Category: முஅத்தா மாலிக்

muwatta-malik-36

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

36. ஸஹ்து இப்னு அபீவக்காஸ்(ரலி) அவர்கள் மரணித்த அன்று, ஆயிஷா(ரலி) அவர்களிடம் (அவர்களின் சகோதரர்) அப்துர்ரஹ்மான் இப்னு அபீவக்காஸ்(ரலி) அவர்கள் வந்து, ஒளுச் செய்ய தண்ணீர் (கேட்டு) வரவழைத்தார்கள். ”அப்துர் ரஹ்மானே! ஒளுவை முழுமையாகச் செய்வீராக. (சாரியான) நனையாத குதிங்கால்களுக்கு நரகம் எனும் கேடு உண்டு”” என நபி(ஸல்) அவர்கள் கூற நான் கேட்டுள்ளேன் என ஆயிஷா(ரலி) அவர்கள் கூறினார்கள் எதை தனக்குச் செய்தி கிடைத்ததாக மாலிக் (ரஹ்) கூறுகிறார்கள்.

(இது முஸ்லிமிலும் உள்ளது).


أَنَّ عَبْدَ الرَّحْمَنِ بْنَ أَبِي بَكْرٍ قَدْ دَخَلَ عَلَى عَائِشَةَ زَوْجِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَوْمَ مَاتَ سَعْدُ بْنُ أَبِي وَقَّاصٍ، فَدَعَا بِوَضُوءٍ، فَقَالَتْ لَهُ عَائِشَةُ: يَا عَبْدَ الرَّحْمَنِ أَسْبِغِ الْوُضُوءَ، فَإِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «وَيْلٌ لِلْأَعْقَابِ مِنَ النَّارِ»


muwatta-malik-34

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

34. ஒருவர் ஒளுச் செய்தால் (தன்) மூக்கை சுத்தம் செய்யட்டும். (மலம் கழித்தப்பின்) கற்களால் சுத்தம் செய்தால் ஒற்றைப் படையாய் ஆக்கட்டும் என்று நபி(ஸல்) கூறியதாக அபூஹுரைரா(ரலி) அறிவிக்கின்றார்கள்.

(இது நஸயீ, திர்மிதீ, இப்னுமாஜா, அஹ்மதிலும் உள்ளது).


«مَنْ تَوَضَّأَ فَلْيَسْتَنْثِرْ، وَمَنِ اسْتَجْمَرَ فَلْيُوتِرْ»


muwatta-malik-33

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

33. உங்களில் ஒருவர் ஒளுச் செய்தால் தண்ணீரை தன் மூக்கில் செலுத்தி சுத்தம் செய்யட்டும்! கற்களால் சுத்தம் செய்தால், ஒற்றைப் படையாய் ஆக்கட்டும் என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரலி) அறிவிக்கின்றார்கள்.

(இது புகாரி, முஸ்லிம், நஸயீ யில் உள்ளது).


إِذَا تَوَضَّأَ أَحَدُكُمْ فَلْيَجْعَلْ فِي أَنْفِهِ مَاءً، ثُمَّ لِيَنْثِرْ وَمَنِ اسْتَجْمَرَ فَلْيُوتِرْ


muwatta-malik-32

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

அத்தியாயம்: 2

பாடம்: 9

சுத்தம் – ஒளுச் செய்தல்

32. நபி(ஸல்) அவர்கள் எப்படி ஒளுச் செய்தார்கள் என்பதை எனக்கு கூற இயலுமா? என்று நபித்தோழர் அப்துல்லா இப்னு ஸைத்(ரலி) அவர்களிடம் என் தந்தை யஹ்யா கேட்டார்கள். இயலும் என்று கூறிய அப்துல்லா இப்னு ஸைத்(ரலி) அவர்கள் தண்ணீர் கொண்டு வரச் செய்து, தன் கையில் ஊற்றி இரண்டு முறை கைகளைக் கழுவினார்கள். பின்பு வாய் கொப்பளித்தார்கள். மூன்று தடவை மூக்கைச் சுத்தப்படுத்தினார்கள். பின்பு மூன்று தடவை தன் முகத்தைக் கழுவினார்கள். பின்பு இரண்டிரண்டு தடவை முழங்கை வரை கைகளைக் கழுவினார்கள். பின்பு தான் (ஈரக்) கைகளால் தன் தலைக்கு மஸஹ் செய்தார்கள். அப்போது அந்த (கை) இரண்டையும் (தலையில்) முன்னோக்கி பின்னாக்கினார்கள். (அதாவது) தன் தலையின் முன் பகுதியில் ஆரம்பித்து (கை) இரண்டையும் பிடாரி வரைக் கொண்டு வந்து, மீண்டும் தான் ஆரம்பித்த (முன் நெற்றி) பகுதிக்கே கொண்டு அல் மாஸின் அவர்கள் கூறுகின்றார்கள்.

