Category: முஅத்தா மாலிக்

muwatta-malik-49

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம்: 12

ஒளுவைக் கட்டாயமாக்காத செயல்கள்

49. நான் நீண்ட கீழாடை அணிந்த பெண்ணாக இருக்கிறேன். அசுத்தம் உள்ள இடத்திலே நடக்கவும் செய்கிறேன் என்று நான் உம்மு சல்மா(ரலி) அவர்களிடம் கேட்டேன். அசுத்தமான இடங்களை அடுத்து வருகின்ற (சுத்தமான) இடம் அதை சுத்தப்படுத்தும் என நபி(ஸல்) அவர்கள் கூறியதாக உம்மு சல்மா(ரலி) அவர்கள் பதில் கூறினார்கள் என அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃபு(ரலி) அவர்களின் அடிமைப் பெண் கூறுகின்றார்கள்.

(இது திர்மிதீ, அபூதாவூதிலும் உள்ளது).


أَنَّهَا سَأَلَتْ أُمَّ سَلَمَةَ، زَوْجَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَتْ: إِنِّي امْرَأَةٌ أُطِيلُ ذَيْلِي، وَأَمْشِي فِي الْمَكَانِ الْقَذِرِ. قَالَتْ أُمُّ سَلَمَةَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «يُطَهِّرُهُ مَا بَعْدَهُ»


muwatta-malik-48

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

48. நபி(ஸல்) அவர்களின் காலத்தில் ஆண்களும், பெண்களும் சேர்ந்து ஒளுச் செய்யக் கூடியவர்களாக இருந்தனர் என அப்துல்லா இப்னு உமர்(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.


«إِنْ كَانَ الرِّجَالُ وَالنِّسَاءُ، فِي زَمَانِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، لَيَتَوَضَّئُونَ جَمِيعًا»


muwatta-malik-47

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

47. உமர்(ரலி) அவர்கள், அம்ரு இப்னு ஆஸ்(ரலி) அவர்களும் இருந்த ஒரு பயணக் கூட்டத்தில் சேர்ந்து போனார்கள். ஒரு தண்ணீர் தடாகத்திற்கு வந்தார்கள். அத்தடாகத்தின் உரிமையாளாரிடம், ”உரிமையாளரே..! உமது தாடகத்திற்கு மிருகங்கள் வருவதுண்டா?”” என அம்ரு இப்னுல் ஆஸ்(ரலி) அவர்கள் கேட்டார்கள். ”உரிமையாளரோ! எங்களிடம் ஏதும் கூற வேண்டாம். நாங்கள் மிருகங்களுடன் இருக்கிறோம். அவைகளும் எங்களுடன் வருகின்றன”” என்று உமர்(ரலி) அவர்கள் கூறினார்கள். இதை யஹ்யா இப்னு அப்துர் ரஹ்மான் இப்னு ஹாதிப் கூறுகின்றார்கள்.

(இதை அறிவிக்கும் யஹ்யா, உமர்(ரலி) அவர்களைச் சந்தித்ததில்லை).


أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ خَرَجَ فِي رَكْبٍ، فِيهِمْ عَمْرُو بْنُ الْعَاصِ، حَتَّى وَرَدُوا حَوْضًا، فَقَالَ عَمْرُو بْنُ الْعَاصِ لِصَاحِبِ الْحَوْضِ: يَا صَاحِبَ الْحَوْضِ هَلْ تَرِدُ حَوْضَكَ السِّبَاعُ؟  فَقَالَ عُمَرُ بْنُ الْخَطَّابِ: «يَا صَاحِبَ الْحَوْضِ لَا تُخْبِرْنَا، فَإِنَّا نَرِدُ عَلَى السِّبَاعِ، وَتَرِدُ عَلَيْنَا»


muwatta-malik-46

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

46. அபூகதாதா (ரலி) அவர்கள் என்னிடம் வந்தார்கள். அவர்களுக்கு ஒளுச் செய்யும் நீரை நான் வார்த்துக் கொடுத்தேன். அப்போது ஒரு பூனை அதை குடிக்க வந்தது. அது குடித்து முடியும் வரை பாத்திரத்தை (குடிப்பதற்கு ஏற்றவாறு) சாய்த்துக் கொண்டிருந்தார். அவரை நான் கூர்ந்து நோக்குவதைக் கண்ட போது, ” என் சகோதரர் மகனே..! நீ வியப்படைகிறாயா?””, என்று கேடடார். ‘ஆம்” என்றேன். ”பூனைகள் அசுத்தமானவைகள் அல்ல – அவை உங்களைச் சுற்றி வரக் கூடியவைகளே (அண்டி வாழ்பவைகளே)”” என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள் என அபூகதாதா(ரலி) கூறினார்கள். இதை கஹ்பு இப்னு மாலிக்(ரலி) அவர்களின் மகளும், அபூகதாதா(ரலி) அவர்களின் மகனின் மனைவியுமான கப்ஷா(ரலி) அறிவிக்கின்றார்கள்.

