்பெரியவன்! (மூன்றுதடவை), அதிகமதிகமான புகழ் அல்லாஹ்வுக்கே உரியது! (மூன்றுதடவை), காலையிலும் மாலையிலும் நான் அல்லாஹ்வைத் தூய்மைப்படுத்துகிறேன். (மூன்றுதடவை). ஷைத்தானை விட்டும், அவனுடைய தீய தூண்டுதல், ஊதுதல், துப்புதல் போன்றவற்றை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாப்பு தேடுகிறேன்.)

அறிவிப்பவர்: ஜுபைர் பின் முத்இம் (ரலி)

இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான ஹுஸைன் பின் அப்துர்ரஹ்மான் கூறினார்:

ஷைத்தானின் தீய தூண்டுதல் என்றால் பைத்தியம்; அவனுடைய ஊதுதல் என்றால் கவிதை; அவனுடைய துப்புதல் என்றால் பெருமை என்று பொருளாகும்.


سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حِينَ افْتَتَحَ الصَّلَاةَ، قَالَ: «اللَّهُ أَكْبَرُ كَبِيرًا – ثَلَاثًا – الْحَمْدُ لِلَّهِ كَثِيرًا، سُبْحَانَ اللَّهِ بُكْرَةً وَأَصِيلًا – ثَلَاثًا – اللَّهُمَّ، إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الشَّيْطَانِ مِنْ هَمْزِهِ وَنَفْثِهِ وَنَفْخِهِ»

قَالَ حُصَيْنٌ: «هَمْزُهُ الْمُوتَةُ الَّتِي تَأْخُذُ صَاحِبَ الْمَسِّ، وَنَفْثُهُ الشِّعْرُ، وَنَفْخُهُ الْكِبْرُ»


Musnad-Ahmad-16740

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

16740. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அல்லாஹு அக்பர் கபீரா!வல்ஹம்துலில்லாஹி கஸீரா! வ ஸுப்ஹானல்லாஹி வபிஹம்திஹீ புக்ரதவ் வ அஸீலா, அவூது பில்லாஹி மினஷ்ஷைத்தானிர்ரஜீம், மின் ஹம்ஸிஹீ, வ நஃப்கிஹீ, வ நஃப்ஸிஹீ…என்று பிரார்த்தனை செய்வார்கள்.

(துஆவின் பொருள்: அல்லாஹ் மிகப்பெரியவன்! அதிகமதிகமான புகழ் அல்லாஹ்வுக்கே உரியது! காலையிலும் மாலையிலும் நான் அல்லாஹ்வைத் தூய்மைப்படுத்துகிறேன்; புகழ்கிறேன். விரட்டப்பட்ட ஷைத்தானை விட்டும், அவனுடயை தீய தூண்டுதல், துப்புதல், ஊதுதல் போன்றவற்றை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாப்பு தேடுகிறேன்.)

நான் ஷைத்தானின் தீய தூண்டுதல் என்றால் என்ன? என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்டேன். அதற்கவர்கள், பைத்தியம் பிடித்தல் என்று விளக்கினார்கள். அவனுடைய துப்புதல் என்றால் என்ன? என்று கேட்டேன். அதற்கவர்கள், பெருமை என்று கூறினார்கள். அவனுடயை ஊதுதல் என்றால் என்ன? என்று கேட்டேன். அதற்கவர்கள் கவிதை என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: ஜுபைர் பின் முத்இம் (ரலி)


أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَقُولُ: «اللَّهُ أَكْبَرُ كَبِيرًا، وَالْحَمْدُ لِلَّهِ كَثِيرًا، وَسُبْحَانَ اللَّهِ وَبِحَمْدِهِ بُكْرَةً وَأَصِيلًا، اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ مِنْ هَمْزِهِ وَنَفْخِهِ وَنَفْثِهِ» قَالَ: قُلْتُ: مَا هَمْزُهُ؟ قَالَ: فَذَكَرَ كَهَيْئَةِ الْمُوتَةِ – يَعْنِي يَصْرَعُ -. قُلْتُ: فَمَا نَفْخُهُ؟ قَالَ: «الْكِبْرُ» قُلْتُ: فَمَا نَفْثُهُ؟، قَالَ: «الشِّعْرُ»


Musnad-Ahmad-16739

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

16739. (ஒரு சமயம்) நபி (ஸல்) அவர்கள் உபரியான தொழுகையில், “அல்லாஹு அக்பர் கபீரா! (மூன்றுதடவை), அல்ஹம்துலில்லாஹி கஸீரா! (மூன்றுதடவை), ஸுப்ஹானல்லாஹி புக்ரதவ் வ அஸீலா! (மூன்றுதடவை), அல்லாஹும்ம இன்னீ அவூது பிக மினஷ்ஷைத்தானிர்ரஜீம் மின் ஹம்ஸிஹீ, வ நஃப்ஸிஹீ, வ நஃப்கிஹீ…என்று கூறியதை நான் செவியேற்றேன்.