(இச் சம்பவம் வேறு வார்த்தைகளால் புகாரி, முஸ்லிம், அபூதாவூத், நஸயீ, திர்மிதீயில் உள்ளது).


أَنَّهُ قَالَ لِعَبْدِ اللَّهِ بْنِ زَيْدِ بْنِ عَاصِمٍ، وَهُوَ جَدُّ عَمْرِو بْنِ يَحْيَى الْمَازِنِيِّ، وَكَانَ مِنْ أَصْحَابِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: هَلْ تَسْتَطِيعُ أَنْ تُرِيَنِي كَيْفَ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَتَوَضَّأُ؟ فَقَالَ: عَبْدُ اللَّهِ بْنُ زَيْدِ بْنِ عَاصِمٍ: نَعَمْ. فَدَعَا بِوَضُوءٍ. «فَأَفْرَغَ عَلَى يَدِهِ، فَغَسَلَ يَدَيْهِ مَرَّتَيْنِ مَرَّتَيْنِ، ثُمَّ تَمَضْمَضَ، وَاسْتَنْثَرَ ثَلَاثًا، ثُمَّ غَسَلَ وَجْهَهُ ثَلَاثًا، ثُمَّ غَسَلَ يَدَيْهِ مَرَّتَيْنِ مَرَّتَيْنِ، إِلَى الْمِرْفَقَيْنِ، ثُمَّ مَسَحَ رَأْسَهُ بِيَدَيْهِ، فَأَقْبَلَ بِهِمَا وَأَدْبَرَ، بَدَأَ بِمُقَدَّمِ رَأْسِهِ، ثُمَّ ذَهَبَ بِهِمَا إِلَى قَفَاهُ، ثُمَّ رَدَّهُمَا، حَتَّى رَجَعَ إِلَى الْمَكَانِ الَّذِي بَدَأَ مِنْهُ، ثُمَّ غَسَلَ رِجْلَيْهِ»


muwatta-malik-30

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம்: 8

பூண்டு வாடையுடன் பள்ளியில் நுழைவதும், (தொழுகையில்) வாயை மூடிக் கொள்வதும் கூடாது

30. இந்த(ப் பூண்டு)ச் செடியிலிருந்து சாப்பிட்டால், பூண்டு வாடை மூலம் நம்மை சிரமத்திற்குள்ளாக்கும் வகையில் நம் பள்ளிக்கு வர வேண்டாம் என நபி(ஸல்) கூறினார்கள். இதை ஸயீத் இப்னு முஸய்யப் கூறுகின்றார்கள்.


«مَنْ أَكَلَ مِنْ هَذِهِ الشَّجَرَةِ، فَلَا يَقْرُبْ مَسَاجِدَنَا، يُؤْذِينَا بِرِيحِ الثُّومِ»


muwatta-malik-29

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

29. கோடையின் வெப்பம் அதிகமாகி விட்டால், (வெயில் குறையும் வரை) தொழுகையைத் தாமதப்படுத்துங்கள். கோடையின் கடுமை என்பது, நரகத்தின் ஜுவாலையில் உள்ளதாகும் என நபி(ஸல்) அவர்கள் கூறியதாக, அபூஹுரைரா(ரலி) அறிவிக்கின்றார்கள்.