(இது அஹ்மத், திர்மிதீ, இப்னு மாஜா, நஸயீயிலும் உள்ளது)

அந்தப் பூனையின் வாயில் அசுத்தம் காணப்பட்டாலே தவிர. இதனால் குற்றமில்லை என மாலிக் (ரஹ்) கூறியதாகக யஹ்யா கூறுகிறார்கள்.


وَكَانَتْ تَحْتَ ابْنِ أَبِي قَتَادَةَ الْأَنْصَارِيِّ، أَنَّهَا أَخْبَرَتْهَا: أَنَّ أَبَا قَتَادَةَ دَخَلَ عَلَيْهَا فَسَكَبَتْ لَهُ وَضُوءًا، فَجَاءَتْ هِرَّةٌ لِتَشْرَبَ مِنْهُ، فَأَصْغَى لَهَا الْإِنَاءَ حَتَّى شَرِبَتْ. قَالَتْ كَبْشَةُ: فَرَآنِي أَنْظُرُ إِلَيْهِ. فَقَالَ: أَتَعْجَبِينَ يَا ابْنَةَ أَخِي؟ قَالَتْ: فَقُلْتُ: نَعَمْ. فَقَالَ: إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِنَّهَا لَيْسَتْ بِنَجَسٍ إِنَّمَا هِيَ مِنَ الطَّوَّافِينَ عَلَيْكُمْ – أَوِ الطَّوَّافَاتِ -»

قَالَ يَحْيَى: قَالَ مَالِكٌ: «لَا بَأْسَ بِهِ إِلَّا أَنْ يُرَى عَلَى فَمِهَا نَجَاسَةٌ»


muwatta-malik-45

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 11

ஒளுவிற்காக சுத்தமான தண்ணீர்

45. ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, ”இறைத்தூதர் (ஸல்) அவர்களே..! நாங்கள் கடல் பயணம் செய்கிறோம். குறைந்த அளவு தண்ணீரையே எங்களுடன் எடுத்துச் செல்கின்றோம். அதன் மூலம் நாங்கள் உளுச் செய்தால் நாங்கள் தாகத்திற்கு ஆளாகுவோம். எனவே, கடல் நீரில் நாங்கள் உளுச் செய்யலாமா? என்று கேட்டார்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள் கடல் நீர் சுத்தம் செய்ய ‎ஏற்றதாகும். அதில் செத்தவைகளும் (உண்ணுவதற்கு) அனுமதிக்கப் பட்டதாகும் ‎என்று கூறியதாக அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.‎..

(இது அஹ்மத், அபூதாவூத், திர்மிதீ, இப்னு மாஜா, நஸயீ, இப்னு ஹிப்பான், இப்னு குஸைமா, ஹாகிம், தராகுத்னீ, பைஹகீ, இப்னு அபீ ஷைபா – விலும் உள்ளது).


جَاءَ رَجُلٌ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ إِنَّا نَرْكَبُ الْبَحْرَ، وَنَحْمِلُ مَعَنَا الْقَلِيلَ مِنَ الْمَاءِ، فَإِنْ تَوَضَّأْنَا بِهِ عَطِشْنَا، أَفَنَتَوَضَّأُ بِهِ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «هُوَ الطَّهُورُ مَاؤُهُ الْحِلُّ مَيْتَتُهُ»


muwatta-malik-44

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

44. இப்னு உமர்(ரலி) அவர்கள் உட்கார்ந்த நிலையில் தூங்கி விட்டு, பின்பு ஒளுச் செய்யாமலேயே தொழுவார்கள் என்று நாபிஉ கூறுகிறார்கள்.


أَنَّ ابْنَ عُمَرَ كَانَ «يَنَامُ جَالِسًا ثُمَّ يُصَلِّي وَلَا يَتَوَضَّأُ»


muwatta-malik-42

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

42. இறைவிசுவாசிகளே! தொழுகைக்கு நீங்கள் தயாரானால் உங்கள் முகங்களையும், உங்கள் கைகளையும் முழங்கை வரையிலும் கழுவுங்கள். உங்கள் தலைகளுக்கு மஸஹ் செய்யுங்கள். உங்கள் கால்களை கரண்டை வரையிலும் (கழுவுங்கள்) என்ற 5:9 வசனத்தில் உள்ள தொழுகைக்குத் தயாரானால்.. என்ற வார்த்தைக்கு ”படுக்கையிலிருந்து நீங்கள் எழுந்தால்..”” என்பதாகும் என ஸைத் இப்னு அஸ்லம் விளக்கம் கூறினார்கள்.


