Category: முஅத்தா மாலிக்

Muwatta-Malik-290

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் 66

ஜும்ஆ நாளில் உள்ள ஒரு குறிப்பிட்ட நேரம்

290. ஜும்ஆ நாளில் ஒரு நேரம் உண்டு. அந்த நேரத்தில் அல்லாஹ்விடம் ஏதேனும் கேட்டவனாக தொழுது கொண்டிருக்கும் ஒரு முஸ்லிமான அடியானுக்கு அவன் கேட்டதை கொடுத்த நிலையில் தான் அந்த நேரத்தை அவன் அடைந்து கொள்வான் என்று ஜும்ஆ வைப் பற்றி குறிப்பிடும் போது கூறிய நபி(ஸல்) அவர்கள், தன் கையினால் அந் நேரத்தை குறைந்த நேரம் எனக் குறிப்பிட்டு சமிக்ஞை செய்து கூறினார்கள். இதை அபூஹுரைரா(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.

(இது புகாரி, முஸ்லிமிலும் உள்ளது).


أَنَّ رَسُولَ اللهِ صَلى الله عَلَيهِ وَسَلمَ ذَكَرَ يَوْمَ الْجُمُعَةِ، فَقَالَ: فِيهِ سَاعَةٌ لاَ يُوَافِقُهَا عَبْدٌ مُسْلِمٌ وَهُوَ قَائِمٌ يُصَلِّي، يَسْأَلُ اللهَ شَيْئًا، إِلاَّ أَعْطَاهُ إِيَّاهُ، وَأَشَارَ رَسُولُ اللهِ صَلى الله عَلَيهِ وَسَلمَ بِيَدِهِ، يُقَلِّلُهَا.


Muwatta-Malik-295

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

295. இமாம் ஜும்ஆ நாளன்று பிரசங்கம் செய்யும் போது மக்களை அதாவது கிப்லாவை அடுத்து அமர்ந்திருப்போரையும், அதன் அடுத்து உள்ளோரையும் முன்னோக்கி இருத்தல் நபி வழியாகும் என மாலிக் (ரஹ்) கூறுகின்றார்கள்.


قَالَ مَالِكٌ: السُّنَّةُ عِنْدَنَا أَنْ يَسْتَقْبِلَ النَّاسُ الإِمَامَ يَوْمَ الْجُمُعَةِ، إِذَا أَرَادَ أَنْ يَخْطُبَ، مَنْ كَانَ مِنْهُمْ يَلِي الْقِبْلَةَ وَغَيْرَهَا.


Muwatta-Malik-329

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

329. ‘இரவின் ஆரம்பத்தில் ஒருவர் வித்ருத் தொழுது, பின்பு தூங்கி விட்டு, பின்பு எழுந்து, அவர் தொழத் துவங்கினால், இரண்டிரண்டாக அவர் தொழட்டும். இது தான் நான் கேள்விப்பட்டதிலே மிக விருப்பமானது’ என்று மாலிக் (ரஹ்) கூறுகிறார்கள்.


قَالَ مَالِكٌ: مَنْ أَوْتَرَ أَوَّلَ اللَّيْلِ، ثُمَّ نَامَ، ثُمَّ قَامَ، فَبَدَا لَهُ أَنْ يُصَلِّيَ فَلْيُصَلِّ مَثْنَى مَثْنَى، فَهُوَ أَحَبُّ مَا سَمِعْتُ إِلَيَّ.


Muwatta-Malik-354

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

354. வீட்டில் தொழுது கொண்ட ஒருவர் இமாமுடன் சேர்ந்து மீண்டும் தொழுவது குற்றமில்லை என்றே கருதுகின்றேன். ஆனால் மஃக்ரிபுத் தொழுகையைத் தவிர, அதை மீண்டும் தொழுதால் அது இரட்டையாக ஆகி விடும் என மாலிக் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்.


قَالَ مَالِكٌ: وَلاَ أَرَى بَأْسًا أَنْ يُصَلِّيَ مَعَ الإِمَامِ مَنْ كَانَ قَدْ صَلَّى فِي بَيْتِهِ، إِلاَّ صَلاَةَ الْمَغْرِبِ، فَإِنَّهُ إِذَا أَعَادَهَا، كَانَتْ شَفْعًا.


Muwatta-Malik-377

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

377. தன் தோள் புஜங்களின் மீது ஒரு ஆடையாக அல்லது தலைப்பாகையாக ஒரே ஆடையில் தொழுவது என்பது எனக்கு விருப்பமானது என மாலிக் (ரஹ்) கூறுகின்றார்கள்.


قَالَ مَالِكٌ: أَحَبُّ إِلَيَّ أَنْ يَجْعَلَ الَّذِي يُصَلِّي فِي الْقَمِيصِ الْوَاحِدِ عَلَى عَاتِقَيْهِ ثَوْبًا أَوْ عِمَامَةً.


