Category: முஅத்தா மாலிக்

muwatta-malik-62

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

62. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அவர்கள் ஈராக்கில் இருந்து வந்தார்கள். அவர்களிடம் அபு தல்ஹா(ரலி), உபை இப்னு கஹ்பு(ரலி) இருவரும் வந்தனர். அவ்விருவருக்கும் சமைக்கப்பட்ட உணவு தரப்பட்டது. அதை (மூவரும்) சாப்பிட்டார்கள். அனஸ் அவர்கள் எழுந்து ஒளுச் செய்தார்கள். அப்போது அபூ தல்ஹா அவர்களும், உஸை இப்னு கஹ்பு(ரலி), ”இது என்ன அனஸே..! ஈராக் நாட்டின் செயலா?”” என்று கேட்டனர். ”நான் அப்படிச் செய்யாமல் இருந்திருக்கலாம்”” என அனஸ்(ரலி) அவர்கள் கூறினார்கள். அபூதல்ஹா(ரலி), உபை இப்னு கஹ்பு(ரலி) ஆகிய இருவரும் எழுந்து, ஒளுச் செய்யாமலேயே தொழுதார்கள். இதை அப்துர் ரஹ்மான் இப்னு ஸைதுல் அன்சாரி கூறுகின்றார்கள்.


أَنَّ أَنَسَ بْنَ مَالِكٍ قَدِمَ مِنَ الْعِرَاقِ، فَدَخَلَ عَلَيْهِ أَبُو طَلْحَةَ وَأُبَيُّ بْنُ كَعْبٍ فَقَرَّبَ لَهُمَا طَعَامًا قَدْ مَسَّتْهُ النَّارُ، فَأَكَلُوا مِنْهُ. فَقَامَ أَنَسٌ فَتَوَضَّأَ فَقَالَ أَبُو طَلْحَةَ وَأُبَيُّ بْنُ كَعْبٍ مَا هَذَا يَا أَنَسُ أَعِرَاقِيَّةٌ؟ فَقَالَ أَنَسٌ: «لَيْتَنِي لَمْ أَفْعَلْ». وَقَامَ أَبُو طَلْحَةَ وَأُبَيُّ بْنُ كَعْبٍ، فَصَلَّيَا وَلَمْ يَتَوَضَّآَ


muwatta-malik-61

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

61. நபி(ஸல்) அவர்கள் விருந்துக்கு அழைக்கப்பட்டார்கள். அவர்களுக்கு ரொட்டியும், கறியும் தரப்பட்டது. அதைச் சாப்பிட்டார்கள். பின்பு ஒளுச் செய்து விட்டு தொழுதார்கள். பின்பு அதே உணவின் மீதம் கொண்டு வரப்பட்டது. அதைச் சாப்பிட்டார்கள். பின்பு ஒளுச் செய்யாமலேயே தொழுதார்கள் என முஹம்மதுஇப்னு முன்கதீர் அவர்கள் கூறுகின்றார்கள்.

(இந்த முஹம்மது இப்னு முன்கதீர் என்பவர் நபித்தோழர் அல்லர். ஜாபிர் இப்னு அப்துல்லா(ரலி) அறிவித்து இது, திர்மிதீ, அபூதாவூது, நஸயீ யில் உள்ளது).


أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، «دُعِيَ لِطَعَامٍ، فَقُرِّبَ إِلَيْهِ خُبْزٌ وَلَحْمٌ، فَأَكَلَ مِنْهُ، ثُمَّ تَوَضَّأَ وَصَلَّى، ثُمَّ أُتِيَ بِفَضْلِ ذَلِكَ الطَّعَامِ، فَأَكَلَ مِنْهُ ثُمَّ صَلَّى وَلَمْ يَتَوَضَّأْ»


muwatta-malik-60

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

60. அபூபக்கர்(ரலி) அவர்கள், கறி சாப்பிட்டு விட்டு ஒளுச் செய்யாமலேயே தொழுததை நான் பார்த்தேன் என ஜாபிர் அப்துல்லா அன்சாரி(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.


أَنَّهُ سَمِعَ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ الْأَنْصَارِيَّ، يَقُولُ: رَأَيْتُ أَبَا بَكْرٍ الصِّدِّيقَ، «أَكَلَ لَحْمًا. ثُمَّ صَلَّى وَلَمْ يَتَوَضَّأْ»


muwatta-malik-59

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

59. ஒருவர் தொழுகைக்காக ஒளுச் செய்கிறார். பின்பு சமைக்கப்பட்ட உணவை பெற்றுக் கொள்கின்றார். (சாப்பிடுகிறார்). இவர் ஒளுச் செய்ய வேண்டுமா? என அப்துல்லா இப்னு ஆமிர் இப்னு ரபீஆ அவர்களிடம் கேட்கப்பட்டதற்கு, ” என் தந்தை இவ்வாறு சாப்பிட்டு விட்டு ஒளுச் செய்யாமலேயே தொழுததை நான் பார்த்தேன்”” என (பதில்) கூறினார் என யஹ்யா இப்னு ஸயீத் அவர்கள் கூறுகின்றார்கள்.


أَنَّهُ سَأَلَ عَبْدَ اللَّهِ بْنَ عَامِرِ بْنِ رَبِيعَةَ عَنِ الرَّجُلِ يَتَوَضَّأُ لِلصَّلَاةِ، ثُمَّ يُصِيبُ طَعَامًا قَدْ مَسَّتْهُ النَّارُ، أَيَتَوَضَّأُ؟ قَالَ: «رَأَيْتُ أَبِي يَفْعَلُ ذَلِكَ وَلَا يَتَوَضَّأُ»


muwatta-malik-58

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

58. அலீ(ரலி) அவர்களும், அப்துல்லா இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களும் சமைத்த உணவு வகைகளை சாப்பிட்டால், ஒளுச் செய்ய மாட்டார்கள் என தன்கு செய்தி கிடைத்ததாக மாலிக் (ரஹ்) அவர்கள் கூகின்றார்கள்.


