Category: முஅத்தா மாலிக்

muwatta-malik-24

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

24. அப்துல்லா இப்னு உமர்(ரலி) அவர்களுக்கு மயக்கம் ஏற்பட்டு, சுயநினைவற்று இருந்தார்கள். அப்போது, தொழுகையை அவர்கள் (தெளிவடைந்த பின்) களாச் செய்யவில்லை என நாபிஉ கூறுகிறார்கள்.

இது நாம் அறிந்தவரை இச்சம்பவம் நேரம் முடிந்து விட்ட பின், நடந்ததாகும். ஒருவர் உரிய நேரத்திலேயே தெளிவுற்றால் அப்போது அவர் தொழுவார். அல்லாஹ் மிக அறிந்தவன் என மாலிக் (ரஹ்) கூறுகின்றார்கள்.


أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ «أُغْمِيَ عَلَيْهِ، فَذَهَبَ عَقْلُهُ، فَلَمْ يَقْضِ الصَّلَاةَ»

قَالَ مَالِكٌ: «وَذَلِكَ فِيمَا نَرَى – وَاللَّهُ أَعْلَمُ – أَنَّ الْوَقْتَ قَدْ ذَهَبَ. فَأَمَّا مَنْ أَفَاقَ فِي الْوَقْتِ، فَإِنَّهُ يُصَلِّي»


muwatta-malik-23

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

23. தொழுகையாளி ஒருவர் ஒரு தொழுகையையும், தான் தவற விட்ட தொழுகையையும் தொழுகின்றார். அதே நேரத்தில் தவற விட்டவை அவரது குடும்பத்தை விட, அவரது பொருளை விட மிகச் சிறந்தது, மிக உயர்ந்தது என யஹ்யா இப்னு யஸீத் கூறுவார்கள் என மாலிக் (ரஹ்) கூறுகின்றார்கள்.

”பயணத்தில் இருப்பவர் ஒரு (தொழுகை) நேரம் வந்ததும், மறந்தோ அசட்டையாகவோ இருந்து தன் குடும்பத்திடம் வரும் வரை தொழுகையை தாமதப்படுத்தி விட்டு, தன் குடும்பத்திடம் அதே நேரத்திலேயே வந்து விட்டால் அவன் உள்;ர் வாசி போலவே தொழுவான். அந்த நேரம் சென்ற பின் குடும்பத்தாரிடம் வந்தால் பயணியின் தொழுகை போல் தொழுவான். காரணம், அவன் மீது கடமையானபடியே அதை நிறைவேற்ற வேண்டும் என்பதால் தான்”” என மாலிக் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்.

இதுவே என் ஊர் அறிஞர்களும், மக்களும் கடைபிடிக்கும் சட்டமாகும் எனவும் அவர்கள் கூறுகின்றார்கள்.

மஹ்ரிபு நேரத்தில் ஏற்படும் மஞ்சள் நிறம் மறைந்து விட்டால், இஷாத் தொழுகை நேரம் ஏற்பட்டு விடும். அந்த மஹ்ரிபு நேரத்திலிருந்து நீ வெளியாகி விட்டாய் என்று மாலிக் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.


«إِنَّ الْمُصَلِّيَ لَيُصَلِّي الصَّلَاةَ وَمَا فَاتَهُ وَقْتُهَا. وَلَمَا فَاتَهُ مِنْ وَقْتِهَا أَعْظَمُ، أَوْ أَفْضَلُ مِنْ أَهْلِهِ وَمَالِهِ»

قَالَ يَحْيَى: قَالَ مَالِكٌ: «مَنْ أَدْرَكَ الْوَقْتَ وَهُوَ فِي سَفَرٍ، فَأَخَّرَ الصَّلَاةَ سَاهِيًا أَوْ نَاسِيًا، حَتَّى قَدِمَ عَلَى أَهْلِهِ أَنَّهُ، إِنْ كَانَ قَدِمَ عَلَى أَهْلِهِ وَهُوَ فِي الْوَقْتِ، فَلْيُصَلِّ صَلَاةَ الْمُقِيمِ. وَإِنْ كَانَ قَدْ قَدِمَ وَقَدْ ذَهَبَ الْوَقْتُ، فَلْيُصَلِّ صَلَاةَ الْمُسَافِرِ. لِأَنَّهُ إِنَّمَا يَقْضِي مِثْلَ الَّذِي كَانَ عَلَيْهِ»

قَالَ مَالكٌ: «وَهَذَا الْأَمْرُ هُوَ الَّذِي أَدْرَكْتُ عَلَيْهِ النَّاسَ، وَأَهْلَ الْعِلْمِ بِبَلَدِنَا»

وقَالَ مَالِكٌ: «الشَّفَقُ الْحُمْرَةُ الَّتِي فِي الْمَغْرِبِ. فَإِذَا ذَهَبَتِ الْحُمْرَةُ، فَقَدْ وَجَبَتْ صَلَاةُ الْعِشَاءِ، وَخَرَجْتَ مِنْ وَقْتِ الْمَغْرِبِ»


muwatta-malik-22

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

22. உமர்(ரலி) அவர்கள் அஸர் தொழுது விட்டு திரும்பும் வழியில் அஸர் தொழுகையில் கலந்து கொள்ளாத ஒரு நபரைச் சந்தித்தார்கள். அஸர் தொழுவதை விட்டும் உன்னை எது தடுத்தது? என்று கேட்டதும், அவர்களிடம் அவர் (கலந்து கொள்ளாததற்கு) ஒரு காரணம் கூறினார். அவரிடம் உமர்(ரலி) அவர்கள், நீர் குறைவு (தவறு) செய்து விட்டாய் என்று கூறினார்கள் என யஹ்யா இப்னு ஸயீத் அறிவிக்கின்றார்கள்.

