Category: முஸ்னத் அஹ்மத்

Musnad-Ahmad

Musnad-Ahmad-7389

ஹதீஸின் தரம்: நபித்தோழரின் செயல் - பலமான செய்தி

7389. நபி (ஸல்) அவர்களின் தோழர்களில் எவரும் என்னை விட அதிகமான ஹதீஸ்களை அறிவிக்கவில்லை, அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரலி) அவர்களைத் தவிர. (அவர்களிடம் சில நபிமொழிகள் இருந்தன). காரணம் அவர்கள் (ஹதீஸ்களை) எழுதி வைத்துக் கொள்வார்கள். நான் (நினைவில் வைத்துள்ளேன்) எழுதி வைத்ததில்லை என அபூஹுரைரா (ரலி) கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஹம்மாம் பின் முனப்பிஹ் (ரஹ்)


«لَيْسَ أَحَدٌ أَكْثَرَ حَدِيثًا عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنِّي إِلَّا عَبْدَ اللَّهِ بْنَ عَمْرٍو، فَإِنَّهُ كَانَ يَكْتُبُ، وَكُنْتُ لَا أَكْتُبُ»


Musnad-Ahmad-21579

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

21579. முத்தலிப் பின் அப்துல்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

ஒரு தடவை ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்கள், முஆவியா (ரலி) அவர்களிடம் வந்தார். அப்போது முஆவியா (ரலி) அவர்களுக்கு , ஸைத் (ரலி) அவர்கள் ஒரு ஹதீஸை அறிவித்தார். முஆவியா (ரலி), (தன்னருகில் உள்ள) ஒருவரிடம் அந்த ஹதீஸை எழுதச் சொல்ல அவர் எழுதினார். உடனே ஸைத் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அவர்கள் கூறும் செய்திகளை எழுதவேண்டாம் என்று எங்களுக்குக் கட்டளையிட்டிருந்தார்கள் என்று கூறினார். எனவே (எழுதப்பட்ட) அந்த ஹதீஸை அவர் அழித்துவிட்டார்.


دَخَلَ زَيْدُ بْنُ ثَابِتٍ عَلَى مُعَاوِيَةَ، فَحَدَّثَهُ حَدِيثًا، فَأَمَرَ إِنْسَانًا أَنْ يَكْتُبَ، فَقَالَ زَيْدٌ: «إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى أَنْ نَكْتُبَ شَيْئًا مِنْ حَدِيثِهِ، فَمَحَاهُ»


Musnad-Ahmad-11536

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

11536. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நான் கூறுவதில் குர்ஆன் தவிர மற்றதை எழுதி வைக்காதீர்கள். குர்ஆன் தவிர மற்றதை என்னிடமிருந்து எவரேனும் எழுதி வைத்திருந்தால் அதை அவர் அழித்துவிடட்டும்.

அறிவிப்பவர்: அபூஸயீத் (ரலி)


«لَا تَكْتُبُوا عَنِّي شَيْئًا غَيْرَ الْقُرْآنِ، فَمَنْ كَتَبَ عَنِّي شَيْئًا غَيْرَ الْقُرْآنِ، فَلْيَمْحُهُ»


Musnad-Ahmad-11344

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

11344. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நான் கூறுவதில் குர்ஆன் தவிர மற்றதை எழுதி வைக்காதீர்கள். (குர்ஆன் தவிர மற்றதை) என்னிடமிருந்து எவரேனும் எழுதி வைத்திருந்தால் அதை அவர் அழித்துவிடட்டும்.

அறிவிப்பவர்: அபூஸயீத் (ரலி)


«لَا تَكْتُبُوا عَنِّي شَيْئًا إِلَّا الْقُرْآنَ، فَمَنْ كَتَبَ عَنِّي شَيْئًا فَلْيَمْحُهُ»


Musnad-Ahmad-11158

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

11158. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நான் கூறுவதில் குர்ஆன் தவிர மற்றதை எழுதி வைக்காதீர்கள். குர்ஆன் தவிர மற்றதை என்னிடமிருந்து எவரேனும் எழுதி வைத்திருந்தால் அதை அவர் அழித்துவிடட்டும்.

அறிவிப்பவர்: அபூஸயீத் (ரலி)


«لَا تَكْتُبُوا عَنِّي شَيْئًا إِلَّا الْقُرْآنَ، فَمَنْ كَتَبَ عَنِّي شَيْئًا غَيْرَ الْقُرْآنِ فَلْيَمْحُهُ»


Musnad-Ahmad-11087

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

11087. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நான் கூறுவதை எழுதி வைக்காதீர்கள். (குர்ஆன் தவிர மற்றதை) என்னிடமிருந்து எவரேனும் எழுதி வைத்திருந்தால் அதை அவர் அழித்துவிடட்டும்.