أَنَّ عَلِيَّ بْنَ أَبِي طَالِبٍ وَعَبْدَ اللَّهِ بْنَ عَبَّاسٍ كَانَا «لَا يَتَوَضَّآَنِ مِمَّا مَسَّتِ النَّارُ»


muwatta-malik-56

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

56. உமர்(ரலி) அவர்களுடன் தான் இரவு உணவு சாப்பிட்டதாகவும், பின்பு அவர்கள் ஒளுச் செய்யாமலேயே தொழுதார்கள் எனவும் ரபீஆ இப்னு அப்துல்லாஹ் இப்னு ஹுதைர் அறிவிக்கின்றார்கள்.


أَنَّهُ «تَعَشَّى مَعَ عُمَرَ بْنِ الْخَطَّابِ ثُمَّ صَلَّى وَلَمْ يَتَوَضَّأْ»


muwatta-malik-55

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

55. கைபர் போர் வருடம், கைபரை அடுத்த ‘ஸஹபாஹ்” என்ற இடத்தில் நபி(ஸல்) அவர்கள் (இளைப்பாற) இறங்கினார்கள். அஸரைத் தொழுதார்கள். பின்பு பயண உணவைக் கொண்டு வரும்படி கூறினார்கள். மணிக் கோதுமைத் தவிர (வேறு எதுவும்) கொண்டு வரப்படவில்லை. (அதை இழைக்கும்படி) ஏவினார்கள். குழைக்கப்பட்டது. நபி(ஸல்) அவர்கள் சாப்பிட்டார்கள். நாங்களும் சாப்பிட்டோம். பின்பு மஹ்ரிபு தொழுகைக்காக நின்றார்கள். வாய் கொப்பளித்தார்கள். நாங்களும் வாய் கொப்பளித்தோம். பின்பு ஒளுச் செய்யாமலேயே தொழ வைத்தார்கள் என சுவைத் இப்னு நுஹ்மான்(ரலி) அறிவிக்கின்றார்கள்.

(இது புகாரி, நஸயீ யில் உள்ளது).


أَنَّهُ خَرَجَ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، عَامَ خَيْبَرَ. حَتَّى إِذَا كَانُوا بِالصَّهْبَاءِ وَهِيَ مِنْ أَدْنَى خَيْبَرَ، نَزَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، «فَصَلَّى الْعَصْرَ. ثُمَّ دَعَا بِالْأَزْوَادِ فَلَمْ يُؤْتَ إِلَّا بِالسَّوِيقِ، فَأَمَرَ بِهِ فَثُرِّيَ فَأَكَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَأَكَلْنَا. ثُمَّ قَامَ إِلَى الْمَغْرِبِ فَمَضْمَضَ وَمَضْمَضْنَا. ثُمَّ صَلَّى وَلَمْ يَتَوَضَّأْ»


muwatta-malik-54

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம்: 13

சமைத்த உணவிற்காக ஒளுச் செய்யாதிருத்தல்

54. நபி(ஸல்) அவர்கள் ஆட்டின் முன் சப்பையைச் சாப்பிட்டார்கள். பின்பு ஒளுச் செய்யாமலேயே தொழுதார்கள் என அப்துல்லா இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.

(புகாரி, முஸ்லிம், அபூதாவூத், நஸயீயில் இக்கருத்துள்ள ஹதீஸ்கள் உள்ளன).


أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «أَكَلَ كَتِفَ شَاةٍ، ثُمَّ صَلَّى، وَلَمْ يَتَوَضَّأْ»


muwatta-malik-52

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

52. அப்துல்லா இப்னு உமர்(ரலி) அவர்கள், ஸயீத் இப்னு ஸைத் அவர்களின் மகனுக்கு ‘தஹ்னீக்” செய்தார்கள். அக் குழந்தையை தூக்கி வைத்து இருந்தார்கள். பின்பு பள்ளிக்குள் நுழைந்து, ஒளுச் செய்யாமலேயே தொழுதார்கள் என நாபிஉ கூறுகின்றார்கள்.

(சிறு குழந்தைகளுக்கு திடமான உணவை மென்று கொடுப்பதற்கே, ‘தஹ்னீக்” என்று கூறப்படும்).


أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ «حَنَّطَ ابْنًا لِسَعِيدِ بْنِ زَيْدٍ وَحَمَلَهُ ثُمَّ دَخَلَ الْمَسْجِدَ، فَصَلَّى وَلَمْ يَتَوَضَّأْ»


muwatta-malik-50

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

50. ரபீஆ இப்னு அபீ அப்துர் ரஹ்மான் அவர்களுக்கு பள்ளியில் இருந்த நிலையில் பல தடவை வாந்தி ஏற்பட்டது. (ஆனாலும்) அவர் (ஒளுச் செய்ய) புறப்படவும் இல்லை. ஒளுச் செய்யாமல் தொழுதார்கள் என மாலிக் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.


أَنَّهُ رَأَى رَبِيعَةَ بْنَ أَبِي عَبْدِ الرَّحْمَنِ «يَقْلِسُ، مِرَارًا وَهُوَ فِي الْمَسْجِدِ، فَلَا يَنْصَرِفُ، وَلَا يَتَوَضَّأُ، حَتَّى يُصَلِّيَ»


Next Page » « Previous Page