ஒவ்வொரு செயலுக்கும் நிறைவேற்றுதலும், குறைவு ஏற்படுத்துதலும் உண்டு என மாலிக் (ரஹ்) கூறுகின்றார்கள்.


أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ انْصَرَفَ مِنْ صَلَاةِ الْعَصْرِ فَلَقِيَ رَجُلًا لَمْ يَشْهَدِ الْعَصْرَ. فَقَالَ عُمَرُ: «مَا حَبَسَكَ عَنْ صَلَاةِ الْعَصْرِ»؟ فَذَكَرَ لَهُ الرَّجُلُ عُذْرًا، فَقَالَ عُمَرُ: «طَفَّفْتَ»

قَالَ يَحْيَى: قَالَ مَالِكٌ، وَيُقَالُ: «لِكُلِّ شَيْءٍ وَفَاءٌ وَتَطْفِيفٌ»


muwatta-malik-21

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 5

நேரங்களின் கட்டாயம்

21. எவருக்கு அஸர் த் தொழுகை தவறி விடுகிறதோ, அவர் தனது குடும்பத்தவரையும், செல்வத்தையும் இழந்தவர் போன்றவராவார் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அப்துல்லா இப்னு உமர்(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.

(இது புகாரி, முஸ்லிம், நஸயீ, அஹ்மத், அபூதாவூத், திர்மிதீ, இப்னு மாஜா ஆகிய நூல்களிலும் உள்ளது)


«الَّذِي تَفُوتُهُ صَلَاةُ الْعَصْرِ كَأَنَّمَا وُتِرَ أَهْلَهُ وَمَالَهُ»


muwatta-malik-20

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

20. சூரியன் சாய்வது என்பது, அதன் நிழல் சாய்வது என்பதாகும். இரவு சூழ்வது என்பது, இரவு சூழ்ந்து, அதன் இருள் ஏற்படுவதாகும் என அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ்(ரலி) கூறுவார்கள் என முக்பின் தனக்கு கூறியதாக தாவூத் இப்னு ஹுஸைன் என்பார் கூறுகின்றார்கள்.


دُلُوكُ الشَّمْسِ إِذَا فَاءَ الْفَيْءُ ، وَغَسَقُ اللَّيْلِ اجْتِمَاعُ اللَّيْلِ وَظُلْمَتُهُ


muwatta-malik-19

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம்: 4

சூரியன் சாய்வது, இரவு சூழ்வது பற்றிய ஹதீஸ்கள்

19. ‘துலூகி ஷம்சீ” என்பது, சூரியன் நன்றாக சாய்வது என்பதாகும் என அப்துல்லா இப்னு உமர்(ரலி) கூறுவார்கள் என நாபிஉ கூறுகின்றார்கள்.


دُلُوكُ الشَّمْسِ : مَيْلُهَا


muwatta-malik-18

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

18. ருகூஉ வை அடைந்தவர், ஸஜ்தாவை (அந்த ரக்அத்தை) அடைந்தவராவார். சூரா பாத்திஹா (கேட்க) கிடைக்கவில்லையானால் அதிக நன்மை அவருக்குத் தவறி விடும் என அபூஹுரைரா(ரலி) கூறினார்கள் என தனக்கு செய்தி கிடைத்ததாக மாலிக் (ரஹ்) கூறுகின்றார்கள்.


مَنْ أَدْرَكَ الرَّكْعَةَ فَقَدْ أَدْرَكَ السَّجْدَةَ ، وَمَنْ فَاتَهُ قِرَاءَةُ أُمِّ الْقُرْآنِ فَقَدْ فَاتَهُ خَيْرٌ كَثِيرٌ


muwatta-malik-17

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

17. ருகூஉ வை அடைந்தவர், ஸஜ்தாவை அடைந்தவராவார் என அப்துல்லா இப்னு உமர்(ரலி), ஸைது இப்னு ஸாபித்(ரலி) இருவரும் கூறினார்கள் என தனக்கு செய்தி கிடைத்ததாகக மாலிக் (ரஹ்) கூறுகின்றார்கள்.


مَنْ أَدْرَكَ الرَّكْعَةَ فَقَدْ أَدْرَكَ السَّجْدَةَ


muwatta-malik-16

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

16. ருகூஉ உமக்கு கிடைக்கவில்லையானால், ஸஜ்தாவும் உமக்குக் கிடைக்காது என்று அப்துல்லா இப்னு உமர்(ரலி) அவர்கள் கூறுவார்கள் என நாபிஉ கூறுகின்றார்கள்.


إِذَا فَاتَتْكَ الرَّكْعَةُ فَقَدْ فَاتَتْكَ السَّجْدَةُ


muwatta-malik-15

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம்: 3

தொழுகையில் ஒரு ரக்அத்தை அடைந்தவர்

15. தொழுகையில் ஒரு ரக்அத்தை அடைந்தவர், அந்தத் தொழுகையையே அடைந்தவராவார் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா(ரலி) அறிவிக்கின்றார்கள்.

(இது புகாரி, முஸ்லிம், அபூதாவூத், நஸயீ யிலும் உள்ளது).


«مَنْ أَدْرَكَ رَكْعَةً مِنَ الصَّلَاةِ فَقَدْ أَدْرَكَ الصَّلَاةَ»


Next Page » « Previous Page