(துஆவின் பொருள்: அல்லாஹ் மிகப்பெரியவன்! அதிகமதிகமான புகழ் அல்லாஹ்வுக்கே உரியது! காலையிலும் மாலையிலும் நான் அல்லாஹ்வைத் தூய்மைப்படுத்துகிறேன் (மூன்றுதடவை). விரட்டப்பட்ட ஷைத்தானை விட்டும், அவனுடைய தீய தூண்டுதல், ஊதுதல், துப்புதல் போன்றவற்றை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாப்பு தேடுகிறேன்)

அல்லாஹ்வின் தூதரே! ஷைத்தானுடைய தீய தூண்டுதல், ஊதுதல், துப்புதல் என்றால் என்ன? என்று கேட்டேன். அதற்கவர்கள், “ஷைத்தானின் தீய தூண்டுதல் என்றால் ஆதமுடைய மகனுக்கு ஏற்படும் பைத்தியம்; அவனுடைய துப்புதல் என்றால் பெருமை; அவனுடைய ஊதுதல் என்றால் கவிதை என்று பொருளாகும்” என பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: ஜுபைர் பின் முத்இம் (ரலி)


سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ فِي التَّطَوُّعِ: «اللَّهُ أَكْبَرُ كَبِيرًا – ثَلَاثَ مِرَارٍ – وَالْحَمْدُ لِلَّهِ كَثِيرًا – ثَلَاثَ مِرَارٍ – وَسُبْحَانَ اللَّهِ بُكْرَةً وَأَصِيلًا – ثَلَاثَ مِرَارٍ – اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ، مِنْ هَمْزِهِ وَنَفْثِهِ وَنَفْخِهِ» قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، مَا هَمْزُهُ وَنَفْثُهُ وَنَفْخُهُ؟ قَالَ: «أَمَّا هَمْزُهُ فَالْمُوتَةُ الَّتِي تَأْخُذُ ابْنَ آدَمَ، وَأَمَّا نَفْخُهُ الْكِبْرُ، وَنَفْثُهُ الشِّعْرُ»


Musnad-Ahmad-19148

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

19148. அப்துல்லாஹ் பின் அபூஅவ்ஃபா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு பின்னால் (தொழுகையின்) வரிசையில் நின்றிருந்தபோது தூரத்திலிருந்து வந்த ஒரு மனிதர் வரிசையில் சேர்ந்து “அல்லாஹு அக்பர் கபீரா, வ ஸுப்ஹானல்லாஹி புக்ரதவ் வ அஸீலா” (பொருள்: அல்லாஹ் மிகப் பெரியவன் என்று பெருமைப்படுத்துகிறேன். அல்லாஹ் பரிசுத்தமானவன் என்று காலையிலும் மாலையிலும் அவனைத் துதிக்கிறேன்) என்று கூறினார்.

அப்போது முஸ்லிம்கள் தலையை உயர்த்தி அவரை கண்டித்தனர். மேலும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் சப்தத்தை விட தனது சப்தத்தை உயர்த்துவது யார்? என்றும் கூறினர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தொழுகையை முடித்த பின், திரும்பி “யார் இப்படி உரத்த சத்தமிட்டது? என்று கேட்டார்கள். இன்ன மனிதர் என்று அவர்களிடம் கூறப்பட்டது. அப்போது, (அவரைப் பார்த்து) “அல்லாஹ்வின் மீதாணையாக! உன்னுடைய வார்த்தை மேல்நோக்கி சென்றது. அதற்காக ஒரு கதவு திறக்கப்பட அதில் நுழைந்துக்கொண்டதை நான் பார்த்தேன் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.


جَاءَ رَجُلٌ نَابِي، يَعْنِي نَائِي، وَنَحْنُ فِي الصَّفِّ خَلْفَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَدَخَلَ فِي الصَّفِّ ثُمَّ قَالَ: اللَّهُ أَكْبَرُ كَبِيرًا، وَسُبْحَانَ اللَّهِ بُكْرَةً وَأَصِيلًا، فَرَفَعَ الْمُسْلِمُونَ رُءُوسَهُمْ وَاسْتَنْكَرُوا الرَّجُلَ فَقَالُوا: مَنِ الَّذِي يَرْفَعُ صَوْتَهُ فَوْقَ صَوْتِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ فَلَمَّا انْصَرَفَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَنْ هَذَا الْعَالِي الصَّوْتَ؟» قَالَ: هُوَ ذَا يَا رَسُولَ اللَّهِ. قَالَ: «وَاللَّهِ لَقَدْ رَأَيْتُ كَلَامَكَ يَصْعَدُ فِي السَّمَاءِ حَتَّى فُتِحَ بَابٌ مِنْهَا، فَدَخَلَ فِيهِ»


Musnad-Ahmad-19134

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

19134. அப்துல்லாஹ் பின் அபூஅவ்ஃபா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு பின்னால் (தொழுகையின்) வரிசையில் நின்றிருந்தபோது ஒரு மனிதர் வரிசையில் சேர்ந்து “அல்லாஹு அக்பர் கபீரா, வ ஸுப்ஹானல்லாஹி புக்ரதவ் வ அஸீலா” (பொருள்: அல்லாஹ் மிகப் பெரியவன் என்று பெருமைப்படுத்துகிறேன். அல்லாஹ் பரிசுத்தமானவன் என்று காலையிலும் மாலையிலும் அவனைத் துதிக்கிறேன்) என்று கூறினார்.

