Category: முஅத்தா மாலிக்

Muwatta-Malik-272

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

272. ஜும்ஆ நாளன்று முன் கூட்டியோ தாமதித்தோ ஜும்ஆ வின் குளிப்பை நாடி ஒருவன் குளித்தப்பின் ஒளுவை முறிக்கும் செயல் நிகழ்ந்தால் அவன் மீது ஒளு மட்டுமே கடமையாகும். அவன் ஒரு முறை குளிப்பதே போதுமாகும் என மாலிக் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்.


قَالَ مَالِكٌ: وَمَنِ اغْتَسَلَ يَوْمَ الْجُمُعَةِ مُعَجِّلاً أَوْ مُؤَخِّرًا وَهُوَ يَنْوِي بِذَلِكَ غُسْلَ الْجُمُعَةِ، فَأَصَابَهُ مَا يَنْقُضُ وُضُوءَهُ، فَلَيْسَ عَلَيْهِ إِلاَّ الْوُضُوءُ، وَغُسْلُهُ ذَلِكَ مُجْزِئٌ عَنهُ.


Muwatta-Malik-278

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

278.  ஜும்ஆ நாளன்று இமாம் மேடையை விட்டு இறங்கியதும் தொழுகையை ஆரம்பிக்கு முன் பேசலாமா? என்று கேட்ட போது, அதனால் குற்றமில்லை என இப்னு ஷிஹாப் பதில் கூறினார்கள் என மாலிக் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.


أَنَّهُ سَأَلَ ابْنَ شِهَابٍ عَنِ الْكَلاَمِ يَوْمَ الْجُمُعَةِ، إِذَا نَزَلَ الإِمَامُ عَنِ الْمِنْبَرِ، قَبْلَ أَنْ يُكَبِّرَ، فَقَالَ ابْنُ شِهَابٍ: لاَ بَأْسَ بِذَلِكَ.


Muwatta-Malik-280

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

280. எங்கள் ஊரின் அறிஞர்கள் இந்த முடிவு மீது உள்ளதைக் கண்டேன். தொழுகையில் ஒரு ரக்அத்தை அடைந்தவர் தொழுகையை அடைந்தவராவார் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியபடி உள்ள முடிவே இது என்று இமாம் மாலிக் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.


قَالَ مَالِكٌ: وَعَلَى ذَلِكَ أَدْرَكْتُ أَهْلَ الْعِلْمِ بِبَلَدِنَا، وَذَلِكَ أَنَّ رَسُولَ اللهِ صَلى الله عَلَيهِ وَسَلمَ قَالَ: مَنْ أَدْرَكَ مِنَ الصَّلاَةِ رَكْعَةً، فَقَدْ أَدْرَكَ الصَّلاَةَ.


Muwatta-Malik-281

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

281.


قَالَ مَالِكٌ: فِي الَّذِي يُصِيبُهُ زِحَامٌ يَوْمَ الْجُمُعَةِ، فَيَرْكَعُ وَلاَ يَقْدِرُ عَلَى أَنْ يَسْجُدَ حَتَّى يَقُومَ الإِمَامُ، أَوْ يَفْرُغَ الإِمَامُ مِنْ صَلاَتِهِ، أَنَّهُ إِنْ قَدَرَ عَلَى أَنْ يَسْجُدَ إِنْ كَانَ قَدْ رَكَعَ، فَلْيَسْجُدْ إِذَا قَامَ النَّاسُ، وَإِنْ لَمْ يَقْدِرْ عَلَى أَنْ يَسْجُدَ حَتَّى يَفْرُغَ الإِمَامُ مِنْ صَلاَتِهِ، فَإِنَّهُ أَحَبُّ إِلَيَّ أَنْ يَبْتَدِئَ صَلاَتَهُ ظُهْرًا أَرْبَعًا.


Muwatta-Malik-283

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

283. ஜும்ஆ நாளில் இமாமுடன் ஒரு ரக்அத் தொழுதவருக்கு, பின்பு மூக்கில் ரத்தம் வந்து, உடனே வெளியேறி. இமாம் இரண்டு ரக்அத்தையும் தொழுது விட்டப்பின் வந்தால், அவர் பேசாமலிருந்தால் மற்றொரு ரக்அத்தை நிறைவேற்றுவார் என இமாம் மாலிக் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.


قَالَ مَالِكٌ: فِي الَّذِي يَرْكَعُ رَكْعَةً مَعَ الإِمَامِ يَوْمَ الْجُمُعَةِ ثُمَّ يَرْعُفُ، فَيَخْرُجُ فَيَأْتِي وَقَدْ صَلَّى الإِمَامُ الرَّكْعَتَيْنِ كِلْتَيْهِمَا، أَنَّهُ يَبْنِي بِرَكْعَةٍ أُخْرَى مَا لَمْ يَتَكَلَّمْ.


Muwatta-Malik-284

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

284. மூக்கில் இரத்தம் வந்தோ அல்லது ஏதேனும் தேவை ஏற்பட்டோ பள்ளியை விட்டு வெளியேற விரும்பினால் ஜும்ஆ நாளன்று இமாமின் அனுமதி பெற வேண்டியதில்லை என மாலிக் (ரஹ்) கூறுகிறார்கள்.