«إِذَا اشْتَدَّ الْحَرُّ، فَأَبْرِدُوا عَنِ الصَّلَاةِ، فَإِنَّ شِدَّةَ الْحَرِّ مِنْ فَيْحِ جَهَنَّمَ»


muwatta-malik-28

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

28. கோடை வெப்பம் அதிகமாகி விட்டால் தொழுகையை (வெயில் குறையும் வரை) தாமதப்படுத்துங்கள். நிச்சயமாக கோடையின் வெப்பம், நரகத்தின் ஜுவாலையிலிருந்து உள்ளதாகும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறி விட்டு, நரக நெருப்பு தன் இறைவனிடம் முறையிட்டது. அப்போது அவன் ஒவ்வொரு வருடமும் கோடை காலத்தில் ஒரு மூச்சும், குளிர் காலத்தில் ஒரு மூச்சும் என இரு மூச்சுக்கள் விட அதற்கு அனுமதி தந்தான் என்று கூறி நினைவு கூர்ந்தார்கள். இதை அபூஹுரைரா(ரலி) அறிவிக்கின்றார்கள்.

(இது புகாரி, முஸ்லிம், திர்மிதி, அபூதாவூத், நஸயீ யிலும் உள்ளது).


«إِذَا اشْتَدَّ الْحَرُّ، فَأَبْرِدُوا عَنِ الصَّلَاةِ، فَإِنَّ شِدَّةَ الْحَرِّ مِنْ فَيْحِ جَهَنَّمَ»،

وَذَكَرَ: ” أَنَّ النَّارَ اشْتَكَتْ إِلَى رَبِّهَا، فَأَذِنَ لَهَا فِي كُلِّ عَامٍ بِنَفَسَيْنِ: نَفَسٍ فِي الشِّتَاءِ، وَنَفَسٍ فِي الصَّيْفِ


muwatta-malik-27

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் 7

தொழுகையைத் தாமதப்படுத்துவது

27. வெப்பத்தின் கடுமை நரகத்தின் ஜுவாலையில் உள்ளதாகும். வெப்பம் கடுமையாகி விட்டால் தொழுகையைத் தாமதப்படுத்துங்கள். நரக நெருப்பு தன் இறைவனிடம், இறைவா! (கடும் வெப்பத்தினால்) என்னில் சில பகுதி, சில பகுதிகளைச் சாப்பிடுகிறது எனக் கூறி முறையிட்டது. உடனே அதற்கு ஒவ்வொரு வருடமும், கோடை காலத்தில் ஒரு மூச்சும், குளிர்காலத்தில் ஒரு மூச்சும் என இரு மூச்சுக்கள் விட்டுக் கொள்ள அனுமதியளித்தான் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அதாஉ இப்னு யஸார் கூறுகின்றார்கள்.


«إِنَّ شِدَّةَ الْحَرِّ مِنْ فَيْحِ جَهَنَّمَ، فَإِذَا اشْتَدَّ الْحَرُّ فَأَبْرِدُوا عَنِ الصَّلَاةِ» وَقَالَ: ” اشْتَكَتِ النَّارُ إِلَى رَبِّهَا، فَقَالَتْ: يَا رَبِّ أَكَلَ بَعْضِي بَعْضًا، فَأَذِنَ لَهَا بِنَفَسَيْنِ فِي كُلِّ عَامٍ: نَفَسٍ فِي الشِّتَاءِ، وَنَفَسٍ فِي الصَّيْفِ