அப்போது முஸ்லிம்கள் தலையை உயர்த்தி அவரை கண்டித்தனர். மேலும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் சப்தத்தை விட தனது சப்தத்தை உயர்த்துவது யார்? என்றும் கூறினர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தொழுகையை முடித்த பின், திரும்பி “யார் இப்படி உரத்த சத்தமிட்டது என்று கேட்டார்கள். இன்ன மனிதர் என்று அவர்களிடம் கூறப்பட்டது. அப்போது, அவரைப் பார்த்து “அல்லாஹ்வின் மீதாணையாக! உன்னுடைய வார்த்தை மேல்நோக்கி சென்றது. அதற்காக ஒரு கதவு திறக்கப்பட அதில் நுழைந்துக்கொண்டது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.


جَاءَ رَجُلٌ وَنَحْنُ فِي الصَّفِّ خَلْفَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَدَخَلَ فِي الصَّفِّ فَقَالَ: اللَّهُ أَكْبَرُ كَبِيرًا، وَسُبْحَانَ اللَّهِ بُكْرَةً وَأَصِيلًا، قَالَ: فَرَفَعَ الْمُسْلِمُونَ رُءُوسَهُمْ وَاسْتَنْكَرُوا الرَّجُلَ، وَقَالُوا: مَنِ الَّذِي يَرْفَعُ صَوْتَهُ فَوْقَ صَوْتِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ فَلَمَّا انْصَرَفَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَنْ هَذَا الْعَالِي الصَّوْتَ؟» فَقِيلَ: هُوَ ذَا يَا رَسُولَ اللَّهِ، فَقَالَ: «وَاللَّهِ لَقَدْ رَأَيْتُ كَلَامَكَ يَصْعَدُ فِي السَّمَاءِ حَتَّى فُتِحَ بَابٌ، فَدَخَلَ فِيهِ»


Musnad-Ahmad-5722

ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

5722. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் அமர்ந்திருந்தோம். அப்போது மக்களில் ஒருவர் “அல்லாஹு அக்பர் கபீரா, வல்ஹம்து லில்லாஹி கஸீரா, வ சுப்ஹானல்லாஹி புக்ரத்தவ் வ அஸீலா” (அல்லாஹ் மிகப் பெரியவன் என்று பெருமைப்படுத்துகிறேன். எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே உரியது என்று அதிகமாகப் போற்றுகிறேன். அல்லாஹ் பரிசுத்தமானவன் என்று காலையிலும் மாலையிலும் அவனைத் துதிக்கிறேன்) என்று கூறினார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “இன்ன இன்ன வார்த்தைகளை மொழிந்தவர் யார்?” என்று கேட்டார்கள். அப்போது மக்களில் ஒருவர், “நான்தான் அல்லாஹ்வின் தூதரே!” என்று கூறினார்.

அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், என் உயிர் யார் கைவசம் இருக்கிறதோ அவன் மீது ஆணையாக!  அந்த வார்த்தைகள் (வானை நோக்கி) மேலே சென்றதையும், அதற்காக வானத்தின் வாசல்கள் திறக்கப்பட்டதையும் நான் பார்த்தேன் என்று கூறினார்கள். இவ்வாறு கூறக் கேட்டதிலிருந்து நான் அதைக் கூறாமல் இருந்ததில்லை.

மேலும் இப்னு உமர் (ரலி) கூறினார்:

“என் உயிர் யார் கைவசம் இருக்கிறதோ அவன் மீது ஆணையாக! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறக் கேட்டதிலிருந்து நான் அதைக் கூறாமல் இருந்ததில்லை.

அறிவிப்பாளர் அவ்ன் (ரஹ்) கூறினார்:

இப்னு உமர் (ரலி) அவர்கள்

كُنَّا جُلُوسًا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ رَجُلٌ: اللَّهُ أَكْبَرُ كَبِيرًا، وَالْحَمْدُ لِلَّهِ كَثِيرًا، وَسُبْحَانَ اللَّهِ بُكْرَةً وَأَصِيلًا، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: مَنْ قَالَ الْكَلِمَاتِ؟ فَقَالَ الرَّجُلُ: أَنَا، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «وَالَّذِي نَفْسِي بِيَدِهِ إِنِّي لَأَنْظُرُ إِلَيْهَا تَصْعَدُ حَتَّى فُتِحَتْ لَهَا أَبْوَابُ السَّمَاءِ»

فَقَالَ ابْنُ عُمَرَ: «وَالَّذِي نَفْسِي بِيَدِهِ مَا تَرَكْتُهَا مُنْذُ سَمِعْتُهَا مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ» ،

وقَالَ عَوْنٌ: «مَا تَرَكْتُهَا مُنْذُ سَمِعْتُهَا مِنَ ابْنِ عُمَرَ»


Next Page » « Previous Page