أَنَّ تَفْسِيرَ هَذِهِ الْآيَةِ {يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِذَا قُمْتُمْ إِلَى الصَّلَاةِ فَاغْسِلُوا وُجُوهَكُمْ وَأَيْدِيَكُمْ إِلَى الْمَرَافِقِ وَامْسَحُوا بِرُءُوسِكُمْ وَأَرْجُلَكُمْ إِلَى الْكَعْبَيْنِ} أَنَّ ذَلِكَ «إِذَا قُمْتُمْ مِنَ الْمَضَاجِعِ – يَعْنِي النَّوْمَ -»


muwatta-malik-41

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

37. உங்களில் ஒருவர் படுத்துத் தூங்கினால் அவர் ஒளுச் செய்யட்டும் என உமர்(ரலி) அவர்கள் கூறினார்கள் என ஸைத் இப்னு அஸ்லம் கூறுகின்றார்கள்.

(ஸைத் இப்னு அஸ்லம் அவர்கள், உமர்(ரலி) அவர்களைச் சந்தித்ததில்லை).


«إِذَا نَامَ أَحَدُكُمْ مُضْطَجِعًا فَلْيَتَوَضَّأْ»


muwatta-malik-40

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 10

தூங்கியவர், தொழத் தயாரானால் உளூச் செய்வது.

40. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் ஒருவர் தூக்கத்திலிருந்து விழித்தெழுந்தால் கையை உளூச் செய்யும் பாத்திரத்தில் விடுவதற்கு முன் (கைகளில் தண்ணீர் ‎ஊற்றிக்) கழுவிக் கொள்ளட்டும். (ஏனெனில்) தூங்கும் போது தன் கை எங்கே சென்றது என்பதை அவர் அறிய மாட்டார்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


«إِذَا اسْتَيْقَظَ أَحَدُكُمْ مِنْ نَوْمِهِ فَلْيَغْسِلْ يَدَهُ قَبْلَ أَنْ يُدْخِلَهَا فِي وَضُوئِهِ، فَإِنَّ أَحَدَكُمْ لَا يَدْرِي أَيْنَ بَاتَتْ يَدُهُ»


muwatta-malik-38

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

38. ஒருவர் ஒளுச் செய்யும் போது மறந்து வாய் கொப்பளிக்கும் முன் தன் முகத்தைக் கழுவினார். அல்லது முகத்தைக் கழுவும் முன் தன் கைகளைக் கழுவுகிறார். (இவர் ஒளுக் கூடுமா?) என்று மாலிக் (ரஹ்) அவர்களிடம் கேட்கப்பட்டது.

ஒருவர் வாய் கொப்பளிக்கு முன் தன் முகத்தை கழுவி விட்டால் பிறகு வாய் கொப்பளித்துக் கொள்ளட்டும். மீண்டும் முகத்தைக் கழுவத் தேவையில்லை. முகத்தை கழுவும் முன் தன் கைகளை கழுவி விட்டான். அவர் முகத்தை கழுவியப் பின் மீண்டும் கைகளைக் கழுவட்டும். இது அந்த இடத்தை விட்டும் விலகாத வரை தான் கூடும் என்று பதில் கூறினார்கள். யஹ்யா கூறுகின்றார்கள்.


سُئِلَ مَالِكٌ عَنْ رَجُلٍ تَوَضَّأَ فَنَسِيَ فَغَسَلَ وَجْهَهُ قَبْلَ أَنْ يَتَمَضْمَضَ أَوْ غَسَلَ ذِرَاعَيْهِ قَبْلَ أَنْ يَغْسِلَ وَجْهَهُ؟ فَقَالَ: «أَمَّا الَّذِي غَسَلَ وَجْهَهُ قَبْلَ أَنْ يَتَمَضْمَضَ، فَلْيُمَضْمِضْ وَلَا يُعِدْ غَسْلَ وَجْهِهِ، وَأَمَّا الَّذِي غَسَلَ ذِرَاعَيْهِ قَبْلَ وَجْهِهِ، فَلْيَغْسِلْ وَجْهَهُ ثُمَّ لْيُعِدْ غَسْلَ ذِرَاعَيْهِ، حَتَّى يَكُونَ غَسْلُهُمَا بَعْدَ وَجْهِهِ، إِذَا كَانَ ذَلِكَ فِي مَكَانِهِ، أَوْ بِحَضْرَةِ ذَلِكَ»


Next Page » « Previous Page