muwatta-malik-26

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

26. மக்காவின் வழியில் ஒரு இரவு நபி(ஸல்) அவர்கள் ஓய்வெடுத்தார்கள். (சுப்ஹு)தொழுகைக்கு தங்களை எழுப்பி விடும்படி பிலாலிடம் பொறுப்பு ஒப்படைத்தார்கள். பிலால்(ரலி) தூங்கினார்கள். மக்களும் விழிக்கும் வரை தூங்கி விட்டனர். அவர்களில் சூரியன் உதயமானது. மக்கள் விழித்தனர். திடுக்குற்றார்கள். அந்த ஓடையில் இருந்து வெளியேறி புறப்படும்படி நபி(ஸல்) அவர்கள் மக்களுக்குக் கட்டளையிட்டார்கள். ”(வழிகெடுக்கும்) ஷைத்தான் உள்ள பள்ளத்தாக்கு இது”” என்றும் கூறினார்கள். அந்த பள்ளத்தாக்கில் இருந்து வெளியேற மக்கள் வாகனங்களில் ஏறினார்கள். (சிறிது தூரம் சென்றதும்) இறங்கி விடவும், ஒளுச் செய்திடவும் நபி(ஸல்) அவர்கள், அவர்களுக்குக் கட்டளையிட்டார்கள். தொழுகைக்கு பாங்கு கூற அல்லது இகாமத் கூற பிலால்(ரலி) அவர்களுக்கு நபி(ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள். நபி(ஸல்) அவர்கள் மக்களுக்குத் தொழ வைத்தார்கள். பின்பு மக்களை நோக்கினார்கள். அவர்களின் (முகத்தில்) திடுக்குற்ற நிலையைக் கண்டார்கள்.

மனிதர்களே..! அல்லாஹ் நம்முடைய உயிர்களை (சிறிது நேரம்) கைப்பற்றிக் கொண்டான். அவன் நாடியிருந்தால் இது அல்லாத (முன்) நேரத்திலேயே அதைத் திருப்பித் தந்திருப்பான். உங்களில் ஒருவர் தொழாமல் தூங்கினால் அல்லது மறந்து விட்டால் பின்பு (நினைவு வந்து) அதிர்ச்சியுற்றால்

عَرَّسَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَيْلَةً بِطَرِيقِ مَكَّةَ. وَوَكَّلَ بِلَالًا أَنْ يُوقِظَهُمْ لِلصَّلَاةِ. فَرَقَدَ بِلَالٌ وَرَقَدُوا. حَتَّى اسْتَيْقَظُوا وَقَدْ طَلَعَتْ عَلَيْهِمُ الشَّمْسُ، فَاسْتَيْقَظَ الْقَوْمُ، وَقَدْ فَزِعُوا. فَأَمَرَهُمْ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يَرْكَبُوا حَتَّى يَخْرُجُوا مِنْ ذَلِكَ الْوَادِي، وَقَالَ: «إِنَّ هَذَا وَادٍ بِهِ شَيْطَانٌ»، فَرَكِبُوا حَتَّى خَرَجُوا مِنْ ذَلِكَ الْوَادِي. ثُمَّ أَمَرَهُمْ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يَنْزِلُوا، وَأَنْ يَتَوَضَّئُوا. وَأَمَرَ بِلَالًا أَنْ يُنَادِيَ بِالصَّلَاةِ، أَوْ يُقِيمَ. فَصَلَّى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالنَّاسِ. ثُمَّ انْصَرَفَ إِلَيْهِمْ، وَقَدْ رَأَى مِنْ فَزَعِهِمْ، فَقَالَ: «يَا أَيُّهَا النَّاسُ إِنَّ اللَّهَ قَبَضَ أَرْوَاحَنَا، وَلَوْ شَاءَ لَرَدَّهَا إِلَيْنَا فِي حِينٍ غَيْرِ هَذَا، فَإِذَا رَقَدَ أَحَدُكُمْ عَنِ الصَّلَاةِ أَوْ نَسِيَهَا، ثُمَّ فَزِعَ إِلَيْهَا، فَلْيُصَلِّهَا، كَمَا كَانَ يُصَلِّيهَا فِي وَقْتِهَا»، ثُمَّ الْتَفَتَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى أَبِي بَكْرٍ فَقَالَ: «إِنَّ الشَّيْطَانَ أَتَى بِلَالًا وَهُوَ قَائِمٌ يُصَلِّي، فَأَضْجَعَهُ، فَلَمْ يَزَلْ يُهَدِّئُهُ، كَمَا يُهَدَّأُ الصَّبِيُّ حَتَّى نَامَ»، ثُمَّ دَعَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِلَالًا. فَأَخْبَرَ بِلَالٌ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مِثْلَ الَّذِي أَخْبَرَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَبَا بَكْرٍ فَقَالَ أَبُو بَكْرٍ أَشْهَدُ أَنَّكَ رَسُولُ اللَّهِ