قَالَ مَالِكٌ: لَيْسَ عَلَى مَنْ رَعَفَ، أَوْ أَصَابَهُ أَمْرٌ لاَ بُدَّ لَهُ مِنَ الْخُرُوجِ أَنْ يَسْتَأْذِنَ الإِمَامَ يَوْمَ الْجُمُعَةِ، إِذَا أَرَادَ أَنْ يَخْرُجَ.


Muwatta-Malik-285

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் 64

ஜும்ஆ நாளன்று விரைவாக வருதல்

285. 236:63:9 வசனத்தில் வரும், “ஃபஸ்அவ்” (விரைந்து வாருங்கள்) என்ற வார்த்தை பற்றி இப்னு ஷிஹாப் அவர்களிடம் கேட்ட போது, “உமர்(ரலி) அவர்கள் அந்த வார்த்தைக்கு ஃபம்லு (தயாராகி வாருங்கள்) என்று விளக்கம் தருவார்கள்” என்று இப்னு ஷிஹாப் பதில் கூறினார்கள் என இமாம் மாலிக் (ரஹ்) கூறுகிறார்கள்.


أَنَّهُ سَأَلَ ابْنَ شِهَابٍ عَن قَوْلِ اللهِ عَزَّ وَجَلَّ: {يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِذَا نُودِيَ لِلصَّلاَةِ مِنْ يَوْمِ الْجُمُعَةِ فَاسْعَوْا إِلَى ذِكْرِ اللهِ}، فَقَالَ ابْنُ شِهَابٍ: كَانَ عُمَرُ بْنُ الْخَطَّابِ يَقْرَؤُهَا: إِذَا نُودِيَ لِلصَّلاَةِ مِنْ يَوْمِ الْجُمُعَةِ فَامْضُوا إِلَى ذِكْرِ اللهِ.


Muwatta-Malik-286

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

286. அல்லாஹ்வின் வேதத்தில் ஸஹ்யு என்ற வார்த்தைக்கு, செயல் தான் பொருளாகும். 2:205, 79:22, 80:8, 92:4 ஆகிய வசனங்களில் உள்ள ஸஹ்யு என்ற வார்த்தைக்குப் பொருள் செயல்பாடு தான். இதற்கு அல்லாஹ் தன் வேதத்தில் ஓடுவதையும், நடப்பதையும் குறிப்பிடவில்லை. அவன் கூறுவது செயல் முறையைத் தான் என மாலிக் (ரஹ்) கூறினார்கள்.


قَالَ مَالِكٌ: وَإِنَّمَا السَّعْيُ فِي كِتَابِ اللهِ الْعَمَلُ وَالْفِعْلُ، يَقُولُ اللهُ تَبَارَكَ وَتَعَالَى: {وإِذَا تَوَلَّى سَعَى فِي الأَرْضِ}، وَقَالَ تَعَالَى: {وَأَمَّا مَنْ جَاءَكَ يَسْعَى وَهُوَ يَخْشَى}، وَقَالَ: {ثُمَّ أَدْبَرَ يَسْعَى}، وَقَالَ: {إِنَّ سَعْيَكُمْ لَشَتَّى}، قَالَ مَالِكٌ: فَلَيْسَ السَّعْيُ الَّذِي ذَكَرَ اللهُ فِي كِتَابِهِ بِالسَّعْيِ عَلَى الأَقْدَامِ، وَلاَ الاِشْتِدَادَ، وَإِنَّمَا عَنَى الْعَمَلَ وَالْفِعْلَ.


Muwatta-Malik-288

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

288. ஜும்ஆ கடமையில்லாத ஒரு ஊருக்கு வந்த பிரயாணியான இமாம் ஜும்ஆ நடத்தினால் அவருக்கோ, அவ்வூர் வாசிகளுக்கோ, அவர்கள் அல்லாத மற்றவர்களுக்கோ ஜும்ஆ கடமையில்லை. அவ்வூர் வாசிகளும் பயணி என்ற நிலையில் இல்லாத மற்றவர்களும் லுஹர் தொழுகையை நிறைவேற்றட்டும் என்று மாலிக் (ரஹ்) கூறினார்கள்.


قَالَ مَالِكٌ: وَإِنْ جَمَّعَ الإِمَامُ وَهُوَ مُسَافِرٌ بِقَرْيَةٍ لاَ تَجِبُ فِيهَا الْجُمُعَةُ، فَلاَ جُمُعَةَ لَهُ، وَلاَ لأَهْلِ تِلْكَ الْقَرْيَةِ، وَلاَ لِمَنْ جَمَّعَ مَعَهُمْ مِنْ غَيْرِهِمْ، وَلْيُتَمِّمْ أَهْلُ تِلْكَ الْقَرْيَةِ وَغَيْرُهُمْ، مِمَّنْ لَيْسَ بِمُسَافِرٍ، الصَّلاَةَ.


Muwatta-Malik-289

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

289. பயணிக்கு ஜும்ஆ இல்லை என்று மாலிக் (ரஹ்) கூறினார்கள்.


قَالَ مَالِكٌ: وَلاَ جُمُعَةَ عَلَى مُسَافِرٍ.


Next Page » « Previous Page