அறிவிப்பவர்: அபூஸயீத் (ரலி)


«لَا تَكْتُبُوا عَنِّي شَيْئًا، فَمَنْ كَتَبَ عَنِّي شَيْئًا فَلْيَمْحُهُ»


Musnad-Ahmad-11085

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

11085. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நான் கூறுவதில் குர்ஆன் தவிர மற்றதை எழுதி வைக்காதீர்கள். குர்ஆன் தவிர மற்றதை என்னிடமிருந்து எவரேனும் எழுதி வைத்திருந்தால் அதை அவர் அழித்துவிடட்டும்.

அறிவிப்பவர்: அபூஸயீத் (ரலி)


«لَا تَكْتُبُوا عَنِّي شَيْئًا إِلَّا الْقُرْآنَ، مَنْ كَتَبَ عَنِّي شَيْئًا سِوَى الْقُرْآنِ فَلْيَمْحُهُ»


Musnad-Ahmad-13753

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

13753. “உங்களிடம் ஒரு காலம் வந்தால், அது அதற்கு முன்னுள்ள காலத்தைவிட மோசமானதாகவே இருக்கும். இதை நாங்கள் உங்கள் நபி (ஸல்) அவர்களிடமிருந்து செவியுற்றோம் என்று அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஸுபைர் பின் அதீ (ரஹ்)


«مَا زَمَانٌ يَأْتِي عَلَيْكُمْ إِلَّا أَشَرُّ مِنَ الزَّمَانِ الَّذِي كَانَ قَبْلَهُ، سَمِعْتُ ذَلِكَ مِنْ نَبِيِّكُمْ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ»


Musnad-Ahmad-12838

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

12838. நாங்கள் அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களிடம் சென்று (ஆளுநர்) ஹஜ்ஜாஜ் மூலம் நாங்கள் அனுபவித்துவரும் கொடுமைகள் குறித்து முறையிட்டோம். அதற்கு அவர்கள், “உங்களிடம் ஒரு நாள் அல்லது காலம் வந்தால், அதற்குப் பின்வரும் காலம் அதைவிட மோசமானதாகவே இருக்கும்’ என்று கூறிவிட்டு, ‘இதை நான் உங்கள் நபி (ஸல்) அவர்களிடமிருந்து செவியுற்றேன்’ என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஸுபைர் பின் அதீ (ரஹ்)


أَتَيْنَا أَنَسَ بْنَ مَالِكٍ نَشْكُو إِلَيْهِ الْحَجَّاجَ فَقَالَ: «لَا يَأْتِي عَلَيْكُمْ يَوْمٌ أَوْ زَمَانٌ، إِلَّا الَّذِي بَعْدَهُ شَرٌّ مِنْهُ» ، سَمِعْتُهُ مِنْ نَبِيِّكُمْ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ


Musnad-Ahmad-12817

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

12817. நாங்கள் அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களிடம் சென்று (ஆளுநர்) ஹஜ்ஜாஜ் மூலம் நாங்கள் அனுபவித்துவரும் கொடுமைகள் குறித்து முறையிட்டோம். அதற்கு அவர்கள், ‘நீங்கள் உங்களுடைய இறைவனைச் சந்திக்கும் வரை பொறுமையோடு இருங்கள். ஏனெனில், உங்களிடம் ஒரு காலம் அல்லது நாள் வந்தால், அதற்குப் பின்வரும் காலம் அதைவிட மோசமானதாகவே இருக்கும்’ என்று கூறிவிட்டு, ‘இதை நான் உங்கள் நபி (ஸல்) அவர்களிடமிருந்து செவியுற்றேன்’ என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஸுபைர் பின் அதீ (ரஹ்)


شَكَوْنَا إِلَى أَنَسِ بْنِ مَالِكٍ مَا نَلْقَى مِنَ الْحَجَّاجِ، فَقَالَ: «اصْبِرُوا، فَإِنَّهُ لَا يَأْتِي عَلَيْكُمْ عَامٌ، أَوْ يَوْمٌ إِلَّا الَّذِي بَعْدَهُ شَرٌّ مِنْهُ، حَتَّى تَلْقَوْا رَبَّكُمْ» ، سَمِعْتُهُ مِنْ نَبِيِّكُمْ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ


Next Page » « Previous Page