Muwatta-Malik-399

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

399. பயணத்தை விரும்புவர் தன் ஊரில் (எல்கையில் உள்ள) வீட்டைக் கடக்கும் வரை தொழுகையை ‘கஸ்ர்” செய்யவும் கூடாது. (இது போல்) தன் ஊரின் (எல்லையில் உள்ள) வீட்டில் ஒன்றைத் தூண்டவோ அல்லது நெருங்கவோ செய்யும் வரை பூர்த்தி செய்யவும் கூடாது என மாலிக் (ரஹ்) கூறுகின்றார்கள்.


قَالَ مَالِكٌ: لاَ يَقْصُرُ الَّذِي يُرِيدُ السَّفَرَ الصَّلاَةَ، حَتَّى يَخْرُجَ مِنْ بُيُوتِ الْقَرْيَةِ، وَلاَ يُتِمُّ حَتَّى يَدْخُلَ أَوَّلَ بُيُوتِ الْقَرْيَةِ أَوْ يُقَارِبَ ذَلِكَ.


Muwatta-Malik-403

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

403. கைதியின் தொழுகை பற்றி மாலிக் (ரஹ்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அவன், ஊரில் தங்கி உள்ளவன் போலாவான். எனினும் அவன் பயணியாக இருந்தால் தவிர என்று பதில் கூறினார்கள்.


وَسُئِلَ مَالِكٌ عَن صَلاَةِ الأَسِيرِ؟ فَقَالَ: مِثْلُ صَلاَةِ الْمُقِيمِ، إِلاَّ أَنْ يَكُونَ مُسَافِرًا.


Muwatta-Malik-410

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

410. பயணத்தில் நபில் தொழுவது பற்றிக் கேட்கப்பட்ட போது, இரவானாலும், பகலானாலும் அதனால் குற்றமில்லை. சில அறிஞர்கள் அப்படித் தொழுதுள்ளார்கள் என எனக்கு செய்தி கிட்டியது என மாலிக் (ரஹ்) அவர்கள் பதில் கூறினார்கள் என்று யஹ்யா கூறுகின்றார்கள்.


وَسُئِلَ مالكٌ عَنِ النَّافِلَةِ فِي السَّفَرِ، فَقَالَ: لاَ بَأْسَ بِذَلِكَ، بِاللَّيْلِ وَالنَّهَارِ، وَقَدْ بَلَغَنِي أَنَّ بَعْضَ أَهْلِ الْعِلْمِ كَانَ يَفْعَلُ ذَلِكَ.


Muwatta-Malik-496

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

496. பெருநாள் அன்று மக்கள் தொழுது முடித்திருப்பதைக் காணும் ஒருவர் (தணித்து) வீட்டிலோ, தொழுமிடத்திலோ தொழ வேண்டியதில்லை. அப்படியே ஒருவர் வீட்டிலோ, தொழுமிடத்திலோ தொழுது விட்டால் அதை நான் குற்றமாகக் கருதவில்லை. முதல் ரக்அத்தில் கிராஅத் ஓதும் முன் 7 தக்பீர்களும், இரண்டாவது ரக்அத்திலும் ஓதும் முன் 5 தக்பீர்களும் (அதிகபட்சமாக) கூற வேண்டும் என மாலிக் (ரஹ்) கூறுகின்றார்கள்.


قَالَ مَالِكٌ فِي رَجُلٍ وَجَدَ النَّاسَ قَدِ انْصَرَفُوا مِنَ الصَّلاَةِ يَوْمَ الْعِيدِ: إِنَّهُ لاَ يَرَى عَلَيْهِ صَلاَةً فِي الْمُصَلَّى، وَلاَ فِي بَيْتِهِ، وَإِنَّهُ إِنْ صَلَّى فِي الْمُصَلَّى، أَوْ فِي بَيْتِهِ، لَمْ أَرَ بِذَلِكَ بَأْسًا، وَيُكَبِّرُ سَبْعًا فِي الأَُولَى قَبْلَ الْقِرَاءَةِ، وَخَمْسًا فِي الثَّانِيَةِ قَبْلَ الْقِرَاءَةِ.


Muwatta-Malik-502

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

502. இமாமுடன் தொழும் ஒருவர், குத்பாவை கேட்கும் முன் வீடு திரும்பலாமா? என கேட்கப்பட்டதற்கு, ‘இமாம் திரும்பும்வரை திரும்பக் கூடாது’ என்று மாலிக் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்.


سُئِلَ مَالِكٌ عَن رَجُلٍ صَلَّى مَعَ الإِمَامِ يَوْمَ الْفِطْرِ، هَلْ لَهُ أَنْ يَنْصَرِفَ قَبْلَ أَنْ يَسْمَعَ الْخُطْبَةَ؟ فَقَالَ: لاَ يَنْصَرِفُ حَتَّى يَنْصَرِفَ الإِمَامُ.


Next Page » « Previous Page