muwatta-malik-25

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம்: 6

தொழாமல் தூங்குதல்

25. கைபர் போரில் இருந்து நபி(ஸல்) அவர்கள் திரும்பும் போது, இரவின் இறுதிப் பகுதி வந்ததும் ஓய்வு எடுத்தார்கள். ”எங்களுக்காக வேண்டி சுப்ஹுக்காக (எழுப்பிட) நீர் விழித்திடு இரு!”” என்று பிலால்(ரலி) அவர்களிடம் கூறினார்கள். நபி(ஸல்) அவர்களும், அவர்களின் தோழர்களும் தூங்கினார்கள். இறைவன் நாடிய அளவுக்கு பிலால்(ரலி) அவர்கள் பஜ்ரின் நேரத்தை எதிர்நோக்கியவர்களாக ஒட்டகத்தின் மீது காத்திருந்தார்கள். அவரை (மீறி) அவரது கண்கள் மிகைத்து விட்டன. சூரியன் ஒளி அடிக்கும் வரை நபி(ஸல்) அவர்களோ, பிலாலோ, உடனிருந்த பயணிகளில் எவருமே விழிக்கவில்லை. (சூரிய ஒளிபட்டதும்) நபி(ஸல்) அவர்கள் திடுக்குற்று, ”பிலாலே! இது என்ன?”” என்று கேட்க, ”இறைத்தூதர்(ஸல்) அவர்களே..! உங்களை பிடித்ததே (தூக்கமே) என்னையும் ஆட் கொண்டது””, என பிலால்(ரலி) கூறினார்கள்.

ஒட்டகத்தை ஓட்டுங்கள் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். நபித் தோழர்கள் தங்கள் வாகனங்களை எழுப்பி ஓட்டலானார்கள். பின்பு (வேறு ஒரு இடத்தில்) பிலால்(ரலி) அவர்களை (பாங்கு கூற) கட்டளையிட்டார்கள். தொழுகைக்கு (பிலால்(ரலி)) இகாமத் கூறினார்கள். உடனே நபி(ஸல்) அவர்கள், தம் தோழர்களுக்கு சுப்ஹைத் தொழ வைத்தார்கள். தொழுகை முடிந்ததும், ”ஒருவர் தொழ மறந்து விட்டால் அதை நினைவு கூர்ந்ததும் அவர்

أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حِينَ قَفَلَ مِنْ خَيْبَرَ، أَسْرَى، حَتَّى إِذَا كَانَ مِنْ آخِرِ اللَّيْلِ عَرَّسَ وَقَالَ لِبِلَالٍ: «اكْلَأْ لَنَا الصُّبْحَ»، وَنَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَصْحَابُهُ، وَكَلَأَ بِلَالٌ مَا قُدِّرَ لَهُ، ثُمَّ اسْتَنَدَ إِلَى رَاحِلَتِهِ، وَهُوَ مُقَابِلُ الْفَجْرِ، فَغَلَبَتْهُ عَيْنَاهُ، فَلَمْ يَسْتَيْقِظْ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَلَا بِلَالٌ، وَلَا أَحَدٌ مِنَ الرَّكْبِ، حَتَّى ضَرَبَتْهُمُ الشَّمْسُ. فَفَزِعَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ بِلَالٌ: يَا رَسُولَ اللَّهِ أَخَذَ بِنَفْسِي الَّذِي أَخَذَ بِنَفْسِكَ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اقْتَادُوا،». فَبَعَثُوا رَوَاحِلَهُمْ وَاقْتَادُوا شَيْئًا، ثُمَّ أَمَرَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِلَالًا فَأَقَامَ الصَّلَاةَ، فَصَلَّى بِهِمْ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الصُّبْحَ، ثُمَّ قَالَ حِينَ قَضَى الصَّلَاةَ: ” مَنْ نَسِيَ الصَّلَاةَ فَلْيُصَلِّهَا إِذَا ذَكَرَهَا فَإِنَّ اللَّهَ تَبَارَكَ وَتَعَالَى يَقُولُ فِي كِتَابِهِ {أَقِمِ الصَّلَاةَ لِذِكْرِي} [طه: 14]


Next Page » « Previous Page